எந்த நெறிமுறைகளோ , எந்த நியாய உணர்வுகளோ இல்லாமல் வாழும் சமூகம் நம் இந்திய சமூகம் என்பதை ஒரு நாள் சும்மா ஊர் சுற்றி பார்த்தாலேயே உணர முடியும்.
ஓர் உதாரணத்துக்கு இப்படி பார்ப்போம். பத்து பேர் மட்டுமே கொண்ட ஒரு ஊர் ஒன்று இருப்பதாக வைத்து கொள்ளுங்கள்.
அதில் ஒருவன் மட்டும் பைக்கில் வெளியே செல்கிறான். ரெட் சிக்னலில் நில்லாமல் பறக்கும் வாகனங்கள், ஈவ் டீசிங் , பாலியல் வன்முறைகள், மிருகங்கள் போல நடு ரோட்டிலியே சிறு நீர் கழிக்கும் மனிதர்கள் போன்றவற்றை பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புகிறான் . நம் ஊர் எப்பத்தான் மாறுமோ என அலுத்து கொள்கிறான்..
அடுத்த நாள் ,,,, இன்னொருவன் வெளியே செல்கிறான் என வைத்து கொள்ளுங்கள், அவனும் முதலாமவன் பார்த்த காட்சிகளையே பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புவான்..
அந்த ஊரில் இருக்கும் பத்து பேருக்கும் இதே அனுபவங்கள்தான் கிடைக்கும்,. இந்த ஊர் எப்போதுதான் மாறுமோ என ஒவ்வொருவரும் அலுத்து கொள்வார்கள்.
அந்த பத்து பேரால் ஆனதுதான் அந்த ஊர் . அந்த பேரும் மாறினால்தான் அந்த ஊர் மாறும். ஆனால் அவர்கள் அப்படியே இருந்து கொண்டு ஊர் மாற வேண்டும் என எதிர்பார்த்தால் முட்டாள்தனம் இல்லையா ?
இந்த முட்டாள்தனம்தான் இந்தியாவில் நடந்து வருகிறது. அதே போல சாக்கடை எலியாகவேதான் வாழ்வோம். ஆனால் இந்தியா அதுவாகவே மாறிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்..
சாக்கடையில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்தாலும் கூட , துர் நாற்றம் அளவுக்கு அதிகமாக போகும்போதுதான் , வேறு ஆப்ஷன் ஏதேனும் இருக்கிறதா என தேட ஆரம்பிக்கிறார்கள்...
இந்திய பண்பு எனும் இந்த mediocre கலாச்சாரத்துக்கு மாற்று இஸ்லாம் கலாச்சாரம்தான் என நான் சொன்னபோது , பிரசுரிக்க முடியாத ஆபாச அர்ச்சனைகளால் என் இன்பாக்சை நிரப்பினார்கள் பலர்.
சிலரோ வலுவற்ற ஆதாரங்களை வைத்தனர்.. நாத்திகம் என்பதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் , உண்மையாக நாத்திகர்கள் பற்றி எழுதாமல் , திராவிட கட்சிகளை நாத்திகத்தின் பிரதினிதியாக கருதி நான் பேசுவதாகவும் சொன்னார்கள்..
உண்மையான நாத்திக வாதம் என்ன சொல்கிறது என்பதை தேடி தேடி படிப்பவன் நான். நாத்திக வாதத்தை திராவிட இயக்கம் ரெப்ரசண்ட் செய்யவில்லை என்றுதான் நானும் சொல்கிறேன்.
ஆனால் நம் ஊரில் நாத்திகவாதம் என்பது திராவிட இயக்கம் பேசும் போலி நாத்திகவாதமாக நீர்த்து விட்டது என்பதே நான் சொல்வது.. அதையே அவர்களும் சொல்கிறார்கள்..
இஸ்லாம் மட்டுமே மாற்று ஆப்சனாக இருக்க முடியும் என நான் சொன்னபோது , சீறியவர்கள் இந்திய பண்பாட்டை காப்பாற்றுவதாக சொல்லும் மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை சொன்னவுடன் வாயடைத்து போய் விட்டார்கள்..
இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக அனைவரும் உடை அணிந்தால் பிரச்சினை வராது என அவரே சொல்லியிருப்பது , இந்தியா எனும் இருண்ட வானில் நம்பிக்கை நட்சத்திரமாக இஸ்லாம் காட்சி அளிக்க தொடங்கி இருப்பதை உறுதி செய்கிறது.
ஆனால் அவர் கூறி இருப்பது அரை குறை கருத்து.. பிரச்சினைக்கு அது மட்டுமே தீர்வல்ல..
ஆடை மட்டும் பிரச்சினையை தீர்க்காது.. ஆனால் இவர் மட்டுமல்ல , வேறு பலரும் தம் தேவைக்கேற்ப இஸ்லாமை துணைக்கு அழிக்கின்றனர்.
சிலர் இஸ்லாம் என்றாலே , கடும் தண்டனை , ஆடை கட்டுப்பாடு என்று மட்டும் நினைக்கிறார்கள்.. ஆடைக்கடுப்பாடு , கடும் தண்டனை என்பது ஒரு பகுதிதான் ..அது மட்டுமே இஸ்லாம் அல்ல..
பெண்களின் உடலை காட்டி சம்பாதிக்கும் விகடன் டைம் பாஸ் போன்ற ஆபாச பத்திரிக்கைகள் , பெண்களை போக பொருட்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், cheer leaders போல பெண்களை காட்சி பொருட்களாக்கும் போக்கு, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள் போன்ற போக்குகளை அனுமதித்து விட்டு , ஆடைக்கட்டுப்பாட்டை பெண்களுக்கு மட்டும் போதிப்பது தீர்வாகாது.
ஆடைக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என சொல்ல முடியாது.. பெண்களை போக பொருட்களாக மனதில் பதிய வைக்கும் நிலை இருக்கையில் , ஒரு பெண் அந்த ஆடை அணிந்து இருந்தாலும் பாதுகாப்பு இருக்காது,
அதே போல எந்த கடுமையான தண்டனையும் பலன் தராது. ஒட்டு மொத்தமாக சமுதாயம் மாற வேண்டும் . அந்த மாற்றத்துக்கு பின்பும் தவறு நடந்தால் அப்போதுதான் தண்டனைகள் பற்றி பேச முடியும் ,
இந்தியாவில் தோன்றிய எந்த சிந்தனை முறையாலும் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஒரு பாத்திரம் அழுக்காக இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.. அதை தூய்மை செய்ய வேண்டும் என்றால் , அந்த பாத்திரத்துக்கு அப்பாற்பட்ட-சோப்பு தூள் போல - ஒன்று தேவை . அழுக்கை வைத்தே அழுக்கை நீக்க இயலாது.
இந்திய கலாச்சாரம் அழுகிவிட்டது என்றால் , அதைத்தாண்டிய வேறொரு சிந்தனையை முறையால்தான் அதை சரி செய்ய முடியும் என்பதுதான் லாஜிக்.
வேறொரு சிந்தனை முறை என்றால் , ஜப்பானிய சிந்தனை முறையை இங்கு கொண்டு வர முடியாது. காரணம் அது ஜப்பானுக்கு மட்டுமே உரித்தானது. இந்திய சிந்தனை .முறையும் கூடாது . மாற்று மருந்தாக வரும் சிந்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குரியதாக இல்லாமல் , ஒட்டு மொத்த மானுடத்துக்கானதாகவும் இருக்க வேண்டும்.
இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே என்பது பலருக்கு தெரிந்து விட்டது.. ஆனால் அதை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு , இஸ்லாமின் சில பகுதிகளை மட்டும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
உலகளாவிய சிந்தனை முறை என எப்படி சொல்கிறேன்..
கீழ் காணும் நிகழ்ச்சியை பாருங்கள்...
**********************************************
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள்.அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும்,அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடையசந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக(அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்றுபதிலளித்தார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?’ என்றுஅவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வைநீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும்இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான‘ஸக்காத்’ தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும்ஆகும்’ என்றார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால்என்ன?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இஹ்ஸான் என்பதுஅல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன்வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?’ என்றுகேட்கஇ நபி(ஸல்) அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,)கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர்.ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றைஎடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அதுமறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத,நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன்அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறதுஎனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்துவிஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும்என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைஇறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும்(தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை(அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில்தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை.அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்’(எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர்திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்!’ என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள்‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்.மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர்வந்திருந்தார்’ என்று கூறினார்கள்
*****************************************
நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)
இந்த ஒரு வரி போதுமே.. இந்த உணர்வு இருந்தால் உலகில் தவறுகள் ஏதேனும் நிகழுமா ? இந்த வரி ஏதோ குறிப்பிட்ட நாட்டுக்கோ , மதத்துக்கோ , இனத்துக்கோ சொந்தமான வரியாகவா தோன்றுகிறது ?
மேற்கண்ட நிகழ்ச்சியை பாருங்கள்.. ஜீப்ரீல் தனக்கு தெரியாமல் கேள்வி கேட்க வரவில்லை. மக்கள் பொருட்டு அவர் வந்தார்.. எவ்வளவு அழகான ஒரு நிகழ்ச்சி..
ஆக நான் சொல்ல விரும்புவது இதுதான்....
- இயந்திரவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது.. அது எங்கு தோன்றியது என்பது முக்கியமல்ல.. அதே போல இஸ்லாமிய மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது.
- இந்திய பிரச்சினைக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பது யதார்த்தம் ..இதில் வெட்கப்பட ஏதும் இல்லை.
- இஸ்லாமின் சிறிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு அமல் படுத்த முடியாது... அப்படி செய்தால் பயனும் இருக்காது.. முழுமையாக செய்ய வேண்டும்.