Saturday, January 7, 2012

பன்றிகளிடம் முத்தை விற்ற சாருவும் , குமாஸ்தாக்களின் கோமாளித்தனமும்



கிசு கிசு பாணியில் எழுத விரும்பவில்லை.. நேரடியாகவே விஷ்யத்துக்கு வருகிறேன்.

ஒரு மனிதனின் துவேஷம் எந்த அளவுக்கு அவனை கீழே தள்ளி விடும் என்பதற்கு உதாரணமாக எழுத்தாளர் என தன்னை அழைத்து கொள்ளும் குமாஸ்தாவான மாமல்லன் திகழ்வதைப்பற்றியே இந்த இடுகை. இது மாமல்லனுக்கான பதில் அன்று.. நடு நிலையாளர்களுக்கும், தமிழ் காதலர்களுக்கும், இலக்கிய விரும்பிகளுக்கும்  ஒரு விளக்கம் ..

ஓர் ஊரில் ஒரு நாய் சாக்கடையில் புரண்டு கொண்டு இருந்தது .. அழகை ரசிக்கும் ஒருவர் இதை பார்த்து பரிதாபப்பட்டார். இதை வீட்டுக்கு கூட்டி போய் , குளிப்பாட்டினால் , அழகாக இருக்குமே என நினைத்து வீட்டுக்கு அழைத்து சென்றார். அதை குளிப்பாட்டி, நடு  வீட்டில் வைத்து அழகு பார்த்தார். அதை கொஞ்ச அதன் அருகில் ஆசையாக சென்றார். 
அந்த நாய் அவரை கடித்து வைத்தது மட்டுமன்றி, நடு வீட்டிலேயே மலம் கழித்தும் வைத்தது..


ஒரு நடிகனுக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சம் எழுத்தாளனுக்கு இல்லை என்பது தமிழ் எதார்த்தம். பெரும் எழுத்தாளர்களையே யாரென்று தெரியாத தமிழக சூழலிம் மாமல்லன் போன்ற பார்ட் டைம் குமாஸ்தா எழுத்தாளர்களையெல்லாம் யாருக்குமே தெரியாது.

இதை மாற்ற சாரு அவ்வப்போது சிலரை வளர்த்து விடுவதும் , அதன் பின் அவர்கள துரோகிகளாக மாறுவதும் வழக்கம்தான். ஆனாலும் அவர் மாறுவதில்லை.
மாமல்லன் தப்பித்தவறி ஒரு கதை நன்றாக எழுதி விட்டார். அதை பாராட்டி விளம்பரம் கொடுத்து  மாமல்லனுக்கு பரவலான அறிமுகம் கொடுத்தவர் சாருதான்.

 உண்மையான எழுத்தாளனாக இருந்தால், புதிதாக கிடைத்த கவனிப்பை பயன்படுத்தி, இனிமேலாவது நல்ல கதைகள் எழுதி , ஆதரவை தக்க வைத்து கொண்டிருக்க வேண்டும்.

முத்தை மனிதனுக்கு விற்று இருந்தால் பலனுண்டு, பன்றியிடன் விற்றால் , அது முத்தை தூக்கி எறிவதுடன், உன்னையும் தாக்கும் என்கிறது பைபிள்..

சில நாள் முன் அவதூறு விமர்சனம் எழுதிய மாமல்லனை கண்டித்து எழுதினேன்.
உடனே அவர் , புத்தக விழாவை முன்னிட்டு விளம்பரம் பெற இப்படி செய்வதாகவும், இனி அவ்ரை கண்டித்தால் மவுனமே தன் பதில் என்றும் உத்தமன் போல பேசினார்..

சிங்கத்துடன் மோதினால் பெருமை.. ப்னறியுடன் மோதினால் நமக்குதான் அசிங்கம் என ஒரு சிறிய விளக்கத்துடன் நான் முடித்து கொண்டேன்.. இதற்காக நான் சந்தித்த கிண்டல் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. பல்ட்டி அடித்து விட்டேன், பணிந்து விட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள்.

நாட்டோரே , நல்லோரே கவனியுங்கள்..


நான் பேசினால் பதில் அளிக்க போவதில்லை என்றவர், நாங்கள் எதுவும் பேசமால் இருக்கும் போது அவராகவே வாந்தி எடுத்து வைத்துள்ளார்..

நாவல் நன்றாக இருக்கிறது என் ஜ்யோவரம் சுந்தர் சொன்னால், அன்று ஏன் சாருவை திட்டினாய் என பாய்கிரார்..
 தனிப்பட்ட விமர்சனம் வேறு, நாவல் விமர்சனம் வேறு என்பது தன்க்கு புரியவில்லை என இப்போது அவரே ஒப்புக்கொண்டு விட்டார்,,,

அவரை பற்றியும் அவர் எழுத்து பற்றியும்  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

வெறும் பரபரப்புக்காகத்தான் அவர் மேல் பாய்கிறோம் என்றாரே.. இப்போது அவரை யாரும் சீந்தாத நிலையிலும் , அவராகவே அவதூறு செய்கிறாரே.. இதுதான் வெற்று விளம்பரம் என்பது...

நடு நிலையாளர்களும் , நல்லிதயம் படைத்தவர்களும் நடப்பதை பார்த்து முடிவு செய்யட்டும்

வீண் சண்டைக்கு இழுத்து , விளம்பரம் தேட முயல்வது யார் என இந்த சம்பவமே காட்டி கொடுத்து  விடுமே !!

11 comments:

  1. //நான் பேசினால் பதில் அளிக்க போவதில்லை என்றவர், நாங்கள் எதுவும் பேசமால் இருக்கும் போது அவராகவே வாந்தி எடுத்து வைத்துள்ளார்.//

    oru kumbalaathaan alayurennga pola!

    ReplyDelete
  2. பெருந்தன்மையை கோழைத்தனம் என நினைத்து கிண்டல் செய்த கமெண்டுகள் உங்கள் பார்வைக்கு....


    ” sema bulbu pola????? sirichu siruchu vayiru valikuthu... ungalukkelam avaru thaanda correctu.
    By Anonymous on எக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள் on 1/6/12”


    ஒரு உதாவாக்கரைக்கு ஏன் விளம்பரம் கொடுக்கிறீர்கள் என சில நண்பர்கள் சொன்னதை சாரு கேட்கவில்லை" ippadiyellam ezhuthivittu, thideernnu panivu pathi pesureenga.
    By Anonymous on எக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள் on 1/5/12


    lol.Nermai.lol. Maamallan neenga enna kutta kuuta kuninju vangikka Miskin nnu ninaicheengala, illai manush nnu ninaicheengala. . *aamam enna rendu nalai entha commentum publish aaga mattenguthu, oh ungalukku aatharava yarum ezhuthalaiya?"*

    ஐயா, உண்மையிலையே நீங்க இவ்வளவு நல்லவரா??? முதல் கட்டுரையிலை மாமல்லன் பத்தி அந்த திட்டு திட்டுநீங்க, இப்போ அந்தர் பல்டி.
    By Unknown on எக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள் on 1/3/12



    \\அல்ட்டிமேட் ரைட்டரின் எக்சைலை படிக்காமல் விமர்சனம் எழுதியதற்கு பல வாசகர்கள் , தமிழ் காதலர்கள் வேதனை தெரிவித்து இருந்தனர். // இவ்வளவு கேவலமான தொடக்கத்தை இதுவரை படிச்சதே இல்ல.
    By Anonymous on எக்சைலும் மாமல்லனும் - சில விளக்கங்கள் on 1/2/12

    ReplyDelete
  3. chat பத்தி நீங்க ஒன்னும் சொல்லலியே?

    ReplyDelete
  4. A good joke..."மாமல்லன் தப்பித்தவறி ஒரு கதை நன்றாக எழுதி விட்டார். அதை பாராட்டி விளம்பரம் கொடுத்து மாமல்லனுக்கு பரவலான அறிமுகம் கொடுத்தவர் சாருதான்" Still laughing.....

    ReplyDelete
  5. charuvukku problem eh neenga thaan pichaikaaran.

    ReplyDelete
  6. //ஓர் ஊரில் ஒரு நாய் சாக்கடையில் புரண்டு கொண்டு இருந்தது .. அழகை ரசிக்கும் ஒருவர் இதை பார்த்து பரிதாபப்பட்டார். இதை வீட்டுக்கு கூட்டி போய் , குளிப்பாட்டினால் , அழகாக இருக்குமே என நினைத்து வீட்டுக்கு அழைத்து சென்றார். அதை குளிப்பாட்டி, நடு வீட்டில் வைத்து அழகு பார்த்தார். அதை கொஞ்ச அதன் அருகில் ஆசையாக சென்றார்.
    அந்த நாய் அவரை கடித்து வைத்தது மட்டுமன்றி, நடு வீட்டிலேயே மலம் கழித்தும் வைத்தது..//

    என்ன ஒரு வேதனையென்றால் இந்த நாய்கள் வரிசை கொஞ்சம் நீளமானது...

    ReplyDelete
  7. ஏன் சார், உங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் தாறுமாறாக திட்டுகிறீர்கள், அனால் உங்களை யாரும் திட்ட கூடாது!!! இந்த சண்டை மிகவும் ஆபாசமாக சென்று கொண்டு இருக்கிறது, நிறுத்துங்கள் ப்ளீஸ்!

    அடிபொடிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு, சாரு எழுதுவது மட்டும்தான் இலக்கியம், அவர் ஒரு சமூக போராளி, உலக உத்தமன் ... என்று ஸ்தாபிக்க முயல்வதன் மூலம் சாருவின் புகழை வாசகர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வருகிறீர்கள்!

    ReplyDelete
  8. பிச்சைக்காரன்,

    முதலாவது, எக்சைல் பற்றி மாமல்லன் எழுதிய விமர்சனம் நன்றாகவே வந்திருந்தது. புத்தகத்தை முடிந்த வரையில் படித்து விட்டு, படித்த வரையில் நாவலில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி எழுதி விட்டு, இதற்கு மேல் வாசிக்க இது தகுதியில்லை என்று எழுதியிருக்கிறார். சாரு நிவேதிதா ஒரு திரைப்படத்திற்கு செல்கிறார். பத்து நிமிடத்தில் எழுந்து வந்து விடுகிறார். அதற்கு மேல் பார்க்க சகிக்கவில்லை. அந்த அனுபவத்தை எழுதுகிறார். அதுதான் அந்தப் படத்தின் மேல் அவர் வைக்கும் விமர்சனம். இல்லையில்லை நீர் முழுப் படத்தையும் பார்த்தே தீர வேண்டும். அப்படிப் பார்த்த பிறகு விமர்சனம் எழுதினால்தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று அடம் பிடிப்போமா, என்ன?

    இரண்டாவது, மாமல்லன் எழுதியது வெறும் எக்சைலுக்கான விமர்சனம் அல்ல. ஒட்டு மொத்த சாரு நிவேதிதாவின் படைப்புலகத்தையே எட்டுப் பாராக்களுக்குள் துல்லியமாக எடை போட்டு விட்டார். உங்களுக்கு சிந்தனைத் திறனும், எழுத்துத் திறனும் இருந்தால் அதற்கு முறையாக பதிலளிக்க முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  9. நீங்களும் சாரு மாதிரியே எழுதுறீங்க..... மலம்,பன்றி, நாய்!!! ..... மாமல்லன் வயசுக்காவது மரியாதை வேண்டாமா? போன வருஷம் ஜனவரி மாசம் மிஸ்கின்... இந்த வருஷம் ஜனவரி மாசம் மாமல்லன்.... இப்படியே பப்ளிசிடி தேடிக்க வேண்டியது நீங்களும் உங்க குரு நாதரும். உங்க குருநாதர் ஒரு படி மேல போய் இதையே நாவலா எழுதிருவாரு...அடுத்த ஜனவரி-ல யாரோ....

    ReplyDelete
  10. Unga Thalaivar, Neeya naana vil var poraram, aduthu Gopinathai paaratti ezhuthuvarae? Neengalum athukku aatharava ethuna solliveengalae. Ayya Saamingala, eppidippa mudiyuthu ungalalai, ippadi yellam.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா