Monday, January 9, 2012

பிரபலம் ஆவது எப்படி - சுருக்கமான வடிவில் உலக புகழ் பெற்ற சிறுகதை

பல உன்னத கதைகளை , நீளம் கருதி  மிஸ் செய்து விடுகிறோம். பதிவில் நீளமான கதையை படிப்பதும் சிரமம்தான்.. எனவே கொஞ்சம் ட்ரிம் செய்து , நான் ரசித்த சில  கதைகளை பகிர உள்ளேன்.. இது ஓர் அறிமுகம்தான்..  பிடித்து இருந்தால் , மூல ஆசிரியர் எழுதிய கதைகளை , புத்தக கண்காட்சியிலோ , வேறு சந்தர்ப்பங்களிலோ  வாங்கி படித்து கொள்ள இந்த அறிமுகம் பயன்படும் என நினைக்கிறேன்

***************************************************************


    முதல் வகுப்பு பிரயாணி - ஆண்டன் செக்கோவ் 


     முதல் வகுப்பு  பயணி அப்போதுதான் ரயில் நிலையத்தில்  நன்றாக சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே குடித்து விட்டு, வெல்வெட்டால் மூடப்பட்டு இருந்த இருக்கையில் வசதியாக நீட்டி படுத்து  உறக்கத்தில் ஆழ்ந்தார். ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது  . கண் விழித்து எதிர் இருக்கைக்காரரை பார்த்து பேசலானார்.

“ சாப்பிட்டு முடித்ததும் என் தகப்பனார் தன் பாதங்களை அமுக்கி விட சொல்லி பாதங்களை சுறுசுறுப்பாக்கி கொள்வார். நானும் அப்படித்தான் ஒரு வித்தியாசத்துடன். சாப்பிட்டவுடன் நான் சுறுசுறுப்பாக்கி கொள்ள விரும்புவது என்  நாக்கையும் , மூளையும்தான். உங்களுடன் சிறிது நேரம் பேச அனுமதிப்பார்களா ? “

” அதில் நான் மகிழ்வேன் “ என்றார் எதிர் இருக்கைக்காரர்


” நல்ல சாப்பாட்டுக்கு பிறகு , ஒரு சாதாரண விஷ்யம்கூட , என் மூளையில் வெகு உன்னதமான சிந்தனைகளை தூண்டிவிட போதுமானதாக இருக்கும். உதாரணமாக, சற்று முன் உணவு விடுதியில் இரு இளவயதினரை பார்த்தோம். ஒருவன் இன்னொருவனை அவன் கொண்டாடப்படும் நிலையை அடைந்ததற்காக பாராட்டிக்கொண்டு இருந்தான்.

 “ உன்னை பாராட்டுகிறேன் “ அவன் சொன்னான் “ ” ஏற்கன்வே  நீ கீர்த்திபெற்றவனாகி விட்டாய். புகழ் பெற துவங்கி விட்டாய் “ . நான் சொல்ல வருவது அவர்களைப்பற்றி அன்று. அந்த கணத்தில் என் மனதை ஆக்கிரமித்து இருந்த கேள்வி  என்னவென்றால், சார், புகழ் , கீர்த்தி என்ற வார்த்தைகளில் இருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும்?  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் .புகழ் என்பது கந்தலாடையில் போடப்பட்ட , ஒளிரும் ஒட்டுத்தையல்தான் என்கிறார் புஷ்கின். இதை  நாம் அனைவருமே - கொஞ்சம் முன் பின்னாக - மனதளவில் அகத்தளவில்  புரிந்து கொள்கிறோம். ஆனால் யாருமே தெளிவான, தர்க்க ரீதியான விளக்கம் அளித்ததில்லை. யாராவது தெளிவான வரையறை அளித்தால் , நல்ல சன்மானம் அளிக்க தயாராக இருக்கிறேன் “


“  இதற்கான தேவை இருப்பதாக ஏன் நினைக்கிறீர்கள் ?”



  “ பாருங்கள், புகழ் என்றால் என்னவென்று தெரிந்து விட்டால், அதை அடையும் வழியும் நமக்கு அனேகமாக தெரிந்து விடும் “ கொஞ்சம் சிந்தனைக்கு பிறகு முதல் வகுப்பு பிரயாணி சொன்னார். “ உங்களிடம் சொல்ல வேண்டும் சார். சின்ன வயதாக இருக்கும்ப்போதே புகழ் பெறுவது மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது. அதற்காகவே படித்தேன் ,உழைத்தேன், இரவில் கண் விழித்தேன், உணவை மறந்தேன்.  முடிந்தவரை நியாயமாக மதிப்பிட்டு பார்த்தால், புகழ் பெறத்தேவையான  அனைத்து இயற்கை கொடைகளிம் என்னிடத்தில் இருந்தன. 

முதலாவதாக , நான் ஒரு எஞ்சினியர், என் வாழ்வில் , ரஷ்யாவில் பல பாலங்கள் கட்டி இருக்கிறேம் ரஷ்யா, இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் பணியாற்றி இருக்கிறேன். இரண்டாவதாக, என் தொழில்சார்ந்த விஷயங்களில் பல பிரத்தியேக ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன். அடுத்தபடியாக, ஓய்வு நேரங்களில் ரசாயனவியல் படித்து , குறிப்பிட்ட கரிம அமிலங்கள் பெறும் முறைகளை கண்டுபிடித்தேன். ரசாயனவியல் கையேடுகளில் என் பெயரை நீங்கள் பார்க்க இயலும். பொது வாழ்விலும் ஈடுபட்டு முத்திரை பதித்துள்ளேன்.என் பணிகளையும் , சாதனைகளையும் விளக்கி சொல்லி , உங்கள் கவனத்தை களைப்படைய செய்ய விரும்பவில்லை. பல்வேறு பிரபலங்களை விட நான் அதிகமாக சாதித்துள்ளேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஆனாலும், நான் இந்த முதிர்ந்த வயதில், என் சவப்பெட்டிக்கு தயாராகும் நிலையில், அதோ அங்கே ஓடிக்கொண்டு இருக்கிறதே கறுப்பு நாய். அதன் அளவு புகழ்தான் பெற்று இருக்கிறேன் “ 



”  அப்படி எப்படி சொல்ல முடியும்? ஒரு வேளை நீங்கள் பிரபலமாக இருக்க கூடும் “

“ ஹ்ம்ம்.. நல்லது ..சோதித்து பார்ப்போம். க்ரிகுனோவ் என்ற பெயரை கேள்வி பட்டு இருக்கிறீர்களா “   

எதிர் இருக்கைக்காரர் மேற்கூரையை பார்த்து , ஒரு நிமிடம் யோசித்தார்,  பின் சிரித்தார்.
“ இல்லை.. நான் கேள்விப்பட்டதில்லை “





“ அதுதான் என் பெயர்,  நீங்கள் ., க்ற்றறிந்தவர், அனுபவசாலி. என் பெயரை ஒரு போதும் கேட்டதில்லை. நல்ல நிரூபணம்.  புகழ் பெறும் என் முயற்சியில் சரியானதை நான் செய்யவில்லை என்பது தெளிவு. ”

      “ புகழ் பெற தேவையானது என்ன  ?”

“ யாருக்கு தெரியும்?  திறமை என்கிறீர்களா? மேதமை? இதெல்லாம் இல்லை சார். என்னுடன் பணியாற்றிய சிலர் அற்பமானவர்கள். மதிப்பற்றவர்கள், இன்னும் சொல்லப்போனால் வெறுக்கத்தக்கவர்கள்.  நான் செய்த பணியில் பத்தில் ஒரு பங்கை கூட செய்ததில்லை. சிறப்பான திறமைகள் இல்லாதவர்கள். புகழ் பெற முயலாதவர்கள். ஆனால் பாருங்கள் ! அவர்கள் பெயர் எப்போதுமே செய்தி தாள்களிலும் , மக்கள் உதட்டிலும் இருக்கிறது 
கேட்பதில் நீங்கள் களைப்படையவில்லை என்றால் ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறேன். சில ஆண்டுகள் முன் ஒரு நகரில் பாலம் கட்டினேன், அது ஒரு மந்தமான அலுப்பூட்டக்கூடிய சிறிய நகரம் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.  பெண்களும், சீட்டாட்டமும் இல்லையென்றால் எனக்கு பைத்தியமாகி இருப்பேன் என நம்புகிறேன். அதெல்லாம் பழைய கதை. சலிப்புற்று போய் இருந்த எனக்கு  ஒரு பாடகியுடன் உறவு ஏற்பட்டது. எனைவரும் அவள் மேல் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஏன் அப்படி என யாருக்கும் தெரியாது. என்னுடைய கணிப்பில் அவள் - நான் என்ன சொல்வது- அவள் சராசரியான , சிறப்பம்சங்கள் இல்லாத படைப்பு. தலையில் மசாலா இல்லாத, முன்கோபம், பேராசை கொண்ட- இன்னும் என்ன- ஒரு முட்டாள்தனமான பெண் அவள். 

 ஏராளமாக தின்பாள், குடிப்பாள். சாய்ங்கால, ஐந்து மணி வரை தூங்குவாள். அவள் ஒழுக்கங்கெட்டவள். உண்மையில் அதுதான் அவள் தொழில். ஆனால் அவளை மரியாதையுடன் அழைக்க விரும்பும் மக்கள் அவளை பாடகி , நடிகை என்றனர்.  நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் இந்த ஏமாற்று வேலை எனக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது.  திறமையே இல்லாத ஒரு படைப்பு அவள்- பரிதாபகரமான படைப்பு என சொல்லலாம். என் கணிப்பின்படி, அவள் பாடல் வெறுப்பூட்டும்படி இருக்கும். அவளது ஒரே திறமை என்னவென்றால் , அவ்ளது ஆடை மாற்றும் அறைக்குள் யாராவது நுழைந்தால் , வெட்கப்படாமல் இருக்கும்தன்மை மட்டுமே. 

இதை நன்றாக கவனிக்கும்படி கேட்டு கொள்கிறேன். ஒரு புதிய பால திறப்பு விழா நடந்தது. மத சம்பிரதாயங்கள், சொற்பொழிவுகள் போன்றவை நடந்தன. 

எனது பெருமை மிகு படைப்பை பார்க்கும்போது, மகிழ்ச்சியில் இதயம் வெடித்து விடும்போல இருந்தது. போலி அடக்கம் தேவை இல்லாதது என நம்புகிறேன்., என் பாலம் சிறந்த படைப்பாகும்.

மொத்த நகரமே அங்கு திரண்டு இருக்கும்போது கிளர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்.  “ அனைவரின் பார்வையும் என் மேல் படுமே.. எப்படி ஒளிந்து கொள்வது. என பயந்தேன் . ஆனால், என் கவலை தேவை அற்றது. சார், அய்யோ.. சில அதிகாரிகளைத்தவிர யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை.பாலத்தை ரசித்த கூட்டம், அதை கட்டியவன் யார் என்பதை அறிய கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை .  நாசமா போக.. 

திடீரென மக்கள் பரபரப்பானார்கள். ரகசியமாக ஏதோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் முகத்தில் புன்னகை தோன்றியது. “ இப்போதுதான் என்னை கவனிக்கிறார்கள்” சந்தோஷமாக நினைத்து கொண்டேன். 

என்னுடைய நடிகை, தன் ரசிகர்கள் புடைசூழ கூட்டத்தில் வருவதை கண்டேன் . அனைவர் கண்களும் அவள் மேல். “ யார் தெரிகிறதா,, அவள்தான்.. என்ன அழகு... கவர்ச்சி.. “ முணுமுணுப்பு ஆயிராமாயிரம் குரல்களில் கேட்டன. அத பின் என்னை பார்த்தனர். சில இளைஞர்கள் ரகசிய குரலில் பேசிக்கொண்டார்கள் “ இவளின் காதலன் அந்த ஆள்தான் “
எனக்கு எப்படி இருந்து இருக்கும்.

யாரோ ஒருவன் என்னிடம் வந்து பேசினான்.

அவ்ள் யார் தெரியுமா.  அவள் பெரிய ஆள். பாடுவதில் நிபுணத்துவம் பெற்றவள் 

” எனக்கு சொல்ல முடியுமா “ அவனிடம் கேட்டேன் “ இந்த பாலத்தை கட்டியது யார் “

“ நிஜமாவே எனக்கு தெரியாது “ சொன்னான் அவன் “ யாரோ ஒரு எஞ்சினியராக இருக்கும் “

அந்த நகரிம் சிறந்த ஆசிரியர் யார்.. கட்டடக்கலை நிபுணர் யார்.. என்ற அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது என்றான் அவன் .

முடிவாக கேட்டேன்.

“ அந்த நடிகை யாருடன் வாழ்கிறாள் “
“ க்ரிகுனோவ் என்ற யாரோ ஒரு எஞ்சினியருடன் வாழ்கிறாள் “


” எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? பிரபலங்கள் செய்தி தாள்களினால் மட்டுமே உருவாக்கப்படுகின்றனர். பால திறப்பு விழாவுக்கு அடுத்த நாள் செய்தி தாளை ஆவலுடன் பார்த்தேன்,  என் பெயரை பார்க்கவே முடியவில்லை. 

அந்த செய்து இப்ப்டி பிரசுரமாகியிருந்தது.  நகரின் ஏகோபித்த அபிமானம் பெற்ற நம் நடிகை விழாவில் கலந்து கொண்டார். மிக அழகாக இருந்தார். அவர் வருகை பரபரபூட்டியது என சொல்ல வேண்டியது இல்லை. அவள் அணிந்திருந்த...

இப்படி செய்தி இருந்தது.. என்னைப்பற்றி ஒரு வார்த்தை இல்லை.. அழுதே விட்டேன்.சரி.. இது முட்டாள்தனமான ஊர் ,, இங்கே மரியாதையை எதிர்ப்பார்க்க முடியாது .. பீட்டர்ஸ்பர்க் , மாஸ்கோ போன்ற இடங்களில்தான் அறிவை மதிப்பார்கள் என மனதை தேற்றிக்கொண்டேன்

அதே நேரத்தில் பீட்டர்ஸ்பர்க்கில் எனக்கு வேலை இருந்தது. ஒரு போட்டிக்காக நானும் நடிகையும் ரயிலில் புறப்பட்டோம். சாப்பாடு, ஷாம்பேயின் என பயணம் குதூகலமாக இருந்தது . முடிவு அறிவுக்கபடும் நாளன்று சரியாக அந்த கல்வி மையத்தை அடைந்தோம். சார், என் வெற்றியை நானே கொண்டாடும் திருப்தியை அடைந்தேன் : எனக்கு முதல் பரிசு. அடுத்த நாள் பரபரப்பாக ஓடி சென்று செய்தி தாள் வாங்கினேன்

ஒவ்வொரு செய்தி தாளாக என் பெயரை தேடினேன். எதிலும் இல்லை. கடைசியாக ஒரு செய்தி தாளில் அந்த செய்தி இருந்தது..

“ நேற்று பிரபல நடிகை பீட்டர்ஸ்பர்க் ந்கர் வந்தார். அவளது அழகிய ....  என்று அவள் புராணம் பாடிய அந்த கட்டுரையின் அடுத்த பகுதிகள் நினைவு இல்லை.. கடைசியாக சிறிய எழுத்துகளில்  ஒரு வரி.. 
போட்டியின் முதல் பரிசு, ஒரு எஞ்னியருக்கு வழங்கப்பட்டது  

அதிலும் பிழை.. க்ரிகுனோவ் என்பதை கிர்குட்லோவ் என எழுதி இருந்தார்கள்.

இதே போல மாஸ்கோவிலும் அனுபவம் ஏற்பட்டது.

எத்தனையோ உதாரணங்கள் தர முடியும் ,ஆனால் போதும். எனக்கு தகுதி இல்லை அதனால்தான் புகழ் கிடைக்கவில்லை என ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். ஆனால் நான் மட்டுமன்றி , எத்தனையோ திறமைசாலிகள் அங்கீகாரம் இல்லாமல் வாழ்கிறார்களே.. எத்தனை ரஷ்ய விஞ்ஞானிகள், விவசாயிகள் பிரபலமாக இருக்கிறார்கள் . எத்தனையோ திறமை மிகுந்த எழுத்தாளர்கள் புகழ் இன்றியே மறைந்து விட்டார்கள் ”

ஆவேசமாக பேசிய முதல் வகுப்பு பய்ணி சிகரட்டை வாயில் இருந்து எடுத்து விட்டு எழுந்தார்.

” ஆம் “ தொடர்ந்தார் . “ அதே நேரத்தில், நம் முட்டாள் மக்கள் மத்தியில் பாட்கர்கள், கோமாளிகள், விளையாட்டு வீரர்கள் பிரபலமாக இருக்கிறார்கள் “ 

"
கதவு திறந்தது. கோட் ; கண்ணாடி, தொப்பி அணிந்த ஒருவர் தன் இருக்கைக்கு சென்றார்.


“ அவர் யார் தெரிகிறதா”  ரகசிய குரலில் யாரோ கேட்டார்கள் 
“ வங்கி விவகாரத்தில் தொடர்புள்ள என் என் தானே அவர் “ பதில் வந்தது 


” பார்த்தீர்களா.. அதுதான் விஷ்யம் “ சிரித்தார் முதல் வகுப்பு பிரயாணி..

” அவரிடம் செமிராட்ஸ்கி, சொலோயோவ் போன்ற தத்துவ ஞானிகளை தெரியுமா என கேளுங்கள்.. தெரியாது என்பார் “ கிண்டலாக சொன்னார் . 

மூன்று நிமிடங்கள் அமைதியாக சென்றன.


” உங்களிடம் ஒரு கேள்வி கேட்க அனுமதியுங்கள் “ எதிர் சீட்டுக்காரர் தொண்டையை செருமியபடி கேட்டார்


“ உங்களுக்கு புஷ்கோவை தெரியுமா ? :


” புஷ்கோவ்? ம்ம்? யார் . எனக்கு தெரியாதே “ பதில் அளித்தார் முதல் வகுப்பு பிரயாணி

” அதுதான் என் பெயர் “ சங்கடத்துடன் சொன்னார் எதிர் இருக்கை காரர். “ உங்களுக்கு என்னை தெரியாது.. ஆனால் 35 ஆண்டுகளாக நான் ரஷ்ய பல்கலைகழகங்களில் பேராசியராக இருக்கிறேன்.. அறிவியல் அக்காடமியில் உறுப்பினராக இருக்கிறேன். புத்தகம் எழுதி இருக்கிறேன் “

இருவரும் ஒருவை ஒருவர் பார்த்தார்கள்.. (அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா எனப்து போல ) வாய் விட்டு சிரிக்க தொடங்கினார்கள் 




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா