Tuesday, January 10, 2012

புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய டாப் டென் புத்தகங்கள்

புத்தக் கண்காட்சி வந்தாலும் வந்தது.. ஆளாளுக்கு நான் அதை வாங்கினேன் , இதை வாங்கினேன் என லிஸ்ட் கொடுத்து மிரட்டினார்கள்.  நான் புத்தக கண்காட்சிக்கு செல்வதே வேடிக்கை பார்க்கவும் , நண்பர்களுடன் சுற்றுவதற்கும், எழுத்தாளர்களுடன் பேசுவ்தற்கும்தான்.
ஆனால் அல்ட்டிமேட் ரைட்டர் ஒரு நாள் மட்டுமே வ்ரவிருக்கிறார் என்பது என் ஆர்வத்தை சற்று குறைத்தது.
ஆனாலும் விதி சும்மா விடவில்லை..ஆர்வக்கோளாறில் கிளம்பினேன்.

பார்க்கிங் பத்து ரூபாயாம்.. சரி, சினிமா தியேட்டர் , ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் என எல்லா இடத்திலும்தானே வாங்குகிறார்கள் என நினைத்தால், சிலர் இதை எதிர்க்கிறார்கள்..

பத்து ரூபாய் வாங்குவதிலும் நியாயம் இருக்கிறது, எதிர்ப்பதிலும் நியாயம் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

உள்ளே இருந்த உணவகத்தில் நுழைந்தால் விலையைப்பார்த்தால் பயமாக இருந்தது.

லீவு நாட்களிலோ, மாலை நேரங்களிலோ செல்வதை விட, லீவு போட்டுவிட்டு, துவக்க நேரத்திலேயே சென்றதால் , நன்றாக சுற்றிப்பார்க்க முடிந்தது. கமர்ஷியல் ஸ்டால்களில் நல்ல புத்தகங்கள் இருந்தாலும், கொஞ்சம் ஸ்டடி செய்தால், சரியாக தேர்வு செய்ய முடியும், சீதைப்பதிப்பகத்தில், அதிரடி தள்ளுபடியில் சில நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன.

சில இஸ்லாமிய ஸ்டால்களில் அருமையான புத்தகங்கள் உள்ளன, ஆனால் அவர்கள் பிரமோஷன் சரியில்லை..

தினந்தோறும் நடக்கும் , மாலை நேர சொற்பொழிவு அருமை. இன்று அமீர் இயல்பாக பேசினார்.

சாந்தியும், சமாதானமும் நிலவட்டும் என ஆரம்பித்து அவ்வப்போது தான் ஓர் இஸ்லாமியன் என பெருமையாக சொன்னது சிறப்பாக இருந்தது.. மத அடையாளங்களை காட்டிக்கொளவது லாபகரமானது அன்று , புரட்சியாளன் இமேஞ் போய் விடும் என நினைக்கும் டிரண்ட் நிலவும் உலகில் , அவர் இப்படி பேசியது பிடித்து இருந்தது.

தன்க்கு தூண்டுதலாக இருந்த எழுத்து, குர் ஆன் தான் என பெருமிதத்துடன் சொன்னார்.
அதே போல டாக்டர் ராமானுஜம் பேச்சும் சிறப்பு.
கணித மேதை ராமானுஜம் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.
அவரைப்பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்..

சரி.. புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் பட்டியல் பின் வருமாறு..

1 . முயல் வளர்த்து முதலாளி ஆவது எப்படி?
2.ஈமு வளர்த்து கோடீஸ்வரன் ஆகுங்கள்
3 முதலாளித்தவம் , சுரண்டல் மற்றும் ஏகாதிபத்தியம்
4குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?
5 ஒல்லியான நீங்கள் குண்டாவது எப்படி?
6வளமான வாழ்வுக்கு வாஸ்து
7 குதூகல வாழ்வுக்கு வழி காட்டும் குபேர பூஜை
8 கடவுளை வணங்குவதில் இருந்து, தலைவனை வணங்குவது வரை- பகுத்தறிவு விளக்க கையேடு
9 முப்பது வகை சூப் செய்யும் வகைகள்
10 கணேஷ் வசந்த் துப்பறியும் சுஜாதா நாவல்கள் தொகுப்பு




5 comments:

  1. Olli to Kundu o.k. Athenna Kundu to Olli.? Pathivu arumai.

    ReplyDelete
  2. எங்களை சந்திக்க விரும்பாமல் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக பட்சி சொல்கிறது... என்னா மேட்டர் சாரே...

    ReplyDelete
  3. அந்த எட்டாவது புக்கை கண்ணும் கருத்துமா படிங்க... உங்களுக்காகவே போட்ட இசுபெசல் எடிஷனாம்...

    ReplyDelete
  4. @பிரபாகரன் உங்களை புறக்கணித்து விட்டு ஒருவர் எழுதிவிட முடியுமா :-)

    ReplyDelete
  5. @ குண்டாவது பற்றிய புத்தகத்தை படித்து ஓவராக குண்டாகி விட்டால் , மீண்டும் ஒல்லியாக வேண்டுமே . எனவேதான் இரண்டையும் வாங்கி ஸ்டாக் செய்தேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா