காஃப்காவின் சிறுகதைகளைப் படிப்பது ஓர் அலாதி அனுபவம். ஓர் அறிமுகம் என்ற அளவில் கீழ்கண்ட கதையை படிக்கவும். பிடித்து இருந்தால் , ஆர்வம் ஏற்பட்டால் அதிகாரபூர்வ வெர்ஷனை படியுங்கள் .
பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் , இதன் உட்கருத்து அபாரமானது..
********************************************************
குழப்பமே வாழ்க்கை - காஃப்கா
இது பொதுவான அனுபவம்தான் . அன்றாட வாழ்வில் ஏற்படும் குழப்பங்களால் இது ஏற்படுகிறது.
அ என்பவனுக்கு ஆ என்பவனுடன் ஒரு வேலை இருந்தது. வேலையின் முதல் கட்ட பணிகளை முடிக்க ஆ வின் ஊருக்கு சென்றான். பத்தே நிமிடங்களில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பினான். விரைவாக வேலை முடித்ததை பெருமையாக் தன் வீட்டில் தம்பட்டம் அடித்து கொண்டான்
வேலையின் இறுதி கட்ட பணிகளை முடிக்கும் பொருட்டு அடுத்த நாள் கிளம்பினான். நேரம் அதிகமாக கூடும் என கணித்து அதி காலையிலேயே கிளம்பினான். ஆனாலும் ஏதோ சில காரணங்களால் , அந்த ஊரை சென்று அடைவதற்கு பத்து பணி நேரம் ஆனது.
களைப்படைந்த நிலையில் அந்த ஊரை சென்று அடைந்தபோது, ஆ அங்கு இல்லை. அ வுக்காக காத்து இருந்த அலுத்து போய் , அரை மணி நேரம் முன்புதான் ஆ அங்கிருந்து கிளம்பி அ வின் ஊருக்கு போய் விட்டதாக சொன்னார்கள். சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து சென்றிருக்க முடியும்.
காத்திருந்து பார்க்குமாறு சொன்னார்கள். ஆனால் அவசர வேலை இருப்பதாக சொல்லி அ அங்கிருந்து கிளம்பினான்.விரைவாக தன் ஊரை அடைந்தான்.
அ கிளம்பி சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் ஆ அங்கு வந்து சேர்ந்ததாக சொன்னார்கள். உண்மையில் அ கிளம்பி செல்லும்போதே ஆ அவனை பார்த்து விட்டான். ஆனால் கிளம்பி செல்லும் அவசரத்தில் அ அவனை பார்க்கவில்லை.
இப்படி ஒரு வினோதமான வகையில் அ செயல்பட்டாலும், ஆ பொறுமையாக அங்கு காத்து இருந்தான். அவ்வப்போது பொறுமை இழந்து அ இன்னும் வரவில்லையா என்று கேட்ட போதிலும், அங்கிருந்து சென்று விடாமல் அ வின் அறையிலேயே காத்து இருந்தான்.
ஒருவழியாக ஆ வை பார்க்க போகிறோம் , அனைத்தையும் விளக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் மாடியில் இருந்த தன் அறைக்கு பாய்ந்து சென்றான் அ..
கிட்டத்தட்ட மாடியை அடைந்த நிலையில், தடுக்கி விழுந்தான். கத்த கூட முடியாத நிலையில் சுருண்டு விழுந்தான். அவன் காதில் ஆ கோபத்துடன் படி இறங்கி அங்கிருந்து வெளியேறும் சத்தம் கேட்டது..
*************************************************

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]