இலக்கியம் குறித்து எழுத்தாளர் எஸ் ரா பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அதிலும் ரஷ்ய இலக்கிய உரையில் அவருக்கு நிகர் அவரே.
இந்த நிலையில், டால்ஸ்டாய் குறித்த அவர் கருத்துகள் தவறு, அபத்தமானது என் லா சு ரங்கராஜன் ஆவேசமாக தினமணியில் எழுதி இருக்கிறார். நாம் ரஷ்யாவை கண்டோமா , இலக்கியத்தை கண்டோமா .. பெரியவர்கள் சொன்னால் கேட்பதுதான் நம் வேலை.. இதில் இருவருமே பெரியவர்கள் என்பதால், யார் சொல்வது சரி என தெரியவில்லை..
லா சு ரங்கராஜன் என்னதான் சொல்கிறார்.. பாருங்கள்..
*********************************************************
30-12 2011 தினமணி இதழில் , கண்ணோட்டம் பகுதியில், மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர் என்ற தலைப்பில் எஸ் ரா தவறான கருத்துகளை எழுதியுள்ளார்.
டால்ஸ்டாயின் சுயசரிதை நூலைப்பார்த்துதான் காந்தி சுயசரிதை எழுதினார் என சொல்வது கேலிக்கூத்து.. டால்ஸ்டாய் சுயசரிதை எழுதியதே இல்லை
தான் ஏன் சத்திய சோதனை என்ற சுயசரிதை எழுதினேன் என்பதை காந்தியே விளக்கியுள்ளார்.
“ உங்கள் தத்துவங்களுக்கு ஆதார நூல் எது என காந்தி கேட்டதாகவும், அதற்கு திருக்குறளில் இருந்து பல தத்துவ சாரங்களை எடுத்து எழுதுவதாக டால்ஸ்டாய் சொன்னதாகவும் எஸ் ரா சொல்வது அபத்த சிகரம்.
காந்தி டால்ஸ்டாயிடம் குறளைப்பற்றி பேசியதும் இல்லை.. திருக்குறள் அனுப்பவும் இல்லை. இந்தியன் ஹோம் ரூல் எனும் சிறிய நூலை ஒரு முறை அனுப்பினார். அவ்வளவுதான்.
டால்ஸ்டாய் தன் கடிதம், கட்டுரை என எதிலும் குறளை சொன்னது இல்லை. திருகுறளை கேள்விப்பட்டிருக்ககூட மாட்டார்.
காந்திக்கு எழுதிய கடிதத்தில் பின் வருமாறு சொல்லி இருக்கிறார்
“ இந்திய, சீன , ஹீப்ரு, கிரேக்க , ரோமான்ய தத்துவ ஞானிகள் அன்பின் நியதியை பிரகடனப்படுத்துகின்றனர். ஆனால் இதை தெளிவாக எடுத்துரைப்பது இயேசு மட்டுமே “
காந்தி தன் சுயசரிதையை தவிர எழுதிய ஒரே நூல் ஹிந்து ராஜ்யம் என்ற தகவல் தவறானது. அவர் பல நூல்கள் எழுதியுள்ளார்.
அஹிம்சை வழி ஹிட்லரிடம் வேலை செய்யாது என காந்தி சொன்னதாக சொல்வது அபாண்டமான பழி.
காந்தி இப்படி எழுதியிருக்கிறார்
“ அஹிம்சை வழி ஹிட்லரிடம் வேலை செய்யாது என சொல்வதை ஏற்க இயலாது. ஜெர்மன் மக்களை அவர் இயந்திரமாக ஆக்கி வைத்துள்ளார். அஹிம்சையின் ஆற்றல் ஜெர்மன் ம்க்களை மாற்றும், ஹிட்லரும் மனம் மாறுவார். அவர் ஆதிக்க வெறி நீங்கினால் அவரும் ஒரு சராசரி மனிதர்தான். அவரிடம் அஹிம்சை வேலை செய்யாது என சொல்பவர்கள் , அஹிம்சையின் எப்படி வேலை செய்கிறது என்பதை அறியாதவர்கள் “
காந்திக்கு கணித துறையில்தான் ஈடுபாடு என இன்னொரு கற்பனை தகவல் தந்துள்ளார். காந்தி எங்குமே அப்படி சொன்னதில்லை. இப்படி தவ்றான தகவலை பரப்புவது கண்டிக்கத்தக்கது
*************************************************
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
காந்திக்கு கணித துறையில்தான் ஈடுபாடு என இன்னொரு கற்பனை தகவல் தந்துள்ளார். காந்தி எங்குமே அப்படி சொன்னதில்லை. இப்படி தவ்றான தகவலை பரப்புவது கண்டிக்கத்தக்கது
*************************************************
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
pls dont write abuse , read the following materials
ReplyDeleteMahatma Gandhi was invited to take participate in a Literature conference held at Allahabhad, in 1943.
Mahatma Gandhi has said that he came to know about Thirukkural from Leo Tolstoy. Leo Tolstoy has openly admitted that he has taken the concept of non-violence from a German translation of the Kural.
**
Three Autobiographical works of Tolstoy
1. Childhood: The First Part of Tolstoy's Autobiographical Work
2. Boyhood: The Second Part of Tolstoy's Autobiographical Work
3. Youth: The Third Part of Tolstoy's Autobiographical Work
**
Geometrical patterns drawn by Mahatma Gandhi to teach mathematics to his grand niece Manu Gandhi in 1944 while still in Detention. I was enlightened to see the Great Mahatma as a Mathematician a little known fact before and thought it would be good idea to let you all know!
http://vedicmathsindia.blogspot.com/2009/08/mahatma-gandhi-as-mathematician.html
**
நண்பரே . தகவலுக்கு நன்றி. இந்த இடுகை என் கருத்து அல்ல . தினமணியில் வந்த கட்டுரை
ReplyDelete