Pages

Friday, January 27, 2012

இதயம் கவர்ந்த இஸ்லாமிய நாவல்

சில புத்தகங்களை எதிர்பார்ப்போடும் , சிலவற்றை எதிர்பார்ப்பின்றியும் படிப்போம். சிலவற்றை எடுக்க தயக்கமாக இருக்கும். நமக்கு புரியுமோ புரியாதோ என்ற அச்சம் இருக்கும்,

வட்டார மொழிக்கதைகளில் இந்த பயம் இருக்கும்..

இஸ்லாமிய இலக்கியங்களை நான் படித்ததுண்டு என்றாலும், சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி இருக்கிறேன். எனவே தோப்பில் முகமது மீரான் எழுத்துகளை இது வரை படித்ததில்லை.

அவர் என்னதான் எழுதி இருக்கிறார் என பார்க்கலாமே என்று ஓர் ஆர்வத்தில் அஞ்சு வண்ணம் தெரு நாவலை கையில் எடுத்தேன்..

சற்று நேரத்திலேயே நாவல் என்னை உள்ளே இழுத்துகொண்டு விட்டது. எளிமையான நடை,  இனிமையான வட்டார சொற்கள் என பல சிறுகதைகளைப்போல இருந்தது.

பல்வேறு இஸ்லாமிய வார்த்தைகளுக்கு அந்தந்த பக்கங்களிலேயே அர்த்தம் கொடுத்து இருப்பது சிறப்பு. ஒரு முறை கதைப்போக்கில் , அந்த வார்த்தைக்கான அர்த்தம் தெரிந்து விடுவதால், இன்னொரு முறை அந்த வார்த்தை வரும்போது நெருடலாக இல்லை..
இத்தனை நாட்களாக் இனிமையான இந்த வார்த்தைகளை தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. இவரின் மேலும் சில புத்தகங்களை படிக்க வேண்டும், இஸ்லாமிய அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

பாடி கதையில்தான், எனக்கு க்தை சூடு பிடிப்பது போல இருந்தது. காரணம் ஏற்கனவே விவாதித்து வரும் ஒரு மேட்டர் கதையின் மையப்புள்ளியாக உருவெடுப்பது அங்குதான்.


இந்த கதை முழுதும் ஒரு தெருவில்தான் நடக்கிறது , அது சொல்லும் விஷ்யங்கள் அனைவருக்கும் பொதுவானவை.

ஐந்து இஸ்லாமிய நெசவாளர்களை அந்த தெருவில் வைக்கிறார் மன்னர். அவர்களின் வழித்தோன்றல்கள் தான் அங்கு வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பெண் பேரழகி. அவள் மீது அரசன் ஆசைப்பட்டுவிடுகிறான், அவனுக்கு ஆசை நாயகி ஆக விரும்பாத அவள் , உண்மையான முஸ்லீமாக இறப்பதையே விரும்புகிறாள். அந்த தெரு மக்களின் தெய்வமாகிறாள்..

பக்தி , இறை நேசம் அதிகமாக இருக்கும் இடங்க்களில் சில மூட நம்பிக்கைகளும் கலந்து விடும். இந்த மக்கள் எளிமையானவர்கள். புனிதர்களை போற்றுவது, வரலாற்றை மதிப்பது , இஸ்லாமை  நேசிப்பது என வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாடர்ன் முஸ்லீமாக , வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பி வருகிறான் சாகுல் ஹமீது.. சுஃபிக்களை , மகான்களை போற்றுவது தவறு என சொல்லி தன் பெயரையே மாற்றி கொள்கிறான் . குணக்குடி மஸ்தான் போன்ற ஞானியர்களை அவன் மதிப்பதில்லை..

பெரியவர்கள் அதிரகிறார்கள்.. ஆனால் அவன் சார்ந்த தவ்ஹீது அமைப்பின் கை ஓங்க ஆரம்பிக்கிறது. சிறிது சிறிதாக பழம் பெருமை மிக்க அந்த அந்த ஊர் சிதைகிறது.

நடு நிலை பார்வையுடன் எழுதி இருக்கிறார் நூலாசிரியர். யாருக்கும் தீங்கு செய்யாத எளிய மக்களின் பக்தி போற்றத்தக்கதுதான் என்றாலும், பக்தி மூட நமபிக்கை என்ற இடத்தை அடைவது தவறு என்ப்தை சொல்கிறார்.
அதேசமயம், புரட்சி செய்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை , அவர்களுக்கு சில உள் னோக்கக்கள் இருக்க கூடும் என்பதையும் சொல்கிறார்..


ஆலிம் புலவர், மம்முதம்மா, மோதினார் , வாப்பா , ஹாஜரா என ஒவ்வொருவரும் மனதில் வாழத்தொடங்கி விடிகின்றனர்.

மக்களின் நம்பிக்கைகளையும் , கனவுகளையும் , பாரம்பரிய பெருமைக்ளையும் அழித்து விட்டு என்ன சாதித்தார்கள் என்ற் கெள்வி எழுந்தாலும் , மாற்றம் என்பது எப்படி இருந்தாலும் வந்தேதான் தீரும் என்தும் புரிகிறது..

நாமே அந்த தெரிவில் வாழ்வது போன்ற பிரமை ஏற்படுத்தியது நாவல். இஸ்லாம் இலக்கியக்கள் மீதும் , அரபி வார்த்தைகள் மீதும் காதலை ஏற்படுத்துகிறது.

*******************************
பிளஸ் -

  • இனிமையயான நடை 
  • நடு நிலை பார்வை
  • நெஞ்சை அள்ளும் அரபி வார்த்தைகள், அதன் மொழி பெயர்ப்புகள்
  • வட்டார மொழி
  • புத்தக வடிவமைப்பு 

மைனஸ்


  •      சுஃபிக்கள் , தர்க்கா வழிபாடு என்பதில் இஸ்லாம் கருத்து என்ன என்பதை சொல்லாதது
 வெர்டிக்ட்...

அஞ்சு வண்ணம் தெரு - நெஞ்சை கவர்கிறது       













2 comments:

  1. ஸலாம் சகோ.பார்வையாளன்,

    //சுஃபிக்கள் , தர்க்கா வழிபாடு என்பதில் இஸ்லாம் கருத்து என்ன என்பதை சொல்லாதது // ---இதை மைனஸ் என்று சொன்ன நீங்கள்...

    //நடு நிலை பார்வை// ---இதை பிளஸ் என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.

    //அவர்களுக்கு சில உள் னோக்கக்கள் இருக்க கூடும் என்பதையும் சொல்கிறார்..//---?!?!?!!?!?

    இங்கேதான் சூட்சுமம் உள்ளது. 'இருக்கக்கூடும்' என்றெல்லாம் சொன்னவர் சுஃபிக்கள் , தர்க்கா வழிபாடு என்பதில் இஸ்லாம் கருத்து என்ன என்பதை மட்டும் ஒருவேளை அந்த நாவலில் அவர் மட்டும் சொல்லி இருந்திருந்தால்...???

    அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. ஒரு மார்க்கத்தை வாழ்வோடு படிப்பதுதான் சரி. உங்கள் பரிந்துரைக்கு நன்றி.

    வாழத்தானே மார்க்கம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]