Tuesday, January 31, 2012

கட்டடமா . கட்டிடமா? - எழுதுவதில், அடிக்கடி செய்யும் தவறுகள் சில

வாழுத்துக்களா வாழ்த்துகளா என்ற கட்டுரை படித்தேன்,, நன்றாக இருந்தது,,

தொடர்ந்து நன்றாக எழுதுங்கள்.. வாள்த்துக்கல்    என்று ஒருவர் வால்த்தி விட்டு சென்றார்.
அவர் எப்படி சொன்னால் என்ன.. அவர் வாழ்த்துகிறார் என புரிந்து விட்டது.. அது போதும்...

ஆனால் எழுதும்போது, அப்படி எழுதக் கூடாது..  அவசரத்தில் தவறாக எழுதுவது வேறு விஷயம்.. தெரியாமல் தொடர்ந்து தவறாகவே எழுதுவது பெரும் தவறு..

அடிக்கடி நாம் தவறாக பயன்படுத்தும் இன்னொரு சொல் கட்டடம் , கட்டிடம்

அடம் என்றால் அடுக்குவது.. கட்டி அடுக்குவது என்பது கட்டு + அடம்

அதுதான் கட்டடம் ( building )


அந்த கட்டடம் கட்ட இடம் வாங்கி வைத்து இருக்கிறீர்கள் அல்லவா? அது தான் கட்டிடம்...

கட்ட வேண்டிய இடம்..

ஆக, கட்டடம் என்பதும் கட்டிடம் என்பதும் ஒன்று அல்ல...



அதே போல நல்லெண்ணை. தேங்காய் எண்ணை என எழுதுவதும் தவறு..

நல்லெண்ணெய்,  தேங்காய் எண்ணெய் என எழுத வேண்டும்.

சொல்லும் போது , நள்ளென்னை  தேங்காய் என்னை  என சொல்ல வேண்டும் :)



சில பழ மொழிகள் இப்படி தவறான உச்சரிப்பால் அர்த்தம் மாறி விடுகின்றன..

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது பழ மொழி என நினைக்கிறோம்..

ஆற்றுக்கும் , குதிரைக்கும் என்ன சம்பந்தம்?

அதுவன்று அர்த்தம்.

ஆற்றில் ஆங்காங்கு மண் மேடுகள் காணப்படும்,, அது மண் குதிர்கள்.. அதில் கால் வைத்து நடக்க முடியாது.. அதை நம்பி ஆற்றை கடக்க முடியாது...

மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்க கூடாது என்பது அறிவுரை...

இதைத்தான் நம் மக்கள் இப்படி மாற்றி விட்டார்கள்...

இப்படி நிறைய உள்ளன...

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்.






6 comments:

  1. nalla visayam thelivaaka eluthi ulleerkal.. ennai pola thamilai englishil vaaltthinaal entha kulappamum illai... kattita vaalththukkal

    ReplyDelete
  2. கட்டடம் & கட்டிடம் புரிஞ்சுருச்சு,

    அப்படியே கொஞ்சம் மதில் & மதிள் விளக்குங்களேன்.

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள் ! நன்றி

    ReplyDelete
  4. உற்சாகமான தகவல்கள் !

    ReplyDelete
  5. ஒருமை, பன்மையை ஒழுங்காகப் பயன்படுத்துவதிலும் நாம் கணிசமான தவறுகள் செய்கிறோம்.

    > ஆற்றில் ஆங்காங்கு மண் மேடுகள் காணப்படும்,, அது மண் குதிர்கள்..

    மேற்கண்ட வாக்கியத் தொடரில், முதல் வாக்கியத்தில் "மண் மேடுகள்" என்று பன்மை பயன்படுத்தப்படுகிறது. அடுத்த வாக்கியத்தில் "மண் மேடுகள்" "அது"வாக மாறி விடுகின்றன. மாறாக, "அவை" என்பதுதான் சரி.

    ReplyDelete
  6. நன்றி ஏவிஎஸ் சார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா