Wednesday, February 29, 2012

ஜெயமோகன் கட்டுரை பீதி அடைய வைக்கிறது- நடு நிலை பதிவர்கள் கவலை













  நாலு பேர் நல்லா இருக்க வேண்டுமானால் சிலர் சாவது நல்லதுதான் என்றும் , வாழ்க்கை போரடித்து விட்டால், செத்து தொலைப்பதில் தவ்றில்லை எனவும் ஜெ மோ எழுதினார்,, தை நான் கண்டித்து எழுதினேன். இதற்கு எதிர் வினையாக ஜெ மோ ரசிகர்கள் வசை மாரி பொழிந்தனர். அவர் எழுத்து எப்படிப்பட்ட வாசகர்களை உருவாக்குகிறது என்ப்தை அனைவரும் அறிவதற்காக அந்த கமென்டுகளை அப்படியே கொடுத்துள்ளேன்.

ஆனால் நடு நிலை பதிவர்கள், ஜெ மோ கட்டுரையின் தீமையை படம் பிடித்து காட்டியுள்ளனர்.. அந்த கருத்துகள் உங்கள் பார்வைக்கு

***************************************************
 பீதி அளிக்கும் கட்டுரை


id - அடக்க முடியாதது.  அதை  சரியானவிதத்தில் புரிந்து அறிந்து அதை கடப்பதே சரியான பாதை, அதை கண்டிப்பாக அடக்கமுடியாது என்பது எனது கருத்து.
சிறந்த பண்பாடு வேண்டுமானால், நமது ID பற்றி புரிதல் சரியாக இருக்கவேண்டும். இந்த புரிதல் இலக்கியத்தின்  வழியேதான் மிக சுலமாக  நடக்கும் , ஆனால் நமது தமிழ் இலக்கிய உலகில் காமத்தை புனிதமாக பார்துப்பது இல்லை.  அதை அருவறுப்பாய் பார்ப்பதுதான் வழக்கம்.

//உன்னதமாக்கப்படுகிறது.// - உன்னதமாக்குதல் கண்டிப்பா அவசியம், ஆனால் அதன் பெயரில் நடக்கும் அரசியல் எப்படி இருக்கிறது? அதை எவ்வாறு உன்னதப்படுத்துகிறோம்? உன்னதப்படுத்தியவற்றை உடைத்து பார்க்க வேண்டிய அவசியம் தேவை இருக்கிறது  அல்லவா?
யாரும் idயை தவிர்த்துவிட்டு ,  உன்னதமாக்கலை அடைந்துவிடமுடியாது. இதுதான் ஓஷோவும்  இந்திய ஞானமும் சொல்வது, ஆதிசங்கரர் கதை ஞாபகம் வருகிறது. ஒரு தனி நபருக்கு பொருந்துவது கண்டிப்பா ஒரு சமுகத்திற்க்கும் பொருந்தும்.

ஒருவன் வாழ்வதற்ககு எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளவு உரிமை ஒருவன் அவனது உயிரை முடித்துகொள்வதற்கும் இருக்கு, இதில் எதற்கு தியாகம் என்னும் உன்னதமாக்கல். ?

ஒரு சமுகம் வாழ ஒரு தனிமனிதன் மரித்தால் பரவாயில்லை என்கிற பார்வைதானே இது, இந்த பார்வையில்தான் சமூகத்தின் சுய நலம் இருக்கு. யாருக்கு யாரும் உயிரென்ன,  மயிர் கூட தர தேவைல்லை. தருவதும் மறுப்பதும்  ஒரு தனி நபர் விருப்பமல்லவா,? இதில் எங்கு வந்தது தியாகம்?.

// மகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே///
அந்த கட்டுரையில் உள்ள அதிபயங்கர வரிகள் இவை. பதட்டமும் பயமும் கலந்து என்னை அப்படியே அமுக்குது. நான் முற்போக்குவாதி அல்லன் இலக்கியம் எனக்கு இரு ஆண்டுகள்தான் பரிச்சயம், இப்படிபட்ட வரிகளை மிக சிறந்த் எழுத்தாளராய் கருதப்படும் ஒருவர் எழுதுவது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு கொள்கையா / மனித உயிரா? உயிர்தானே மேல். அவர் சொல்வதுபோல முற்போக்கு சிந்தனையோடு தற்கொலைகளை முட்டாள்தனமென ஒதிக்கிவிடமுடியாதுதான், ஆனால் அதை ஆக்கம் என்பது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியாது, அய்யோ இப்படி இருக்கே மனித வாழ்வு!!!!! இந்த சமூக வாழ்வு!!!! ஒரு மனிதனின் உயிர் துறப்பிலா  நாம் நிம்மதியாக வாழ முடிகிறது, நான் மூன்று வேளை சாப்பிட்முடிகிறது, நம்மால் நமது சுதந்திர கருத்துக்களை எடுத்து சொல்ல முடிகிறது, அடுத்த கட்டத்திற்க்கு போகமுடிகிறது எனும் உணர்வை அளித்திருக்கவேண்டும் இவரது பதில். இந்த உணர்வில் பிறக்கும் பொறுப்புண்ர்ச்சிதானே உன்னதம்.

இந்த சிந்தனையின் Micro Level தான் நாம் அன்றாடம் ரோட்டிலும் வீட்டிலும் காணும் சமூக அவலம். சுயநலம் என்பது இந்த அளவுக்கு வெறுக்கப்படவேண்டியதில்லை, சுயநலத்தோடு பொறுப்புண்ர்ச்சியும் சேர்ந்துதான் ஒரு சிறந்த சமூக  பண்பாட்டிற்க்கு நம்மை எடுத்துசெல்லும்.

தியாகம் எனும் உன்னதமாக்கபட்ட ஒரு செயலை உடைத்து காட்டி இதுதான் இப்படிதான் எனும் பதில் வந்தால் அது உன்னதம். அதுதானே ஒரு ஆசிரியரின் கடமையாக் இருக்கமுடியும். உன்னத்ங்களை போற்றும் சமுகம் வெள்ளையடிக்ப்பட்ட கல்லரைக்கு சமம்.

id பற்றி எந்த புரிதலும் இல்லாது அதன் தேவைகளின் அவசியம்தெரியாது சூப்பர் இகோவுடன் இருந்து கொண்டு அதை மெயின்டேன் பண்ணிக்கொண்டு அதற்க்கு மற்றவர்களின் தியாகத்தை மிரட்டி அதட்டி பிச்சை வாங்கி வாழும் என்னை போல சராசரி வாசகனுக்கு தரும் இந்த பதில் என்னை பீதியடைய வைக்கிறது.

இதில்  ஓர் ரு இலக்கிய ஆசான் எழுதியதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த மன உளைச்சல்தரும் பதிவை படிக்க தூண்டிய உங்களுக்கு கடுமையான கண்டனங்கள்.

எல்லோரும் ஆனானியாக பிண்ணுட்டம் போட்டதால் நானும் ஆனானி.

இவரின் மாடனும் மோட்ச்சமும் சிறு கதையை வாசித்துவிட்டு, பேச்சிப்பாறை - இசக்கி கோவில், திருப்பர்ப்பு சிவன் கோவில் சென்ற்வன் நான். திவிர வாசகனாகலாம் என நினைத்தேன். ச்ச இவ்வள்வுதானா.


*********************
*********************************
அபாயகரமான கட்டுரை


When it is high time said...

Thanks to the 1st commenter, I opened the blog post and read. I was alarmed. It is an intellectual skulduggery of a satanic thought.

Ur concern is correct. Whether Charu has said or not, celebrating suicide is dangerous to humanity. Life is a commitment given to God if one believes in Him whereby one has to live it in all shades, positive and negative, and leaves the world only when the call comes from Him. One should not be impatient and makes the Call oneself. It is pretending to be God.

Whoever does end his life on his own believing that he has rounded off all his worldly affairs is doing an act against nature (God). But whoever does end his life on his own believing in a cause or in order to rouse public opinion for or against it, is exploiting the same nature to his advantage for an unselfish cause, which we call ‘sacrifice’. But strictly speaking, in religious terms, that, too, ought to be disallowed considering that suicide is not an effective tool to propagate an ideal. There are other better ways. This kind of suicide is not celebrated but gets acknowledged positively by society as a whole. Celebration is a bad word here. No one celebrates the death of a young man like Muthu Kumar or Chengodi who took their lives for a cause; but empathise with them and their objective only. Jemo abuses the word ‘celebration’!

Giving saintly coating to the sucides of old persons believing that they had finished off their worldly lives and nothing more is left for them is justifying a wrong action and spreading a poisonous message for suicide in society. Such message is occasionally spread by some suicide cult to make its adherents believe in ending life for some abstract ideals. Jain monks commit sucide; but Jains don’t believe in God. It is an atheist faith.

He says celebration of suicide is in the Hindu spiritual tradition. It is untrue. Only death, that too, natural death is celebrated. Not other deaths, let alone suicides.

He says only semitic religions believe that the suicides (the persons who commit suicide) turn into evil spirits after death. It is incorrect. In Hindi religion too, the suicides are said to be roaming around as pisaasus or evil spirits and the female suicides if they had died for reasons of romance etc., will be ready to haunt young men. Other suicides are said to haunt those who were responsible for their deaths.

He berates semitic religious belief but ends his blogpost with Jesus's alleged statements. Whatever he said shows him as a dangerous man to society and it is shocking to know many young people read him. Imagine if he becomes an ultimate cult leader for them advocating suicides. We will get to see an Indian Jones genocide

The young ppl shd be weaned away from him. But how?
 

Tuesday, February 28, 2012

அனைவரும் தற்கொலை செய்து செத்து தொலையுங்கள்- ஜெயமோகனின் ஃபாசிச கருத்து

 வாழ்க்கையை கொண்டாடுங்க்கள் என்பார் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. அவர் மட்டுமன்றி , நல்ல மனம் படைத்த எல்லோருமே இதைத்தான் சொல்வார்கள்.

நாம் சந்தோஷமாக இருந்தால் மற்றவரை துன்புறுத்த நமக்கு  மனமும் இருக்காது,  நேரமும் இருக்காது..

இந்த நிலையில், குறுக்கு சால் ஓட்டுவது போல , மரணத்தை கொண்டாடுங்கள் என சொல்கிறார் ஜெயமோகன்.

இதற்கு துணையாக தியாகிகள் , போரளிகளான முத்துக்குமரன் மற்றும் செங்கொடி போன்றோரை இழுத்துள்ளார்.

போராட்டத்தில் உயிர் தியாகம் செய்பவர்களும் , மோட்சம் கிடைக்கும் என நம்பி , தற்கொலை செய்வதும் ஒன்றா.. இரண்டையும் ஒன்று போல ஒப்பிட்டு எழுதி பெரும்பிழை செய்திருக்கிறார் அவர்..

மற்றவர்களுக்காக , தன் மொழிக்காக , தன் இனத்துக்காக உயிர் விடுவது தியாகம்.  வாழ்க்கை அலுத்து  போயோ , இறந்தால் மோட்சம் கிடைக்கும்  என நினைத்தோ உயிர் விடுவது , சுயனலம்தானே.. இதில் எங்கே தியாகமோ , உன்னதமோ இருக்கின்றன ?

இதே போன்ற்  கருத்தை நான் கடவுள் திரைப்படத்த்தில் சொல்லி இருப்பார். மரணத்தை கொண்டாடி இருப்பார்

இத்தகைய ஃபாசிச கருத்தை வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் கடமை...

Saturday, February 25, 2012

இஸ்லாமின் தனித்தன்மை- பழ கருப்பையா கட்டுரை


ஒவ்வொரு மதமும் சிறந்தவைதான் என்றாலும் இஸ்லாமிய மதத்துக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. யாரும் திரிபுவாதம் செய்ய அது அனுமதிப்பதில்லை. கறாரான சட்டங்கள் , வழிமுறைகள் கொண்ட அந்த மதத்தை பற்றி எழுத எனக்கு ஆசை. ஆனால் அதற்கேற்ற தமிழ் அறிவையும் , மத அறிவையும் இன்னும் வளர்த்து கொண்ட பின் தான் நான் எழுத முடியும். இப்போதைக்கு , தின மணியில் பழ கருப்பையா எழுதிய கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

*******************************************************




அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை!





அண்மையில் மிலாதுநபி விழா வந்து சென்றது. உலகத்தின் பாதி மீது தன்னுடைய மார்க்கத்தின் வாயிலாக ஆட்சி செலுத்தும் நபிகள் பெருமானாரின் பிறந்தநாள் விழா அது.

 உலகத்தில் பல நபிகள் தோன்றினார்கள்; மோசசிலிருந்து ஏசுவரை எண்ணற்றோரை நபிகள் என்று ஏற்கிறது திருக்குரான். ஆனால், முகம்மதுநபிதான் இறுதி நபி!
 முகம்மது நபி "சல்லல்லாகூ அலைஹி வசல்லம்' என்று போற்றப்படுபவர்; சல் என்றால் நபி!
 நபிகள் நாயகம் அரபு மண்ணை மட்டுமன்றி, அனைத்துலகத்தையும் மனத்தினில் கொண்டு, ஒரு புதிய வாழ்வியல் நெறியை உருவாக்கினார். அதைத் "தீன்' என்று இசுலாம் சொல்கிறது.
 அந்தத் "தீனில்' ஈடுபாடு கொண்டோர் ஒரு கூட்டமாக உருவாவது இயற்கை. அந்தக் கூட்டம் தன் மனம் போன போக்கில் உருவாகிவிடாமல், அதை ஒரு சமூகமாக உருவாக்கியதில்தான், ஓர் அமைப்பைக் கட்டியமைப்பதில் நபிகள் நாயகத்துக்கு உள்ள அளப்பரிய திறனும் மேதைமையும் பளிச்சிடுகின்றன. அதை "உம்மா' என்பார் நபிகள் நாயகம்.
 வழிபடு தெய்வத்தை, அதற்குரிய வடிவத்தை வழிபடு மொழியை, வழிபடுவதற்குரிய முறையை, இன்னும் சொன்னால் வழிபடு நேரத்தையும் வழிபடுவோன் முடிவு செய்து கொள்வதில்லை. இவை அத்தனையையும் இசுலாத்தில் நபிகள் பெருமானார்தான் முடிவு செய்திருக்கிறார். இதிலேதான் நபிகளின் அமைப்புக் கட்டும் திறன் ஒளிர்கிறது.
 நபிகள் பெருமானார் கட்டியமைத்த "உம்மா'தான் இசுலாத்தின் வலிமைக்கு அடிப்படை. உம்மா என்பது சமூகம்தான்.
 இசுலாம் முதலில் இறைமீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இரண்டாவதாக ஐந்து நேரத் தொழுகையை வலியுறுத்துகிறது.
 ஐந்து வேளையும் தொழுவதற்கு "பாங்கு' சொல்லி மக்களை அழைக்கும் பாங்கு இசுலாத்துக்கே உரிய தனிச்சிறப்பு. இன்னின்ன நேரங்களில்தான் தொழுவது என்பது வரையறுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், அவர்களைத் தொழுகைக்கு அழைப்பது இயலக் கூடியதாக இருக்கிறது.
 இமாம் தொழுகையை வழிநடத்தும்போது, எப்போது குனிவது, எப்போது நிமிர்வது, எப்போது காது மடல்களைத் தொடுவது, எப்போது மண்டியிட்டு மண்ணில் நெற்றி படுமாறு வணங்குவது இவற்றை எல்லாம் எந்த வரிசையில் செய்வது என்று அனைத்துமே நபிகளால் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன.
 இசுலாமியர்கள் கடற்கரையில் பெருந்திரளாகக் கூடி நின்று இரமலான் நோன்பில் தொழும்போது, பட்டாள வீரர்களின் அணிவகுப்பைப் பார்ப்பது போன்ற திகைப்பும் கவர்ச்சியும் ஏற்படுவதற்குக் காரணம் நபிகள் நாயகம் தொழும் முறையைக்கூடத் துல்லியமாக வரிசைப்படுத்தி வைத்திருப்பதுதான்!
 ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபி (ஸல்) எவ்வாறு தொழுதாரோ, அவ்வாறே அதே பாணியில்தான் இன்று நம்முடைய இளையான்குடிபுதூர் அப்துல்லாவும் தொழுகிறார்.
 இசுலாத்தின் அடிப்படை இறைவனுக்கு வடிவமில்லை என்பது. இறைவனுக்கு வடிவம் தேவைப்படுவோர்க்குத்தான் கோயில் தேவைப்படும். வடிவமில்லாத இறைவனை வணங்கப் பள்ளிவாசல் எதற்கு? பள்ளிவாசலில் எங்கும் சுவர்கள்தாமே இருக்கின்றன! மேற்கு நோக்கித் தன்னுடைய வீட்டிலிருந்தும் தொழ முடியுமே! பாங்கு சொல்லி இவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைப்பானேன்?
 ஓடுகின்ற தொடர்வண்டியிலும், போர்க்களத்தில் ஒட்டகத்தின் மீதிருந்தும் தொழுவதை இசுலாம் அனுமதிக்கிறது. எனினும், பள்ளிவாசல் தொழுகை இன்றியமையாததாக இருப்பது ஏன்? ஒருவருக்கொருவர் அருகிருந்து தொழும்போதுதான் "உம்மா' என்னும் சமூக அமைப்பைக் கட்டி எழுப்ப முடியும்!
 பள்ளிவாசல் தொழுகைபோல், "ஹஜ் யாத்திரையும்' ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.
 வசதியும், உடலும் இடங்கொடுக்கும் ஒவ்வொரு இசுலாமியனும் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்று தொழுது வரவேண்டும்.
 பக்கத்து வீட்டுக்காரனோடும், தூரத்து வீட்டுக்காரனோடும் ஒரு பள்ளிவாசலில் கூடித் தொழும்போது ஓர் "உம்மா' உருவாவதுபோல, பக்கத்து நாட்டுக்காரனோடும், தூரத்து நாட்டுக்காரனோடும், மெக்காவில் கபாஆவுக்கு முன்னால் கூடித் தொழும்போது ஓர் அகன்று பரந்த உலகளாவிய "உம்மா' உருவாகாதா?
 ஒரே இறை அல்லா; இறுதி நபி முகம்மது நபி: அல்லாவால் அருளப்பட்ட திருக்குரான்! இவையே இசுலாத்தின் இரண்டாங் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் உள்ளூர்ப் பள்ளிவாசலிலும், இசுலாத்தின் ஐந்தாங் கடமையான ஹஜ் யாத்திரையின் முடிவில் நிகழ்த்தும் மெக்கா தொழுகையிலும் அனைவரையும் ஒன்று குவிக்கும் சிந்தனை மையங்கள்.
 கீழக்கரையில் கட்டப்படும் சிறிய அளவினதான "உம்மா' மேலக்கரையில் மெக்காவில் பேருருக் கொள்கிறது!
 நாட்டின் எல்லைக்கோடுகள் தேய்ந்து போகின்றன; மொழிகள் அற்றுப் போகின்றன; இனங்கள் காணாமல் போகின்றன!
 இராக்கிலுள்ள இசுமாயிலும், சௌதிஅரேபியாவிலுள்ள சௌக்கத் அலியும், ஆப்பிரிக்காவிலுள்ள அகமதுவும் நம்முடைய காயல்பட்டினத்திலுள்ள காதர்பாட்சா ராவுத்தரும் "அல்லாகூ அக்பர், அல்லாகூ அக்பர்' விண்ணதிர முழங்குகின்றபோது, உருகிக் கரைந்து ஒருமை நிலை எய்தி விடுகின்றனர்!
 ஓர் அமைப்பை அதுவும் உலகளாவிய அளவில் கட்டியமைக்கும் திறனில் நபிகள் நாயகத்துக்கு இணையாக யாருமில்லை!
 அமைப்புக் கட்டுமானத்தில் எள்ளளவும் சிதைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் பெருநோக்கில், தனக்கு நியாயமாக வந்திருக்க வேண்டிய பெரும்புகழைப் புறந்தள்ளினார் பெருமானார்!
 திருக்குரானின் வாசகங்கள் அல்லாவின் வாசகங்கள்! அவை தன் வழியாக வந்து இறங்கின; அல்லாவின் கைகளில் தான் ஒரு கருவி மட்டுமே என்று நபிகள் நாயகம் திண்ணமாகச் சொன்னார்.
 தன்னை வணங்குவதையோ, தன்னுடைய சமாதியை வணங்குவதையோ நபிகள் கடுமையாக மறுத்தார் என்பது மட்டுமன்று; அது ஒரு "அராம்'; குற்றம் என்று மிகக் கண்டிப்போடு விலக்கி வைத்தார்.
 "எல்லாப் புகழும் அல்லாவுக்கே' என்பதுதான் நபிகள் நாயகம் கற்பித்த வாழ்க்கை முறை!
 "தெருவுக்குத் தெரு டிஜிட்டல் பேனர்கள்; சுவர் கொள்ளாத பதினாறு துண்டுச் சுவரொட்டிகள்; நாளிதழ்களில், வார இதழ்களில் திறந்த பக்கமெல்லாம் முழுப் பக்க விளம்பரங்கள்; நிற்பதுபோல், இருப்பதுபோல், நடப்பதுபோல், சிரிப்பதுபோல், சிந்திப்பதுபோல்' ஐயோ எத்தனை எத்தனை கோலங்கள்! ""இளையோர்களின் குலவிளக்கே; முதியோர்களின் தெரு விளக்கே'' என்று எத்தனை எத்தனை துதிகள்!
 இவ்வளவுக்குமான விலை கொடுப்பதற்கு ஒருவனுக்கு வசதி இருந்தால், அன்றே அப்போதே அந்தப் புகழை அடைந்து விடலாம். இடைவிடாமல் மக்கள் கண்ணை உறுத்திக்கொண்டே இருப்பதுதான் புகழ் என்று நினைக்கிறார்கள்.
 ஒரு பற்பசைக் கம்பெனி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குக் கடைப்பிடிக்கின்ற உத்திகளை ஒரு மனிதனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கடைப்பிடிக்கிறான்! புகழ் என்பது சீரழிந்த சமூகத்தில் ஒரு சந்தைப் பொருளாகிவிட்டது.
 ஆனால், நபிகள் நாயகம் தனக்குரிய உண்மை பெரும் புகழை அதன் போக்கிலேயே விட்டிருந்தால், அல்லாவோடு சேர்த்து அவரையும் வணக்கத்துக்குரியவராக உலகம் ஆக்கியிருக்கும். ஆனால், அவர் அதைக் கடுமையாகவும், கண்டனத்தோடும் மறுதலித்து விட்டார்.
 நபிகள் நாயகம் இறந்தவுடனே முதற் கலீபாவாகப் பொறுப்பேற்கப் போகும் அபூபக்கர் அந்தத் துயரமான நிகழ்வை அறிவிக்கின்றார்.
 ""முகம்மது இறந்து விட்டார்; அல்லா இறப்பு அற்றவன்; அவனே வழிபாட்டுக்குரியவன்''.
 பிறப்பு இறப்புக்கு உள்பட்ட எந்த மனிதனும் வணக்கத்துக்குரிய நிலையினன் அல்லன் என்னும் நபிகள் நாயகத்தின் அழுத்தமான கொள்கையைத்தான் அபூபக்கர் இங்கே பேசுகிறார்.
 நபிகள் பெருமானாரின் புகழ்த் துறவு அளப்பரியது.
 திருக்குரானின் ஆசிரியன் அல்லா; அல்லாவின் வாசகங்கள் தன் வழியாக இறங்கின; அவ்வளவே என்று மீண்டும் மீண்டும் அறிவித்தார் நபிகள் நாயகம்!
 கோடானுகோடி மக்களை வரும் வரும் காலங்களில் ஆட்படுத்தப்போகும் ஒப்பற்ற சிந்தனைகள், "எந்த ஒன்றையும் ஓதி அறியாத' தனக்கு எப்படித் தோன்ற முடியும் என்பதே நபிகளின் நிலைப்பாடு! ஆகவே அல்லா ஓதுவித்ததைத் திரும்ப ஓதுகின்றவராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் பெருமானார்.
 தன்னை ஒன்றுமே இல்லை என்று சுருக்கியும் அல்லாவே எல்லாம் என்று பெருக்கியும் வாழ்ந்த பெருமகனார் நபிகள் நாயகம்.
 அல்லாவின் திருக்குரானும் அல்லாவின் தூதர் நபிகள் நாயகமும் எத்தனையோ நாடுகளில் ஊடுருவி வேரூன்றியதுண்டு. அங்கெல்லாம் மார்க்கம் தன்னைத் திருத்திக் கொண்டதில்லை. மண்தான் மார்க்கத்துக்கேற்றவாறு தன்னைத் திருத்திக் கொண்டிருக்கிறது.
 இசுலாமியர்களின் கொள்வினை - கொடுப்பினைகள், திருமண உறவுகள், அதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகள், திருமண முறிவுகள், அவற்றுக்கான முறைகள் ஆகிய அனைத்துமே அவர்களின் ஷரியத் சட்டத்தில் துல்லியமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
 பாங்கு சொல்லி அழைக்கும் முறையில்கூட ஆயிரத்தி முந்நூறு ஆண்டுகளாக எந்த மாற்றமுமில்லை. இசுலாம் அவ்வளவு கட்டிறுக்கமானது. இவற்றையெல்லாம் கவனிக்காமல் அவர்களுடைய "ஷரியத் சட்டத்தை' ஒதுக்கிவிட்டு, ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்?
 உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணின் திருமண முறிவு வழக்குத் தீர்ப்பில் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்துக்குப் பரிந்துரை செய்தார். ஆனால், ராஜீவ் காந்தி காலத்தில் 1986-ல் நாடாளுமன்றம் குறுக்கிட்டு அதைத் தடுத்துவிட்டது!
 "மகர்' என்னும் முறையை விடுத்து, இந்துத் திருமண முறிவுக்குப்போல், சீவனாம்சம் வழங்க வேண்டும் என்னும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நாடாளுமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.
 இந்துப் பெண்ணின் திருமண முறிவு உரிமை விடுதலை பெற்ற இந்தியாவில் நேரு காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது.
 ஆனால், திருமண நாளிலேயே பின்னொருநாள் திருமண முறிவு நேரிட்டால், அதற்கான வழிவகை என்ன என்று சிந்தித்தவர் நபிகள் நாயகம்! முறிவு செய்யப்பட்ட பெண்ணுக்கு "மகர்ப் பணம்' வழங்க வேண்டும் என்பது நபிகள் கண்ட தீர்வு. அந்த "மகர்' திருமணப் பொழுதிலேயே முடிவு செய்யப்படுவது இசுலாத்தின் தனித்தன்மை!
 திருமணம் என்பதை ஆண் பெண்ணுக்கிடையேயான ஓர் ஒப்பந்தம் என்ற அளவிலேயே இசுலாம் பார்க்கிறது. முறிவு செய்த ஆண் "மகர்' வழங்காவிட்டால் குற்றமே ஒழிய முறிவு குற்றம் கிடையாது!
 ஒவ்வொரு மக்கள் கூட்டமும் ஒவ்வொரு வகையான ஒழுகலாறுகளைக் கடைப்பிடிக்கிறது.
 இசுலாமியர்கள் கடைப்பிடிக்கும் ஒழுகலாறுகள், விதிமுறைகள், சட்டங்கள் ஆகிய அனைத்தும் அல்லாவினால் சொல்லப்பட்டு நபிகளின் வழியாக இறங்கியவை.
 அவற்றில் திருத்தம் செய்பவன் அல்லாவை விடப் பெரியவனாக இருக்க வேண்டும். அல்லாவினும் பெரியவன் எவனுமில்லை. ஆகவேதான் அந்த அமைப்பு எந்த விலகலையும் அனுமதிப்பதில்லை.
 ஒரு வாழ்க்கைமுறை அல்லது ஒழுகலாறு நாடு கடந்து இனங்கடந்து, மொழி கடந்து சென்று உலகெங்கணும் ஆங்காங்கே வேரூன்றிய போதும், வேரூன்றிய இடங்களின் போக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள முடியாதபடி, நபிகள் பெருமானார் ஓர் உலகளாவிய "உம்மா'வைக் கட்டியமைத்ததில் அவருடைய சிந்தனைப் பாடுகள் மட்டும் புலப்படவில்லை. அதில் நபிகள் நாயகத்தின் ஈடு இணையற்ற மேதைமையும் ஒளிர்கின்றது!
 ""லாஇலாஹ இல்லல்லாஹ்
 முகம்மதுர் ரசுலுல்லாஹ்''

Friday, February 24, 2012

பழம் உனக்கு , கொட்டை எனக்கு- அலட்ஸ் ஒன்லி க்தைக்கு விக்கிலீக்ஸ் விமல் மதிப்புரை !!

ஒரு காலத்தில் விமர்சனம் எழுதுவது என்றால் பெரிய விஷ்யம் . சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் , இசை விமர்சனம் என எதுவானாலும் அந்தந்த துறைகளில் ஆழ்ந்த அறிவு வேண்டும்.
இன்றோ எந்த படிப்பறிவும் இன்றி ப்ரூஃப் ரீடிக்கையே இலக்கிய விமர்சனம் என சிலர் நினைக்கிறார்கள்..

இலக்கிய விமர்சனம் அல்ல.  சரோஜா தேவி கதைகளை கூட இவர்க்ளால் விமர்சனம் செய்ய இயலாது..

சரோஜா தேவி கதை ஒன்றை எடுத்து கொண்டு , புத்தக மதிப்புரைக்காக விக்கி லீக்ஸ் விமலை சந்தித்தான் , டீன் ஏஜ் இளைஞன்ஒருவன்..

பிறகு என்ன நடந்தது..  பாருங்கள்.

*********************************************************************
" சார் ,, நான் கதையை வசிக்கிறேன்.. கேட்டு விட்டு கருத்து சொல்லுங்க்கள்"

விக்கிலீக்ஸ் : ஓகே

டீன் ஏஜ் :   தலைப்பு-  பழம் உனக்கு , கொட்டை எனக்கு...

                     என் பெயர் ர****  . நான் 18 வயது வாலிபன்

விக்கி : தப்பு தப்பு தப்பு . ஆரம்பமே தப்பு

டீன்   :  என்ன ஆச்சு? நல்லாத்தானே இருக்கு .

விக்கி  : தமிழில் " ர" என்ற எழுத்தில் ஆரம்பிக்க கூடாது. இராமன், இரஞ்சித் என எழுதணும்

டீன் : ( ரொம்ப முக்கியம் ) சரி..கேளுங்க..   நான் தனியாக ஒரு வீட்டில் தங்கி மாவரைக்கும் மெஷின் வைத்து , மாவு வியாபாரம் செய்து  வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். நேரத்தை வீணடிக்க எனக்கு பிடிக்காது.. கரன்ட் இல்லாமல் மெஷின் ஓடாவிட்டால், கை வேலையில் இறங்கி விடுவேன்.

விக்கி : தப்பு தப்பு... கைகள் என எழுத வேண்டும்.. மாவாட்ட இரண்டு கைகளும் வேண்டுமே

டீன் : ( குழப்பமாக ) சரி..கைகள் வேலைகள்.. போதுமா.. ? அப்போது பக்கத்து வீட்டில் ஒரு ஆண்ட்டி ..

விக்கி ; தப்பு தப்பு... ஒரு ஆண்ட்டி இல்லை.. ஓர் ஆண்ட்டி

டீன் : ( ஏதோ ஒண்ணு.. அட சே ) பார்க்க கும் நு இருப்பாங்க..  கண்கள் மீன் கள் போல இருந்தது...   ***கள் மலைகள் போல இருந்தது


விக்கி : தப்பு தப்பு ... இருந்தன என வர வேண்டும்

டீன் : ( இப்படி கதை படித்து, உருப்படுவதற்கா? ) சரி.. கேளுங்க.. ஒரு நாள் மாவு கொடுக்க ஆண்ட்டி வீட்ட்க்கு போனேன்.  ஆண்டி இல்லை.. குளிக்கும் சத்தம் கேட்டது...  சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்த பாத் ரூம் கதவு மூடப்பட வில்லை .. காற்றில் திறந்து கொன்டது... உள்ளே...

விக்கி : தப்பு தப்பு....   சமையல் அறைக்கு பக்க்கத்தில் பாத் ரூம் இருக்காது...  இவரு8க்கு கதை எழுதவே தெரியல... இதை படிக்காதே... ஆமா.. அவரை திட்டுனா , உன்  முகம் ஏன் சுருங்குது

டீன் ; உங்க்க கூட பேசியதில் சுருங்க்கி போச்சு..

விக்கி : பரவாயில்லை... உனக்கு யானை எழுத்தாளர் க்தை படிச்சு காட்டுறேன்.. சுருங்க்கியது நீண்டு விடும்.. கூட்டணிக்கு நான் தயார்

டீன்.. நான் வீட்டுகு போய், சுயேட்சையாகவே ஜெயிச்சுக்க்றேன். குட் பை

Thursday, February 23, 2012

நள்ளிரவில், என்னை கேள்விகளால் திணற வைத்த கவிஞர்



     வெற்று கூச்சல்கள் அதிகம் உள்ள இணையத்தில் நல்லிதயம் கொண்ட புத்திசாலிகளும் இருப்பதால்தான் , இணையம் நம்மை கவர்கிறது..

நண்பர் றியாஸ் குரானா அவர்களின் www.maatrupirathi.blogspot.com வலைப்பக்கம் என்னை கவர்ந்த ஒன்று.. ஆனால் அவருடன் உரையாடியது இல்லை...

நேற்று நள்ளிரவு அவருடன் சேட் செய்தேன், தன் கேள்விகளால் என்னை திக்கிமுக்காட வைத்தார்..  அதே சமயம் யோசிக்கவும் வைத்து விட்டார்...


அவர் வலைத்தளம் சென்று பாருங்கள்.. அவர் வித்தியாசமான சிந்த்னை உங்களையும் கவரும்.

இதோ அவருடனான உரையாடல் 

++++++++++++++++++++++++++++++++++++++++


  • Riyas Qurana




  • றியாஸ் குரானா
    Riyas Qurana
    • vanakkam tholar nalama

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வணக்கம் வணக்கம்
    • நலம்.. தாங்கள் நலமா

  • 20 hours ago 
    Riyas Qurana
    • aamaam

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நான் நலம்..என்ன விசேசங்கள் நண்பா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • சொல்லுங்கள்.. ஏங்கே இருக்கிறீர்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • இலங்கையில் இருக்கிறென்..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • கிரிக்கெட் பார்த்தீர்களா?
    • இந்தியாவை இலங்கை வீழ்த்தி விட்டதே

  • 20 hours ago 
    Riyas Qurana
    • கிரிகெட் பார்ப்பதில்லை நண்பா..விருப்பம் குறைவு..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ‘படிப்பில் மட்டும்தான் ஆர்வமா?


  • 20 hours ago 
    Riyas Qurana
    • இல்லை இசை..என பலதும் விருப்பம்..வெற்றி தோல்வி எனச் சண்டைபிடிக்கும்எதிலும் ஆர்வமில்லை.

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • அருமை
    • மனிதனுக்குள் இருக்கும் போட்டி மனோபாவம்தான், விளையாட்டு, போர் என பல வடிவம் எடுக்கிற்து
    • இலக்கியம்., பதிவுல்கம் என எதுவும் விதி விலக்கல்ல
    • உங்களை போன்றோர் விதி விலக்காக இருப்பது மக்ழிச்சி

  • 20 hours ago 
    Riyas Qurana
    • மனிதனுக்குள் இருக்கிறதா..
    • மனிதனுக்குள் இருக்கும் ஒன்றை வெறுப்பது ஏன்..?
    • irukkireenkala tholar..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ஆமா
    • நீங்க சொல்வதை கவ்னித்து கொண்டுதான் இருக்கிறேன்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • மனிதனுக்குள் இருப்பதை ஏன் மனிதன் வெறுக்க வேண்டும் தோழர்..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வெறுக்க வேண்டியதில்லைதான்.. ஆனால் வெறுப்பு என்ற வேதம்தான் உலகை இயக்குகிறது
    • வெறுப்பு இல்லாத இடம் ஏதேனும் ஒன்றை சொல்லுங்கள்:

  • 20 hours ago 
    Riyas Qurana
    • சரி...வெறுப்பு எங்கே இருக்கிறது தோழர்மனிதனுக்குள்ளா..வேறெங்காவதா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • உள்ளேதான்
    • என்ன சொல்றீங்க?

  • 20 hours ago 
    Riyas Qurana
    • உள்ளே இருப்பதை ஏன் புறக்கணிக்கிறீர்கள்..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புறக்கணிக்கிறோமோ இல்லையா... அது இருக்கிற்து

  • 20 hours ago 
    Riyas Qurana
    • தோழர் நான் உங்களிடம் அறிந்துகொள்ளவே கேட்கிறேன்..இருக்கிறது ஆம்..இருப்பதை ஏன் புறக்கணிக்கிறீர்கள்..?புறக்கணிக்க முடியுமா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புறக்கணிக்கவோ, அடக்கி வைக்கவோ இயலாது.. ஆனால் , அப்படியே இருந்தாலும் வலர்ச்சி இராது.. ஆனால் அதை கடந்து செல்ல இயலும் ..அதற்கு வழி காட்டுவதுதான் இலக்கியம், மதம்., இசை போன்றவை
    • ஒரு சிங்கம் , புலி என்றால் அது சிங்கம் புலிதான்.. ஆனால் மனிதன் என்பவன் பாசிபிலிட்டி.. அவன் ஹிட்லராகவும் முடியும்., நபி, காந்தி, ஏசு என ஆகவும் முடியும்
    • இலக்கியத்தின் பயன்பாடு இதுதான்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • //இலக்கியம், மதம்., இசை போன்றவை//இவைகளும் உள்ளேதான் இருக்கிறதா..ஆமென்றால்உள்ளே இருக்கின்ற ஒன்றுக்கு உள்ளே இருக்கின்ற ஒன்று வழிகாட்டுகிறதா..?அப்படியெனில் உள்ளெ என்றது உள்ளே என்பதற்கு வழிகாட்டுகிறது.தனக்கு தானே வழிகாட்டுகிறது.தனக்கு தானே காட்டும் வழி எப்படி சரியாக இருக்கும்.

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • be light to yourself என புத்தர் சொன்னதன் அர்த்தம் என்ன ?
    • தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. தன்னை அறியாமல் தானே கெடுகிறான். த்னனை அறியும் உபாயம் அறிந்த பின் , தன்னையே அர்ச்சிக்க தானிருந்தானே என்பதன் அர்த்தம் என்ன?
    • வெளியே இருந்து வழி கிடைக்கும் என நினப்பதால்தானே, நித்யானந்தா போன்றோரிடம் சிக்குகிறார்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • அறிவதும் அறியப்படுவதும் வேறுவேறா...அதாவது.. தான்..என்பதை தான் அறியனுமாம்என்ன பிழையான தத்துவம்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நான் கேட்பது புரிகிறதா தோழர்..விரிவாக எழுதிக் கேட்கவா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • தன்னை பிறரால்தான் அறிய முடியும் என நினைப்பதால்தானே போலி சாமியார்கள் உருவாகுகிறார்கள்
    • ஒரு ஸ்கேலில் குறைபாடு இருந்தால் , அதன் அளவும் குறைபாடாகவே இருக்கும். எனவே எதை அறிய வேண்டும் என்றாலும், த்ன்னை அறிதல் பேசிக் க்வாலிஃபிகேஷன்.. இதை எப்படி மறுக்கிறீர்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நீங்கள் எனது கேள்வியை பிழையாக புரிந்துவிட்டீர்கள் என்பதால் விரிவாக எழுதுகிறேன்..அறியப்படும் ஒன்றும் அறிகின்ற ஒன்றும் இருந்தால்தான்ஒன்றை ஒன்று அறிய முடியுமல்லவா...தான்..ஏன் தானை அறியவேண்டும்..தான் தானை அறியவேண்டுமென்றால்...ஒரு தான் அறியும் ஒன்றாகவும் ஒரு தான் அறியப்படுகின்ற ஒன்றாகவும்இருக்கனும்.. அப்போ அங்கு இரண்டு தான்கள் இருக்கிறதா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புத்திசாலித்தனமான கேள்வி.. இதை விரிவாக விவாதிக்க வேண்டும்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • அறியும் தானில் குறைபாடு இருந்தால்அறியப்படும் தானிலும் குறைபாடு இருக்குமே..அதுபோலஅறியப்படும் தானிலும் குறைபாடு இருந்தால்அறியும் தானிலும் குறைபாடு இருக்குமே..தோழர்..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ஒரு சினை சிங்கம் வேட்டைக்கு சென்றது.. சண்டையில் இறந்து விட்டதி, குட்டியை ஈன்று விட்டு
    • குட்டியை ஆடுகள் வளர்த்தன..
    • அந்த சிங்க குட்டி த்ன்னை ஆடு என நினைத்தே வளர்ந்தது
    • ஆடு போலவே கத்தியது.. இலைகளை உண்டது
    • ஒரு நாள் தண்ணீல் முகம் பார்த்தபோது, தான் ஆடு அல்ல , சிங்கம் என உணர்ந்தது
    • இதுதான் தன்னை அறிதல்
    • நான் தமிழன், அழகன், அறிவாளி என்றெல்லாம் நினைக்கிறோம்...இது எல்லாமே அந்த சிங்க குட்டி, த்ன்னை ஆடு என நினைத்தது போலத்தான்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • இது ஒரு உருவகக் கதைகதை எனில் அது புனைவு..புனைவு எனில் அதில் பல ஊண்மைகள் இருக்க சாத்தியம் உண்டுஅது மட்டுமல்லாமல்.. இது மொழியாலான ஒரு கதையாடல் என்பதால்ஒருவர் உருவாக்கியது..ஒருவர் உருவாக்கியது சரி எனில்..இன்னொருவர் உருவாக்குவதம் சரிதானெ....

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ”அறியும் தானில் குறைபாடு இருந்தால்அறியப்படும் தானிலும் குறைபாடு இருக்குமே” குறையை உணர்வெதே பெரிய வெற்றி அல்லவா

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • to see false as false= that itself a giant step forward

  • 20 hours ago 
    Riyas Qurana
    • குறை எப்படி குறையை உணரும்..குறைபாடு உடையது நிறைவாக குறைபாட்டை உணருமா அல்லதுகுறைபாடாகத்தான் குறைபாட்டை உணருமா...?

  • 20 hours ago 
    Riyas Qurana
    • //குறையை உணர்வெதே பெரிய வெற்றி அல்லவா//வெற்றி தோல்வியுடைய எந்த விளையாட்டையும் நான் ரசிப்பதில்லை

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வெற்றி தோல்வியுடைய எந்த விளையாட்டையும் நான் ரசிப்பதில்லை 
    • ஓகே ஒகே
    • பெரிய முன்னேற்றம் என வைத்து கொள்ளுங்கள்

  • 19 hours ago 
    Riyas Qurana
    • அப்படியெல்லாம் ஏதுமில்லை.முன்னேற்றம் என்ற சொல்லும் கிட்டத்தட்ட வெற்றி தோல்வி போன்ற சொற்களின் வம்சத்தைச் சேர்ந்ததுதான்...

  • 19 hours ago 
    Riyas Qurana
    • முன்னேற்றமற்றவர் என ஒரு தோல்வியை தன்னகத்தே உருவாக்குகிறது அது.

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • குறைபாடுள்ள ஒன்று அடைவதும் குறைபாடுள்ளதாகவே இருக்கும்.. அது படிக்கும் இலக்கியம். அது வணங்கும் இறைவன், என அனைத்தும் குறைபாடுள்ளதாகவே இருக்கும்.. அதற்காக இலக்கியம், இறைவன், இதெல்லாம் தவ்று என்பதுல்லை.. குறைபாடு கொண்ட ஒரு மனம் , இதன் பலனை பெற இயலாது...

  • 19 hours ago 
    Riyas Qurana
    • குறைபாடு குறைபாடு அற்றது என்ற வகைமைகள் யார் உற்பத்தி செய்தது..?எக்ஸ் என்கிற ஒருவர் உருவாக்கியது எனில், வேறு வேறு அளவுகளில், பண்புகளில்குறைபாடு குறைபாடு அற்றது என்ற அளவீடுகளை ஏ, பி , சி போன்றவர்களும் உருவாக்கலாமே..குறைபாடு என்பதற்கு பலர் பலவற்றை கருதலாம் என்றாகிறது..இதில் யார் மன்வைக்கும் குறைபாடு சரியானது என எப்படிக் கண்டு பிடிப்பது...?

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • அதனால்தான் த்ன்னை தான் அறிதல் என்ற ( உங்களால் பிழையான ததுவம் என சாடப்பட்ட ) சுஃபி ஞானிக்ள், ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி போன்ன்றோர் வலியுறுத்திய தத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.. குறைபாடு என்பதை பலர்பலர் ( ஏ பீ சி ) வரையறுக்கலாம். அதெல்லாம் முக்கியம் இல்லை... மற்றவர் சொல்ல்வதை கேட்காதே,,.. உனை நீயே அறி

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • அதாவது. ஒருவர் வரையறுத்த ஸ்டேண்டர்ட் அடிப்படையில் , நீ நல்லவனா இல்லையா என பார்க்காதே.. எந்த முன் முடிவும் இன்றி உனை கவனி என குண்ங்குடி மஸ்தான் போன்ற சுஃபிக்கள். சித்தர்கள் சொல்கிறார்கள்

  • 19 hours ago 
    Riyas Qurana
    • சுஃபி ஞானிக்ள்இ ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி , மற்றும் பலர் இவர்கள்மற்றவர்கள் இல்லையா...? மற்றவர்கள் சொல்வதைக் கேட்க்காதேஉன்னையே நீ அறிந்துகொள்.. இதைச் சொன்னதும் ஒரு மற்றவரே...அவர்களின் தத்துவம் அவர்களின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே..மற்றவர்கள் சொல்வதைக் கேட்காதே என்பவர் சரியானவராக இருந்தால்எதுவும் சொல்லியிருக்கக் கூடாது மௌனமாக இருந்திருக்க வேண்டுமல்லவா..?

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • மவுன குருவாகவும் பலர் இருந்து இருக்கிறார்கள்... இவர்கள் இதுதான் செய்ய வேண்டும்.. இதுதான் சரி என்றெல்லாம் சொல்வதில்லை... உன் வழியை நீயே பார்த்து கொள் என சொல்கிறார்கள்
    • நீயே உனக்கு ஒளியாக இரு என்கிறார்கள்

  • 19 hours ago
    Riyas Qurana
    • // உன் வழியை நீயே பார்த்து கொள் என சொல்கிறார்கள்நீயே உனக்கு ஒளியாக இரு என்கிறார்கள்//இது எனது கருத்தைக்கேள்..அல்லது எனது பேச்சைப் பின்பற்றுஎன்பதையும் குறிக்கிறது தோழர்...அப்படியிருக்கும்போது ஒன்றும் சொல்லவில்லை என்பது எப்படி..?

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • வழி காட்டும் நெறி முறைகள் எதையும் அவர்கள் வகுக்கவில்லை
    • இரண்டு வழிகள் உள்ளன
    • seek , you will find என்பது ஒன்று

  • 19 hours ago
    Riyas Qurana
    • நாளை சந்திப்போம்...நான் வேலைக்கு காலையில் போகவேண்டும்.நாம் இருவரும் ஒரு விசயத்தைப் பரிந்துகொள்ள முயற்ச்சித்தோம்..அந்தவகையில் நன்றிகள்.. நாளையும் நீங்கள் வந்தால் சந்திக்கலாம்.

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • தேடுவதை நிறுத்து... தேடுவது கிடைக்கும் என்பது இன்னொன்று

  • 19 hours ago
    Riyas Qurana
    • நீங்கள் சொல்லுவதெல்லாம் யாரோ சொன்னவைகள்தான்...யாரோ சொன்னவைகளை உங்கள் கருத்துப்படி கேட்கக் கூடாது..நீங்கள் உங்கள் கூற்றை சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • பதிவிடுங்கள்.. உங்கள் கருதுக்களை விரிவாக எழுதுங்கள்... வாழ்க்கை எனும் பாட சாலையில் நான் மாணவன் என்ற முரையில் ,எல்லா தரப்பு கருத்தையும் ஆரவமாக படிக்க கூடியவன் நான்...
    • கண்டிப்பாக் நாளை சந்திக்கலாம்
    • உண்மையிலேயே உங்கள் உரையாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது

  • 19 hours ago
    Riyas Qurana
    • என்னிடம் கருத்துக்கள் ஏதுமில்லை.கேள்விகள் மாத்திரமே உண்டு.நான் கேள்விகளால் வாழ்வைப் பயணிப்பவன்.அந்தக் கேள்விகள் தீர்ந்துபோகவேயில்..ஒரு கேள்விக்கான பதிலே பல்லாயிரம் கேள்விகளை உருவாக்குகின்றன...இங்கு பல எழுத்தாளர்கள் பதில்களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் பதில்கள் மாத்திரமே உண்டு...நான் மாணவனெ அல்ல ஆசிரியன்.. கேள்விகள் நிறைந்த ஆசிரியன்.

  • 19 hours ago
    Riyas Qurana
    • www.maatrupirathi.blogspot.com

  • 19 hours ago
    Riyas Qurana
    • சிகரெட் புகைக்கப்போகிறென்...வணக்கம்.மிக்க அன்புடன்றியாஸ் குரானா

Tuesday, February 21, 2012

சில்லரை- சில்லறை,பத்திரிகை-பத்திரிக்கை ,கருப்பு-கறுப்பு -- எது சரி?

தமிழில் சில சொற்கள் பல விதமாக எழுதப்படுகின்றன. இதில் எது சரி என புரியாமல் போகிறது.

உலவு - உளவு   இது போன்ற சொற்களில் குழப்பம் இல்லை.. இரண்டும் வேறு வேறு என எளிதாக புரியும்.. ஆனால் சில சொற்களில்தான் குழப்பம்.. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்...

சில்லரை- சில்லறை-

அரை என்றால் பாதி... அறுத்தல் என்றால் பகுதி..

ஐம்பது ரூபாய்க்கு சில்லரை ( றை ) கேட்கிறோம் என்றால், ஐம்பது ரூபாயில் பாதியை கேட்பதில்லை.. ஐம்பது ரூபாயின் பகுதிகளான பத்து ரூபாய்களோ , ஐந்து ரூபாய்களோ கேட்கிறோம்.

எனவே சில + அரை = சில்லரை தவறு.. சில + அறை = சில்லறை சரியானது.


பத்திரிகை , பத்திரிக்கை 

இரண்டுமே சரியான சொற்கள்தான்.. ஆனால் அர்த்தம் வேறு..

பத்திரிக்கை என்றால் கல்யாணத்துக்கு வைப்பது... பத்திரிகை என்றால் மேகசின் , இதழ் ( உதாரணம் ; உயிர்மை ஒரு மஞ்சள் பத்திரிகை )


கருப்பு , கறுப்பு

இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்,,

ஆனால் கருப்பு என்பது வண்ணத்தை குறிப்பது.. கருப்பு என்பது ஒரு செயலை குறிப்பது..

அவன் கருப்பு நிறம் என சொல்ல வேண்டும்.. அவன் வெயிலில் கறுத்து விட்டான் என சொல்லலாம்.

சிவப்பு , சிகப்பு

இரண்டுமே சரிதான் என்றாலும் மிக சரியானது , முதலில் தோன்றியது என்று பார்த்தால் சிவப்பு எனப்தே மிக சரியானது..

கன்னம் சிவந்தது என்று சொல்கிறோமா சிகந்தது என சொல்கிறோமா? சிவம் , செவ்வானம் என்று யோசித்தால் புரியும்..

ஆனால் காலப்போக்கில் சிகப்பும் ஏற்கப்பட்டு விட்டது...


அருகில், அருகாமையில்...

ஆமை என்றாலே எதிர்பதம்தான்.. செய்யாமை , அடங்காமை என பல உதாரணங்கள் உள்ளன... எனவே அருகாமை என்பது  near என்பதற்கு நிகரான தமிழ் வார்த்தை கிடையாது.. அருகில் என்பதே சரி...



கண்றாவி, கண்ணராவி..

கண் + அராவி... கண்ணை உறுத்தும் மோசமானவை கண்ணராவி .. கண்றாவி தவறு



Sunday, February 19, 2012

மதிமுக வேட்பாளர் அறிவிப்பு- ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்ட்


திராவிட கட்சிகளை ஏற்காதவர்கள் கூட அவர்களது தமிழ் உணர்வை ஏற்காதிருக்க இயலாது... 
இன்றைய நிலையில், உண்மையான திராவிட இயக்கம் என்றால் அது ம தி மு க என்பது ஒரு கருத்து... அதன் உண்மைத்தன்மை குறித்து கருத்து சொல்ல எனக்கு அனுபவம் பத்தாது..
சென்ற தேர்தலை புறக்கணித்த மதிமுக சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறது.. வைகோவை நிற்க கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது.. 
இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதி மதிமுக வேட்பாளராக சதன் திருமலைக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்பு எம் எல் ஏ வாக இருந்தவர்/
டாக்டர் சதன் திருமலைக்குமார் பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் வேறுபாடு இல்லாமல் எளிமையாக பழகும் குணமும், அடித்தட்டு மக்களை எளிதில் கவரும் வண்ணம் பேசும் திறமையும் கொண்டவர்  ஆனால் கடந்த தி.மு.க., ஆட்சியில் ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கப்பட்ட போது, சொந்த வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் "விலை' போகாமல் தலைமைக்கு விசுவாசமாக இருந்த சதன் திருமலைக்குமாருக்கு கட்சியின் பொது செயலாளர் வைகோ மனதில் நல்ல இடம் இருக்கிறது என்பதாலும் , தொகுதி முழுவதும் நன்கு அறிமுகம் உள்ளதாலும் சீட் கிடைத்ததாக தெரிகிறது 



************************************************
இவர்  சட்டப் பேரவையில் 15.07.
2009 அன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரை...
கல்விக் கண்திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த இந்த நன்நாளில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற கல்வி மானியக் கோரிக்கையின்மீதான விவாதத்தில் பங்குகொள்கின்ற வாய்ப்புக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, பெருந்தலைவர் அவர்களை நினைவுகூர்ந்து வணங்குகின்றேன்.
“ Any satisfactory system of education should aim at a balanced growth of the individual and insist on both knowledge and wisdom. it should not only train the intellects but also bring grace into the heart of man. if we do not have a general phllosophy or attitude of life, our minds will be confused and we suffer from greed, pusillanimity, anxiety and defeatism mental slums are more dangerous to mankind than material slums”
என்று நமது மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னதைப்போல, தனி ஒரு மனிதனின் அறிவு, ஆற்றல் போன்றவற்றை வளர்ப்பதற்கும், மனிதநேயத்தை உருவாக்குவதற்கும், மனிதவளம் மேம்பாடு அடைவதற்கும் என்றும் அழியாச் செல்வமாகிய கல்வியை ஒருவனுக்குக் கொடுப்பது ஓர் அரசின் கடமையாகிறது.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்று திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை மிக அழகாகச் சொல்கிறார். “கல்வி என்பது கடந்த காலத்து சம்பவங்களையும், நிகழ்காலத்து வாழ்வையும், எதிர்காலத்திற்கான கனவையும் நமது மனதிற்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு ஏதுவான ஒரு சாதனம்” என்று இதன் முக்கியத்து வத்தை மாக்ஸிம் கார்க்கி சொல்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க கல்வியை தமிழ்நாட்டில் எல்லோரும் அடையவேண்டும் என்ற தாகத்தால்,
என்னரும் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்று
பன்னரும் கலை ஞானத்தால்
பராக்கிரமத்தால், அன்பால்
உன்னத இமயமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்து
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ
என்று கேட்டார் பாரதிதாசன்.
அனைவருக்கும் கல்வி என்பதன்மூலம் நாம் அவ்விலக்கை எட்டி இருந்தாலும், இன்னமும் சில கிராமப்புறங்களில் சில சமூக மக்களிடையே எட்டாவது வகுப்பைக்கூட அவர்கள் எட்ட முடியாத நிலை இருக்கிறது. அதற்கு சமூகப் பொருளாதார நிலையே காரணம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். 11 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வி என்ற நோக்கமும், அதைப் பெருவாரியான குழந்தைகள் அடைந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் 100 விழுக்காடு எட்டப்படவில்லை என்பது கவலை அளிப்பதாகவே உள்ளது. ஆகவே, இத்துறை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும்.
சமச்சீர் கல்வியைத் தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் கல்வி அளிக்கும் பொறுப்பை அரசே தன் கைவசம் வைத்து இருக்கிறது. நாம் சுய நிதிக் கல்வி நிறுவனங்கள் பலவற்றுக்கு அனுமதியும் அங்கீகாரமும் கொடுத்து கல்வி வழங்குகிறோம். அவற்றில் தமிழ்வழியில் கற்பிக்கும், மேம்படுத்தப் பட்ட, தரம் உயர்த்தப்பட்ட சுய நிதிப் பள்ளிகளுக்கு பல ஆண்டுகளாக அரசு நிதி அளிக்காதது கவலை அளிப்பதாக இருக்கிறது. இதனால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கக் குழந்தைகள் நல்லதரமான கல்வி பெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கும் இதர பணியாளர்களுக்கும் எவ்விதப் பணிப் பாதுகாப்பும் இல்லை. ஆகவே, இப்பள்ளிகளில் பணி புரிவோரின் நிலையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செயல்வழிக் கற்றலை வெற்றிகரமாக்கிட, தரமான ஆரம்பக் கல்வி குழந்தைகளுக்கு கிடைத்திட ஆசிரியர், மாணவர் விகிதத்தை 1:10 ஆக மாற்றி அமைத்திட வேண்டும். பள்ளியின் வகுப்பறைகள் பெரிதாக இருக்க வேண்டும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நிரந்தரமாக பணிபுரிந்து கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பெயர் மற்றும் பதிவு எண்ணை நீக்கம் செய்யாமல் இருப்பவர்களின் பெயர்கள் மற்றும் எண்களைப் பதிவில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
நியமிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்களில் ஆண் ஆசிரியர்களும் அதிகமாக நியமிக்கப்பட வேண்டும். இக்கல்வி ஆண்டில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத் தவிருக்கும் கணினி அறிவியில் பாடப்பிரிவிற்கு, கணினி அறிவியலில் பட்டம் பெற்று கல்வியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும். இப்பட்டம் பெற்ற பலர், பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். புதிய பள்ளிகளுக்கு உரிய புதிய பணி இடங்கள் பள்ளி தொடங்கும் நாள் முதல் வழங்கப் பட வேண்டும். தொடங்கப்படும் பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் கல்வியாண்டு தொடங்கும் முன்பே வெளியிடப்பட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களுக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்ட அரசு தனி நிதியினை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
கல்விப் பணி செய்யும் நாட்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கள் தவிர்க்கப்பட வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், அனைத்து வகுப்பு களிலும், கற்றல், கற்பித்தல் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கைத்தொழில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
எஸ்.எஸ்.ஏ. திட்ட நிதியினை பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர் களுக்கும் இலவச சீருடை களை தற்கால நாகரிகத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறச் செய்யவேண்டும். நீதிபோத னைப் பாடப் பிரிவு மற்றும் குடிமைப் பயிற்சி தொடக்கப் பள்ளியில் இருந்தே மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும். “I want that education by which character is formed strength is expanded and by which one can stand on one's own feet” என்று ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள் சொன்னதை மேற்கொள்காட்ட விரும்புகிறேன்.
1800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவி யர்கள் பயிலும் வாசுதேவ நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்ப றைகளை கட்டித்தர வேண்டும். புளியங் குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிராமப்புறங் களில் இருந்தும், ஏழ்மை நிலையில் இருந்தும் வருகின்ற மாணவர்கள் அதிகமாக படிக்கின்றார் கள். அவர்கள் நம்பியிருக்கும் ஒரேபள்ளி இதுதான். இது மிகவும் பழைமைவாய்ந்த பள்ளி. பள்ளியின் மேற்கூரைகள் பழுது அடைந்து இருக்கின்றன. அவற்றைச் சீர் செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட முள்ளிகுளம் பாண்டியக்கோனார் அரசு மேல்நிலைப்பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துத் தரவேண்டும்.
***********************************************

விக்கி லீக்ஸ் விமலுக்கு தமிழ் கற்று கொடுக்க சாருவுக்கு வேண்டுகோள்- ப்ரூஃப் ரீடரின் பிழைகளை பாருங்கள்

சர்வதேச அளவில் சிறகடிக்க தொடங்கி இருக்கும் சாருவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என வாசகர்கள், நண்பர்கள் மற்றும் நடு நிலையாளர்கள் விரும்பினர். ஆனால் சாரு அதற்கு அனுமதி மறுத்து விட்டார்..

அது அவர் தன்னடக்கமாக இருக்கலாம் .. அதில் அவரை கட்டாயப்படுத்த நமக்கு உரிமை இல்லை..

ஆனால் அவரது நண்பர் ஒருவர் , தனக்குதான் தமிழ் நன்கு தெரியும் என்பது போல காட்டிக்கொண்டு , மற்றவர்களுக்கு ப்ரூஃப் ரீடிங் பணி செய்து வருகிறார்..
ஆனால் அவர் எழுத்தில் ஆயிரம் பிழைகள்... சாரு அவர்கள் உடனடியாக அவர் நண்பருக்கு தமிழ் சொல்லித்தர வேண்டும் . அல்லது முதியோர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாருவை கேட்டு கொள்கிறோம்..

விக்கி லீக்ஸ் விமலின் ஒரு கதையை மட்டும் பாருங்கள்... எத்தனை எத்தனை பிழைகள்.. இவர் ப்ரூஃப் ரீடிங் செய்ய ஆசைப்படுவது தவறில்லை.. ஆனால் முதலில் ஒழுங்காக தமிழ் கற்க வேண்டுமா இல்லையா?

இதோ... அவர் கிழிசல் கதையில் இருக்கும் ஆயிரம் தவறுகள்.. மொத்த கதையே நூறு வரிகள்தான்.. அதில் நூற்று பத்து பிழைகள் .. அட ஆண்டவா..

தவறும் , திருத்தமும்  
******************************************************

கீறல்விழுந்த கண்னாடி


கண்ணாடியா?  கண்னாடியா ? அடப்பாவிகளா... 




துரதிருஷ்டத்தையேக் கொண்டுவரும்




துரதிருஷ்டத்தையே கொண்டுவரும் என்பதே சரியானது.. க் தேவையில்லை 



செலுத்த இரண்டு படிவங்கள் கேட்டு வாங்கிக்கொண்டேன். எடுத்துக்கொடுத்தபடிமுத்து, ரைட்டிங் டேபிள்ல சலான்ஸ் வெக்கலையா? என்று குரல் கொடுத்தான்.


வாங்கிய பின்பு , எப்படி எடுத்து கொடுக்க முடியும்? 

என்கிற அலுவலக் நிர்பந்தமாய்


அது என்ன அலுவலக்..? அலுவலக என்பதே சரி 


நேரடியாய் சம்பளம் செலுத்த திறந்தே ஆகவேண்டும் என்கிற அலுவலக் நிர்பந்தமாய் வெளியூரில் திறக்கப்பட்டிருந்த வங்கியின்


உங்கள் அலுவலக நிர்ப்பந்தத்துக்காக வங்கி திறந்தார்களா? என்ன கொடுமை இது ? 


மறு நாற்காலியையே டேபிளாக்கிக் கைப்பிடியில்

இங்கே க் தேவையில்லை.. ஆனால் இருக்கிறது...


 ஒன்றிலிருந்துதான் சலான் கட்டு எடுகப்பட்டிருக்கவேண்டும்


இங்கே க் தேவை,, ஆனால் இல்லை... எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே சரி... 


வெட்கியபடி அடித்துக் கையெழுத்துப் போட்டு 


க் தேவையில்லை 


நெளிகூந்தலுடன் ஒல்லியான் பெண்மணி


ஒல்லியான் பெண்மணி அன்று.. ஒல்லியான பெண்மணி 


ப்ப்டியேப் பாஸ்புக்குலக் கொஞ்ச


ஒற்றெழுத்தில் இவருக்கு என்ன கோபமோ? 


பிரிட்ஜ்ஜெறெங்ஙி


என்ன தமிழ் இது? பிரிட்ஜ்ஜெறெங்கி என வர வேண்டும்


***************************************************


ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட இப்படி தவறுகள் செய்ய மாட்டான்.. இப்படிப்பட்ட இவர் ஊருக்கு உபதேசம் செய்கிறார்.. தாராளமாக செய்யட்டும்.. ஆனால் அதற்கு முன் முதியோர் கல்வியில் சேர்ந்து தமிழ் கற்க சாரு உதவ வேண்டும் என்பதே நடு நிலையாளர்களின் வேண்டுகோளாகும்... 

Saturday, February 18, 2012

இஸ்லாமிய இன துரோகி மனுஷ்யபுத்திரனின் இறைமறுப்பும், சாருவின் தன்னடக்கமும்


ஒருவர் நம் மீது சகதி அடித்து கொண்டே இருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள்..  நாமும் திரும்ப சகதி அடித்து பதிலடி கொடுக்கிறோம் என்றால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?

யார் மீது தவ்று இருக்கிறது என அவர்களுக்கு தெரியாது.. யாரோ இருவர் சகதியால் சண்டையிட்டு கொள்கிறார்கள் என நினைப்பார்கள். குடிகாரனோடு சண்டை போட்டால் , யார் குடிகாரன் என தெரியாது அல்லவா ? அது போல.

விக்கி லீக்ஸ் விமல் தன் கீழ்மையை வெளிப்படையாக காட்டி கொள்கிறார் என்றார் , துரோகபுத்திரன் சற்று தந்திரமாக தன் வயிற்றெரிச்சலை காட்டி கொள்வது வழக்கம்..

ஆனால் எத்தனை நாள்தான் நல்லவனாக நடிக்க முடியும்? அவர் கீழ்மையான மனம் தற்போது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது..

ஒரு சர்வதேச பத்திரிக்கையில் சாருவின் எழுத்து வெளிவந்தது.. துரோக புத்திரனாக இருந்தால் ,  தன் செலவில் யாராவது நடிகரை அழைத்து ஒரு விழாவாக கொண்டாடி இருப்பார்.

சாருவோ , அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் இறைவனுக்கு நன்றி என்றார்.

இதை போய் , துரோக புத்திரன் கிண்டல் செய்திருக்கிறார். அனைவருக்கும் பொதுவான இறை சக்தி இதை பார்த்து கொண்டுதான் இருக்கிறது..அவருக்கு தகுந்த தண்டனையை அந்த இறை சக்தி வழங்கும்..

சல்மான் ருஷ்டி விவகாரத்தில் , தான் இஸ்லாம் விரோதி என காட்டிக்கொண்ட  துரோகி இப்போது தான் ஒரு இறை மறுப்பாளர் என காட்டி கொண்டுள்ளார்.. சரி..அது அவர் விவகாரம்...

சகதி அடிக்க மற்றவர்கள் தயங்காத நிலையில், பாராட்டுவதற்கு மட்டும் ஆயிரம் தயக்கங்கள்...

பாராட்டு விழா நடத்த முயன்றால் ஆயிரம் எதிர்ப்புகள்..

சகதிக்கு சகதி , அவதூறுக்கு அவதூறு என்ற விளையாட்டை விட , அவர்களை புறக்கணித்து விட்டு, பாராட்டை வெளிப்படையாக சொல்வதே ஆக்கபூர்வமானதாக அமையும்..

அதுவே அவர்களுக்கு பதிலடியாகவும் அமையும்..

அந்த வகையில், ஒரு வித்தியாசமான பாராட்டு நிக்ழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டு வருகிறது.. அறிவிப்பு விரைவில் வெளியாகும்..

எதிர்ப்பிலேயே வாழும் சாருவுக்கு நம் ஆதரவை காட்ட இதை தவிர வேறு வழியில்லை..




Friday, February 17, 2012

பழச்சாறை ருசிக்க தெரியாமல், சக்கையை தின்னும் மாமல்லம்- சாரு வாசகர் பதிலடி


 சாரு வாசகர்கள் பல விதம்..  சாரு சொல்வதை வேத வாக்காக  நினைத்து அப்படியே ஏற்பவர்களும் உண்டு... அவரை எதிர்த்து விவாதிப்பவர்களும் உண்டு,,,

 நண்பர் ப்ரியமுடன் துரோகி அறிவு பூர்வமாக விஷ்யங்களை அணுகுபவர்.. எக்சைல் விவாத அரங்கில் சில எதிர் கருத்துகளை துணிச்சலாக சாரு முன்பே கூறியவர்.. தன்னம்பிகையும் , ( அறிவு ) திமிரும் கலந்த அவர் பாட் லாங்குவேஜை மிக ரசித்தேன்..

மாமல்லன் உளறலுக்கு அவர் கொடுத்த பதிலடி உங்கள் பார்வைக்கு 

******************************************************************

பைத்தியத்தின் உச்ச நிலை - 




தீராக்காதலி புத்தகத்தை எழுதுவதற்கு குறிப்புகளை தேடுவதற்காகவே சின்மயா நகரிலிருந்து இந்திரா நகரிலிருக்கும் ரோஜா முத்தையா நூலகத்திற்கு சென்றேன் என்று சொன்னாரே தவிர லஷ்மிகாந்தனின் அந்தமான் சிறை வாழ்க்கையை மட்டும் தேட என்று சொல்லவில்லையே.. மேலும் லஷ்மிகாந்தன் பற்றின பேச்சே இங்கில்லையே. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாருவின் வீட்டில் இணைய வசதி இருந்திருக்குமா. அப்படியே இருந்திருந்தாலும் அவர் எதிர்பார்க்கும் குறிப்புகள் கிடைத்திருக்குமா என்று சந்தேகம் தான். ஏன் இப்பொழுது கூட எம்.கே.டி பற்றின குறிப்புகள் இணையத்தில் முழுதாக கிடைக்கிறதா என்ன?..

 எம்.கே.டி  சிறையிலிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.. அதன் பின்னர் அவரின் படங்களின் தொடர் தோல்விக்குப் பின் என்ன நேர்ந்தது,கிட்டப்பா – கே.பி.எஸ் காதல் கடிதங்கள், பி.யூ.சி யின் வரலாறு இவையெல்லாவற்றுக்கும் தான் சாருவின் தேடல் இருக்கிறது.. வெறும் கொலைக் குற்றம் பற்றின பிட்டு தகவலை மட்டும் கொடுத்துவிட்டு இதைச் சொல்ல ஏன் அவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று சொல்வது பைத்தியத்தின் முக்தி நிலையோ என்று தான் எண்ண வைக்கிறது..

 இவர்களெல்லாம் நுனிப்புல்லை மட்டுமே மேய்ந்து மேய்ந்து அடிப்புல்லின் வாசனையோ ருசியையோ கடைசிவரை தெரியாமல் காய்ந்த சருகையே நக்கி நக்கிச் செல்லும் மாட்டோடு தான் ஒப்பிடவேண்டும்.. சாரு சொன்னதுக்காக ராண்டார் கையின் குறிப்புகளை சம்மந்தமே இல்லாமல் கோர்த்துவிடும் இந்த மாதிரியான ஆட்களை முட்டளென்று சொன்னால் முட்டாள்கள் கோபித்துக்கொள்வார்கள். லஷ்மிகாந்தன் மர்டர் கேஸ் என்று ஒரு சுட்டியை இணைய தேடலில் தட்டிவிட்டு கிடைந்த தகவலை ஒட்டு வேலை செய்வதில் என்ன ஒரு பெருமை இந்த மூடனுக்கு. ( இவர் சுட்டிக்காட்டிய பத்தியில் லஷ்மிகாந்தனின் வரலாறு தான் இருக்கிறது. யாராச்சும் நம் ரசிக சிங்கங்கள் அந்த மடையனுக்கு போய் சொல்லுங்களேன் . அட லூசு.. பேசற விஷயம் எம்.கே.டி பற்றியென்று..).நாளை வேரொருவர் எம்.கே.டி தன் கடைசி காலத்தில் சுகமாக வாழ்ந்தார் என்று சொன்னால் இவர் சாருவின் தீராக்காதலி புத்தகத்தை தன் குறிப்புக்கு பயன்படுத்த தயங்க மாட்டார்.. 

இவர்களெல்லாம் தெருவில் உலாவும் பைத்தியங்கள். இவர்கள் செய்யும் சேஷ்டைகளை நின்று வேடிக்கைப் பார்த்தால் வேட்டியைத் தூக்கி தன் கோவக்காய் லிங்கத்தைதான் காண்பிக்கும்.. அவமானம் அதற்கில்லை. மானம் காக்க வேண்டுமானால் காணாமல் கடந்து சென்றுவிடவேண்டும்.. யானை சிங்கத்திடம் மோதலாம்.. சுண்டெலியிடன் மோதக் கூடாது. சுண்டெலி சாகும் என்பது உறுதியென்றாலும் பெருமை யானைக்கில்லை.. யானையிடம் மோதிய சுண்டெலிக்குத்தான்.. எதற்கெடுத்தாலும் ரசிக மணிகளாம்.. போயா யோவ்.. உனக்கு வக்கிருந்தா ஜீரோ டிகிரி போன்றோ அல்லது காமரூப கதைகள் போன்றோ ஒரு பத்து பக்கம் எழுது.. உனக்கு ரசிகனா ஆயிடறேன். அதச் செய்ய வக்கில்லாம இவன் கோழி பிரியாணீ தானே சாப்பிட்டான்.இவன் எடுத்த வாந்தியில எப்படி ரெண்டே முக்கா முந்திரி வந்துச்சினு சொல்லிக்கிட்டு திரியவேண்டாம்.. 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா