Thursday, February 2, 2012

நீங்களும் கவிஞர் ஆகலாம் - அத்தியாயம் 1 பட்டியல் கவிதை

என்னதான் துரோகம் செய்தாலும் , கவிஞர் என்ற பந்தா இருந்தால் , யாரும் திட்ட மாட்டார்கள்.

ஜொள்ளு விட்டாலும் கூட , அது கவிதை என நினைத்து யாரும் தவ்றாக நினைக்க மாட்டார்கள்..


யாரையேனும் அவதூறு செய்ய வேண்டுமானால், கவிதை எழுதி திட்டினால் , அவதூறு வழக்கில் இருந்து தப்பலாம்..

இப்படி பல அனுகூலங்கள் இருப்பதால், பலரும் கவிதை எழுத ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ள்னர்,

சிலருக்கோ ஆர்வம் இருந்தாலும், எப்படி எழுதுவது என்ற ஐடியா இல்லாமல் அவதியுறுவதாக ஒரு தகவல்  நம் கவனத்துக்கு வந்தது..


கவிதை எழுதுவது பெரிதல்ல.. கவிதை எழுதாமல் இருப்பதே பெரிய விஷயம்.. ஆங்அகு மானே , தேனே என போட்டு எதையாவது கிறுக்கினால் அது கவிதை எனப்படும்..

ஆனால் அப்படி எழுதினால் உங்களை கவிஞர் இல்லை என இலக்கியவாதிகள் சொல்லி விடுவார்கள்

இலக்கியத்தரமிக்க கவிதை குறித்தே இந்த தொடரில் பார்க்க போகிறோம்.

கவிதையில் பல வகை உண்டு,

பட்டியல் கவிதை, அட்டவணை கவிதை, வாய்ப்பாடு கவிதை,  கதை கவிதை, புதிர் கவிதை, விடுகதை கவிதை, பொன் மொழி கவிதை, விள்ங்காத மொழியில் எளிமையான கவிதை , எளிமையான வரிகளில்  விளங்காத கவிதை என்றெல்லாம் உண்டு..

அனைத்தையும் பார்க்கலாம்


முதலில் நாம் காண இருப்பது பட்டியல் கவிதை..

அது என்ன பட்டியல்?

தமிழில் லிஸ்ட் என சொல்வோமே..அதுதான் பட்டியல்..

எதையாவது லிஸ்ட் போட்டு விட்டு, கடைசியில் ஒரு பொன் மொழி சொன்னால் கவிதை ரெடி..

எளிய உதாரணம் பாருங்கள்.

வேறு எந்த லிஸ்ட் தெரியாவிட்டாலும், காய் கறி லிஸ்ட் தெரிந்து இருக்கும்...

அதை பாருங்கள்’

அழுகல் கத்தரிக்காய் கால் கிலோ


விளங்காத வெண்டை அரை கிலோ


அழுகிய அவரை கொஞ்சம்


வாசம் இல்லா கருவேப்பிலை இலவசமாக


கேரட் 200


நூக்கல் 1 கிலோ


சகதி படிந்த சாலை


நெரிசல் மிக்க சந்தை...

இப்படி லிஸ்ட் போட்டுக்கொண்டே செல்லுங்கள்..

கடைசியில் ஒரு ட்விஸ்ட்...


எனக்கு இதெல்லாம் பொருட்டே இல்லை..


என் கண்ணில் தெரிவது இதெல்லாம் இல்லை..


காய்கறி விற்கும் பெண் தான்...  


இப்படி எழுதலாம்..

அல்லது வேறொரு முடிவு..



இவையெல்லாம் எரிச்சல்தான் என்றாலும்,
இவையெல்லாம் இல்லாத
சந்தையை நினைத்து பார்க்கவே முடியவில்லை

இந்த டெம்ளேட்டில் எதை வேண்டுமானாலும் பட்டியலிட்டு, ஒரு பொன் மொழியை உதிர்த்தால் கவிதை ரெடி...

உங்களுக்கு நினைவு வரும் பட்டியல் கவிதைகளை யோசித்து பாருங்கள்

( தொடரும் )




5 comments:

  1. இந்த மாதிரி ஒன்னு போய்ஸில் சித்தார்த் சொல்வார் பாஸ், சுஜாதா எழுதியிருப்பார் என நினைக்கிறேன். அப்புறம் எஸ் ரா விழா போனிங்களா பாஸ். தலைவர் எப்படி பேசினார்?

    ReplyDelete
  2. இவை எல்லாம் எரிச்சல்தான் என்றாலும்

    இவை இருந்தால்தானே அது சந்தை !!

    இப்படியும் எழுதி எரிச்சலூட்டலாம்

    ReplyDelete
  3. தலைவர் எப்படி பேசினார்”

    அவை அறிந்து கச்சிதமாக பேசினார்.

    சூப்பர்

    ReplyDelete
  4. எல்லாரையும் கவிஞர்கள் ஆக்க முடிவு செய்துவிட்டீர்கள். தொடர்க உங்கள் கவித்துண்டு. சாரி கவித்தொண்டு

    ReplyDelete
  5. அருமைத் தொடர், அறியும் ஆவலில் உள்ளேன்.
    இதுதான் உண்மையான இலக்கியச் சேவை.
    இதை விட்டு விட்டு சண்டையெல்லாம் தேவையா தோழா :)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா