Sunday, February 5, 2012

த்ரிஷா விவகாரம்- மனுஷ்யபுத்திரனுக்கு பகிரங்க சவால்.- சத்தியம் செய்ய தயாரா?

எக்சைல் நாவல் விவாத விழா நேற்று நடந்தது..  விவாதத்தில் ஒரு பகுதியாக மதிப்பிடுகளின் வீழ்ச்சி குறித்து பேச்சு வந்தது..

ஆன்மீகத்துக்கு மாறிய பின் அமைதியாக பேச ஆரம்பித்துள்ள சாரு, வழக்கத்துக்கு மாறாக தீப்பிழம்பாக மாறி பேசினார். பல ஆண்டுகளாக உயிரைக்கொடுத்து, சொத்தை விற்று இலக்கியம் வளர்த்த இலக்கியவாதிகளை இழிவு படுத்தி விட்டீர்களே ஆவேசமாக பேசினார்.

இந்த பிழைப்புக்கு செத்து தொலைக்கலாமே என்றார்..

இதற்கு மனுஷ்யபுத்திரன் சில விளக்கங்கள் அளித்துள்ளார்.. என்ன விளக்கம்?

பாருங்கள்...

*************************************************************

1. சில மாதங்களுக்கு முன்பு சாரு ஏன் இப்படி எழுதினார் ?

  • சமீபத்தில் ஷாருக் கானின் ஒரு படத்துக்காக அவர் செய்த விளம்பர யுத்திகளைப் பற்றி நண்பர்கள் ஆச்சரியத்துடனும், எரிச்சலுடனும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாவலுக்கும் அந்த அளவுக்கு விளம்பரம் தரப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ரியங்கா சோப்ரா மும்பையில் செய்வதை த்ரிஷா போன்றவர்கள் இங்கே தமிழில் செய்யலாமே?   ப்ரியங்கா சோப்ராவே தமிழ் கற்றுக் கொண்டு சென்னை வந்து இலக்கிய வாசிப்பு செய்வதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதது என்பதால் சொல்கிறேன்.  த்ரிஷாவின் தமிழை கமல்ஹாசனே பாராட்டியிருப்பதால் த்ரிஷாவுக்குக் கூடுதல் தகுதி உள்ளது.

2   ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு குஷ்பூவை சாரு ஏன் அழைத்தார் ?


***********************************************************************

இதுதான் மனுஷ் அளித்த விளக்கம்.. அவர் வாதத்தின் அபத்தங்களை பாருங்கள்

1 திரிஷாவை சாரு ஏன் அழைத்தார்? அந்த கட்டுரையை முழுதாக பாருங்கள்..

விளம்பரம் வேண்டும்.  இல்லாவிட்டால் எக்ஸைல் என்ற நாவல் வரப் போவது பற்றி யாருக்குத் தெரியும்?  சில கல்லூரிகளில் எக்ஸைல் நோட்டீஸ் விநியோகிக்கலாம் என்று நினைத்தேன்.  கைவசம் இருந்த நோட்டீஸ்கள் தீர்ந்து விட்டன.  இந்த இளைஞர்களுக்கு எக்ஸைல் என்ற நாவல் வெளிவர இருக்கும் செய்தியை யார் சொல்லுவது?  எப்படிச் சொல்லுவது?  இதுதான் என் அக்கறை.

இதுதான் சாரு எழுதியது..

விளம்பரத்துக்காகத்தான் த்ரிஷாவை அழைப்பதாக சாரு சொன்னார்..

மனுஷுக்கு சவால்..

ரஜினியையும் விளம்பரத்துக்காகத்தான் அழைத்தேன் என சொல்ல அவர் தயாரா? ரஜினி  பேச்சை கேட்டு ஏன் நெகிழ்ந்தீர்கள்..கண்ணீர் விட்டீர்கள் , 

சாரு இப்படியெல்லாம் செய்தார்.. நேர்மையாக சொன்னாரே...



 2   ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு குஷ்பூவை சாரு ஏன் அழைத்தார் ?


அட துரோகியே.. அந்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியதே உங்கள் உருப்படாத உயிர்மைதானே..

ஒரு சவால்..

அந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது... விழா அரங்க்குக்கு முன் பெரிய பேனர் வைக்கப்பட்டது..

சாரு வாசகர்கள் சார்பில், அவர் படம் தாங்கிய பேனர் வடிவமைக்கப்பட்டது...  சாரு பெயர் மட்டுமே அதில் இருந்தது...

அதன் ட்ராஃப்டை தற்செயலாக பார்த்த மனுஷ் டென்ஷன் ஆனார்.. சாரு பெயர் மட்டும் இருந்தால் கனிமொழி டென்ஷன் ஆவார்.. அனைவர் பெயரையும் போடுங்கள் என நச்சரித்து, பேனரில் அனைவர் பெயரையும் வர வைத்தது மனுஷ்தான்///

இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என அவர் சத்தியம் செய்ய தயாரா?


கான மயிலாட கண்டிருந்த வான் கோழியாக துடித்தால் இப்படித்தான் பொய்யாக பிதற்ற வேண்டி இருக்கும்..

உங்களைப்போய் சுஜாதா பிரபலப்படுதினாரே,,, அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் , இனிமேலாவது இப்படிப்பட்ட கீழ்தரமாக இறங்க வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்,

கவிதை எழுதும் திறன் போனால் என்ன? உயிர்மை என்ற ஸ்தாபனம் இருக்கிறதே,,,  அதில் நாலு காசு பார்த்து கொண்டு நிம்மதியாக இருக்கலாமே...

படித்தவன் சூதும் வாதும் செய்தால் , போவான் போவான், அய்யோவென போவான் என பாரதி சொன்னதை மறந்து விடாதீர்கள்...




2 comments:

  1. இதை விட உயரிய விருதான தாகூர் விருதை எஸ்ரா வாங்கும் போது ஏன் இப்படி ரஜினியை வைத்து விழா எடுக்கவில்லை, எதயும் முதலில் செய்ய துணிச்சல் வேண்டும், அது சாருவிடம் மட்டும் நாம் பார்கிறேன். சரி இதுவும் விளம்பரத்திற்க்கு என வைத்து கொள்வோம், அப்படி பார்த்தாலும் ஒரு productக்குதானே விளம்பரம், மனிதனுக்கு எதற்க்கு என யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

    ReplyDelete
  2. மனுஷ்யபுத்ரனின் சமீபத்திய முகநூல் பதிவுகளைப் பார்க்கும் போது சாருவின் கருத்திலும் சாரம் இருக்கின்றது போல் தோன்றுகின்றது. அதிலும் மனுஷ்யபுத்ரன் பாட்டில் விஷயங்களைப் பற்றி சொல்லி மிகவும் கீழே போய்விட்டார்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா