Pages

Thursday, February 23, 2012

நள்ளிரவில், என்னை கேள்விகளால் திணற வைத்த கவிஞர்



     வெற்று கூச்சல்கள் அதிகம் உள்ள இணையத்தில் நல்லிதயம் கொண்ட புத்திசாலிகளும் இருப்பதால்தான் , இணையம் நம்மை கவர்கிறது..

நண்பர் றியாஸ் குரானா அவர்களின் www.maatrupirathi.blogspot.com வலைப்பக்கம் என்னை கவர்ந்த ஒன்று.. ஆனால் அவருடன் உரையாடியது இல்லை...

நேற்று நள்ளிரவு அவருடன் சேட் செய்தேன், தன் கேள்விகளால் என்னை திக்கிமுக்காட வைத்தார்..  அதே சமயம் யோசிக்கவும் வைத்து விட்டார்...


அவர் வலைத்தளம் சென்று பாருங்கள்.. அவர் வித்தியாசமான சிந்த்னை உங்களையும் கவரும்.

இதோ அவருடனான உரையாடல் 

++++++++++++++++++++++++++++++++++++++++


  • Riyas Qurana




  • றியாஸ் குரானா
    Riyas Qurana
    • vanakkam tholar nalama

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வணக்கம் வணக்கம்
    • நலம்.. தாங்கள் நலமா

  • 20 hours ago 
    Riyas Qurana
    • aamaam

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நான் நலம்..என்ன விசேசங்கள் நண்பா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • சொல்லுங்கள்.. ஏங்கே இருக்கிறீர்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • இலங்கையில் இருக்கிறென்..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • கிரிக்கெட் பார்த்தீர்களா?
    • இந்தியாவை இலங்கை வீழ்த்தி விட்டதே

  • 20 hours ago 
    Riyas Qurana
    • கிரிகெட் பார்ப்பதில்லை நண்பா..விருப்பம் குறைவு..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ‘படிப்பில் மட்டும்தான் ஆர்வமா?


  • 20 hours ago 
    Riyas Qurana
    • இல்லை இசை..என பலதும் விருப்பம்..வெற்றி தோல்வி எனச் சண்டைபிடிக்கும்எதிலும் ஆர்வமில்லை.

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • அருமை
    • மனிதனுக்குள் இருக்கும் போட்டி மனோபாவம்தான், விளையாட்டு, போர் என பல வடிவம் எடுக்கிற்து
    • இலக்கியம்., பதிவுல்கம் என எதுவும் விதி விலக்கல்ல
    • உங்களை போன்றோர் விதி விலக்காக இருப்பது மக்ழிச்சி

  • 20 hours ago 
    Riyas Qurana
    • மனிதனுக்குள் இருக்கிறதா..
    • மனிதனுக்குள் இருக்கும் ஒன்றை வெறுப்பது ஏன்..?
    • irukkireenkala tholar..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ஆமா
    • நீங்க சொல்வதை கவ்னித்து கொண்டுதான் இருக்கிறேன்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • மனிதனுக்குள் இருப்பதை ஏன் மனிதன் வெறுக்க வேண்டும் தோழர்..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வெறுக்க வேண்டியதில்லைதான்.. ஆனால் வெறுப்பு என்ற வேதம்தான் உலகை இயக்குகிறது
    • வெறுப்பு இல்லாத இடம் ஏதேனும் ஒன்றை சொல்லுங்கள்:

  • 20 hours ago 
    Riyas Qurana
    • சரி...வெறுப்பு எங்கே இருக்கிறது தோழர்மனிதனுக்குள்ளா..வேறெங்காவதா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • உள்ளேதான்
    • என்ன சொல்றீங்க?

  • 20 hours ago 
    Riyas Qurana
    • உள்ளே இருப்பதை ஏன் புறக்கணிக்கிறீர்கள்..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புறக்கணிக்கிறோமோ இல்லையா... அது இருக்கிற்து

  • 20 hours ago 
    Riyas Qurana
    • தோழர் நான் உங்களிடம் அறிந்துகொள்ளவே கேட்கிறேன்..இருக்கிறது ஆம்..இருப்பதை ஏன் புறக்கணிக்கிறீர்கள்..?புறக்கணிக்க முடியுமா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புறக்கணிக்கவோ, அடக்கி வைக்கவோ இயலாது.. ஆனால் , அப்படியே இருந்தாலும் வலர்ச்சி இராது.. ஆனால் அதை கடந்து செல்ல இயலும் ..அதற்கு வழி காட்டுவதுதான் இலக்கியம், மதம்., இசை போன்றவை
    • ஒரு சிங்கம் , புலி என்றால் அது சிங்கம் புலிதான்.. ஆனால் மனிதன் என்பவன் பாசிபிலிட்டி.. அவன் ஹிட்லராகவும் முடியும்., நபி, காந்தி, ஏசு என ஆகவும் முடியும்
    • இலக்கியத்தின் பயன்பாடு இதுதான்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • //இலக்கியம், மதம்., இசை போன்றவை//இவைகளும் உள்ளேதான் இருக்கிறதா..ஆமென்றால்உள்ளே இருக்கின்ற ஒன்றுக்கு உள்ளே இருக்கின்ற ஒன்று வழிகாட்டுகிறதா..?அப்படியெனில் உள்ளெ என்றது உள்ளே என்பதற்கு வழிகாட்டுகிறது.தனக்கு தானே வழிகாட்டுகிறது.தனக்கு தானே காட்டும் வழி எப்படி சரியாக இருக்கும்.

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • be light to yourself என புத்தர் சொன்னதன் அர்த்தம் என்ன ?
    • தன்னை அறிய தனக்கொரு கேடில்லை. தன்னை அறியாமல் தானே கெடுகிறான். த்னனை அறியும் உபாயம் அறிந்த பின் , தன்னையே அர்ச்சிக்க தானிருந்தானே என்பதன் அர்த்தம் என்ன?
    • வெளியே இருந்து வழி கிடைக்கும் என நினப்பதால்தானே, நித்யானந்தா போன்றோரிடம் சிக்குகிறார்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • அறிவதும் அறியப்படுவதும் வேறுவேறா...அதாவது.. தான்..என்பதை தான் அறியனுமாம்என்ன பிழையான தத்துவம்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நான் கேட்பது புரிகிறதா தோழர்..விரிவாக எழுதிக் கேட்கவா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • தன்னை பிறரால்தான் அறிய முடியும் என நினைப்பதால்தானே போலி சாமியார்கள் உருவாகுகிறார்கள்
    • ஒரு ஸ்கேலில் குறைபாடு இருந்தால் , அதன் அளவும் குறைபாடாகவே இருக்கும். எனவே எதை அறிய வேண்டும் என்றாலும், த்ன்னை அறிதல் பேசிக் க்வாலிஃபிகேஷன்.. இதை எப்படி மறுக்கிறீர்கள்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • நீங்கள் எனது கேள்வியை பிழையாக புரிந்துவிட்டீர்கள் என்பதால் விரிவாக எழுதுகிறேன்..அறியப்படும் ஒன்றும் அறிகின்ற ஒன்றும் இருந்தால்தான்ஒன்றை ஒன்று அறிய முடியுமல்லவா...தான்..ஏன் தானை அறியவேண்டும்..தான் தானை அறியவேண்டுமென்றால்...ஒரு தான் அறியும் ஒன்றாகவும் ஒரு தான் அறியப்படுகின்ற ஒன்றாகவும்இருக்கனும்.. அப்போ அங்கு இரண்டு தான்கள் இருக்கிறதா..?

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • புத்திசாலித்தனமான கேள்வி.. இதை விரிவாக விவாதிக்க வேண்டும்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • அறியும் தானில் குறைபாடு இருந்தால்அறியப்படும் தானிலும் குறைபாடு இருக்குமே..அதுபோலஅறியப்படும் தானிலும் குறைபாடு இருந்தால்அறியும் தானிலும் குறைபாடு இருக்குமே..தோழர்..

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ஒரு சினை சிங்கம் வேட்டைக்கு சென்றது.. சண்டையில் இறந்து விட்டதி, குட்டியை ஈன்று விட்டு
    • குட்டியை ஆடுகள் வளர்த்தன..
    • அந்த சிங்க குட்டி த்ன்னை ஆடு என நினைத்தே வளர்ந்தது
    • ஆடு போலவே கத்தியது.. இலைகளை உண்டது
    • ஒரு நாள் தண்ணீல் முகம் பார்த்தபோது, தான் ஆடு அல்ல , சிங்கம் என உணர்ந்தது
    • இதுதான் தன்னை அறிதல்
    • நான் தமிழன், அழகன், அறிவாளி என்றெல்லாம் நினைக்கிறோம்...இது எல்லாமே அந்த சிங்க குட்டி, த்ன்னை ஆடு என நினைத்தது போலத்தான்

  • 20 hours ago 
    Riyas Qurana
    • இது ஒரு உருவகக் கதைகதை எனில் அது புனைவு..புனைவு எனில் அதில் பல ஊண்மைகள் இருக்க சாத்தியம் உண்டுஅது மட்டுமல்லாமல்.. இது மொழியாலான ஒரு கதையாடல் என்பதால்ஒருவர் உருவாக்கியது..ஒருவர் உருவாக்கியது சரி எனில்..இன்னொருவர் உருவாக்குவதம் சரிதானெ....

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • ”அறியும் தானில் குறைபாடு இருந்தால்அறியப்படும் தானிலும் குறைபாடு இருக்குமே” குறையை உணர்வெதே பெரிய வெற்றி அல்லவா

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • to see false as false= that itself a giant step forward

  • 20 hours ago 
    Riyas Qurana
    • குறை எப்படி குறையை உணரும்..குறைபாடு உடையது நிறைவாக குறைபாட்டை உணருமா அல்லதுகுறைபாடாகத்தான் குறைபாட்டை உணருமா...?

  • 20 hours ago 
    Riyas Qurana
    • //குறையை உணர்வெதே பெரிய வெற்றி அல்லவா//வெற்றி தோல்வியுடைய எந்த விளையாட்டையும் நான் ரசிப்பதில்லை

  • 20 hours ago 
    Pichaikaaran Sgl
    • வெற்றி தோல்வியுடைய எந்த விளையாட்டையும் நான் ரசிப்பதில்லை 
    • ஓகே ஒகே
    • பெரிய முன்னேற்றம் என வைத்து கொள்ளுங்கள்

  • 19 hours ago 
    Riyas Qurana
    • அப்படியெல்லாம் ஏதுமில்லை.முன்னேற்றம் என்ற சொல்லும் கிட்டத்தட்ட வெற்றி தோல்வி போன்ற சொற்களின் வம்சத்தைச் சேர்ந்ததுதான்...

  • 19 hours ago 
    Riyas Qurana
    • முன்னேற்றமற்றவர் என ஒரு தோல்வியை தன்னகத்தே உருவாக்குகிறது அது.

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • குறைபாடுள்ள ஒன்று அடைவதும் குறைபாடுள்ளதாகவே இருக்கும்.. அது படிக்கும் இலக்கியம். அது வணங்கும் இறைவன், என அனைத்தும் குறைபாடுள்ளதாகவே இருக்கும்.. அதற்காக இலக்கியம், இறைவன், இதெல்லாம் தவ்று என்பதுல்லை.. குறைபாடு கொண்ட ஒரு மனம் , இதன் பலனை பெற இயலாது...

  • 19 hours ago 
    Riyas Qurana
    • குறைபாடு குறைபாடு அற்றது என்ற வகைமைகள் யார் உற்பத்தி செய்தது..?எக்ஸ் என்கிற ஒருவர் உருவாக்கியது எனில், வேறு வேறு அளவுகளில், பண்புகளில்குறைபாடு குறைபாடு அற்றது என்ற அளவீடுகளை ஏ, பி , சி போன்றவர்களும் உருவாக்கலாமே..குறைபாடு என்பதற்கு பலர் பலவற்றை கருதலாம் என்றாகிறது..இதில் யார் மன்வைக்கும் குறைபாடு சரியானது என எப்படிக் கண்டு பிடிப்பது...?

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • அதனால்தான் த்ன்னை தான் அறிதல் என்ற ( உங்களால் பிழையான ததுவம் என சாடப்பட்ட ) சுஃபி ஞானிக்ள், ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி போன்ன்றோர் வலியுறுத்திய தத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.. குறைபாடு என்பதை பலர்பலர் ( ஏ பீ சி ) வரையறுக்கலாம். அதெல்லாம் முக்கியம் இல்லை... மற்றவர் சொல்ல்வதை கேட்காதே,,.. உனை நீயே அறி

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • அதாவது. ஒருவர் வரையறுத்த ஸ்டேண்டர்ட் அடிப்படையில் , நீ நல்லவனா இல்லையா என பார்க்காதே.. எந்த முன் முடிவும் இன்றி உனை கவனி என குண்ங்குடி மஸ்தான் போன்ற சுஃபிக்கள். சித்தர்கள் சொல்கிறார்கள்

  • 19 hours ago 
    Riyas Qurana
    • சுஃபி ஞானிக்ள்இ ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தி , மற்றும் பலர் இவர்கள்மற்றவர்கள் இல்லையா...? மற்றவர்கள் சொல்வதைக் கேட்க்காதேஉன்னையே நீ அறிந்துகொள்.. இதைச் சொன்னதும் ஒரு மற்றவரே...அவர்களின் தத்துவம் அவர்களின் கருத்துக்கு முரணாக இருக்கிறதே..மற்றவர்கள் சொல்வதைக் கேட்காதே என்பவர் சரியானவராக இருந்தால்எதுவும் சொல்லியிருக்கக் கூடாது மௌனமாக இருந்திருக்க வேண்டுமல்லவா..?

  • 19 hours ago 
    Pichaikaaran Sgl
    • மவுன குருவாகவும் பலர் இருந்து இருக்கிறார்கள்... இவர்கள் இதுதான் செய்ய வேண்டும்.. இதுதான் சரி என்றெல்லாம் சொல்வதில்லை... உன் வழியை நீயே பார்த்து கொள் என சொல்கிறார்கள்
    • நீயே உனக்கு ஒளியாக இரு என்கிறார்கள்

  • 19 hours ago
    Riyas Qurana
    • // உன் வழியை நீயே பார்த்து கொள் என சொல்கிறார்கள்நீயே உனக்கு ஒளியாக இரு என்கிறார்கள்//இது எனது கருத்தைக்கேள்..அல்லது எனது பேச்சைப் பின்பற்றுஎன்பதையும் குறிக்கிறது தோழர்...அப்படியிருக்கும்போது ஒன்றும் சொல்லவில்லை என்பது எப்படி..?

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • வழி காட்டும் நெறி முறைகள் எதையும் அவர்கள் வகுக்கவில்லை
    • இரண்டு வழிகள் உள்ளன
    • seek , you will find என்பது ஒன்று

  • 19 hours ago
    Riyas Qurana
    • நாளை சந்திப்போம்...நான் வேலைக்கு காலையில் போகவேண்டும்.நாம் இருவரும் ஒரு விசயத்தைப் பரிந்துகொள்ள முயற்ச்சித்தோம்..அந்தவகையில் நன்றிகள்.. நாளையும் நீங்கள் வந்தால் சந்திக்கலாம்.

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • தேடுவதை நிறுத்து... தேடுவது கிடைக்கும் என்பது இன்னொன்று

  • 19 hours ago
    Riyas Qurana
    • நீங்கள் சொல்லுவதெல்லாம் யாரோ சொன்னவைகள்தான்...யாரோ சொன்னவைகளை உங்கள் கருத்துப்படி கேட்கக் கூடாது..நீங்கள் உங்கள் கூற்றை சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • 19 hours ago
    Pichaikaaran Sgl
    • பதிவிடுங்கள்.. உங்கள் கருதுக்களை விரிவாக எழுதுங்கள்... வாழ்க்கை எனும் பாட சாலையில் நான் மாணவன் என்ற முரையில் ,எல்லா தரப்பு கருத்தையும் ஆரவமாக படிக்க கூடியவன் நான்...
    • கண்டிப்பாக் நாளை சந்திக்கலாம்
    • உண்மையிலேயே உங்கள் உரையாடல் மனதுக்கு நிறைவாக இருந்தது

  • 19 hours ago
    Riyas Qurana
    • என்னிடம் கருத்துக்கள் ஏதுமில்லை.கேள்விகள் மாத்திரமே உண்டு.நான் கேள்விகளால் வாழ்வைப் பயணிப்பவன்.அந்தக் கேள்விகள் தீர்ந்துபோகவேயில்..ஒரு கேள்விக்கான பதிலே பல்லாயிரம் கேள்விகளை உருவாக்குகின்றன...இங்கு பல எழுத்தாளர்கள் பதில்களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் பதில்கள் மாத்திரமே உண்டு...நான் மாணவனெ அல்ல ஆசிரியன்.. கேள்விகள் நிறைந்த ஆசிரியன்.

  • 19 hours ago
    Riyas Qurana
    • www.maatrupirathi.blogspot.com

  • 19 hours ago
    Riyas Qurana
    • சிகரெட் புகைக்கப்போகிறென்...வணக்கம்.மிக்க அன்புடன்றியாஸ் குரானா

2 comments:

  1. //சிகரெட் புகைக்கப்போகிறென்//

    ஏன் சிகரெட் புகைக்க போக வேண்டும் ?

    //நான் வேலைக்கு காலையில் போகவேண்டும்.//

    ஏன் வேலைக்கு காலையில் போகவேண்டும் ??

    ///இங்கு பல எழுத்தாளர்கள் பதில்களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் பதில்கள் மாத்திரமே உண்டு...நான் மாணவனெ அல்ல ஆசிரியன்.. கேள்விகள் நிறைந்த ஆசிரியன்.
    ///

    எதற்கு கேள்விகள் கேக்க வேண்டும்???
    எதற்கு கேள்விகளை கட்டிப்பிடித்து அழ வேண்டும் ??

    ReplyDelete
  2. கிருஷ்ணா கமெண்ட்ஸ் ... ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்

    படித்தவுடன் சிரித்து விட்டேன். :))

    இப்படி ஒவ்வொரு பதிலிலும் ஆயிரம் கேள்வி கேட்கப்பட்டால்
    எதில்தான் கான்சென்ட்ரேட் செய்ய முடியும்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]