Pages

Tuesday, February 28, 2012

அனைவரும் தற்கொலை செய்து செத்து தொலையுங்கள்- ஜெயமோகனின் ஃபாசிச கருத்து

 வாழ்க்கையை கொண்டாடுங்க்கள் என்பார் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. அவர் மட்டுமன்றி , நல்ல மனம் படைத்த எல்லோருமே இதைத்தான் சொல்வார்கள்.

நாம் சந்தோஷமாக இருந்தால் மற்றவரை துன்புறுத்த நமக்கு  மனமும் இருக்காது,  நேரமும் இருக்காது..

இந்த நிலையில், குறுக்கு சால் ஓட்டுவது போல , மரணத்தை கொண்டாடுங்கள் என சொல்கிறார் ஜெயமோகன்.

இதற்கு துணையாக தியாகிகள் , போரளிகளான முத்துக்குமரன் மற்றும் செங்கொடி போன்றோரை இழுத்துள்ளார்.

போராட்டத்தில் உயிர் தியாகம் செய்பவர்களும் , மோட்சம் கிடைக்கும் என நம்பி , தற்கொலை செய்வதும் ஒன்றா.. இரண்டையும் ஒன்று போல ஒப்பிட்டு எழுதி பெரும்பிழை செய்திருக்கிறார் அவர்..

மற்றவர்களுக்காக , தன் மொழிக்காக , தன் இனத்துக்காக உயிர் விடுவது தியாகம்.  வாழ்க்கை அலுத்து  போயோ , இறந்தால் மோட்சம் கிடைக்கும்  என நினைத்தோ உயிர் விடுவது , சுயனலம்தானே.. இதில் எங்கே தியாகமோ , உன்னதமோ இருக்கின்றன ?

இதே போன்ற்  கருத்தை நான் கடவுள் திரைப்படத்த்தில் சொல்லி இருப்பார். மரணத்தை கொண்டாடி இருப்பார்

இத்தகைய ஃபாசிச கருத்தை வன்மையாக கண்டிக்க வேண்டியது நம் கடமை...

34 comments:

  1. http://www.jeyamohan.in/?p=25407. , this is the Jeyamohan post , pichai , u don't know what's this , but many people have knowledge about this

    //நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் என்றாவது அப்படி முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் பயணத்தின் உச்சநிலையாகவே எண்ணுவேன்.//

    ReplyDelete
  2. One advice: if you cannot understand something keep quiet and may be people will not suspect your intelligence.

    ReplyDelete
  3. பிச்சை நீங்கள் தேடுவதில் பிச்சைகாரனாகவும் இல்லை. . .உலகில் பார்வையாலனாகவும் இல்லை. . .! மாறாக தான் எதிர்பார்ப்பதை மற்றவர்கள் தரவேண்டும் என்கிற பாசிச சர்வாதிகாரியாகவும், உலகில் மட்டுமல்ல உள்ளத்திலும் குருடனாக இருக்குறீர்கள். . .!
    -கண்ணப்பன்

    ReplyDelete
  4. So sad your ignorance is explicit now...

    ReplyDelete
  5. தியாகியாயினும், கொடை வள்ளலாயினும், சேவை செய்பவனாயினும் அவனது செயலால் முதலில் நிறைவடைவது அவனது மனமே, அந்த நிறைவே/உச்சமே அவனை அச்செயலை தொடரச் செய்கிறது. இதனால் பிறரும் பயன் பெறுவதால் அதை மட்டுமே மேன்மைபடுத்தி வருகின்றீர்கள். இவை உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமில்லை, நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்யப் போவதுமில்லை...

    ‍‍‍‍‍-- தியானா

    ReplyDelete
  6. மிஸ்டர் பிச்சைக்காரன்...

    ஐயோ பாவம்...உங்க நிலைமை நிஜமாகவே ‘இப்படி’ ஆயிருச்சே. சரி, ’சிந்தனை’, ’புரிதல்’ இவற்றின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியுமா சார்?

    ReplyDelete
  7. நுனிப்புல் மேய்ந்து தேவையில்லாத கருத்துகள் சொல்ல வேண்டாம், அதுவும் பாசிசம் என்று அறைகூவல் விடுவுது மிகவும் மோசடித்தனம்
    கி.இரகுபதி

    ReplyDelete
  8. he he he -

    pichaikarran - really u need to take pichai for some common knowledge in tamil first.. Even though u couldnt understand the indepth content - at least u should have asked someone about the content of the article.. really pity on you.

    You have spit by lying down...

    one thing i understood - is you are a true dravidian and true follower of Karuna..haha ha

    ReplyDelete
  9. இந்த பொழப்புக்கு தற்கொலை பண்ணிட்டு சாவலாம் பிச்சை'ஸ்!..

    ReplyDelete
  10. avar nana nannyam seithu vidal,
    he did correctly

    ReplyDelete
  11. நீங்கள் சாரு அவர்களை தூக்கி பிடியுங்கள் அது உங்கள் விருப்பம்,அதற்காக அடுத்தவரை அர்த்தமே இல்லாமலும்,அவர் எழுதியதை புரிந்து கொள்ளாமலும் கடுமையாக விமர்சிப்பது,உங்களின் அறிவில்லாத 'பிட்சைகாரத்தனத்தைதான்' நன்றாக காட்டுகிறது.

    ReplyDelete
  12. மதி இந்தியாFebruary 28, 2012 at 11:39 PM

    பிச்சைக்காரன் அவர்களின் வாசிப்பனுபவம் என்னை புல்லரிக்கவைக்கிறது , தொடர்ந்து இதேபோன்ற வாசிப்பை எதிர்பார்க்கிறோம் , ஜெமோவையை பரவப்படுத்திட்டீங்களே சார் .

    ReplyDelete
  13. Pitchai, ungaloda purithalai ninaichu, thalaiyila Adichchukka Rendu Kai Paththaliye !!!

    - Hariharan, Madurai

    ReplyDelete
  14. Enna pozhappu ithu.. unna Charu vera thalabathi appadi ippadi nnu solrar... pathu thambi

    ReplyDelete
  15. ஒருவர் சொல்ல வருகின்ற கருத்துகளின் ஆழம் தெரியாமல், கண் கொத்தி பாம்பாக காத்திருந்து, எப்பாடு பட்டாயினும் அவர் மேல்
    சேற்றை வாரி இறைத்து, உங்கள் தலைவ எழுத்தாளரின் அற்ப சந்தோசத்திற்காக, உங்களது தனித்தன்மையை இழந்து வருகிறீர்கள்.
    கொஞ்சம் யோசித்து பாருங்கள்! உங்களுக்கும்,தனது தலைவன் நடிகரின், போட்டி நடிகரின் மீது அசுத்தம் செய்யும் கீழ்த்தரமான ரசிகனுக்கும் என்ன வித்தியாசம்?
    இது உங்கள் மீதான மதிப்பை குறைக்கிறது.

    ப்ரியமுடன்,
    பாலா

    ReplyDelete
  16. ஒரு ஊர்ல ஒரு பூனை இருந்துச்சாம். பகல்ல கண்ணை மூடிக்கிச்சாம். அய்யோ இருட்டு இருட்டுனு புலம்பிச்சாம். அந்தப் பிச்சக்காரப் பூன தான நீ ??? :-))

    ReplyDelete
  17. pichai, best do that, you are not fit reading..

    ReplyDelete
  18. அண்ணே, நீங்க அறிவுகொழுந்துன்னே

    ReplyDelete
  19. """ Anonymous- So sad your ignorance is explicit now... """"

    It's not ignorance. It's sheer stupidity.

    ReplyDelete
  20. அடி கொடுத்த கைப்புள்ள நிலையே இப்படின்னா, “அடி வாங்குனவன் கதி என்னவாயிருக்குமோ? பிச்ச இன்னுமாடா நம்பள நம்புறாங்க

    ReplyDelete
  21. Dont write abt Jemo. He will send his hired killers to ur blog.

    ReplyDelete
  22. Thanks to the 1st commenter, I opened the blog post and read. I was alarmed. It is an intellectual skulduggery of a satanic thought.

    Ur concern is correct. Whether Charu has said or not, celebrating suicide is dangerous to humanity. Life is a commitment given to God if one believes in Him whereby one has to live it in all shades, positive and negative, and leaves the world only when the call comes from Him. One should not be impatient and makes the Call oneself. It is pretending to be God.

    Whoever does end his life on his own believing that he has rounded off all his worldly affairs is doing an act against nature (God). But whoever does end his life on his own believing in a cause or in order to rouse public opinion for or against it, is exploiting the same nature to his advantage for an unselfish cause, which we call ‘sacrifice’. But strictly speaking, in religious terms, that, too, ought to be disallowed considering that suicide is not an effective tool to propagate an ideal. There are other better ways. This kind of suicide is not celebrated but gets acknowledged positively by society as a whole. Celebration is a bad word here. No one celebrates the death of a young man like Muthu Kumar or Chengodi who took their lives for a cause; but empathise with them and their objective only. Jemo abuses the word ‘celebration’!

    Giving saintly coating to the sucides of old persons believing that they had finished off their worldly lives and nothing more is left for them is justifying a wrong action and spreading a poisonous message for suicide in society. Such message is occasionally spread by some suicide cult to make its adherents believe in ending life for some abstract ideals. Jain monks commit sucide; but Jains don’t believe in God. It is an atheist faith.

    He says celebration of suicide is in the Hindu spiritual tradition. It is untrue. Only death, that too, natural death is celebrated. Not other deaths, let alone suicides.

    He says only semitic religions believe that the suicides (the persons who commit suicide) turn into evil spirits after death. It is incorrect. In Hindi religion too, the suicides are said to be roaming around as pisaasus or evil spirits and the female suicides if they had died for reasons of romance etc., will be ready to haunt young men. Other suicides are said to haunt those who were responsible for their deaths.

    He berates semitic religious belief but ends his blogpost with Jesus's alleged statements. Whatever he said shows him as a dangerous man to society and it is shocking to know many young people read him. Imagine if he becomes an ultimate cult leader for them advocating suicides. We will get to see an Indian Jones genocide

    The young ppl shd be weaned away from him. But how?

    ReplyDelete
  23. anne ennanne bulbu odangidichu?

    ReplyDelete
  24. ////

    id - அடக்க முடியாதது அதற்க்கு சரியானவிதத்தில் புரிந்து அறிந்து அதை கடப்பதே சரியான பாதை, அதை கண்டிப்பா அடக்கமுடியாது என்பது எனது கருத்து. சிறந்த பண்பாடு வேண்டுமானால், நமது ID பற்றி புரிதல் சரியாக இருக்கவேண்டும். இந்த புரிதல் இலக்கிய வழியேதான் மிக சுலமாக கிடைக்கும், ஆனால் நமது தமிழ் இலக்கிய உலகில் காமத்தை புனிதமாய் பார்ப்பது அதை அருவெறுப்பாய் பார்பதுதான் வழக்கம்.

    //உன்னதமாக்கப்படுகிறது.// - உன்னதமாக்குதல் கண்டிப்பா அவசியம், ஆனால் அதன் பெயரில் நடக்கும் அரசியல் எப்படி இருக்கு? அதை எவ்வாறு உன்னதப்படுத்துகிறோம்? உன்னதபடுத்தியவற்றை உடைத்து பார்க்க வேண்டிய அவசியம் தேவை இருக்கு அல்லவா?
    யாரும் idயை தவிர்த்து உன்னதமாக்கலை அடந்துவிடமுடியாது. இதுதான் ஒஸோவும் இந்திய ஞானமும் சொல்லுது, ஆதிசங்கரர் கதை நியாபகம் வருது. ஒரு தனி நபருக்கு பொறுந்துவது கண்டிப்பா ஒரு சமுகத்திற்க்கும் பொறுந்தும்.

    ஒருவன் வழ்வதற்க்கு எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளவு உரிமை ஒருவன் அவனது உயிரை முடித்துகொள்வதற்க்கும் இருக்கு, இதில் எதற்க்கு தியாகம் என்னும் உன்ந்தாமாக்கல்.
    ஒரு சமுகம் வாழ ஒரு தனிமனிதன் மரித்தால் பரவால்லை என்கிற பார்வைதானே இது, இந்த பார்வையில்தான் சமுகத்தின் சுய நலம் இருக்கு. யாருக்கு யாரும் உயிர்ன்ன மயிர் கூட தர தேவைல்லை. தருவதும் மறுப்பது ஒரு தனி நபர் விருப்பமல்லவா, இதில் எங்கு வந்தது தியாகம்.

    // மகத்தான தியாகங்கள் அழிவுகள் அல்ல, அவை ஆக்கம் போன்றவை. விதைகள் அழிவது ஆக்கத்துக்காகவே///

    அந்த கட்டுரையில் உள்ள அதிபயங்கர் வரிகள் இது. பதட்டமுகும் பயமும் கல்ந்து என்னை அப்படியே அமுக்குது. நான் முற்ப்போக்குவாதி அல்ல இலக்கியம் எனக்கு இரு ஆண்டுகள்தான் பரிச்சியம், இப்படிபட்ட வரிகளை ஒரு மிக சிறந்த் எழுத்தாளராய் கருதப்படும் ஒருவர் எழுதுவது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியவில்லை.

    ஒரு கொள்கையா / மனித உயிரா? உயிர்தானே மேல். அவர் சொல்வதுபோல முற்ப்போக்கு சிந்தனையோடு தற்க்கொலைகளை முட்டாள்தனமென ஒதிக்கிவிடமுடியாதுதான், ஆனால் அதை ஆக்கம் என்பது கண்டிப்பா எற்றுக்கொள்ள முடியாது, அய்யோ இப்படி இருக்கே மனித வாழ்வு!!!!! இந்த சமுக வாழ்வு!!!! ஒரு மனிதனின் உயிர் தரிப்பதிலா நாம் நிம்மதியாக வாழ முடிகிறது, நான் முன்று வேளை சாப்பிட்முடிகிறது, நம்மால் நமது சுதந்திர கருத்துக்களை எடுத்து சொல்ல முடிகிறது, அடுத்த கட்டத்திற்க்கு போகமுடிகிறது எனும் உனர்வை அளித்திருக்கவேண்டும் இவரது பதில். இந்த உணர்வில் பிறக்கும் பொறுப்புண்ர்ச்சிதானே உன்னதம்.

    இந்த சிந்தனையின் Micro Level தான் நாம் அற்றாடம் ரேட்டிலும் வீட்டிலும் கானும் சமுக அவலம். சுயநலம் என்பது ஏன் இந்த அளவுக்கு வெறுக்கப்படவேண்டியதுல்லை, சுயநலத்தோடு பொறுப்புண்ர்ச்சியும் சேர்ந்துதான் ஒரு சிறந்த சமுக பன்பாட்டிற்க்கு நம்மை எடுத்துசெல்லும்.

    தியாகம் எனும் உனதம்மாக்கபட்ட ஒரு செயலை உடைத்து காட்டி இதுதான் இப்படிதான் எனும் பதில் வந்தால் அது உன்னதம். அதுதானே ஒரு ஆசிரியரின் கடமையாக் இருக்கமுடியும். உன்னத்ங்களை போற்றும் சமுகம் வெள்ளையடிக்ப்பட்ட கல்லரைக்கு சமம்.

    id பற்றி எந்த புரிதலும் இல்லாது அதன் தேவைகளின் அவசியம்தெரியாது சுப்பர் இகோவுடன் இருந்து கொண்டு அதை மெயிட்டேன் பன்னிக்கொண்டு அதற்க்கு மற்றவர்களின் தியாகத்தை மிரட்டி அதட்டி பிச்சை வாங்கி வாழும் என்னை போல சராசரி வாசகனுக்கு தரும் இந்த பதில் என்னை பீதியடைய வைக்கிறது.

    இதை ஒரு இலக்கிய ஆசான் எழுதியதை சுட்டிக்காட்டிய உங்களுக்கு பாராட்டுகள்.

    இந்த மன உளச்சல்தரும் பதிவை படிக்க தூண்டிய உங்களுக்கு கடுமையான கண்டனங்கள்.

    எல்லோரும் ஆனானியாக பிண்ணுட்டம் போட்டதால் நானும் ஆனானி.

    இவரின் மாடனும் மோட்ச்சமும் சிறு கதையை வாசித்துவிட்டு, பேச்சிப்பாறை - இசக்கி கோவில், திருப்பர்ப்பு சிவன் கோவில் சென்ற்வன் நான். திவிர வாசகனாகலாம் என நினைத்தேன். ச்ச இவ்வள்வுதானா.

    ReplyDelete
  25. இதில் மிகப்பெரிய தவறு உள்ளது. அதாவது,'செத்து தொலையுங்கள்' என்பது தவறு.

    ' 'செத்துத் தொலையுங்கள்'என்பதே சரி...

    ReplyDelete
  26. பிச்சை அண்ணே, போதும் கமண்ட்ஸ் குளோஸ் பண்ணுங்க. வசை வாங்குவதிலும் கூட பிச்சைக்காரனாக இருக்கீங்களே...!!

    ReplyDelete
  27. ஆஃப்டர் அப்ரூவல் இருக்கற எடத்துல எல்லாம் கமெண்ட் போட மாட்டோம்டி.கமெண்ட்டை ஓப்பன் பண்ணுடா.

    ReplyDelete
  28. what is that you are trying to prove? Do you really think others will believe/accept whatever you say? I don't see any logic in any of your posts. Blog is a powerful medium for lots of productive things to write and to share your wisdom with the society. If you cant use it effectively please at least do not trash it.

    ReplyDelete
  29. Stop blogging for sometime or else close the comments section to proceed ur 'thoughts' further. Pichaikaaran'nu paer vaera?

    ReplyDelete
  30. தமது அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விஷயத்தைப்பற்றி எல்லாம் அறிந்ததுபோல உளறாமல் இருக்கவேண்டும் என்ற தன்னடக்கம் - பிச்சைக்காரன் என்று புனைபெயரில் இருக்கும் உங்களுக்கு மிக அத்தியாவசிய தேவை.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    ReplyDelete
  31. மரணம் என்பது கொண்டாடப்படக்கூடாத ஒன்றல்ல. எப்படி வாழ்வு கொண்டாடப்படக்கூடியதோ - வாழ்வை கொண்டாடச்சொல்வது சாரு மட்டுமல்ல, அப்படி சொல்லிவரும் பெரும் மரபில் சாருவும் ஒருவர் அவ்வளவே - அதேபோல போதும் என்ற நிறைவான மனநிலை வந்து புறப்படுவதை கொண்டாடுவதும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால் 'துள்ளி எழ வேண்டும், ஏன் அழவேண்டும், இந்த பூமிக்கு நன்றி சொல்லி புறப்படவேண்டும்' என்று வைரமுத்து சொன்னதும் இதே ரீதியில்தான்.

    இதை 'செத்துத்தொலையுங்கள்' என்று சொல்கிறார் என்று அதை பாசிசம் என்று பிதற்றுவது உங்களது புரிதலின் எல்லை எது என்பதை காட்டுகிறது.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    ReplyDelete
  32. மத அடக்குமுறைக்கெதிராக பத்மாசனத்தில் அமர்ந்து புத்தரை தியானித்தபடியே தீக்குளித்து தன்னுயிர்த்தியாகம் செய்த வியட்நாமிய புத்த சன்யாசி பற்றிய கதையை அறிவீரா ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]