கலையை வெறுப்போடு அணுகுதலில் தவறில்லை...
கலை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அது உங்க்ளை காதலில் வீழ்த்தி விடும் என்றார் சாரு...
எஸ் ராவின் உபபாண்டவத்தை வெறுப்போடுதான் படிக்க ஆரம்பித்தேன். குறைகளை கண்டு பிடித்து , திட்ட வேண்டும் என்பது என் நோக்கம்..
சில வாக்கிய பிழைகள் கண்ணில் படவே , குஷியாக இருந்தது,,,
அப்போது ஒரு வாக்கியம் கண்ணில் பட்டது... இந்த நாவலை மேலோட்டமாக படிக்க கூடாது.. இது வழக்கமான மகாபாரதம் அல்ல என்ற எண்ணம் தோன்றியது.
அந்த வாக்கியம் இதுதான்..
“ அஸ்தினாபுரம் ஒரு கனவு. எங்கள் நாக்கு அசைய அசைய இந்த நகரம் விரிவு கொள்கிறது. நாவின் நடமாட்டம் நின்றால் நகரம் விழுந்து விடும். அஸ்தினாபுரம் என் நாக்கில் இருக்கிறது”
படித்ததுமே சற்று நின்று விட்டேன்.. ம்ம்ம்..
அதன் பின் தர்மன் , பீமன் , துரியோதனன் எல்லோரும் கண் முன் நடமாட தொடங்கினார்கள்.. அஸ்தினானபுரத்தில் வாழ தொடங்கினேன்...
பாண்டவர்கள் நல்லவர்கள். கவுரவர்கள் கெட்டவர்கள். கடவுள் அவதாரமான கிருஷ்ணர் உதவியுடன் நீதி நிலை நாட்டப்பட்டது என்பதே நாம் படித்த மகாபாரதம்..
அல்லது இன்னொரு பாணி இருக்கிறது... மூலக்கதையை சிதைத்து ( மூல கதையை ஏற்க மறுத்து ) புதிதாக ஒரு கதை சொல்வது.. மூல கதையில் வரும் அதே பாத்திரங்கள், கதாசிரியரின் அரசியல் கொள்கைகளுக்க்கேற்ப நடந்து கொள்வார்கள். மூலக்கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது..
இந்த இரண்டு மாதிரியும் இல்லாமல் , இலக்கிய பார்வையில் மகாபாரதத்தை தருகிறார் எஸ் ரா..
அதே பாண்டவர்கள் , கவுரவர்கள் சண்டைதான்.. கிருஷ்னர் உதவி, பாண்டவர்கள் வெற்றி அதுவும் மாறவில்லை.. ஆனால் சம்ப்வங்களை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.. எனவே படிப்பவர்கள் கதையுடன் ஒன்ற முடியும்.. என்றோ நடந்த கதை இன்றும் அதே வீரியத்துடன் நம் முன் விரிகிறது...
இதற்காக சில யுக்திகளை கையாண்டு இருக்கிறார் எஸ் ரா..
கதையில் பெரும்பாலும், பாஸ்ட் டென்ஸ் தான் பயன்படுதுவார்கள்.. ப்ரசண்ட் பெர்க்ஃபெக்ட், பாஸ்ட் பெர்ஃப்க்ட் செண்டன்ஸ் , present perfect continuous , past perfect continuous பயன்படுத்த மாட்டார்கள்.. இந்த நாவலில் அதிகமாக ப்யன்படுவது இவைதான்..
ஒரு நிகழ்ச்சி முடிவுற்றாமல், அதன் விளைவுகள் இன்னும் தொடர்வதை அருமையாக , சரியான விதத்தில் , நாவல் முழுதும் பரவ விட்டு இருக்கிறார்..
நாய்க்கு அடையாளம் குரல்தான்... அதை இழந்த நாய் ஓடியது.. என எழுதாமல் , ஓடிக் கொண்டே இருந்தது.. என்பதில் அழுத்தம் அதிகம்..
நாவல் முழுதும் இப்படி பல செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன..
அதே போல, சில சினிமாக்களில் , சினிமாவின் ஆதார கருத்தை வலியுறுத்த சில குறிப்பிட்ட இசையை பயன்படுத்துவார்கள்.. இந்த நாவலில் இரண்டு வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.. ( அது என்ன வார்த்தைகள் என நீங்களே கண்டு பிடியுங்கள் )
சினிமாவில் எழுத்து சித்தர் பாலகுமாரன் எழுதியபோது, அதில் அவர் முத்திரை இருக்கும்.. ஆனால் இந்த நாவலின் சில வரிகளை படிக்கும்போது, இந்த எழுத்தாற்றலில், 10% கூட எஸ் ராவின் சினிமா வசனத்தில் வரவில்லை என தோன்றியது..
கிருஷ்ணர் கடவுள் எல்லாம் இல்லை. அறிவாற்றல் , ராஜதந்திரம் நிரம்பிய ஒரு மனிதர் ,, பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்ற சிந்தனை அருமை...
அதே போல சகுனி வில்லன் இல்லை.. அவன் இடத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்து இருக்க முடியும்..
இந்த நாவல் சொல்வது அதைத்தான்...
பிறக்கும்போதே , இவன் இதுதான் செய்ய வேண்டும், செய்ய முடியும் என்பது ஓரளவு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது...
த்ரியோதனன் நீருக்கடியில் ஒளிந்து இருப்பதும் , காட்டிக்கொடுக்கப்படுவதும் உலுக்கி விட்டது..
மகாபாரத நூல்களில் அதிகம் முக்கியத்துவன் கொடுக்கப்படாத கதாபாத்திரம் அஸ்வத்தாமா... அவன் பார்வையில் இருந்து பார்க்கும்போது, திகைப்பாக இருக்கிறது.. தர்மம் , அதர்மம் அனைத்தும் அர்த்தம் அற்றவையோ என தோன்றுகிறது...
இந்த நாவலில் புதிதாக் இருப்பது கன்னிமை பற்றிய கருத்துகளும் , இரு உடலாளர் கருத்தும்தான்...
மழை வேண்டி காட்டில் இருக்கும் ரிஷியை அழைக்க செல்லும்ப்போது பயன்படுத்தும் யுக்தி, இது வரை நான் படிக்காத ஒன்று, அர்ஜுனன் , சிகண்டு, துரியோதனன் ஆகிய அனைவரும் இரு உடலாளர்கள் என்பது லாஜிக்காக இருக்கிறது...
கன்னிமை என்பது மனதை பொருத்தது...இந்த நாவலில், தெய்வீக சக்தி மூலம் பலர் இழந்த கன்னிமையை மீண்டும் பெற்ரு விடுகிறார்கள்..ஆனால் , நடை முறையில் , தெய்வீக சக்தியெல்லாம் தேவை இல்லை.. ப்ழையதை வெகு சுலபமாக மறந்து விட்டு , புதிய வாழ்க்கையை துவங்கி விடுகிறார்கள்...
இது போல பல இடங்களை பார்க்கும்ப்போது, தெய்வீக ஆற்றல் எதுவும் இல்லாமலேயே மகாபாரதம் நன்றாக இருக்கும் என தோன்றியது...
ஏகலனைவனை பற்றி மாற்று பார்வை கிடைக்கிறது.. அந்த இடத்தில், ஏகலைவன் , அர்சுனன், துரோணர்- யாருக்கும் வேறு எந்த வழியும் இருக்கவில்லை.. இது போன்ற இடங்கள் ஏராளம்...
மகாபாரதத்தை சுருக்கி சொல்லும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல இந்த நாவல்... எனவே வரிசைப்படி கதை செல்லாது.. முன்னும் பின்னுமால அலையும்.. மகாபாரதம் தெரியாதவர்கள் லேசாக கொஞ்சம் தெரிந்து கொண்டால் , ஈசியாக படிக்கலாம்..
கீழ்காணும் வரிசையை நினைவில் வைத்து கொள்ளுங்கள்...
சாந்தனு- கங்காதேவி சாந்தனு - சத்யவதி
பீஷ்மர் சித்ராங்கதன் சித்திரவீரியன்- அம்பலிகா அம்பிகா
பாண்டு, திருதராஷ்டிரன் விதுரன்
பாண்டவர்கள் கவுரவர்கள்
பீஷ்மர் சித்ராங்கதன் சித்திரவீரியன்- அம்பலிகா அம்பிகா
பாண்டு, திருதராஷ்டிரன் விதுரன்
பாண்டவர்கள் கவுரவர்கள்
இந்த நாவலின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் வித்தியாசமான மொழி நடை.. இன்னும் மனதில் எதிரொலிக்கிறது,, ஒரே மூச்சில் படிக்க முடிந்தது...
படித்து முயன்றதும் , வாழ்க்கை என்பது எவ்வளவு பிரமாண்டமானது, அதற்கு அரசன் , ஆண்டி ,வெற்றி தோல்வி எல்லாம் வெறும் தூசு என தோன்றுகிறது.. அதே சமயம் , சின்ன்ஞ்சிறு சிறு செயல்கள் மூலம்தான் வாழ்க்கை முன் நகர்கிறது என்றும் தோன்றுகிறது.. சாதாரண செயல் கூட பெரும் விளவை ஏற்படுத்த கூடும்...
அதை சொல்ல முடியாது என்பதை சொல்லி இருக்கிறார் எஸ் ரா..
**************************************
பிடித்த வரிகள்
- அஸ்தினாபுரம் ஒரு கனவு. எங்கள் நாக்கு அசைய அசைய இந்த நகரம் விரிவு கொள்கிறது. நாவின் நடமாட்டம் நின்றால் நகரம் விழுந்து விடும். அஸ்தினாபுரம் என் நாக்கில் இருக்கிறது
- சிசுவும் தாயும் ஒரே நேரத்தில் உயிர்ப்பு கொள்கிறார்கள்
- சகோதரனே.. நீயே என் பார்வை.. என் வழிகளை நீயே உருவாக்குகிறாய்
- அவன் பால்யம் அம்பென உதிர ருசிக்காக காத்து இருந்தது.
- நகுலன் போன பிறகு, தான் பார்த்த வசீகர முகம் காணாது காற்று விலகி சென்றது
- தன் கண்ணால் காணாத உலகை, தன் உடலால் அறிந்து இருந்தான்
- நாய்க்கு அடையாளம் குரல்.. குரலற்ற நாய் ஓடிக்கொண்டே இருந்தது
- ஓர் ஓட்டுசில்லின் விடுபடலில், உலக இயக்கமே மாறி விடுகிறது. இது பிரபஞ்ச இயக்கம்
- யாரும்ற்ற சைன்யத்துக்கு தலைவனான் அஸ்வத்தாமன்
- நீ போகும் திசையை உன் கால்கள் கூட அறிய கூடாது,, மிக மிக ரகசியம்
- இலைகளை விட அதிகமாக பறவைகள் இருந்தன, ப்கலில் கூட இருள் ஒட்டி கொண்டு இருந்தது
- நாம் ஒருவரை ஒருவர் , வெறுப்பால் மட்டுமே நேசிக்க முடியும் போலும்
- அவர்கள் காற்றோடு நடந்தனர், மணல் ஒரு நதியென ஓடிக்கொண்டு இருந்தது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிளஸ்
- அபாரமான தமிழ்
- விறுவிறுப்பு
- மாற்று பார்வை
- கவிதை போன்ற நடை
மைனஸ்
- எழுத்து பிழைகளுக்கு கதாசிரியரை குற்றம் சொல்ல முடியாது.. ஆனாலும் நாவலுக்கு இது ஒரு குறைதான் - ஏராளமான இலக்கண பிழைகள்
- மகாபாரதம் தெரியாதவர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம் . சில பாத்திரங்களில் முழுமை இல்லை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெர்டிக்ட்
உப பாண்டவம் ------------ உன்னதம்
++++++++++++++++++++++++++++++++++++++++
பார்வையாளன், எனக்கு இந்த நாவலில் புதிதாக நிறைய விஷயங்கள் கிடைக்கவில்லை. ஏறகனவே படித்தவைதாம்.
ReplyDeleteசாரு விரும்புவதை விரும்புகிறீர்கள், சாரு வெறுப்பதை வெறுக்கிறீர்கள், உங்கள் சுயத்தை இழந்துவிட்டீர்கள் நண்பரே!
ReplyDeleteசாரு உங்களையும் விமர்சிக்கும் காலம் வரும், அப்பொழுது உங்களுக்கு உலகம் புரியும்!
அனானி நண்பரே . எஸ் ரா வின் பாராட்டுவிழாவை சாரு விமர்சிக்கிறார் . இந்த நிலையில் நான் உபபாண்டவத்தை பாராட்டுகிறேன் . நடுநிலையாகத்தானே நடந்து கொள்கிறேன்
ReplyDeleteபார்வையாளன், உப பாண்டவத்தைச் சாரு மிகக் கடுமையாக விமர்சித்திருப்பதாக அறிகிறேன். படித்திருக்கிறீர்களா?
ReplyDeleteஎஸ்.ரா வை பற்றி விமர்சனம் என்றால் கோபி ஆஜராகி விடுகிறார். இவர் எஸ்.ரா தவிர வேறு யாரையும் விமர்சிப்பது இல்லை. உபபாண்டவம் ஒரு குப்பை அப்பிடின்னு கோபி நிரூபிக்க துடிக்கிற மாதிரி இருக்கு. பை சைக்கில் தீவ்ஸ் படம் கிளைமாக்ஸ் பத்தி எஸ்.ரா எழுதுனது தப்புன்னு சொல்றதுக்கு ரொம்ப மேனகிட்டார். பூமணி பங்கசன் -ல எஸ்.ரா பேசுனதையும் " கண்கட்டி வித்தை" அது இதுன்னு வஞ்ச புகழச்சிய ஒரு பதிவு போட்டாரு.எஸ். ரா மேல கோபிக்கு என்ன காண்டுன்னு யாராவது கேட்டு சொல்லுங்க...
ReplyDeleteஇந்த நூலோட மூலப் பிரதி, 1923ல் வெளியானதுப்பா... மொத்தம், 18 நூல்கள்; 14 ஆயிரம் பக்கங்கள். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தவர் உ.வே.ஸ்ரீநிவாஸாசார்யர். இவரு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமஸ்கிருத பண்டிதராக இருந்தவராம்ப்பா... நூலை பதிப்பித்தவர் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழ் பண்டிதராக இருந்த ராமானுஜாசார்யா.
ReplyDelete"இந்த, 18 வால்யூம்களையும் பிரசுரிக்க, தன் சொத்து முழுவதையும் இவர் விற்க நேர்ந்ததாம். இதன் பிரதி, இப்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள என் நண்பர் கண்ணனின் தந்தையார் உ.வே.திருமலாச்சாரியாரிடம் மட்டுமே உள்ளது. அவர் ஒரு உபந்யாசகர். இந்த மூலப் பிரதியில் இருந்தே, இப்போது நீ கையில் வைத்திருக்கும், "உப பாண்டவம்' எழுதப்பட்டுள்ளது, போதுமா தகவல்?' என்றார் நண்பர்!