சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையினரால் Lingua Fest 2012 – Polyglots Paradise என்ற மூன்று நாள் விழா நடத்தப்படுகிறது.
இதில் அல்ட்டிமேட் ரைட்டர் சாரு துவக்க உரை ஆற்றுகிறார் என தெரிந்ததும் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. இலக்கிய கூட்டங்கள் என்றாலே வசைகள் என்று ஆகி விட்ட நிலையில், இலக்கியவாதியின் பேச்சை கேட்க , இது போன்ற கூட்டங்கள்தான் உத்தமம் , பாதுகாப்பு என தோன்றியதால் , சரியான நேரத்துக்கு ஆஜரானேன்.
திங்கள் கிழமை , காலை பத்து மணிக்கு எனக்கு முன்பே ஏராளமானோர் குவிந்து இருப்பதை காண ஆச்சர்யமாக இருந்தது. அந்த துறை மாணவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர். சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
சார்த்தர் , தாஸ்தயேவ்ஸ்கி, எக்சிஸ்டென்ஷியலிசம் என போஸ்டர்கள் மிரட்டின. ஆனாலும் சாரு நூல்களை படித்து இருந்ததால், கொஞ்சம் தைரியமாக இருந்தது..
ஃபிரெஞ்ச் இலக்கியத்தைப்பற்றி தமிழ் எழுத்தாளர் என்ன பேச போகிறார் என அங்கு இருந்தவர்கள் ஆச்சர்யம் கலந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்.
ஆங்கில உரையை எழுதி வந்து வாசிப்பார் என பலரும் நினைத்த நிலையில், அழகு தமிழில் பேச ஆரம்பித்தார் சாரு.
முதல் பந்திலெயே சிக்சர் அடிப்பது போல, அதிரடியாக பேச்சை ஆரம்பித்தார்,, தமிழ் தாய் வாழ்த்து பற்றி பேச ஆரம்பித்து , உடனடியாக ஆடியன்சை தன் பக்கம் இழுத்து கொண்டார்,,
சார்த்தரை தனக்கு எப்படி அறிமுகம் ஆனார் என்பதை சுவாரஸ்யமாக சொன்னார். ஃபிரென்ச் இலக்கியம் , ஃபிரெஞ்ச் எழுத்தாளர்கள் , மண்டேலாவை விட அதிக ஆண்டு சிறை வாசம் அனுபவித்த எழுத்தாளர் என்றெல்லாம் பேசியபோது, அங்கு வந்து இருந்த வெளி நாட்டினரே ஆச்சர்யத்துடன் கேட்டனர்.
( விழா முடிவில் சாருவின் ஆட்டோகிராப் வாங்கி சென்றனர் )
தம்ழில் சாரு பேசியதை வெளி நாட்டினர் எப்படி கேட்டனர் என விக்கி லீக்ஸ் விமல் கேட்க கூடும். அவர்களுக்கு உடனுக்குடன் மொழி பெயர்ப்பு செய்ய்ப்பட்டது..
சமையல் செய்வதாக இருந்தாலும் , முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.. முழுமையாக வாழ்வை வாழுங்கள் . அதைத்தான் இலக்கியம் சொல்லி தருகிறது என அவர் உணர்ச்சிகரமாக பேசியதை HOD யும் , மாணவர்களும் ரசித்தனர்..
author is dead என்ற கோட்பாட்டை முக்கோண வடிவத்தை வைத்து எளிமையாக விளக்கினார்..
அவரது பிரத்தியேக முத்திரையை பதிக்கவும் தவறவில்லை..
ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள டெபோனேர் இதழை படித்தேன் என சொன்னபோது, கைதட்டல் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது..
இசை நாடகம் ஒன்றும் திரையிடப்பட்டது. அது தொடர்பாகவும் சாரு பேசினார்.
நிறைய குறிப்புகள் எடுத்து வந்து இருந்தார்.. ஆனால் அவற்றை பயன்படுத்த நேரம் கிடைக்கவில்லை.. மனதில் இருந்தே பேசினார்... உலக இலக்கியம், இலக்கியவாதிகள் என அவர் உதிர்ப்பதை மானவர்க்ள் வியப்புடன் கவனித்தனர்.. அவர்களுக்கும் இதில் பரிச்சயம், ஆர்வம் உண்டு என்பதால் உற்சாகமாக கேட்டனர்
ஃபிரெஞ்ச் துறை மாணவர்களுக்கு சுவையான விருந்தாக அமைந்தது சாருவின் பேச்சு. இதை HODயும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.. அருமையாக தொகுத்து வழங்கினார்கள்..சாருவைப்பற்றி கொடுத்த அறிமுகம் சூப்பர்.
நிகழ்ச்சி நடந்த அட்மாஸ்பியர் அருமை.. தேவையற்ற கூட்டம் இல்லை.. ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வந்த்து இருந்தனர்.. மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்..
இலக்கிய நிக்ழச்சிகளில் பேசி முடித்ததும் , பேச்சாளர்கள் கிளம்பி விடுவார்கள்..
அதே போல , வெளினாட்டினர் இருவர் பேசி முடித்ததும், மேடையில் காணவில்லை.. சாப்பிட போய் விட்டார்களோ என நினைத்தேன். ஆனால் அவர்கள் போகவில்லை.. பார்வையளர்கள் வரிசயில் அமர்ந்து சாரு பேச்சை ஆர்வமாக கேட்டனர்.. புரியாதவற்றை அருகில் இருந்தவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்...
மொத்தத்தில் அருமையான நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்..
Thank you for sharing.
ReplyDelete