Pages

Sunday, March 25, 2012

எழுத்தாளர் விஜய மகேந்திரனுக்கு கொலை மிரட்டல்- துரோகபுத்திரன் அட்டூழியம்

கூட்ங்குளம் பிரச்சினைக்காக ஞானி குரல் கொடுத்து வருவது தெரிந்த் ஒன்றுதான்.. அணு உலை எதிர்ப்பாளர்கள் சென்னையில் கூட்ட்ம் ஒன்று  நடத்தினார்கள்.. அதில் துரோக கவிஞர்  கலந்து கொள்கிறார் என்பதை அறிந்து   நடு நிலையாளர்கள் அதிர்ந்தனர்..

அநீதிக்கு பேர் போன அந்த துரோகி கலந்து கொண்டால்,  ஒட்டு மொத்த போராட்டமும் பாதிக்கப்படுமே என்ற நல்லோரின் அச்சம் பிற்பாடு உண்மையானது..  இந்த இடுகை அதைப் பற்றி அன்று..


அல்ட்டிமேட் ரைட்டர் அந்த துரோகியின் பத்திரிக்க்கை தன் ரத்தம் சிந்தி வளர்த்தார்.. அது வரை கட்சி பத்திரிக்கையாக கருதப்பட்ட அந்த பத்திரிக்கைக்கு , அல்ட்டிமேட் ரைட்டரின் கட்டுரைகள்தான் இலக்கிய இடம் வாங்கி கொடுத்தது.

அப்படிப்பட்ட அவருக்கே பத்து பைசா கூட கொடுக்காமல் ஏமாற்றினார் அவர்..


அதே பாணியில், இளம் எழுத்தாளர் விஜய மகேந்திரனையும் ஏமாற்றியுள்ளார் அவர்..


அத்தோடு விட்டால் பரவாயில்லை... அவர் இயல்பு அது என விட்டு விடலாம்..

ஆனால் இந்த பிரச்சினையப்பற்றி யாரிடமும் பேசக்கூடாது என விஜய் மகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அவர்...

பாவம்.. ஃபேஸ் புக்கில் தன் மன வேதனையை வெளிப்படுத்திய வி ம , சில மணி நேரங்களிலேயே அந்த கமெண்டுகளை நீக்கி விட்டார்..

என்ன ஆயிற்று என வி ம விடம் விசாரித்தபோதுதான் , அந்த துரோகி போன் செய்து மிரட்டியது தெரிய வந்தது...

கருத்துரிமை குறித்து நீட்டி முழங்கும்  துரோக கவிஞர் இப்படி மற்றவர்களை மிரட்டுவது , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..




Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் - எதிர்த்து யார்.. ஆதரித்தது யார்- ரிப்போர்ட்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதுள்ளது... இதை ஆதரித்தவர்கள் யார் ? எதிர்த்தது யார்?

 ஆதரவு நாடுகள்...


பெனின் , காமரூன் , லிபியா , மொரீஷியஸ் ,  நைஜீரியா , இந்தியா !!! , சிலி , கோஸ்டா ரிக்கா , Guatemala, மெக்சிகோ , உருகுவே, ஆஸ்திரியா , பெல்ஜியம் , இத்தாலி, நார்வே, ஸ்பெயின் , ஸ்விஸ் , அமெரிக்கா, செக் குடியரசு , போலந்து , ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா

மொத்தம் - 24


 நடு  நிலை  நாடுகள்



அங்கோலா,  Botswana, Burkina Faso , Djibouti , செனகல், ஜோர்டான் , க்ரிகிஸ்தான் , மலேசியா


மொத்தம் - 8


எதிர்ப்பு நாடுகள்


  காங்கோ ,  Mauritania , உகான்டா  , பங்களாதேஷ் , சீனா , இந்தோனேஷியா , குவைத் , மாலத்தீவுகள், பிலிப்பைன்ஸ் , கட்டார் , சவுதி, தாய்லாந்து, க்யூபா, ஈக்வெடார் , ரஷ்யா !!!!    


மொத்தம் - 15







 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகியா? இஸ்லாமிய நண்பனின் மவுனமும் , எனது அதிர்ச்சியும்


சற்று முன் ஓர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் , பாகிஸ்தான் பங்ளாதேஷ் மோதும் இறுதி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது


பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்கு. போதெல்லாம் பெரும் கரகோஷம் கிளம்பியது.  எதிர் அணி இந்தியா இல்லைஎனற போதும் , ஏன் இந்த ஆர்வம் ?

பாகிஸ்தானை எதிர்ப்பது  தேசத்துக்கு நாம் ஆற்றும் பெரும் தொண்டு என்பது , சிறுவயதிலேயே நம் மனதில் பதிய வைக்கப்பட்டதே இதற்கு காரணம்..

*************************

எனக்கு இந்த அனுபவம் சிறு வயதில் கிடைத்தது... கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் இம்ரான் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆல் ரவுன்டர்கள்... இவர்கள் சம்காலத்வர் என்பதால் , ஒப்பீடு தவிர்க்க இய்லாதது...

மூவரில் சிறந்த்வர் யார் என் சொல்வது கஷ்டம்.. மற்ற இருவரை விட பேட்டிங்க்கில் விஞ்சி நிற்பது ஹாட்லீ என்ற போதும் ,அவர் பவுலிங்க் மற்ற இருவரைவிட சுமார் என்பது என் கருத்து...  கபில் சிறந்த  வீரர் என்றாலும், இம்ரான் கானின் ஆவேசம் ,ஆக்ரோஷம் கபிலுக்கு வராது என்பது என் கருத்து,, என்வே இந்த மூவரில் சிறந்தவர் இம்ரான் கான் என்பது என் தனிப்ப்பட்ட கருத்த். பெரும்பாலான நண்பர்கள் இதை ஏற்கவில்லை..


ஒரே ஒரு  நண்பன் அப்துல் காதர் என்னை ஆதரித்தான்,.

ஒரு நாள் அனைத்து நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.. அப்போது இந்த டாபிக் விவாதத்துக்கு வந்தது. இம்ரான் கானின் பெருமைகளை நான் அடுக்கினேன்..  ஆனால் பெரும்பாலானோர் கபிலை ஆதர்த்தனர்.. என் தரப்பு வலு சேர்க்க யாரும் இல்லை.. அப்துல் காதர் எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர் பார்த்து அவன் முகம் பார்த்தேன். அவன் , விவாத்தையே கவனிக்காதவன் போல் முக பாவம் காட்டிக்கொண்டு இருந்தான்,, அவன் ஏன் இம்ரான் கானுக்கு ஆதரவளிக்க்க வில்லை என்பது அந்த சம்ப்வம் நடந்து சிலஆ ண்டுகள் கழித்துதான் புரிந்தது...

**************************************************************

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் க்ரிக்கெட் போட்டி நடந்தது அல்லவா,, அதை  நண்பர்களுடன் சேர்ந்து தொலை காட்சியில் பார்த்தேன்.. போட்டி முடிந்து அனைவரும் சென்ற பின் நானும் சேகர் என்ற நண்பனும் தனியாக பல விஷ்யங்கள் பேசி கொண்டுஇ ருந்தோம்...   அப்போது அவன் " ரஹீம் உண்மையிலேயே கிரேட் டா " என்றான்..

" ஏன்டா "

" அவன் முஸ்லீமாக இருந்தால் கூட பாகிஸ்தானை ஆதரிக்காமல் , இந்தியாவை ஆதரித்த்து கை தட்டினானே " என்றான்   


எனக்கு அதிர்ச்சியாக இருந்தது... கிரிக்கெட் அணியை ஆதரிப்பதில் மதம் எங்கிருந்து வந்தது ?  முஸ்லீமாக இருந்தால் பாகிஸ்தானை ஆதரிக்க கூடாதா ? இந்திய அணியை ஆதரித்து நாட்டு பற்றை நிரூபிக்க வேண்டுமா ?

 நாட்டு பற்றை அளக்கும் மீட்டர் கிரிக்கெட்டா ?

அபத்தம்...



ஒருவர் பாகிஸ்தான் அணியை ரசித்தால் அது அவர் தனிப்பட்ட விருப்பம்...  எந்த மதத்தவராக இருந்தாலும், இதை வெளிப்படையாக சொல்லும் நிலை வேண்டும். இந்த் சிறிய விஷ்யம் கூட நம் நாட்டில் சாத்தியம் இல்லை என்பது கேவலம்...


 

Monday, March 19, 2012

தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள அருணகிரி நாதர் பாடல் - மறைபொருள் விளக்கம்

சில தமிழ் சொற்கள் மற்றும் பழ மொழிகள் , தவறான அர்த்தத்தில் பயன்பட்டு வருவதை முந்தையை பதிவுகளில் பார்த்தோம் . இனியும் பார்க்க இருக்கிறோம்.  இந்த இடுகையில் , தமிழ் பாடல் ஒன்று தவறான அர்த்தத்தில் பிரபலாமாக உள்ளதே..அதை பார்க்கலாம்..

++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,
….ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே,
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே,
….குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
….வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,
ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்,
….ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நூல்: திருப்புகழ்
பாடியவர்: அருணகிரிநாதர்



இதற்கு நம் மக்கள் கூறும் அர்த்தம்...

  • ஆண் மயிலின்மீது ஏறி விளையாடுகின்ற முகம் ஒன்று,
  • ஞான விஷயங்களைத் தந்தையாகிய சிவபெருமானுடன் சரிசமமாக உரையாடுகின்ற முகம் ஒன்று,
  • என்னைபோன்ற அடியவர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு செய்யும் முகம் ஒன்று,
  • தாரகன் என்ற அரக்கனின் மலையை வீழ்த்திவிட்டு அங்கே வேல் பிடித்து நிற்கும் முகம் ஒன்று,
  • உன்னுடன் மோத வந்த சூரனையும் மற்ற அரக்கர்களையும் வீழ்த்திய முகம் ஒன்று,
  • வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று,
இப்படி ஆறுமுகனாக அருணாசலத்தில் குடிகொண்ட பெருமாளே, உன் அருளை வேண்டி நிற்கிறேன்!

 ***************************************

இது சரியா?

இல்லை...

இந்த விளக்கத்தில் கடைசி வரிக்கு முந்தைய வரிக்கு சரியான விளக்கம் இல்லை...


இதற்கான ஆன்மீக விளக்கம் பின் வருமாறு..

ஆண் மயிலின்மீது ஏறி விளையாடிய போது உனக்கு ஒரு முகம்தான் இருந்தது... அதேபோல் ,ஈசனுடன் ஞான மொழி பேசிய போதும், அடியார்கள் குறை தீர்த்த போதும் , மலையை வீழ்த்திய போதும் , அரக்கனை வென்றபோதும் , வள்ளியை மணம் புரிந்த போதும் , உனக்கு இருந்தது ஒரே ஒரு முகம்தான்..

ஆனால் எனக்கு ஆறு முகத்துடன் காட்சி தருகிறாய்..  ஆறு முகத்துடன் காட்சி தருவதன் தத்துவ விளக்கத்தை கூறுவாயாக..



***************************************


இப்படி தத்துவ விள்க்கம் கோரும் பாடல் தவறான பொருளுடன் பிரபலமாகி இருக்கிறது 

Monday, March 12, 2012

என்னை கவர்ந்த சில ஹைக்கூக்கள்

 நம் ஊரில் , மூன்று வரிகளில் கவிதை எழுதினால் அது ஹைக்கூ என நினைத்து விடுகிறார்கள். இவற்றில் சில ஹைக்கூ இல்லாவிட்டாலும் , நல்ல கவிதையாகவோ நல்ல சிந்தனையாகவோ சில சமயம் அமைந்து விடும்.

ஹைக்கூ என்றால் என்ன , அதன் இலக்கணம் என்ன என்றெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பலர் இதைப் பற்றி எழுதி விட்டார்கள்.. (  ஆனாலும் நம் மக்கள் அவற்றை படிக்காமல் “ ஹைக்கூ “ எழுதி வருகிறார்கள் )

இந்த இடுகையில்  நான் ரசித்த ( நான் எழுதியது அல்ல ) சில ஜப்பானிய ஹைக்கூக்க்ளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எதுவும் பேசாதே


 நேரம் மறைந்து கொண்டே வருகிறது’


அந்த மரக்கூட்டத்தில்

**********************************

தனியனாக நடைப்பயணம்


விண்மீன்களை பிடித்து வைத்து இருக்கிறேன்


என் பற்களுக்கிடையில்

************************************************

உன் இசை கேட்டது
உன் பாடலுக்கு தந்தையோ
தாயோ உண்டா ?

**********************************

உன் கவிதைகள்


காலை நேர


மழை வாசனை


*********************


விவசாயின் உடமைகள் அனைத்திலும்


சேறு படிந்து இருந்தது


அவன் பாட்டும் பாடலைத்தவிர 

*****************************************


உன் விழிகளில்


நாம் சுவாசிக்கிறோம்


நம் கனவுகளை

*********************************************


விழித்தெழு , விழித்தெழு


என் தோழியாக  இரு,,


உறங்கும் வண்ணத்து பூச்சி 
***********************************************

 நதியை 


நடந்து கடக்கிறேன்


வறண்டு இருந்தது


*********************************
 நிலவு பூரணமாக ஒளி வீசுவது


மாதத்தில் ஒரு முறைதான்


அதை விட்டு விடாதே

***************************************

( மேலும் சில அடுத்த பகுதியில் ) 

Sunday, March 11, 2012

பிரபாகரன் மகன் சித்தரவதை செய்யப்பட்டாரா - அதிர வைக்கும் ஆதாரத்தால் இலங்கைக்கு நெருக்கடி

இது இந்த வாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் ஒரு முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் , இலங்கை அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் இன்னொரு வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது
இலங்கை அரசாங்கம் மற்றும்தமிழீழ விடுதலை புலிகளின் உள்நாட்டு யுத்தத்தின் கடைசி மணி நேர கொடூரங்கள் அணி வகுத்து வருகின்றன. 


இந்த ஆதாரத்தில் ஒரு 12 வயது பையன் தரையில் கிடைக்கிறார். அவர் இடுப்பு பகுதி ஆடைகள் பறிக்கப்பட்டன.  அவரது மார்பில்  ஐந்து  புல்லட் ஓட்டைகள் உள்ளன.


அவரது பெயர் பாலசந்திரன் பிரபாகரன்  ஆம அவர்தான்  அவர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன். அவர் அருகில்  ஐந்து ஆண்கள் சடலங்கள் காணப்படுகின்றன  மெய்காப்பாளர்களாக இருக்க கூடும்.அவர்கள் சுடப்படும்  முன்னர் அவர்கள் கண்கள் ,கைகள்  கட்டப்பட்டிருந்தன என்பதை காட்டும் தரையில் துணி பட்டைகள் உள்ளன .






இலங்கை அரசு இந்த ஆதாரத்தை ஏற்க மறுத்து விட்டது.. போரில் இலங்கை சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.. புலிகள் மட்டும் கொல்லப்பட்டதாக சொல்வது தவ்று. போருக்கு பின் ஏற்பட்டுள்ள சாதகமான நிலவரத்தை இது போன்ற செய்திகள் பாதிக்கும் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது இலங்கை..






Friday, March 9, 2012

ராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்

ராகுல் திராவிட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். பெருமைமிகு சகாப்தம் நிறைவு அடைந்து இருக்கிறது. தென் இந்தியர் என்பதால் , அவருக்கு உரிய மரியாதையோ , புகழோ கிடைக்கவில்லை..

ஆனாலும் கூட , அவர் ந்ல்ல பேட்ஸ்மேன் என்பதை மறைக்க நினைத்தாலும் , மறைக்க முடியவில்லை..
ஆனால் அவர் நல்ல கேப்டனும்கூட என்பது பலருக்கு நினைவு இருக்காது. தோனி போன்ற பலரை , அவர் தலைமையின் கீழ்தான் உருவாக்கினார். அவர் கேப்டன்ஷிப் சாதனைகள் சில...


  • அவர் தலைமையில்தான், இந்திய அணி தர வரிசைப்பட்டியலில் , ஏழாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது (  04/16/06)
  • பின் வரிசை ஆட்டக்காரர்களான தோனி , இர்ஃபான் பதான் போன்றோரை டாப் ஆர்டரில் இறக்கி பரிசோதனை செய்தார். அணிக்கும் வெற்றி கிடைத்தது. வீரர்களின் திறமையும் வெளிச்சத்துக்கு வந்தது
  • தொடர்ந்து எட்டு போட்டிகளில் வென்றது முன்பு சாதனையாக இருந்தது. இவரது அணி அந்த சாதனையை சமன் செய்தது
  • தொடர்ந்து  14 போட்டிகளில் வென்று வெஸ்ட் இண்டீஸ் செய்த சாத்னையை இவர் அணி முறியடித்தது
  • ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு சராசரி வெற்றி விகிதம் வைத்துள்ள இந்திய கேப்டன் இவர்தான் .( 62.16% ) 

Wednesday, March 7, 2012

விக்கி லீக்ஸ் விமல் மீது திடுக்கிடும் புகார்

குமாஸ்தா எழுத்தாளர் விக்கி லீக்ஸ் விமல்  பணம் பறிக்கும் பொருட்டே மற்றவர்களை அவதுறாக எழுதுகிறார் என திடுக்கிடும் புகார் கிளம்பி உள்ளது.

முன் ஒரு காலத்தில் சில கதைகளை - சொந்தமாகவோ அல்லது காப்பி அடித்தோ - எழுதியவர் விமல்.. அந்த கதைகளை படிக்க யாரும் முன் வராததால் எழுதுவதை நிறுத்தி கொண்டார் .

முன்பு, வுட்லாண்ட்ஸ் டிரைன் இன் இருந்தபோது தண்ணி அடிப்பதை வாடிக்கையாக் கொண்டு இருந்தார்., தண்ணி அடித்து விட்டு அங்கேயே விழுந்து கிடப்பார் .  நண்பர்கள் காசு கொடுத்து விடுவார்கள்.. ஆனால் அது மூடப் பட்டவுடன் தண்ணி அடிக்க காசு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இதன் காரணமாக மற்றவர்களை மிரட்டி  பணம் பறிக்க எழுத்தை ஆயுதமாக்கி கொண்டார்.

தொடர்ந்து சிலரை அவதூறாக எழுதி மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்.  பணி செய்பவர்களாக இருந்தால், அவர்களை பற்றி தவறாக எழுதி வேலைக்கு உலை வைக்க முயல்வார்.. சிலர் அரண்டு போய் , கேட்கும் பணத்தை கொடுத்து விடுவார்கள்.. ஆனால் பணியில் இல்லாத எழுத்தாளர்கள், இவரை பொருட்படுத்துவதில்லை..

பெயர் சொல்ல விரும்பாத , பாதிக்கப்பட்ட ஒருவர் பேசுகையில், தொடர்ந்து நான் வேலை பார்க்கும் நிறுவனத்தினைப் பற்றி பொய்யும் அவதூறும் எழுதி அதன் மூலம் என்னை சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, முடிந்தால் என் வேலையை விட்டு என்னை தூக்கி, முடியாவிட்டால் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி என்னிடமிருந்து பணம் பறிக்கவிக்கி லீக்ஸ் விமல் முயல்கிறார் என்றார் .


இணையம என்பது தகவல்களை , கருத்துகளை பகிர்ந்து கொள்ள நல்ல ஊடகம். இதில் விமல் போன்றோரின் செயல்பாடு, இணைய சென்சார் போன்றவற்றுக்கு வழி வகுத்து, அரசு தலையீட்டை கொண்டு வர வழி வகுத்து விடும் என்பதே நாடு நிலையாளர்களின் அச்சம் 

Friday, March 2, 2012

அணு உலை, மனுஷ்யபுத்திரன், கலைஞர் -- ஞாநியுடன் எக்ளூசிவ் உரையாடல்

அணு உலை குறித்து , அரசியல் விமர்சகர் ஞாநியுடன் பேசியதில் இருந்து...Gnani Photo

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






அணு உலை போராட்டத்தை நேர்மையாக நீங்கள் அணுகுகிறீர்கள்..மனுஷ்யபுத்திரன் போன்ற துரோகிகளை  உங்கள் அணியில் சேர்ப்பதால் , உங்கள் அணியின் நம்பக்தன்மை குறைகிறதே... நீங்கள் தனி ஆளாக திமுக அரசை எதிர்த்தபோது, அவர் கனிமொழி அட்டைப்படம் போட்டவர்

ஞாநி 


இதில் என் அணி என்றெல்லாம் எதுவும் கிடையாது. அணு உலையை எதிர்க்கும் படைப்பாளிகள் எல்லாரையும் ஒரு சேர குரலெழுப்பச் செய்து அரசு கவனத்தை ஈர்க்கவேண்டுமென்பது நண்பர் அருள் எழிலன், சந்திரா ஆகியோரின் முயற்சி. அவ்வளவுதான்


அணு உலையை நாம் ஏற்காவிட்டால், அதை ஏற்க சீனா தயாராக இருக்கிறது என்கிறார்களே

ஞாநி 
ஏற்றுவிட்டுப் போகட்டும். நமக்கென்ன




மின் உற்பத்திதானே , தொழில் வளர்ச்சிக்கு ஆதாராம்... அணு உற்பத்தி மூலம் இந்தியா வளர்ந்து விடக்கூடாது என சீனா நினைக்கிறதாமே..அதாவது இந்தியாவில் அணு உலை வரக்கூடாது என்பதே சீனாவின் ஆசை என்கிறார்கள்


ஞாநி 
அணு உலைக்கும் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என் தளத்தில் ஏன் இந்த கொலை வெறி என்ற சிறு நூல் ஓ பக்கங்கள் வகையின் கீழ் உள்ளது.அ தைப் படியுகள். எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளது



அணு உலைக்கு கலைஞர் ஆதரவு தருகிறாரே


ஞாநி 


என் புத்தகத்திலேயே அவரைப்பற்றி இருக்கிறதே. படிக்கவில்லையா?



படித்தேன்.. ஆனால் தற்போது ஆணித்தரமாக ஆதரவு தெரிவுத்துள்ளார்.. உலை எதிர்ப்பு ஜெயலலிதாவின் சதி என்பது போல சொல்லி இருப்பது இதுவே முதல் முறை


ஞாநி 


1988-89லேயே அவர்தான் ஆதரித்துவிட்டாரே.. இப்போதைய போராட்டம் தொடங்கியபோது கூட போதிய பாதுகாப்புடன் திறக்கும்படிதான் அறிக்கை விட்டாரு.. இப்ப இதை வெச்சிகிட்டு இடைத்தேர்தல்ல, தன் பாலிடிக்ஸுக்கு ஏதாவது உதவுமான்னு பார்க்கறாரு. முடிஞ்சா இன்னும் பலமா அறிக்கை விடறேன். பதிலுக்கு, கனிமொழி கேசுல நீதிபதியை தூக்கமுடியுமான்னு கூட கேக்க நினைப்பாரு... அவர் அரசியல்ல பொதுநலம் சுத்தமா இல்லாமப் போய் ரொம்ப நாளாச்சு.



தினமலருக்கு என்ன உள்னோக்கம் இருப்பதாக நினைக்கிறீர்கள். உதயகுமார் கும்பல் சதி அம்ப்லம் என்றெல்லாம் , செய்தி வெளியிடுகிறதே


ஞாநி 
தினமலர் பிஜேபிபார்வை உடைய பேப்பர். அணுகுண்டு அணு ஆயுதங்களில் தீவிர நம்பிக்கை உள்ள அரசியல் அவர்களுடையது. அவர்கள் நிச்சயம் அணுசக்தியை அது அணு ஆயுதத்துக்கான முகமூடிதானே) எதிர்ப்பவர்களை அவதூறு செய்யத்தான் செய்வார்கள். தவிர, கிறித்துவ மீனவர்கள் பெருவாரியாக எதிர்ப்பில் ஈடுபடுவதால், தினமலரின் இந்துத்துவ மனதால் தாங்கமுடியாது.