Monday, March 12, 2012

என்னை கவர்ந்த சில ஹைக்கூக்கள்

 நம் ஊரில் , மூன்று வரிகளில் கவிதை எழுதினால் அது ஹைக்கூ என நினைத்து விடுகிறார்கள். இவற்றில் சில ஹைக்கூ இல்லாவிட்டாலும் , நல்ல கவிதையாகவோ நல்ல சிந்தனையாகவோ சில சமயம் அமைந்து விடும்.

ஹைக்கூ என்றால் என்ன , அதன் இலக்கணம் என்ன என்றெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பலர் இதைப் பற்றி எழுதி விட்டார்கள்.. (  ஆனாலும் நம் மக்கள் அவற்றை படிக்காமல் “ ஹைக்கூ “ எழுதி வருகிறார்கள் )

இந்த இடுகையில்  நான் ரசித்த ( நான் எழுதியது அல்ல ) சில ஜப்பானிய ஹைக்கூக்க்ளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எதுவும் பேசாதே


 நேரம் மறைந்து கொண்டே வருகிறது’


அந்த மரக்கூட்டத்தில்

**********************************

தனியனாக நடைப்பயணம்


விண்மீன்களை பிடித்து வைத்து இருக்கிறேன்


என் பற்களுக்கிடையில்

************************************************

உன் இசை கேட்டது
உன் பாடலுக்கு தந்தையோ
தாயோ உண்டா ?

**********************************

உன் கவிதைகள்


காலை நேர


மழை வாசனை


*********************


விவசாயின் உடமைகள் அனைத்திலும்


சேறு படிந்து இருந்தது


அவன் பாட்டும் பாடலைத்தவிர 

*****************************************


உன் விழிகளில்


நாம் சுவாசிக்கிறோம்


நம் கனவுகளை

*********************************************


விழித்தெழு , விழித்தெழு


என் தோழியாக  இரு,,


உறங்கும் வண்ணத்து பூச்சி 
***********************************************

 நதியை 


நடந்து கடக்கிறேன்


வறண்டு இருந்தது


*********************************
 நிலவு பூரணமாக ஒளி வீசுவது


மாதத்தில் ஒரு முறைதான்


அதை விட்டு விடாதே

***************************************

( மேலும் சில அடுத்த பகுதியில் ) 

2 comments:

  1. This is the first ever nice post I have seen in your blog. Please do blog the same and stop hail Charu in your blog. There is enough space to do such things (Charu Vasagar Vattam)

    Yes, you have rights to write anything in your blog. But as a common man (keep in mind "Nadunilai vaasagargal") I am expecting lot from you.

    Hope you understand. Also, Please publish this comment.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா