சில தமிழ் சொற்கள் மற்றும் பழ மொழிகள் , தவறான அர்த்தத்தில் பயன்பட்டு வருவதை முந்தையை பதிவுகளில் பார்த்தோம் . இனியும் பார்க்க இருக்கிறோம். இந்த இடுகையில் , தமிழ் பாடல் ஒன்று தவறான அர்த்தத்தில் பிரபலாமாக உள்ளதே..அதை பார்க்கலாம்..
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதற்கு நம் மக்கள் கூறும் அர்த்தம்...
***************************************
இது சரியா?
இல்லை...
இந்த விளக்கத்தில் கடைசி வரிக்கு முந்தைய வரிக்கு சரியான விளக்கம் இல்லை...
இதற்கான ஆன்மீக விளக்கம் பின் வருமாறு..
***************************************
இப்படி தத்துவ விள்க்கம் கோரும் பாடல் தவறான பொருளுடன் பிரபலமாகி இருக்கிறது
++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,
….ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே,
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே,
….குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே,
….வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே,
ஆறு முகம் ஆன பொருள் நீ, அருளல் வேண்டும்,
….ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
நூல்: திருப்புகழ்
பாடியவர்: அருணகிரிநாதர்
இதற்கு நம் மக்கள் கூறும் அர்த்தம்...
- ஆண் மயிலின்மீது ஏறி விளையாடுகின்ற முகம் ஒன்று,
- ஞான விஷயங்களைத் தந்தையாகிய சிவபெருமானுடன் சரிசமமாக உரையாடுகின்ற முகம் ஒன்று,
- என்னைபோன்ற அடியவர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு செய்யும் முகம் ஒன்று,
- தாரகன் என்ற அரக்கனின் மலையை வீழ்த்திவிட்டு அங்கே வேல் பிடித்து நிற்கும் முகம் ஒன்று,
- உன்னுடன் மோத வந்த சூரனையும் மற்ற அரக்கர்களையும் வீழ்த்திய முகம் ஒன்று,
- வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று,
இப்படி ஆறுமுகனாக அருணாசலத்தில் குடிகொண்ட பெருமாளே, உன் அருளை வேண்டி நிற்கிறேன்!
***************************************
இது சரியா?
இல்லை...
இந்த விளக்கத்தில் கடைசி வரிக்கு முந்தைய வரிக்கு சரியான விளக்கம் இல்லை...
இதற்கான ஆன்மீக விளக்கம் பின் வருமாறு..
ஆண் மயிலின்மீது ஏறி விளையாடிய போது உனக்கு ஒரு முகம்தான் இருந்தது... அதேபோல் ,ஈசனுடன் ஞான மொழி பேசிய போதும், அடியார்கள் குறை தீர்த்த போதும் , மலையை வீழ்த்திய போதும் , அரக்கனை வென்றபோதும் , வள்ளியை மணம் புரிந்த போதும் , உனக்கு இருந்தது ஒரே ஒரு முகம்தான்..
ஆனால் எனக்கு ஆறு முகத்துடன் காட்சி தருகிறாய்.. ஆறு முகத்துடன் காட்சி தருவதன் தத்துவ விளக்கத்தை கூறுவாயாக..
***************************************
இப்படி தத்துவ விள்க்கம் கோரும் பாடல் தவறான பொருளுடன் பிரபலமாகி இருக்கிறது
Ada! Ippadithaan irunthirukkanum!
ReplyDeleteyenna sir.... vimal pannina kuttram... pichaikaran pannina correctaa...
ReplyDeleteNeenga inga seithathai thaan vimal seithaar...
Thala valium pal valium thanakku vanthaa thaan avasthai purium.
Anyways good post
எனக்கு வெளிப்பட்டதையும் எழுதியுள்ளேன் ! ஆய்வில் கொள்ளவும் !
ReplyDeletehttp://www.godsprophetcenter.com/rich_text_65.html