Thursday, March 22, 2012

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகியா? இஸ்லாமிய நண்பனின் மவுனமும் , எனது அதிர்ச்சியும்


சற்று முன் ஓர் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தேன் , பாகிஸ்தான் பங்ளாதேஷ் மோதும் இறுதி ஆட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது


பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்கு. போதெல்லாம் பெரும் கரகோஷம் கிளம்பியது.  எதிர் அணி இந்தியா இல்லைஎனற போதும் , ஏன் இந்த ஆர்வம் ?

பாகிஸ்தானை எதிர்ப்பது  தேசத்துக்கு நாம் ஆற்றும் பெரும் தொண்டு என்பது , சிறுவயதிலேயே நம் மனதில் பதிய வைக்கப்பட்டதே இதற்கு காரணம்..

*************************

எனக்கு இந்த அனுபவம் சிறு வயதில் கிடைத்தது... கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லீ மற்றும் இம்ரான் ஆகியோர் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆல் ரவுன்டர்கள்... இவர்கள் சம்காலத்வர் என்பதால் , ஒப்பீடு தவிர்க்க இய்லாதது...

மூவரில் சிறந்த்வர் யார் என் சொல்வது கஷ்டம்.. மற்ற இருவரை விட பேட்டிங்க்கில் விஞ்சி நிற்பது ஹாட்லீ என்ற போதும் ,அவர் பவுலிங்க் மற்ற இருவரைவிட சுமார் என்பது என் கருத்து...  கபில் சிறந்த  வீரர் என்றாலும், இம்ரான் கானின் ஆவேசம் ,ஆக்ரோஷம் கபிலுக்கு வராது என்பது என் கருத்து,, என்வே இந்த மூவரில் சிறந்தவர் இம்ரான் கான் என்பது என் தனிப்ப்பட்ட கருத்த். பெரும்பாலான நண்பர்கள் இதை ஏற்கவில்லை..


ஒரே ஒரு  நண்பன் அப்துல் காதர் என்னை ஆதரித்தான்,.

ஒரு நாள் அனைத்து நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.. அப்போது இந்த டாபிக் விவாதத்துக்கு வந்தது. இம்ரான் கானின் பெருமைகளை நான் அடுக்கினேன்..  ஆனால் பெரும்பாலானோர் கபிலை ஆதர்த்தனர்.. என் தரப்பு வலு சேர்க்க யாரும் இல்லை.. அப்துல் காதர் எனக்கு ஆதரவாக பேசுவான் என எதிர் பார்த்து அவன் முகம் பார்த்தேன். அவன் , விவாத்தையே கவனிக்காதவன் போல் முக பாவம் காட்டிக்கொண்டு இருந்தான்,, அவன் ஏன் இம்ரான் கானுக்கு ஆதரவளிக்க்க வில்லை என்பது அந்த சம்ப்வம் நடந்து சிலஆ ண்டுகள் கழித்துதான் புரிந்தது...

**************************************************************

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் க்ரிக்கெட் போட்டி நடந்தது அல்லவா,, அதை  நண்பர்களுடன் சேர்ந்து தொலை காட்சியில் பார்த்தேன்.. போட்டி முடிந்து அனைவரும் சென்ற பின் நானும் சேகர் என்ற நண்பனும் தனியாக பல விஷ்யங்கள் பேசி கொண்டுஇ ருந்தோம்...   அப்போது அவன் " ரஹீம் உண்மையிலேயே கிரேட் டா " என்றான்..

" ஏன்டா "

" அவன் முஸ்லீமாக இருந்தால் கூட பாகிஸ்தானை ஆதரிக்காமல் , இந்தியாவை ஆதரித்த்து கை தட்டினானே " என்றான்   


எனக்கு அதிர்ச்சியாக இருந்தது... கிரிக்கெட் அணியை ஆதரிப்பதில் மதம் எங்கிருந்து வந்தது ?  முஸ்லீமாக இருந்தால் பாகிஸ்தானை ஆதரிக்க கூடாதா ? இந்திய அணியை ஆதரித்து நாட்டு பற்றை நிரூபிக்க வேண்டுமா ?

 நாட்டு பற்றை அளக்கும் மீட்டர் கிரிக்கெட்டா ?

அபத்தம்...



ஒருவர் பாகிஸ்தான் அணியை ரசித்தால் அது அவர் தனிப்பட்ட விருப்பம்...  எந்த மதத்தவராக இருந்தாலும், இதை வெளிப்படையாக சொல்லும் நிலை வேண்டும். இந்த் சிறிய விஷ்யம் கூட நம் நாட்டில் சாத்தியம் இல்லை என்பது கேவலம்...


 

7 comments:

  1. எல்லா நிகழ்வுகளையும் எடை போட்டே வாழ்க்கையை கழிக்கும் தலைமுறையாகி விட்டது வருத்தமே.

    நஞ்சை நம் மக்கள் மனதில் கலந்த அந்த மகானுபாவர்கள் எந்த கதி போவார்களோ?

    ReplyDelete
  2. பங்காளிச் சண்டை?! விளையாட்டிலுமா?!

    ReplyDelete
  3. பத்து ஆண்டுகளுக்கு முன் நான் நாக்பூரில் தங்கி இருந்தபோது தெருவில் திடீரென்று பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டது. என்னவென்று விசாரித்தபோது ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் நடந்த கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா தோற்றதற்காக அந்தப் பகுதி முஸ்லிம் ஒரு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாக சொன்னார்கள்.

    ReplyDelete
  4. //ஒருவர் பாகிஸ்தான் அணியை ரசித்தால் அது அவர் தனிப்பட்ட விருப்பம்... எந்த மதத்தவராக இருந்தாலும், இதை வெளிப்படையாக சொல்லும் நிலை வேண்டும். இந்த் சிறிய விஷ்யம் கூட நம் நாட்டில் சாத்தியம் இல்லை என்பது கேவலம்.//

    தலைவா! யார் சொன்னா நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தான் அணிக்குத்தான் ஆதரவு தருகிறேன்! எண்ணி பொருத்தவரை நீங்கள் சொன்னது போல, மதத்துக்கும் ஏன், நான் பேசும் மொழிக்கும் கிரிக்கெட்டில் ஆதரிக்கும் அணிக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைப்பவன்

    ReplyDelete
  5. யார் சொன்னா நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தான் அணிக்குத்தான் ஆதரவு தருகிறேன்"

    வாவ்.. என்னை போல ஒருவன் - சாரி ஒருவர்...

    எனக்கும் பாகிஸ்தான் அணியை பிடிக்கும்.. படு தோல்வியில் இருந்து மீண்டு வரும் அந்த அணியின் மனோ திடத்தை மிகவும் ரசிப்பேன்

    ReplyDelete
  6. இந்தியாவுக்கும் நடந்த கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா தோற்றதற்காக அந்தப் பகுதி முஸ்லிம் ஒரு சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாக சொன்னார்கள்.”

    இப்படி மத ரீதியாக அடையாள்ப்படுதுவது ஏன்? சமீப ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணி , ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை நான் ரசித்தேன்.. ஒரு ஹிந்து பதிவர் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை ரசித்தார் என்றா சொல்வது ? இது தவறில்லையா

    ReplyDelete
  7. கிரிக்கெட் விளையாட்டிற்கு சூதாட்டம் மூலமாக அதிக அளவில் களங்கம் ஏற்படுத்தியது பாகிஸ்தான் வீரர்களே. ஷார்ஜா ஒரு காலத்தில் சூதாட்ட தரகர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. மேலும் பாகிஸ்தானியர்கள் நேர்மையாக ஆட்டத்தை அணுகுபவர்கள் அல்லர். பந்தை சேத படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் துக்கிரி தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே. போப் வூல்மர் தற்கொலை செய்தாரா? அல்லது கொல்லப்பட்டரா என்று இன்று வரை வெளிவரவில்லை. பாகிஸ்தானை விட சிறந்த அணிகள் கிரிக்கெட் அரங்கில் உள்ளன என்பதை கிரிக்கெட் நுண்ணுணர்வு உள்ள எந்த ரசிகனும் புரிந்து கொள்வான். ஆஸ்திரேலியா அணி கடந்த காலங்களில் சாதித்ததை விடவா பாகிஸ்தான் சாதித்து விட்டது? இக்கட்டான நிலைமையில் எப்படி ஆட வேண்டும் என்பதை மைகேல் பெவன் பலமுறை உலகிற்கு பறை சாற்றி உள்ளார். இப்படி இருக்க, பாகிஸ்தான் அணியை தூக்கி பிடிப்பது எவ்வளவு பெரிய அபத்தம்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா