போரும் அமைதியும் , One Hundred Years of Solitude போன்ற சில புத்தகங்கள் படிப்பதற்காக எடுத்தேன்.. ஆனால் அவற்றை ஆரம்பிக்கு முன் , பொழுது போக்கு புத்தகம் ஒன்றை படித்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள படித்ததுதான் ஜான் கிரிஷாமின் Theodore Boone :half the man, twice the lawyer எனும் நாவல்..
பொழுது போக்கு நாவல்களுக்கு நான் எதிரி அல்ல. பொழுது போக்கு நாவல் என்ற பிரிவில் அந்த நாவல் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
பல தமிழ் நாவல்கள் என்னை ஏமாற்றி உள்ளன. எனவேதான் சற்று ஆங்கிலம் பக்கம் திரும்பினேன்..
இது போன்ற நாவல்களில் நாம் இலக்கியத்தையோ, சிந்தனை தூண்டலையோ எதிர்பார்ப்பதில்லை.. வாசிக்க சுவையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்...
இந்த எதிர்பார்ப்பை நாவல் நிறைவேற்றியதா?
அவரது முந்தைய நாவல்களுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இது ஒரு பதிமூன்று வயது சிறுவனை கதா நாயகனாகக் கொண்ட நாவல் என்பது முக்கிய வித்தியாசம், ஹாரி பாட்டர் பாணியில் நான் எழுதக்கூடாதா என ஜான் கிரிஷாம் நகைச்சுவையாக இதைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்காக அப் நார்மலாகவோ, சூப்பர் மேன் போலவோ அவன் எதுவும் செயவதில்லை. லாஜிக்கிற்கு உட்பட்டுதான் செயல்படுகிறான்.
அவரின் மற்ற நாவல்களை போல , இதுவும் கோர்ட் , வழக்கு என்றுதான் நாவல் செல்கிறது. சொற்சிக்கனம் , நகைச்சுவை , கோர்ட் நடவடிக்கைகளை கண் முன் நிறுத்துதல் என பரபரவென நாவல் செல்கிறது..
நம் கதா நாயகன் பள்ளி மாணவன். கோர்ட் நடவடிக்கைகளில் பெரிய ஈடுபாடு கொண்டவன். அந்த வயதில்யே தன்னை வழக்கறிஞராக நினைத்து கொண்டு பலருக்கு சட்ட ஆலோசனைகள் சொல்பவன். அவன் தோழியின் பெயர் ஏப்ரல்.
ஒரு கொலை வழக்கை வேடிக்கை பார்க்க செல்லும் அவன் , அந்த வழக்கின் போக்கையே மாற்றக்க்கூடிய நிலை ஏற்படுவதே கதை..
கதையை விட , ஜான் கிரிஷாமின் எழுத்துதான் அதிகம் ஈர்க்கிறது.
மனைவியை கொன்று விட்டதாக குற்றவாளி கூண்டில் நிற்பவனை , குற்றவாளி என நிரூபிக்கவும் காப்பாற்றவும் நடக்கும் வாதங்கள் அருமை. மனைவி இறந்தால் இன்ஸுரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதால்தான் கொலை நடந்தது என்ற வாதததை , எதிர் தரப்பு வழக்கறிஞர் கையாளும் ம் முறை அட என சொல்ல வைக்கிறது..
அவரது வாதம், பேச்சு , பாடி லாங்குவேஜ் என செமையாக கொண்டு செல்கிறார் ஜான் கிரிஷாம்..
அதே போல , 13 வயது கதானாயகன் விஷ்ய ஞானத்துடன் பேசுவதும், அதே நேரத்தில் சிறுவர்களுக்கு உரிய இயல்புடன் சித்திரிக்கப்பட்டு இருப்பதும் நல்ல பாத்திரப் படைப்பு.
நிரபராதியை மாட்டி விடும் உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்கப்போகிறார்களா அல்லது உண்மையான குற்றவாளி தப்பிக்க முயல்கிறானா என்ற சஸ்பென்ஸ்தான் நாவலின் முற்பாதி. அதன் பின் ஹீரோ எடுக்கும் நடவடிக்கைகள் இரண்டாம் பாதி.
பெரிய மைனஸ் என்றால், முக்கால் பங்கு நாவல் முடிந்தவுடன், முடிவு தெரிந்து விடுகிறது. அதன் பின் நாவலின் வேகத்தில் தொய்வு ஏற்பட்டு விடுகிறது.ஆனாலும் அவர் எழுத்தாற்றல் முழுதும் படிக்க வைத்து விடுகிறது..
ஏப்ரலின் அண்ணன் மற்றும் அக்காவின் பெயர்கள் , அதே சமயம் வயதை மீறாத லைட்டான ரொமான்ஸ் , நண்பர்களுக்கு அளிக்கும் சட்ட ஆலோசனை, வழக்கை பார்வையிட சக மாணவர்களுக்கு அனுமதி கேட்டு நீதிபதியுடன் பேசுதல், கோர்ட் நடவடிக்கைகளை வகுப்பில் விவரித்தல், மிருகங்கள் கோர்ட் , வழக்கின் முக்கிய சாட்சி முகம் காட்ட முடியாது என்ற ட்விஸ்ட் என ரசிப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன..
263 பக்கங்களில் நல்ல எண்டர்டைனர்..
வெர்டிக்ட்
Theodore Boone :half the man, twice the lawyer - half suspense: full entertainment
John Grisham enakkum pidikkum (except the bleachers). Vasikka muyaRchi seikiren!
ReplyDeleteSurprised to know u can read English! Yet you stoop so low to perform paadha pooja - something wrong with you, consult a psychiatrist!!
ReplyDeleteohn Grisham enakkum pidikkum (except the bleachers)"
ReplyDeleteI like the novel " the Broker" most