புத்தாண்டு விடுமுறை என சந்தோஷமாக இருந்தேன். காலையில் சீக்கிரம் எழ தேவையில்லை, ஏதாவது படிக்கலாம் என நினைத்து கொண்டு இருந்த போது , நண்பர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் .. “ புத்தாண்டு சித்திரையா ? ”தை” யா ? உன் நிலைப்பாடு என்ன ? “
கொஞ்ச நேரத்தில் இன்னொரு கால், வெளி மானிலத்தில் பணி புரியும் நண்பர் வேறொரு விஷ்யமாக பேசினான்.. பேச்சு முடிவடையும் நிலையில், சும்மா இருக்காமல், புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லி தொலைத்து விட்டேன். உனக்கு தமிழ் வரலாறு தெரியவில்லை என ஆரம்பித்து கொத்து பரோட்டா போட்டு விட்டான்..
காலம் என்பது எல்லை அற்றது. ஒரு வசதிக்காக நாட்களாக , ஆண்டுகளாக பிரித்து வைத்து இருக்கிறோம்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு காலண்டர் வைத்து புத்தாண்டி கொண்டாடி வந்தனர்., ஆனால் உலக நாடுகளுடையே தொடர்பு அதிகரித்த நிலையில், பொதுவான கால வரையரை தேவைப்பட்டது.
எனவெ இப்போது கிட்டத்தட்ட பொதுவான காலண்டர் உருவாகி இப்போது 2012ல் இருப்பதை அனைவரும் ஒத்துகொண்டு விட்டோம்..
ஆனாலும் பழமையை விட்டு விடக்கூடாது என்பதும் உண்மையே..
முன்பு அனைவருமே ஏப்ரலில்தான் புத்தாண்டு கொண்டாடினார்களாம்.. அப்புறம் ஜனவரிக்கு புத்தாண்டு மாற்றப்பட்டாலும், சிலர் ஏப்ரலிலேயே கொண்டாடவே , அவர்கள் ஏப்ரல் ஃபூல் என அழைக்கப்பட்டார்களாம்..
அனைத்துமே மாறக்கூடியது.. இன்று நாம் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினாலும் , தை மாதத்தில் கொண்டாடினாலும் , இன்னும் 500 வருடங்கள் கழித்து இவைவும் மாறி விடும் என்பதே யதார்த்தம்..
சில வருடங்கள் முன்பு தமிழர்கள் ஒன்று கூடி , இனி தை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவோம் என முடிவு எடுத்தார்களாம்.
நல்லதுதான்..
ஆனால் அதை அண்ணா , காமராஜ் போன்றவர்கள் இதை நிறைவேற்றி இருந்தால் , ஏதோ நல்லது நடக்கிறது என எடுத்து கொள்ளலாம். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளுக்கு , இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் தகுதி இருக்கிறதா எனப்து சரியாக தெரியவில்லை..
தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடினால், பொங்கல் தினத்திற்கு இருக்கும் பெருமையும் போய் விடும், சித்திரைக்கு இருக்கும் பெருமையும் போய் விடும் என்ற கவலையும் இருக்கிறது..
ஆனால் யதார்த்தமாக யோசித்தால் , எதிலும் வெளி நாட்டை காப்பி அடிக்கும் நாம், ஜனவரியுடன் இணைந்து வரும் வகையில், தமிழ் ஆண்டு துவக்கத்தை மாற்றி கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் தோன்றுகிறது..
ஆனால் இப்போதைக்கு , சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுபவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தை மாதம் கொண்டாடுபவர்க்ளுக்கு, அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்
// முன்பு அனைவருமே ஏப்ரலில்தான் புத்தாண்டு கொண்டாடினார்களாம்.. அப்புறம் ஜனவரிக்கு புத்தாண்டு மாற்றப்பட்டாலும், சிலர் ஏப்ரலிலேயே கொண்டாடவே , அவர்கள் ஏப்ரல் ஃபூல் என அழைக்கப்பட்டார்களாம்.. //
ReplyDeleteபோங்க சார்... எப்ப பாரு காமெடி பண்ணிக்கிட்டு...
தமிழ்ப்புத்தாண்டு எப்போது என்பது ஒருபுறம். தீபாவளி, ஆங்கில புத்தாண்டுக்கு தரும் முக்கியத்துவத்தை இந்நாளுக்கு தந்து யாரும் பெரிதாக கொண்டாடுவ தாக தெரிவதில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டையும் அரைவேக்காடாக கற்றுக்கொண்டு நம்மில் பலர் அலைவது காலக்கொடுமை.
ReplyDeleteஎதுக்கும் ஆசான் சாருவை கலந்து பேசி.. ஒரு முடிவை சொல்லுங்க பாஸு.....
ReplyDeleteதமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.
ReplyDeleteஎல்லா ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன .
ஆகவே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன். உங்களை யார் தடுக்கப்போகிறார்கள்?
தமிழ் புத்தாண்டு என்று தயவு செய்து சொல்லாதீர்கள் .அது தை முதல் நாளாகவே இருந்துவிட்டு போகட்டும்.