புத்தக கண்காட்சிக்கு போனால் , நமக்கு பிடித்த புத்தகத்தை செலக்ட் செய்து காசு கொடுத்தால் வாங்கி விடலாம். அல்லது நெட் இருக்கிறது. ஜஸ்ட் ஒரு க்ளிக் செய்தால் தேவையான புத்தகம் வீடு தேடி வந்து விடும்.
இவ்வளவு எளிதாக புத்தகங்கள் வாங்கி நம் அறிவு பசியை தீர்க்க , அல்லது இனிமையாக பொழுது போக வாய்ப்புகள் பல இருக்கின்றன. இந்த வாய்ப்பு முந்தைய தலை முறைக்கு இல்லை.
ஆனால் நாம் புத்தகங்களை தேர்ந்தெடுப்பதை விட , புத்தகங்கள்தான் நம்மை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது வரும். சில புத்தகங்களை படிக்கவே நினைத்து இருக்க மாட்டோம். தற்செயலாக படித்து பிரமித்து போவோம். இது ஒரு வகை.
சில புத்தகங்களை நீண்ட நாட்களாக படிக்க நினைத்து இருப்போம். ஆனால் புத்தகம் கிடைக்காமல் போய் இருக்கும். அல்லது நேரம் கிடைக்காமல் போய் இருக்கும். தகுந்த சூழ் நிலை அமைந்து படிக்கும்போது, அடடா.இத்தனை காலம் படிக்காமல் போய் விட்டொமே என வருத்தமாக இருக்கும்.. இப்போதாவது படித்தோமே என மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இந்த புத்தகத்தை இப்போது இவன் படித்தால் நன்றாக இருக்கும் என வேறு யாரோ முடிவு செய்வது போல சில சமயம் தோன்றும்.
அப்படி சமீபத்தில் மகிழ்ச்சி அடைய வைத்த புத்தகம் “ The book of Mirdad "
ஆனால் ஒரு விதத்தில் வருத்தம் அடையவும் வைத்து விட்டது. இந்த புத்தகத்தை எனக்கு ரெகமண்ட் செய்தவருடன் , என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இயலாது. காரணம் அவர் இன்று இந்த உலகில் இல்லை...
இந்த புத்தகத்தை அவ்வளவு உயர்வாக அவர் பேசினார். ரசித்து பாராட்டினார். படித்தே ஆக வேண்டும் என்றார். ஏனோ என்னால் அதை படிக்க முடியவில்லை.. நேரம் இன்மை காரணமல்ல.. இந்த கால கட்டத்தில் எத்தனையோ குப்பை படங்கள் பார்த்து இருக்கிறேன். பல்ப் ஃபிக்ஷன்கள் படித்து இருக்கிறேன்.. ( அவர் ரெகமண்ட் செய்து சில வருடங்கள் இருக்கும் )
சென்ற தற்செயலாக படித்த நான் பிரமித்து போனேன். அதே நேரத்தில் அந்த நண்பர் நினைவும் வந்தது. அவருடன் இதைப்பற்றி பேச முடியாதே என்ற ஏக்கம்..
ஆனால் இதற்கான ஆறுதலையும் இந்த புத்தகமே அளித்தது .
இது நான் படித்த புத்தகங்களின் சாராம்சமாக இருந்தது என்றும் சொல்லலாம்.
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.ஆனால் இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ’மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது... நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்லர், எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர்.நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன், எதுவுமே இதற்கு ஈடாகாது என்கிறார் ஓஷோ.
கலீல் கிப்ரானின் உயிர் தோழனாக விளங்கிய, மிகைல் நைமி எழுதிய நூல்தான் 'மிர்தாதின் புத்தகம்’
இது இரண்டு பாகங்களாக உள்ளது. புனைவு போன்ற சாயலுடன், ஒருவன் மேற்கொள்ளும் தேடலுடன் கூடிய பயணம் முதல் பாகம் இது அறிமுகம் போன்றது , அடுத்து வருவதுதான் மெயின் இரண்டாம் பாகத்தில் ஞான புதையல். ஆனால் நேரடியாக இரண்டாம் பாகத்துக்கு வந்து விட்டால் , முக்கியமான சிலவற்றை இழக்க வேண்டி இருக்கும். இது வெறும் கதை அன்று. ஒவ்வொரு பக்கமும் குறியீடுகளால் ஆனது. எனவே ஒரு வர்யையும் விட்டு விடாமல் படித்தால்தான் முழு பயன் கிட்டும்.
ஒன்பது பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய மலை உச்சியில் ஒரு மடலாயம். ஒன்பதில் ஒருவர் இறந்து விட்டால் , கடவுள் புதிதாக ஒருவரை அனுப்பி வைப்பார் என்பது கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரகஷன். அந்த ஒன்பதில் ஒருவர் இறக்க , புதிதாக ஒருவன் மடத்துக்கு வருகிறான். ஆனால் அவனை தலைவர் ஏற்கவில்லை. கடைச்யில் வேலையாளாக சேர்கிறான். இதன் தொடர் நிகழ்சிகளால் அந்த தலைவர் சபிக்கப்பட்டு அங்கேயே சுற்றி வருவதாக தெரிந்த ஒருவன், அந்த பாழடைந்த மண்டபத்தை தேடி மலை உச்சியை நோக்கி பயணம் செல்கிறான். பல சோதனைக்கு பிறகு மலை உச்சியை அடைகிறான், அந்த துறவி இவனுக்காகவே காத்து இருக்கிறார். மிர்தாதின் புத்தகத்தை கொடுத்து விட்டு மறைகிறார்.
அடுத்து வருவது மிர்தாதின் புத்தகம் என்ற ஞான களஞ்சியம். ஆர்வ கோளாறின் விளைவாக இந்த இரண்டாம் பாகத்துக்கு நேரடியாக வருவது தவ்று.
அந்த மலை உச்சி பயணமே அபாரமான குறியீடுதான் . அதை இழந்து விடக்கூடாது.
அந்த பயணதின் போது கிடைக்கும் அனுபவங்களும் உரையாடல்களும் முக்கியமானவை.
“ நம்பிக்கை மீது எப்போதும் நம்பிக்கை இழக்காதே “
“ நான் முட்டாளா? “
“ ஏழு பிறவி நீள பயணத்துக்கு , ஏழு ரொட்டி துண்டுகளை கொண்டு வந்தவனல்லவா நீ “
“ ஏன் , 7000 கொண்டு வந்து இருக்க வேண்டுமா ? “
“ ஒன்று கூட கொண்டு வந்து இருக்க கூடாது “
” ஊன்றுகோல் இல்லாதவர்கள் மகிழ்சி கொண்டவர்கள். அவர்கள் தடுமாறுவதில்லை. வீடற்றவர்கள் மகிழ்ச்சி கொண்டவர்கள். அவர்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள் “:
” வாழ்வதற்காக செத்து போ, சாவதற்காக வாழ்”
இப்படியெல்லாம் அபாரமாக அறிமுகப்பகுதி இருப்பதால் , அடுத்த பகுதியில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.. எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் இருக்கும் என்பது இயல்பு. ஆனால் மெயின் பார்ட் நம்மை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. பாதை அற்ற ஓர் உலகத்துக்கு சென்று விடுகிறோம்.
முக்கியமான வாழ்வியல் விஷ்யங்களை எளிய சுருக்கமாக சொல்கிறார் மிர்தாத். அளவுக்கு அதிக்மாக ஒரு வார்த்தை கூட இல்லை. முழு பிரசங்கம் போல இல்லாமல் , ஒரு நடையை அமைத்து கொண்டது சிறப்பு.
” நியாயத்தீர்ப்பு நாள் என்ன ஆயிற்று ?
“ ஒவ்வொரு நாளும் நியாய தீர்ப்பு நாள்தான்.ஒவ்வொரு கண் சிமிட்டலிலும் , எல்லா உயிர்களும் கணக்கிடப்படுகின்றன “
“ஒரே ஒரு ஆளை நீங்கள் பகையாக நினைக்கும் வரை உங்களுக்கு நண்பர்களே இல்லை “
“ அன்புக்கு பரிசுகள் தேவை இல்லை. அன்பே அன்பின் பரிசு ”
பிரார்த்தனை குறித்து
“ நீங்கள் சொல்லியா கடவுள் சூரியனை உதிக்கவும் , மறைக்கவும் செய்கிறார்? “
வழிபாடு செய்ய ஆலயங்கள் தேவை இல்லை..உங்கள் இதயத்தில் ஆலயத்தை காண முடியவில்லை என்றால், எந்த ஆலயத்திலும் உங்கள் இதயத்தை காண முடியாது “:
:உன் தந்தை இறக்கவில்லை.உருவம் கூட இறக்கவில்லை.மாறி விட்ட அவர் உருவம் குறித்த உன் உணர்வுகள்தான் இறந்தவை”
இப்படி படித்த பின்பும் மனதில் ரீங்காரமிடும் வார்த்தைகள் ஏராளம்.
புத்தக வடிவமைப்பு அருமை.. கண்ணதாசன் பதிப்பகம்.
மொழி பெயர்ப்பு புவியரசு..
வெர்டிக்ட் - மிர்தாதின் புத்தகம் - மிஸ் செய்ய கூடாத புத்தகம்

நான் கூட ஒருமுறை அந்தப் புத்தகத்தின் தமிழ் பதிப்பை வாசித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.
ReplyDeletehttp://govikannan.blogspot.com/2008/11/blog-post_10.html
Thank you boss
ReplyDeletehello boss... just now i came across ur blog.its very interesting... in particular writings about zorba and mirdad made me feel close to u even though i don't know anything about u.. u have a keen knowledge towards things.only very few has read mirdad and very few has understood it completely.i guess u r one of them.Am happy to read u.thank u boss.two years before i wrote about mirdad in my friend's blog.. if u have time kindly go thru it....
ReplyDeletehttp://denimmohan.blogspot.in/2010/10/book-of-mirdad.html
Excellent article ji..
ReplyDeletethanks
DeleteNice article.
ReplyDeletethanks
DeleteSir yapd download panrathu soluga pls
ReplyDelete