தமிழக வரலாற்றில் முக்கியமான தலைவர் அண்ணா அவர்கள். அவரைப்போன்ற ஒருவர் இனி வரப்போவது இல்லை. ஆனால் அவர் ஒரு கட்சிக்காரர் என்ற அளவில்தான் அவர் நினைவுகூரப்படுகிறாரே தவிர , அவரது அருங்குணங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன.
கட்சியில் தனக்கு கீழ் இருப்பவர்களை வளர வைத்து அழகு பார்த்த பெருந்தன்மை யாருக்கும் வரவே வராது. எத்தனை எத்தனை தலைவர்களை அவர் உருவாக்கினார் !! ரியல்லி கிரேட்.
அரசியல் தவிர்த்து விட்டு பார்த்தாலும் , அவர் பண்பில் சிறந்து விளங்கியவர். காங்கிரஸ்காரரான சின்ன அண்ணாமலை தன் புத்தகம் ஒன்றில், அண்ணாவை ஒரு முறை பார்த்து பேசியதும் , அண்ணா மீதான மரியாதை வெகுவாக உயர்ந்ததை சொல்லி இருப்பார்.
துக்ளக் இதழில் கவிஞர் வாலி கட்டுரை தொடர் ஒன்று எழுதி வருகிறார். அதில் அண்ணாவை பற்றி இரு சம்பவங்களை குறிப்பிட்டு இருக்கிறார். சுருக்கமாக தருகிறேன். படித்து பாருங்கள்..
**************************************************
அண்ணா என்னும் பெருமகனார் - வாலி
ஒரு முறை தலை மொட்டை அடித்து இருந்தேன். “ இது என்ன மொட்டை “ என வினவினார் அண்ணா.
“ திருப்பதி “ என்றேன்.
“ திருப்பதி போய்ட்டு வந்து ச்மாராதனையை முடிச்சாச்சா ? “ என்றார் அண்ணா
“ சமராதானையா ? :” கேட்டேன் நான்.
“ ஆமாம்யா. இது எப்படி தெரியாம போச்சு . திருப்பதிக்கு போய்ட்டு வந்தால் மட்டும் பிரார்த்தனை முடிஞ்சதுனு அர்த்தம் இல்லை. வந்த கையோடு அஞ்சாறு பேருக்கு சாப்பாடு போடணும். அதுக்கு பேர்தான் சமாராதனை. உமக்கு , நான் சொல்ல வேண்டி இருக்கு . இதை பண்ணாதான் அந்த சர்க்கிள் பூர்த்தி ஆகும் “
அண்ணா சொன்னதும் அயர்ந்து போனேன். சடங்குகளை , சாக்கியங்களை , சம்பிராதாயங்களை , தன் பேனாவையே பேனா கத்தியாக்கி கிழித்து போடுபவரா இப்படி பேசுகிறார்?
அதுதான் அண்ணா. அடுத்தவர் உணர்வுகளுக்கு அவர் போல மதிப்பளிக்க வல்லாரை மண்மிசை நான் இதுகாறும் கண்டதில்லை.
______________________________
பெற்றால்தான் பிள்ளையா படத்துக்கு நான் தான் பாடல் எழுதினேன். டூயட் பாடல் ஒன்று எழுதி அண்ணாவிடமும் , எம் ஜி ஆரிடமும் பாடி காட்டினேன்.
அந்த பாடல்...
” சக்கரைக்கட்டி பாப்பாத்தி
என் மனசெ வசுக்க காப்பாத்தி “
என்று தொடங்கும்.
இருவரும் வெகுவாக ரசித்தார்கள்.
“பாட்டை கம்போசிங்கிற்கு கொடுத்துடலாமா “ என்றேன்.
“ தாரளமா. வாழ்க “ என்றார் எம் ஜி ஆர்.
அவர் தன் மகிழ்ச்சியை வாழ்க மூலம்தான் தெரிவிப்பார்.
திடீரென அண்ணா மீண்டும் பாடலை பாட சொன்னார். பாடி காட்டினேன்.
“ வாலி , பாப்பாத்தி என்ற வார்த்தையை மாற்றுங்க “ என்றார்.
” அதில் என்ன தப்பு? பாப்பாத்தி- காப்பாத்தி என அழகா இருக்கே “ என வாதிட்டேன்.
ஆனால் அண்ணா ஏற்கவில்லை.
உடனே நான் ,
சக்கரைக்கட்டி ராஜாத்தி, என் மனச வச்சுக்கோ காப்பாத்தி “ என மாற்றினேன்.
அண்ணா முகம் மலர்ந்தார்.
“ தேவை இல்லாமல் நாம் யார் மீதும் கல்லெறிய வேண்டாமே “ என்றார்.
அதுதான் அண்ணா.
*********************************************************

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]