சினிமாவில் நல்ல படம் , கெட்ட படம் என எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.
எனக்கு பிடித்து இருக்கிறது , பிடிக்கவில்லை என சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு சராசரி படத்தை உலகப்படம் அது இது என ஆர்வ மிகுதியால் சிலர் பில்ட் அப் செய்ததை பார்த்து கவலையாக இருந்தது.
தன் விருப்பத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் புதிதாக யாராவது வலையுலகை பார்த்தால் , ஒட்டு மொத்த ரசனை மீதே சந்தேகம் வந்து விடுமே என்பதே கவலை.
ஒரு பெண்ணை திட்டமிட்டு கவிழ்க்கும் விதி பட கதை அம்சம் , கஷ்டப்பட்டுவர்கள் மேலும் மேலும் கஷ்டப்பட்டே சாக வேண்டும் என்ற ஃபாசிச சிந்தனை , மனிதனின் மறுபக்கம் படத்தின் திரைக்கதை யுக்தி , படம் முழுக்க வக்கிரத்தை காண்பித்து விட்டு கிளைமாக்சில் பிராயசித்தம் செய்யும் அலுத்து போன தந்திரம் , டிபிக்கல் தமிழ் ரசிகனை மயக்கும் சினிமாட்டிக் முடிவு போன்ற அம்சங்கள் கொண்ட வழக்கு எண் 18/9 படத்தை , படித்தவர்கள் நிரம்பிய பதிவுலகத்தில் சரியாக அணுகுவார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே காத்து இருந்தது.
ஆனால் தண்டோரா மணீஜியின் விமர்சனம் ஆறுதலாக இருந்தது.
அவர் விமர்சனத்தில் இருந்து....
****************************************
உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்..
வழக்கு எண் 18/9
வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை
*************************
நன்றி மணிஜி சார்...

நன்றி நண்பரே...
ReplyDeleteஉனக்கு பின்னாடி ஆப்பு காத்திட்டிருக்கு.
ReplyDeleteஇது மணிஜிக்கு..
ReplyDelete