Wednesday, May 2, 2012

நடிகர் சுமனிடன் எச்சரிக்கையாக இரு- சுகாசினியை எச்சரித்த பாலகுமாரன்

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் தனித்துவம் என்ன ?
அவர் எழுத்தை இலக்கியமாக ஏற்கிறார்களோ இல்லையோ, அவற்றை குப்பை என யாராலும் புறக்கணித்து விட முடியாது.

இலக்கியம் , கோட்பாடுகள் என்பதை பற்றிய அக்கறை இல்லாத ஒரு வாசகனுக்கு அவர் நாவல்கள் கண்டிப்பாக வாசிப்பு இன்பத்தையும், புத்துணர்வையும் அளிக்கும்.
அவர் நாவல்கள் நேரடியாக இருக்கும். பரிசோதனைகள் , புதிய யுக்திகள் என்றெல்லாம் அவர் முயற்சிக்க மாட்டார். ஒரே நாவலைத்தான் திரும்ப திரும்ப எழுதுகிறார் என சிலர் சொல்வது இதனால்தான்.

என்னை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கும்போது அவர் நாவல்களை படிக்க தவறுவதில்லை.

சமீபத்தில் , என் கண்மனீ என்ற அவர் குறு நாவல்கள் தொகுப்பு படிக்க வாய்ப்பு கிட்டியது. ஒரே சிட்டிங்கில் படித்து முடித்தேன்.

இதில் என் கண்மனீ, செவ்வரளி என்ற இரு குறு நாவல்களும் , உச்சிதனை முகர்ந்தால் என்ற கட்டுரை தொகுப்பும் உள்ளன.

இதன் முதற்பதிப்பு 1986 !!!!.  மாத நாவல்கள் , தொடர் நாவல்கள் போன்றவை ஆட்சி செலுத்திய , வேறொரு யுகம். இந்த யுகம் முடிவடையும் கால கட்டத்தில்தான் எனக்கு விபரம் புரியும் வயது வந்தது என்றாலும் , 1986ஐ என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் இப்போது இருபது  வயதுக்கு குறைவான ஒருவரால் , அந்த கால கட்டத்தின் எழுத்துலகை புரிந்து கொள்வது முடியவே முடியாது.


சரி..இந்த தொகுப்பை பற்றி ஒரு பார்வை பார்த்து விடலாமா?

என் கண்மனீ

ஒரு நடிகையின் கதை இது. அவளது பொற்காலம், அவளது வீழ்ச்சி இரண்டுமே அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன .  இதை அவள் மகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை. தன் அம்மாவை ஏமாற்றிய தந்தையால் அவன் வாழ்க்கை எப்படி மாறியது ?

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள், ஒவ்வொரு வித தர்மங்கள்- இதில் உயர்வு , தாழ்வு என்ற பேச்சுக்கு இடம் இல்லை. எல்லா இடங்களிலேமே நல்லதும் இருக்கின்றன, கெட்டதும் இருக்கின்றன.

சில வரிகளில் காட்சிகளின் உக்கிரத்தை சொல்லி விட்டு செல்கிறார் எழுத்து சித்தர். குறு நாவல் என்ற வடிவத்தை அபாரமாக கையாண்டு இருக்கிறார்.

கீழ் கண்ட வரிகளை கவனியுங்கள்.

******************************
( உடல் நலம் நலிவுற்று, கோமா நிலையில் இருக்கும் தன் தாய்க்கு பொட்டு வைத்து புகைப்படம் எடுக்க விரும்புகிறான் ஒரு மகன் )

“ ஏம்பா , பெத்தவாளுக்கு குழந்தைகள் பொட்டு வைக்க கூடாது. நான் வச்சு விடவா “

“ எங்கம்மா வெளிக்கு போக ஆசன வாயில சோப்பு வச்சு விட்டவன் நான். பொட்டு வச்சா தப்பாய்டுமோ ?

” முருகா”  அந்த அம்மாள் காதை பொத்தி கொண்டாள்.

**********************
அம்மா பிராவும் ஜட்டியுமாய் நிற்க மேக்கப் மேன் வி நாயகம் உடம்பெல்லாம் துணி ஒற்றி பவுடன் போடுவதை பத்து வயதில் பார்த்து இருக்கிறான். ஒரு நாள் கூட அந்த மேக்கப் மேன் தவறாக விரல் பதித்ததில்லை

****************************************

“ ஒரு நல்ல அம்மாவா அவனுக்கு இருக்க கூடாதா ? “

“ நல்ல அம்மாவா வேஷம்தான் போட முடியும். இருக்க முடியாது “

****************************************

“ நாம ஜெயிச்சாதான் எதிரிக்கு தோல்வி . அவனை சாக்கடையில் இறக்கி , நாமும் சாக்கடையில் இறங்கினால் ஊர் சிரிக்கும். “

*******************************

இந்த நாவலை பல வருடங்கள் முன்பு படித்தது. இப்போது படித்தாலும் , பல நினைவில் இருந்தன, அதுவே அவர் எழுத்தின் வெற்றி


********************************************************************



2 செவ்வரளி

அவ்வளவாக எழுதப்படாத ஒரு துறை கால் நடை மருத்துவம். இதை வைத்து ஒரு நாவல்.

நன்றாக விஷயம் புரிந்து கொண்டு எழுதி இருக்கிறார். நுணுக்கமான தகவல்கள் அசர வைக்கின்றன.

” கால்னடை மருத்துவன் உலகம் தனியானது. மனிதர்களை பெரிதாக நினப்பவன் , கால நடை மருத்துவன் ஆனால் , அவனால் பிராணிகளை வதைக்கத்தான் முடியும்.  வைத்தியம் இயலாது.  திருமணத்தில் சிக்கி கொள்வதற்கு முன் என்னிடம் வா “

இந்த கேள்விக்கு கதானாயகன் என்ன பதில் அளித்தான்? படித்து பாருங்கள்


********************************

உச்சிதனை முகர்ந்தால்..

கமல் ஹாசன் குடும்பத்துடன் எழுத்து சித்தரின் நட்பை இந்த கட்டுரை தொடர்கள் சுட்டி காட்டுகின்றன. குறிப்பாக சுஹாசினியுடன் கொண்ட நட்பு. நட்பில் ஏற்படும் பிரச்சினைகள் , சண்டைகள் என சுவையாக உள்ளது. சுமன் மேட்டரில் பாலகும்ரான் சுகாசினியை எச்சரித்தது புதுமையான செய்தி.

சுஹாசினியை மட்டும் அல்ல. அவர் வயது பெண்கள் அனைவரையும் மகளாக நேசிக்க்கும் முதிர்ச்சி பாலகுமாரனுக்கு ( அப்போதே ) கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுவது இயல்பாக உள்ளது..

***************************************************************


வெர்டிக்ட் - வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள்


***************************

என் கண்மனீ - குறு நாவல் தொகுப்பு - பாலகுமாரன்


கங்கை புத்தக நிலையம் 






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா