நேரடியாக பயன் தரக்க்கூடிய புத்தகங்கள் ஒரு புறம்... தொழில் நுட்ப புத்தகங்கள், மொழி சார்ந்த புத்தகங்கள், குறிப்பிட்ட விஷ்யத்தை சொல்லி தரும் புத்தகங்கள் போன்றவை இந்த பிரிவில் வரும்.
காலி ஃபிலவர் சூப் எப்படி செய்வது என்பதை ஒரு சமையல் புத்தகத்தில் படித்து உடனடியாக செய்து பார்க்கலாம். weather , climate என்ன வித்தியாசம் என ஓர் ஆங்கில மேம்பாட்டு புத்தகத்தில் படிக்கலாம். ஓர் இயந்திரம் எப்படி இயங்குகிறது, எப்படி பழுது நீக்குவது போன்றவற்றை புத்தகம் சொல்லி தரும்.
இதெல்லாம் உலக வாழ்க்கைக்கு நேரடியாக உதவ கூடியவை.
இலக்கியம் படிப்பதால் என்ன பயன் என்பது அடுத்த கேள்வி.
மேற்கண்ட புத்தகங்கள் போல , இதன் பலன் வெளிப்படையாக தெரியாது. வாசிப்பு இன்பத்துக்காக மட்டுமேதான் இதை படிக்க வேண்டுமா? தென்றலை ரசித்தால் என்ன பலன் என கேட்க முடியுமா? தென்றலை ரசிப்பது என்ற செயலே போதுமே.. அதனால் பலன் என தனியாக ஏதும் வேண்டுமா என்ன?
நாவல்கள் , சிறுகதைகள் போன்றவற்றை வாசிப்பு அனுபவம் மற்றும் அந்த வாசிப்பு சுகத்துக்காக மட்டுமே படித்தால் போதும். ஆனால் அனத வாசிப்பு நம்மில் கலந்து மறைமுகமாக பலனளிக்கும் என்பதும் உண்மையே.
வாசிப்பிலேயே பல வகைகள் . சிலர் மற்றவர்களிடம் பேசுவதை தவிர்க்க , வாசிப்பை ஒரு தப்பித்தலாக பயன்படுத்துவார்கள் ( நான் சில சமயம் இந்த டெக்னிக்கை கையாள்வது உண்டு ) ஆனால் இந்த டெக்னிக்கை அதிகமாக பயன்படுத்தினால், உலகில் இருந்து சக மனிதர்களிடம் இருந்து தனிமைப்பட்டு விடுவோம்.
வாழ்க்கை என்பது உலகுடன் நாம் கொள்ளும் தொடர்புதான். வாசிப்பு நம்மை தனிமை படுத்தினால் , நாம் வாசிக்கும் விதத்தில் த்வறு இருக்கிறது என பொருள்.
உலகை வெறுத்து குடி போதையில் தஞ்சம் அடைவதை போல வாசிப்பு மாறி விடக்கூடாது.
என்னை பொருத்தவரை, சாரு நிவேதிதா போன்றோரின் எழுத்துகள் , உலகை எனக்கு வேறு வகையில் அறிமுகம் செய்து வைத்தன. உலகுடனான என் தொடர்பை செம்மை படுத்தி கொடுத்தன.
பெண்கள் மேலான என் பார்வையை, ஆணாதிக்க சிறுமையை மாற்றி அமைத்தது சீரோ டிகிரிதான்.
எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என இப்போதெல்லாம் பெண்களிடம் விட்டு கொடுத்து போகிறேன் என்றால் அதற்கு காரணம் சாருவின் எழுத்து.
அதே போல பால குமாரனின் எழுத்துகள் என்னை நிறைய மாற்றி இருக்கின்றன. ஒரு முறை பாலகுமாரனை அவர் இல்லத்தில் தனியாக பார்த்து பேசினேன்.
என் எழுத்தில் என்னவெல்லாம் படித்து இருக்கிறாய். அதில் உனக்கு என்ன கிடைத்தது என்றார் அவர்.
எப்போதோ படித்தவை எல்லாம் என் இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் இருப்ப்பது எனக்கே அப்போதுதான் தெரிந்தது.. சட சடவென பாயிண்ட் பாயிண்டாக அவர் நாவல்களில் இருந்து முக்கியமானவற்ரை சொன்னேன். சில எந்த நாவலில் வருகிறது என அவருக்கே தெரியவில்லை. மறந்து விட்டார்,. அதை எல்லாம் நினைவு படுத்தினேன்.
ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்தால் , அதில் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விடுகிறது என்பதை நான் உணர்ந்தது அன்றுதான்.
வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களில் யோசித்து முடிவெடுக்க நேரம் இருக்காது. சட் என முடிவு எடுக்க வேண்டி வரும். நாம் யார் என்பதை நமக்கே அடையாளம் காட்டும் தருணங்கள் அவை. நல்ல வாசிப்பு இருப்பின், நாம் சரியாக நடந்து கொள்ள அவை உதவும்.
வாசிக்க வாசிக்கத்தான் இன்னும் வாசிக்க வேண்டியது ஏராளம் என்பது புரிகிறது..
புலி மானை வேட்டையாடுகிறது. வாழ்க்கையில் சில நேரங்களில் புலியாக வேட்டையாடுகிறோம், சில சமயம் மானாக ஓடுகிறோம். புலி , மான் ஆகிய இரண்டின் பார்வையிலும் வாழ்க்கையை பார்க்க சொல்லித்தருபவை இலக்கியங்கள்தான்.
என்னை பொருத்தவரை, அன்றாட வாழ்வின் வெம்மை தாக்கினாலும் , எத்த்னை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா என வாழ்க்கை ரசிக்க சொல்லித்தந்தவை சாருவின் எழுத்துகள்.
அவருக்கு நன்றி.
ஆனால் சாருவின் எழுத்துகளுக்கு நான் நேரடியாக வந்து சேரவில்லை. அவர் எழுத்துக்கு என்னை அழைத்து வந்து சேர்ந்த்த அனைத்து எழுத்தாள்ர்களுக்கும் நன்றி
வாழ்வைச்சொல்லும் இலக்கியங்கள்/
ReplyDelete