ஹிட்லர் நடத்திய படு கொலைகளை படித்து பதறி இருக்கிறோம். ஆனால் நம் இனமே அது போன்ற பேரழிவுக்கு உள்ளாகும் என கனவிலும் நினைத்து இருக்க மாட்டோம். ஒரு நாட்டின் அரசே அந்த நாட்டு மக்களை கொன்று குவித்தது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தீராத களங்கம்.
பேரழிவு நடந்து மூன்று ஆண்டுகள் ஆவதை ஒட்டி, படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும், போராளிகள் புதைக்கப்படுவதில்லை , விதைக்கப்படுகிறார்கள் என உலகுக்கு உணர்த்தவும் , சென்னை மெரீனாவில் மெழுகுவர்த்தி நினைவேந்தல் நடந்தது.
இன்றைய தகவல் தொழில் நுட்ப கால கட்டத்தில் , இது போன்ற போராட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகின் கவனத்தை ஈர்க்க கூடியவை.
எனவே இந்த நிக்ழ்ச்சிக்கு போயே ஆக வேண்டும் என நினைத்து இருந்தேன். நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும்போது, அதை விட முக்கிமான ஒன்று வேறு எதுவும் இல்லை என முடிவு செய்து மெரினா சென்றேன்.
அங்கு இருந்த கூட்டத்தை பார்த்ததும் தமிழன் என்ற வகையில் உள்ளபடியே பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
அழைத்து வரப்பட்ட கூட்டமாகவோ, கட்சியினர் கூட்டமாகவோ , இல்லாமல் பெருமளவில் பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்சியாக இருந்தது. குடும்பம் , குடும்பமாக பலர் வந்து இருந்ததை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது,
கட்சியினர் பலரும் திரளாக வந்து இருந்தனர். வைகோ , நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வந்து இருந்தனர்.
தனி ஈழம் மலரும் போன்ற கோஷங்களை வை கோ எழுப்பினார்.
இளைஞர்கள் ஏராளமாக இருந்தது , எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை அளித்தது.
கடற்கரையின் இருளை கிழித்து கொண்டு மெழுகு வர்த்தி ஒளி வீசியது , சும்மா பொழுது போக்க கடற்கரை வந்தவர்களின் கவனம் ஈர்த்தது. கண்டிப்பாக அடுத்து ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் , கண்டிப்பாக அவர்களும் கலந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.
மெரினாவை விட்டு புறப்பட்டபோது , தற்போது நிலவும் இருள் விலகி ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.
நன்றி சகாவே
ReplyDelete