வரலாற்று நாவல்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. என் வாசிப்பு ஆரம்பித்ததே வரலாற்று நாவலில் தான் - சிவகாமியின் சபதம்.
சிலருக்கு வரலாற்று நாவல்கள் போரடிக்கும். ஏற்கனவே நடந்த சம்பவங்கள். அவற்றில் பெரும்பாலானவை நமக்கே தெரியும். அதன் பின் படிப்பதில் என்ன சுவாரஸ்யம் ?
ஏற்கனவே நடந்த சம்பவங்களை புள்ளிகளாக்கி தம் கற்பனை திறனை பயன்படுத்தி கோலமிட தெரிந்தவர்கள்தான் வாசிப்பை சுவை ஆக்குகிறார்கள். சிலரோ வரலாற்றை சிதைத்தோ , திரித்தோ அலங்கோலம் ஆக்கி விடுவார்கள்.
சாண்டில்யன் வர்னணைகளுக்கு , (குறிப்பாக பெண்களை வர்ணிப்பத்தில் ) அதிக இடம் கொடுப்பார். கல்கி சாகசங்களுக்கு அதிக இடம் அளிப்பார். வர்ணனைகள் கட்டுக்க்குள் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் ஒரு பாணி வைத்து இருப்பார்கள்.
ரா கி ரங்கராஜன் எழுத்துகளை அந்த காலத்தில் இருந்தே படித்து வந்தாலும் , அவர் எழுதிய சரித்திர நாவலை படித்தது இல்லை. நண்பர் கோபி சொல்லித்தான் “ நான் , கிருஷ்ணதேவரயான் “ எனும் நாவலை படிக்கும் ஆர்வம் வந்தது.
சமீபத்தில்தான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
இது தொடர்கதையாக வந்தபோது, நான் தீவிர பாலகுமாரன் ரசிகன் . அவர் நாவல் தவிர எதையும் படிக்க மாட்டேன்.
இன்று நான் லீனியர், பின் நவீனத்துவம் என வாசித்து கொண்டு இருக்கும் ந்லையில், மரபான வடிவில் ஒரு நாவல் படிப்பது நல்ல மாற்றமாக இருந்தது.
மரபான வடிவம் என்றாலும் , இந்த நாவலில் ஒரு புதுமை இருக்கிறது. ஒரு கதாபாத்திரமே கதை சொல்லும் வகையில் சிறுகதை எழுதலாம். ஆனால் நாவல் எழுத முடியாது. அதிலும் வரலாற்று நாவல் எழுத முடியாது.அப்படி யாரும் எழுதியதாக தெரியவில்லை.
கதா நாயகனே கதை சொல்வது போன்ற சவாலான பாணியில் இந்த நாவலை படைத்து இருக்கிறார் ரா கி ர.
பட்டாம்பூச்சி நாவல் படித்தவர்கள் இவர் எழுத்தின் கவர்ச்சியை மறக்க முடியாது. அது போன்ற எளிமையான , சகஜமான தமிழில் , நாவல் முழுதும் நம்மை கட்டி போட்டு விடிகிறார். தொடர்கதைகளுக்கென்றே சில வார்த்தை பிரயோகங்கள் உண்டு. இப்போதெல்லாம் தொடர் கதைகள் வருவதில்லை. எனவே ரொம்ப நாள் கழித்து , பழைய வார்த்தைகளை படிக்கையில் சந்தோஷமாக இருந்தது..
மொழி நடை எளிமையாக இருந்தாலும், இந்த நாவலை எழுத , கடுமையாக உழைத்து இருக்கிறார். விபரங்கள் திரட்டி இருக்கிறார்.
கதையின் ஓர் இடத்தில் நட்சத்திரத்திங்களின் நிலையை வைத்து , அரசர் எதிரியை வீழ்த்துவது போல சித்திரக்கப்பட்டு இருக்கும். இதை படித்த விஞ்ஞானி ஒருவர் தான் எழுதும் அறிவியல் புத்தகத்துக்கு , ரா கி ரவிடம் தகவல் உதவி கேட்டாராம். அந்த அளவுக்கு சிறு சிறு விஷ்யங்களை கவனித்து எழுதி இருக்கிறார்.
கசையடி, எக்காளம் , விளக்கை தூண்டுவதற்கு பணியாள், அரசரவை கூட்டம் என ஏராளமான சுவையான விஷயங்கள்.
வெளி நாட்டு படையெடுப்புகளால் திணறி வந்த இந்திய பண்பாட்டை காக்க , துறவி ஒருவர் கொடுத்த தூண்டுதலால் உருவாக்கப்பட்டதுதான் விஜய நகர பேரரசு. இதில் முக்கியமான மன்னர் கிருஷ்ண தேவராயர். இவரைப் பற்றிய நாவலை எங்கிருந்தும் தொடங்கலாம். எப்படியும் கொண்டு செல்லலாம்.
ஆனால் காதலை அடிப்படையாக கொண்டு நாவலை தொடங்கி , காதலை மையமாக வைத்தே நாவலை கொண்டு செலவ்தில்தான் , ரா கி ரவின் அனுபவம் முத்திரையை பதிக்கிறது.
காயத்ரி, சின்னா தேவி, திருமலா தேவி என்ற மூன்று பெண்கள்தான் இந்த நாவலை ஆக்ரமித்துள்ளனர்.
இதே நாவலை பால குமாரன் எழுதி இருந்தால் , கிருஷ்ணதேவராயரை குறைகளற்ற அரசராக வர்ணித்து , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருப்பார்.
ஆனால் இந்த நாவலில் அரசரின் குறைகளும் சொல்லப்படுவது இயல்பாக உள்ளது.
சாண்டில்யன் எழுதி இருந்தால் , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருக்க மாட்டார். சின்னா தேவியை வர்ணித்து எழுதி வேறு வகை எழுச்சியை உருவாக்கி இருப்பார்.
ஆனால் இந்த நாவலில் , காதல் சம்பவங்கள் குறைவே. காதல் உணர்வே அதிகம்.
தொடர்கதையாக எழுதப்பட்டதால், ஒவ்வொரு அத்தியாயமும் சஸ்பென்சுடம் முடிய வேண்டிய கட்டாயம். அத்தியாய தொடக்கம், முந்தைய அத்தியாயத்தை நினைவு படுத்த வேண்டிய அவசியம் போன்றவை தவிர்க்க முடியாது. எனவே ஒரே நாவலாக படிக்கும் போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது மட்டுமே நாவலின் குறை.
கடைசி பக்கங்களில் அவசரமாக வந்து செல்லும் மூன்றாவது மனைவி பாத்திரம் மனதில் பதியவில்லை. அதே போல கிருஷ்ண தேவராயரின் முந்தைய தலை முறை பற்றியும் தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.
மற்றபடி வரலாற்ரு தகவல் கச்சிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிற்றரசர்கள் நிலை, மதுரை வரலாறு, நாயக்க வம்சம் , அப்பாஜி, தெனாலி ராமன் , கொக்கோகம் , காம சாஸ்திரம் மூன்று நாள் மன்னர் , என பல தகவவல்கள் கொடுத்துள்ளார்.
வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.
வெர்டிக்ட்
நான், கிருஷ்ணதேவராயன் - நான் ஸ்டாப் எண்டெர்டெய்ணர்

நாவல் : நான் , கிருஷ்ணதேவராயன்
எழுதியவர் : ரா கி ரங்கராஜன்
கட்சி மாறியாச்சா?
ReplyDeleteவாசிப்பனுபவம் என்பது உதஎ பிராண்டு வார்த்தையாச்சே...
பார்வையாளன், சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். முடிந்தால் I, Claudius நாவலையும் படித்துப் பாருங்கள்.
ReplyDeleteபறக்கும் குதிரையின் பின்னோட்டம் தான் எனக்கும் தோன்றியது
ReplyDeleteஇரு வேறு கழக ஒன்றியச் செயலாளர்கள் பரஸ்பரம்
நண்பர்களாகவும், பாரட்டுதல்களோடும் இருப்பது போன்ற உணர்வு
இருந்தாலும் பகிர்தலுக்கு நன்றி சகா
@பற்க்கும் குத்ரை... வரலாற்று தரிசனம் என்பது தான் அவர் பிராண்ட் வார்த்தை
ReplyDelete@கோபி... நமக்கு ஆங்கிலம் தகராறு ஆயிற்றே
ReplyDelete