ஒரு முறை நண்பர் நிர்மலிடம் பேசுகையில், விடுமுறை தினங்களில் - குறிப்பாக ஞாயிறன்று - காலை பத்து மணி வரை ஜாலியாக தூங்குவது என் வழக்கம் என்றேன். இதற்கு பதில் அளித்த நிர்மல் , தான் விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்து விடுவதாக சொன்னார். அப்போதுதான் விடுமுறையின் அதிக நேரத்தை பயன்படுத்த முடியும் என்றார்.
அவர் லாஜிக் என்னை கவர்ந்தது. இப்போதெல்லாம் முடிந்தவரை சீக்கிரமே எழுந்து விடுமுறைகளை பயன்படுத்தி கொள்கிறேன். இதனால்தான் நிறைய படிக்க முடிகிறது , முக்கியமானவர்களை சந்திக்க முடிகிறது. தர்க்கா போன்ற புதிய இடங்களுக்கு செல்ல முடிகிற்து.
குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்றதால் சில நல்ல அனுபவங்கள் கிடைத்தன. அடிக்கடி செல்லும் எண்ணம் மனதில் பதிந்து விட்டது.
அதே போல வட சென்னையில் ஜீவ சமாதி ஆகியுள்ள இன்னொரு மகான் பட்டினத்தார். திருவொற்றியூரில் இவரது அடக்கஸ்தலம் ஆலயமாக கட்டப்பட்டுள்ளது. அங்கு செல்வது என முடிவு செய்து , அதிகாலை எழ அலாரம் வைத்து விட்டுதான் தூங்க சென்றேன். அந்த ஆலயத்தை பற்றி சாரு சொன்னதில் இருந்து , அங்கு போக வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.
கடலை ஒட்டி இவரது ஆலயம் இருக்கிறது. பேருந்தில் சென்றால் ஆலயம் அருகிலேயே இறங்கலாம். திருவொற்றியூர் சென்றால் , தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி , அருகில் இருக்கும் மார்க்கெட் சாலை வழியாக சற்று தூரம் நடந்து , ஆலயத்தை அடையலாம்.
முன்பு ஒரு முறை சென்று இருந்த போது பார்த்ததை விட , மாற்றி கட்டி இருக்கிறார்கள். பட்டினத்தாரையே சிவனாக கருதி பூஜை செய்கிறார்கள். நான் சென்று இருந்த நேரம் அன்னதானம் வழங்கினார்கள். காலையில் சாப்பிடாமலேயே கிளம்பி விட்டதால் , நிம்மதியாக சாப்பிட்டேன். என் அனுபவங்களை சொல்வதற்கு முன் பட்டினத்தார் குறித்த ஃப்ளாஷ் பேக்.
ஒருவன் கெட்டவனாக இருந்து ஞானியாக மாறும் டெம்ப்ளேட் ஃப்ளேஷ் பேக்காக இல்லாமல் , ஒரு சராசரி மனிதனின் கனவுகள் , உறவுகள் , செண்டிமெண்ட் என இயல்பான வரலாறாக இருப்பது பட்டினத்தார் வரலாற்றின் ஹை லைட்.
*********************************************************
காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் வெண்காடர். இவரும் நல்ல சிவபக்தர்.
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த இவருக்கு , திருமணமாகி வெகு நாட்கள் குழந்தை இல்லை.
வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த அவருக்கு இது ஒரு குறையாகவே இருந்தது. குழந்தைகாக பல முயற்சிகள் செய்தும் பலனில்லாத நிலையில், திருவுடைமருதூர் சென்று வேண்டினால் , தீர்வு கிடைக்கும் என கனவில் ஒரு குரல் கேட்டடது. அங்கே சென்றார். அங்கே சிவ சருமர் எனும் சிவபக்தர் குழந்தை ஒன்றுடன் காத்து இருந்தார்.
தன் கனவில் சிவன் தோன்றி, குழந்தையை கொடுக்க சொன்னதாக சொல்லி தன் கையில் இருந்த குழந்தையை கொடுத்தார் அவர். சிவசருமர் முன் பின் பழக்கம் இல்லாதவர். த்னக்கு வந்த கனவு போலவே , அவருக்கும் வந்ததால், ஆச்சர்யம் அடைந்த வெண்காடர் குழந்தையுடன் ஊர் திரும்பினார். மருதவாணர் என பெயரிட்டு வளர்த்தார்.
குடும்ப தொழிலை அவனுக்கும் கற்று கொடுத்தார். அவனோ வியாபாரத்தை எளிதாக க்ற்று கொண்டு , தந்தைக்கே கற்று கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தான். வெண்காடருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உலகுக்கே அதிபதிபோல உணர்ந்தார். உறவினர்களும் , சொந்தங்களும் சூழ அரசர் போல வாழ்ந்தார். வெண்காடர் என பெயர் சொல்லி அழைக்க விரும்பாத மக்கள் , பட்டினத்தார் என மரியாதையோடு அழைத்தனர். அனைவருக்கும் உதவிகள் செய்து சிறப்புற வாழ்ந்தார்.
தன் மகனை வியாபாரத்துக்காக வெளி நாடு அனுப்பினார். வெளி நாடு வியாபாரத்தை முடித்து கொண்டு மகன் வீடு திரும்பினான். மாபெரும் வரவேற்பு கொடுத்து அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அவன் கொண்டு வந்த பெட்ரி மிகப்பெரிதாக இருந்தது. செம லாபம் போல என மகிழ்ச்சியில் திண்றிய அவர் , ஆவலுடன் பெட்டியை திறந்து பார்த்தார்.
அதிர்ந்தார். உள்ளே முழுதும் எரு விராட்டியும் தவிடு மட்டுமே இருந்தன.
கோபத்தில் கண் மண் புரியவில்லை. “ ஊர் பேர் தெரியாத உன்னை வளர்த்ததற்கு நீ காட்டும் நன்றியா இது.. அனாதை பயலே “ என திட்டினார்.
அவன் புன்னகைத்தான். “ இது வரை நீங்கள் காட்டிய அன்பு , ஒரு வியாபாரத்தால் மாறி விட்டதா? இப்படித்தானே உங்கள் மீது மற்றவர்கள் காட்டும் அன்பும் இருக்கும்? எல்லா உறவுகளும் , சொந்தங்களும் இப்படித்தானே? சரி.. நான் கொண்டு வந்த பெட்டியை நன்றாக பாருங்கள் “ என சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
அவன் அமைதி இவரை சிந்திக்க வைத்தது. பெட்டியை நன்றாக தேடி பார்த்தார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று எழுதப்ப்பட்ட ஓலை துணுக்கு இருந்தது. அவர் அப்போது இருந்த மன நிலையில் , அந்த வாசகம் பல செய்திகளை அவருக்கு உணர்த்தியது.
தான் வியாபாரத்தில் கில்லாடியாக இருப்பதில் எல்லாம் பெரிய பெருமை இல்லை. எதற்கும் எந்த அர்த்தமும் இல்லை என உணர்ந்தார். உறவுகள் , செண்டிமெண்ட் , அந்தஸ்து , செல்வாக்கு என எதுவும் நிலையற்றதில்லை என்பதை உணர்ந்து , அனைத்தையும் துறந்து , துறவியானார். நிலையானதை தேடி அலைந்தார். காலப்போக்கில் அவர் சீடராக சேர்ந்த பத்ரகிரியாருக்கு முக்தி கிடைத்தது . இவருக்கு கிடைக்கவில்லை.
இறைவனை இறைஞ்சினார். அவருக்கு கசப்பு சுவைமிக்க கரும்பு கொடுக்கப்பட்டது. இது இப்போது இனிப்பாக மாறுகிறதோ , அப்போது முக்தி கிடைக்கும் என சொல்லப்ப்பட்டது.
அவர் பல இடங்களுக்கு சென்று விட்டு , திருவொற்றியூர் வந்தார். அங்கே கரும்பு இனித்தது!! சிறுவர்களுடன் ஒரு விளையாட்டு விளையாடினார். அவரை மண்ணில் புதைக்க வேண்டும். தன் சக்தியால் அவர் வெளியே வந்து விடுவார் என்பது சவால்.
சிறுவர்கள் அவரை புதைத்தனர். சொன்னபடியே வந்து விட்டார். அவர்களுக்கு ஆச்சர்யம். இன்னும் ஆழமாக தோண்டி புதைத்தனர். இப்போதும் வந்து விட்டார்.
மேலும் ஆழமாக தோன்றி புதைத்தனர். இப்போது வரவில்லை. பயந்து போன சிறுவர்கள் , பெரியவர்களை அழைத்து வந்து தோண்டினர்.
அங்கே..
பட்டினத்தார் இல்லை..
லிங்கம் ஒன்று இருந்தது..
அதுதான் இன்றைய கோயில்
********************************
கோயொல் விசிட் திருப்தியாக இருந்தது. அவர் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தன. இனிமையாக இருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், தியானம் செய்ய முடியவில்லை.
எனவே கிளம்பினேன். வரும் வழியில் வள்ளலார் ஆலயம் இருப்பதை முதல் முறையாக பார்த்தேன். அமைதியான சூழல் . தியானம் செய்ய வசதி செய்து தந்தார்கள். தியானம் நிறைவாக இருந்தது.
****************************************
சாப்பிடகூட நேரம் இன்றி , வீடு திரும்பினேன்.ஆடை மாற்றி விட்டு, அமர்ந்தால் கதவு தட்டப்பட்டது.
ஹவுஸ் ஓனர் !!
” புதிதாக ஒரு டிஷ் செய்தோம் . சாப்பிட்டு பாருங்கள் “ கொடுத்து விட்டு சென்றார்கள்.
*****************************************
இன்று சீக்கிரம் எழ வேண்டும், ஆலயம் செல்ல வேண்டும், நண்பரை சந்திக்க வேண்டும் ( அந்த நண்பர் குறித்து பிறகு ) என எதுவுமே திட்டமிடவில்லை. அனைத்துமே மற்றவர்கள் யோசனை. இன்று முழுக்க என் காசில் நான் சாப்பிடவில்லை. கொஞ்சம் raw ஆக சொல்ல வேண்டும் என்றால் , மற்றவர்கள் இட்ட பிச்சையில்தான் , இன்றைய தினம் சென்று இருக்கிறது.
இன்னும் யோசித்து பார்த்தால் , நம் வாழ்க்கையே பலர் போட்ட பிச்சைதான், வெறும் கையோடுதானே நாம் வந்தோம்?!!
ம்ம். அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் , அதிலும் நான் பிச்சைக்காரன்தான்!!!
இது வரை பிச்சை இட்ட எத்தனையோ பேரை மறந்து கூட போய் இருக்க கூடும் , அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து நன்றி செலுத்தும் உணர்வை தந்தது இந்த கோயில் விசிட்..
*****************************
பட்டினத்தார் பாடல்கள் சில
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தாம்
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே.
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே.

வெளியில் இருந்து.. |
வழிகாட்டி பலகை |
ஆலய தோற்றம் |
நானோர் பரதேசி, நல்லோர் கால் தூசி |
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன். அய்யனே என் அய்யனே |
ஒரு முறை சென்று பாருங்கள் |
மேலும் ஆழமாக தோன்றி புதைத்தனர். இப்போது வரவில்லை. பயந்து போன சிறுவர்கள் , பெரியவர்களை அழைத்து வந்து தோண்டினர்.
அங்கே..
பட்டினத்தார் இல்லை..
லிங்கம் ஒன்று இருந்தது..
அதுதான் இன்றைய கோயில்
********************************
கோயொல் விசிட் திருப்தியாக இருந்தது. அவர் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தன. இனிமையாக இருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், தியானம் செய்ய முடியவில்லை.
எனவே கிளம்பினேன். வரும் வழியில் வள்ளலார் ஆலயம் இருப்பதை முதல் முறையாக பார்த்தேன். அமைதியான சூழல் . தியானம் செய்ய வசதி செய்து தந்தார்கள். தியானம் நிறைவாக இருந்தது.
****************************************
சாப்பிடகூட நேரம் இன்றி , வீடு திரும்பினேன்.ஆடை மாற்றி விட்டு, அமர்ந்தால் கதவு தட்டப்பட்டது.
ஹவுஸ் ஓனர் !!
” புதிதாக ஒரு டிஷ் செய்தோம் . சாப்பிட்டு பாருங்கள் “ கொடுத்து விட்டு சென்றார்கள்.
*****************************************
இன்று சீக்கிரம் எழ வேண்டும், ஆலயம் செல்ல வேண்டும், நண்பரை சந்திக்க வேண்டும் ( அந்த நண்பர் குறித்து பிறகு ) என எதுவுமே திட்டமிடவில்லை. அனைத்துமே மற்றவர்கள் யோசனை. இன்று முழுக்க என் காசில் நான் சாப்பிடவில்லை. கொஞ்சம் raw ஆக சொல்ல வேண்டும் என்றால் , மற்றவர்கள் இட்ட பிச்சையில்தான் , இன்றைய தினம் சென்று இருக்கிறது.
இன்னும் யோசித்து பார்த்தால் , நம் வாழ்க்கையே பலர் போட்ட பிச்சைதான், வெறும் கையோடுதானே நாம் வந்தோம்?!!
ம்ம். அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் , அதிலும் நான் பிச்சைக்காரன்தான்!!!
இது வரை பிச்சை இட்ட எத்தனையோ பேரை மறந்து கூட போய் இருக்க கூடும் , அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து நன்றி செலுத்தும் உணர்வை தந்தது இந்த கோயில் விசிட்..
*****************************
பட்டினத்தார் பாடல்கள் சில
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே.
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே.
சிறப்பான பதிவு...
ReplyDeleteWonderful experience. One of the best I think..
ReplyDelete