கலீல் ஜிப்ரான் தன் இதயம் கவர்ந்த பேரழகியை பற்றி சொல்கிறார். வேறு யாராவது சைட் அடித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்கிறார்.
படித்து பாருங்கள்..
*****************************************************************
வசீகரக்காரி - கலீல் ஜிப்ரான்
என் இதயம் கவர்ந்த பேரழகி இந்த தனியறையில்தான் நேற்று அமர்ந்து இருந்தாள். கண்ணாடி கோப்பையில் ஒயின் அருந்தியவாறு , இந்த இருக்கையில்தான் , தன் அழகு மேனியை சாய்த்து இருந்தாள்.
இது நேற்றைய கனவு. காரணம் என் இதயம் கவர்ந்த தேவதை தொலை தூரம் ஒன்றுக்கு போய் விட்டாள்.
என் கண்ணாடியில் இன்னும் அவள் விரல் ரேகை தடம் இருக்கிறது. அவள் மூச்சின் நறுமணம் இன்னும் என் ஆடைகளை விட்டு நீங்கவில்லை. அவளது தேனினும் இனிய குரலின் எதிரொலி இன்னும் என் அறைகளில் கேட்கிறது.
ஆனால் என் இதய ராணி , தனிமை வெறுமை ஆகியவற்றில் என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டாள்.
என் படுக்கை அறையில் அவள் ஓவியம் தொங்குகிறது. அவள் எனக்கு தீட்டிய காதல் மடல்களை , பவளங்களும் முத்துகளும் பொதிக்கப்பட்ட வெள்ளி பெட்டியில் பாதுகாத்து வைத்து இருக்கிறேன். இவை அனைத்தும் நாளை வரை என்னுடன்தான் இருக்கும் - காற்று அடித்து செல்லும் வரை . அதன் பின் நிசப்தம் மட்டுமே கோலோச்சும்.
நான் காதலிக்கும் அந்த பெண் , நீங்களும் உங்கள் இதயங்களை பறி கொடுத்த பெண் போன்றவள்தான். அவள் அழகு விசித்திர தன்மை கொண்டது- கடவுளே வடிவமைத்தது போல. பறவையை போன்ற அமைதியையும் , நாகத்தை போன்ற நளினத்தையும் , மயிலை போன்ற வசீகரத்தையும் , ஓனாயின் வேகத்தையும் , இரவின் ஆர்வமூட்டும் அச்சத்தையும் கொண்டவள் அவள்.
இவளை இளம் பிராயத்தில் இருந்தே நான் அறிவேன். அவள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து இருக்கிறேன். நான் படிக்கும் நூல்களில் அவள் முகத்தை பார்த்து இருக்கிறேன். ஓடைகளின் சலசலப்பில் அவள் குரல் இனிமையை உணர்ந்து இருக்கிறேன்.
என் இதயத்தையும் , ஆன்மாவின் ரகசியத்தையும் அவள் முன் திறந்து காட்டி இருக்கிறேன்.
என் இதய தேவதை இனி நான் பார்க்க முடியாத இடம் சென்று விட்டாள்.
அவள் பெயர் என்ன தெரியுமா? வாழ்க்கை என்பதே அவள் பெயர். அவள் பேரழகி . அனைத்தையும் வசீகரிப்பவள். நம் வாழ்க்கையை உறிஞ்சி விடக்கூடியவள். நம் கனவுகளையும் , ஆசைகளையும் குழி தோண்டி புதைப்பவள்.
வாழ்க்கை எனும் பெண் , தன்னை நேசிப்பவர்களின் கண்ணீரால் குளிப்பாள். தன்னால் வீழ்த்தப்பட்டவர்களின் ரத்தம் கண்டு மகிழ்வாள்.
பலரை காதலில் வீழ்த்துவாள். ஆனால் யாரையும் தன்னை அடைய விட மாட்டாள்.
வாழ்க்கை ஒரு வசீகரக்காரி..
தன் அழகால் நம்மை வளைப்பாள்..
அவள் தந்திரத்தை அறிந்தோர் பிழைப்பார்கள்
அப்பாவிகள் சிக்கிக்கொண்டு விழிப்பார்கள்.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]