வாசகர் வட்ட சந்திப்பில் சாருவின் பேச்சு , இலக்கிய விவாதம் போன்ற ஆழமான விஷ்யங்களை பார்க்கும் முன்பு, ஹை லைட்ஸ்
***************************************
 |
இலக்கிய மணமும் , மலர்களின் மணமும் |
 |
செடியின் புன்னகை மலரோ !! |
 |
இலக்கியத்தை நோக்கி வளைந்து நெளிந்து செல்லும் பாதை |
 |
காரசாரமான விவாதத்துக்கு போட்டியா? |
 |
தண்ணியில் மிதக்கலாம் :) |
 |
அறிவுப் பசியில்... |
 |
இங்கிவனை யான் பெறவே , என்ன தவம் செய்து விட்டேன் |
 |
தளபதிகள்.... |
 |
ஆண்டவனை விட ஆதவனே மேல் என்பேன் - பிரபுராஜ் |
 |
தீராத விளையாட்டு பிள்ளை |
 |
சத்தாண உணவு |
- கலந்துரையாடலின் போது சாம் பேசுகையில், சாரு பரிந்துரைந்த உலக திரைப் படங்கள் அனைத்தையும் தான் பார்த்து விட்டதாக சொல்லி , பட்டியலிட்டார். நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த புத்திசாலி வாசகர்கள் நைசாக இடத்தை காலி செய்தனர். அவர் பேச்சில் கவரப்பட்ட சாரு, “ இவர் விபரம் தெரிந்த வாசகராக இருக்கிறாரே..உங்களில் எத்தனை பேர் அவர் சொன்ன படங்களை பார்த்து இருக்கிறீர்கள் ? “ என்றார். அதிர்ச்சி அடைந்த பலர் ( நான் உட்பட ) பரிதாபமாக விழித்தனர். டென்ஷன் ஆன சாரு “ படிக்கத்தான் மாட்டேன் என்கிறீர்கள் . சினிமா பார்ப்பதில் என்ன சிரமம்... அடுத்த முறை இந்த படங்களை பார்த்து இருக்க வேண்டும் “ என அசைன்மெண்ட் கொடுத்து விட்டார்.
- அராத்து தனக்கே உரிய நையாண்டி பேச்சால் பலரை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார். அவ்வப்போது வெட்கப்பட வைத்து கொண்டு இருந்தார். ஆனால் அவரையே வெட்கப்பட வைத்து விட்டார் இரு நண்பர். அவர் யார் என சொன்னால் , அவருக்கு பிரச்சினைகள் வரும் என்பதால் விஷ்யத்தை மட்டும் சொல்கிறேன். காசு போட்டால் காண்டம் வரும் மெஷின் இருக்கிறது அல்லவா? அது போல நடிகைகளின் பெயரை சொன்னால் , உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட கிசு கிசு சொல்லக்கூடியவர் இவர். அந்த கிசுகிசு எந்த பத்திரிக்கையிலும் இது வரை வந்திராத , ஒரிஜினல் மேட்டராக இருக்கும். ஒரு நடிகையை , ஒரு இயக்குனர் கஷ்டப்பட்டு ஒத்துழைக்க வைத்தாராம். முக்கியமான நேரத்தில் இயக்குனருக்கு கடும் அதிர்ச்சியாம். அவர் ஏன் அதிர்ச்சியானார் என்பதைக் கேட்டு அராத்து வெட்கப்பட்டார் பாருங்கள்.. அடடா.. காண கண் கோடி வேண்டும்.
- கலந்துரையாடலின் கட்டுப்பாட்டு அதிகாரி ப்ரியமுடன் துரோகி, கடும் நிபந்தனைகள் விதித்து , கறாராக அமல் படுத்தினார். பலரும் முணுமுணுத்தனர். பவர் கரப்ட்ஸ் என சாரு சொன்னதை நினைவு படுத்திய அராத்து , துரோகி தன் அதிகாரத்தை தவ்றாக பயன்படுத்துவாக முறையிட்டு பார்த்தார்..ம்ஹூம் ,, பலனில்லை.
- ஒரு கட்டத்தில் சாருவிடமே மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. “ யாரும் கெட்ட வார்த்தைகள் பேச கூடாது. அன்பு மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு சாருவை அவன் இவன் என்றெல்லாம் பேசக் கூடாது. ” என்பது துரோகியின் கண்டிஷன். உடனே மைக்கை வாங்கி ( பறித்து ? ) பேசிய சாரு , ” நான் காதலிக்கும் எழுத்தாளனை அவன் இவன் என்றுதான் செல்லமாக அழைப்பேன். அதே போல கெட்ட வார்த்தை என எதுவும் இல்லை. என் ஊரான நாகூரில் , சாதாரணமாக ஒருவரிடம் பெயர் கேட்பதாக இருந்தாலும் , ஒ*** ***** , உன் பெயர் என்ன ? “ என்போம், அவர் “ங்க்** ** , என் பெயர் ** “ என்பார்..இதையெல்லாம் தவறாக அங்கு யாரும் நினைப்பதில்லை “ என்றார். இதற்கு பதில் சொன்ன துரோகி “ சாரு.. நீங்கள் பேசலாம்.. மற்றவர்கள் பேச கூடாது.. ஏனென்றால் அவர்கள் சாரு அல்ல “ இந்த நச் பதிலால் , துரோகியின் ஆதிக்கம் கடைசி வரை நீடித்தது.
- கலந்துரையாடலின் போது , சாருவுக்கு அருகில் நான் அமர்ந்து இருந்தேன். சாருவுக்கு ஒரு தட்டில் சிக்கன் வைத்து கொடுத்தார்கள். ஒரு லெக் பீஸ் எடுத்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன், சிரித்தபடி அனுமதித்தார். அதன் பின் அனுமதி கேட்காமலேயே அவர் ப்ளேட்டில் பாதியை சாப்பிட்டவன் நான் என்பது யாருக்கும் தெரியாது.
- ஒவ்வொரு வாசகர் பேசும்போதும் ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்டார் சாரு. தேவைப்பட்டால் உடனடியாக விளக்கமும் அளித்தார்.
- வருண் என்ற வாசகர் பேசும்போது அந்த வாசகரின் ஆங்கில அறிவை நினைவு வைத்து இருந்து பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது.
- ”எனக்கு டீ ஷர்ட் ஒன்று தேவைப்பட்டது. வாங்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்த போது , இந்த வாசகர் பரிசளித்தார். மிக்க நன்றி “ என நினைவு வைத்து நன்றி சொன்ன போது , அந்த வாசகர் முகத்தில் பரவசம் , மகிழ்ச்சி.
- இனிமையாக பழக கூடியவரான பிரபு ராஜிடம் இவ்வளவு இலக்கிய வெறி இருப்பதை அன்றுதான் கவனித்தேன். ஆதவன் , நகுலன் போன்றோர் மீதான காதலை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ளவே இயலவில்ல்லை. தன்னிலை மற்ந்து உணர்ச்சி பெருக்கில் , உன்னத ஒரு மன நிலையில் இருந்த அவர் ஆன்மீக உச்சத்தை தொட்டு விட்டார் என்பதை உணர முடிந்தது .
- எல்லோரும் தண்ணி அடித்தால் உளறுவார்கள். ஆனால் அராத்து தண்ணி அடித்தபின்புதான் நிதானமாக பேசினார். விளையாட்டுப்பிள்ளையாக காட்சி அளிக்கும் அவர் , சீரியசாக பேசியதை வியப்புடன் கவனித்தேன் . “ mind attitude - not the mind aptitude- determines man's altitude என்பார்கள். என் மனப்போக்கை மாற்றியவர் சாரு. சாருவிடம் பேசினால் , வாழ்க்கை குறித்த உங்கள் பார்வையே மாறி விடும் . சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டாடினாலும் , பொறுப்புணர்வு தவறாதவர் சாரு. சிலர் தாம் படுக்கையை அப்படி அப்படியே போட்டு விட்டு சென்று விடுவார்கள்.. சாரு பொறுப்பாக அதை மடித்து அதன் இடத்தில் வைத்து விட்டு செல்வார். வாழ்க்கை குறித்த அவர் பார்வையை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை “ சாருவை பற்றி அவர் பேசுகையில் , அவர் கண் கலங்குவதை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.
- ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டும் சார்ந்ததல்ல. கட்டுப்பாடுதான் மிகப்பெரிய கொண்டாட்டம் என்றார் சாரு.. உடனே கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.. : இந்த விழா முடியும்வரை,. நாம் யாரும் குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது. இயற்கையை சீர் குலைக்க கூடாது “ கடைசி வரை இந்த கட்டுப்ப்பாட்டுடன் நடந்து கொண்டனர் வாசகர்கள்.
- கூட்டத்தில் பதிவர் பிச்சைக்காரன் பேசியவதாவது:
இலக்கியம் படைக்க பலரால் முடியலாம்.
ஆனால் இலக்கியமாகவே வாழ உன்னால் மட்டுமே முடியும்.
நீ சரித்திரம் படிக்கும் எழுத்தாளன் அல்ல.
சரித்திரம் படைக்கும் எழுத்தாளன் .
கவியரசர் தமிழ் நாட்டுக்கு இல்லை எனும் பழி பாரதியால் தீர்ந்தது
எழுத்தரசர் இல்லை எனும் பழி உன்னால் தீர்ந்தது
இலக்கியம் எனும் அமுது அளிக்கும்,
பாலூட்டும் தாயானாய்..
நான் வாலாட்டும் நாயானேன் ..
- இதில் ஒரு வரியை சாரு குறிப்பிட்டு பதில் அளித்தார். விரிவாக பிறகு.
ஒரு கிசுகிசு...
ReplyDeleteதிருமணமான ஒரு பெண்ணுக்கு அராத்துவின் மீது காதல்... அராத்துவுக்கு இது தெரியாது(?) என நினைக்கிறேன்.
Clue 1: They live in the same city..
continues....