Pages

Sunday, June 3, 2012

சினிமா வாய்ப்புக்காக , படிமங்களை தேடும் எழுத்தாளர்கள் - சாரு ஆவேசம்

சினிமா வாய்ப்பை எதிர்பார்த்துதான் சிலர் , குப்பை படங்க்ளில் கூட படிமங்களை தேடுகிறார்கள் என எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆவேசமாக பேட்டி அளித்தார்.

விண் டிவிக்கு சாரு அளித்தார். கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார். சில கேள்விகளில் எரிமலையானார். சில கேள்விகளுக்கு பூந்தளிர் ஆனார்.
பேட்டியில் இருந்து சில ஹைலைட்ஸ்.

***************************************************



  • சாரு என்றால் சர்ச்சை என்றாகி விட்டதே?

                   நான் நேர்மையாக என் கருத்துகளை கூறுகிறேன். அதை சிலர் சர்ச்சை ஆக்குகிறார்கள். சர்ச்சைகளால் எனக்கு நஷ்டம்தான்.

  • வெளி நாட்டு எழுத்தாளர்களைப்பற்றி  நாம் இங்கு நிறைய எழுதுகிறோம். அவர்களைப்பற்றி இங்கு இருப்பவர்களுக்கு தெரிகிறது. ஆனால் , நம்மை பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. காரணம் நம் படைப்புகள் மற்ற மொழிக்ளில் மொழியாக்கம் செய்யப்படுவதில்லை. தமிழை உலக அரங்குக்கு எடுத்து செல்லும் பொருட்டு, மொழி பெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு நேரம் ஒதுக்கும் பொருட்டு , தமிழில் எழுதுவதை குறித்து கொண்டு இருக்கிறேன். இந்த பணியில் ஒன் மேன் ஆர்மியாக நான் செயல்பட வேண்டி இருக்கிறது. பெங்காலியில் இந்த நிலை இல்லை.
  • தமிழில் வாசிக்கும் பழக்கம் முன்பை விட மேம்பட்டுள்ளது. இது நல்ல மாற்றம். என் வாசகர்களுக்கு நான் சொல்வது , என்னை மட்டும் படிக்காதீர்கள். நல்ல நூல்கள் அனைத்தையும் படியுங்கள் என்பதே, பலரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறேன் . ஆனால் சிலர் என்னை மட்டும் படித்தால் போதும் என நினைக்கிறார்கள்.
  • புத்தக கண்காட்சியில் நல்ல விளைவுகள் ஏற்பட்டதாக தெரிவதில்லை. அங்கு சமையல் புத்தகங்களும் , டிக்‌ஷ்னரிகளும்தான் அதிகம் விற்பனை ஆகின்ற்ன. 
  • தமிழே படிக்காமல் பட்ட படிப்பை முடிக்கும் சூழ் நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இது திராவிட கட்சிகளின் சாதனை. கட் அவுட் கலாச்சாரத்தை வளர்த்து தமிழை ஒழித்து விட்டன திராவிட கட்சிகள். தண்டவாளத்தில் படுத்தால் தமிழ் வளர்ந்து விடாது. 
  • தமிழ் நாட்டில் சினிமா மோகம் மட்டுமே இருக்கிறது. ரஜினியை வைத்து கூட்டம் சேர்க்கிறார்கள், அந்த விழாவிற்கு வந்தவர்கள் தலைவர் எப்போ வருவார் என ரஜினிக்கு காத்து இருந்தார்கள். ஒருவர் கேட்டார் , இது யாருக்கு பாராட்டு விழா? இன்னொருவர் சொன்னார்- யாரோ எஸ் ராவாம்.. இதுவா இலக்கியம்?
  • கிராமங்களில் கொஞ்சம் பெரிய ஆட்களாக யாராவது இருந்தால், அவரை பார்த்து பயப்படுவார்கள். அய்யாவை பகைச்சுக்காதே என்பார்கள். அதே போன்ற மன நிலையில்தான் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சினிமாக்காரர்களை பார்த்து பயப்படுகிறார்கள். குப்பை படமாக இருந்தாலும் , படிமங்கள் கண்டுபிடித்து பாராட்டுகிறார்கள். நான் ஒரு போதும் அப்படி செய்வதில்லை. பாரதியார், பெரியார் வழியில் வந்த சுயமரியாதைக்காரன் நான். பாரதி ஒரு நிக்ழ்ச்சிக்கு காந்தியை அழைத்தார். அடுத்த நாள் வருகிறேனே என்றார் காந்தி. நமக்கு ஒத்து வராது மிஸ்டர் காந்தி , குட் பை என சொல்லி வெளியேறினார் பாரதி. அப்படிப்பட்ட சுயமரியாதைக்காரர் அவர்.
  • எழுத்தாலனுக்கு எழுத்து மட்டும் தெரிந்தால் போதாது. இசை , ஓவியம் , சிற்பம் என அனைத்தையும் ரசிக்க தெரிய வேண்டும். சிலருக்கு உணவைக்கூட ரசிக்க தெரியாது. இசை அனைத்திலும் இருக்கிறது. சீரோ டிகிரியை படித்து பார்த்தால் , இசை மாதிரி இருக்கும். ஒரு லயம் இருக்கும்.

3 comments:

  1. mr.pichai....who is that saaru you have mentioned here? how many people watches win tv in tamilnadu?

    ReplyDelete
  2. ப்ளாக் தலைப்பை பிச்சைக்காரன் என்பதற்கு பதில் பைத்தியக்காரன் என்று மாற்றி கொள்ளுங்கள்..
    சரியாய் இருக்கும்

    ReplyDelete
  3. //பாரதி ஒரு நிக்ழ்ச்சிக்கு காந்தியை அழைத்தார். அடுத்த நாள் வருகிறேனே என்றார் காந்தி. நமக்கு ஒத்து வராது மிஸ்டர் காந்தி , குட் பை என சொல்லி வெளியேறினார் பாரதி. அப்படிப்பட்ட சுயமரியாதைக்காரர் அவர். // sari மிஸ்டர் காந்திku suyamariyathai ellam irukatha....kopita udanay varanuma..???!!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]