குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்று வணங்கியதை சில நாட்கள் முன்பு எழுதினேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட நண்பர்கள் தாமும் ஒரு நாள் தர்க்கா செல்ல விரும்புவதாக சொல்லி , செல்லும் விபரங்களை கேட்டார்கள்.
அதே நேரம் இதை சிலர் கேலியும் செய்தார்கள். நாத்திக நண்பர்களோ , மாற்று மதத்தினரோ கேலி செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.
இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் . இறை நேசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என குழப்பினர்.
தான் வந்தால் எழுந்து நிற்க கூடாது என முகமது நபியே சொல்லி இருக்கிறார் என ஆதாரத்தையும் முன் வைத்தனர் . இது என்ன மேட்டர் என ஆராய்ந்து பார்த்த போதுதான் , அவர்கள் சொல்வதில் இருக்கும் தவறு புரிந்தது.
நபி அவர்கள் அப்படி சொன்னது உண்மைதான். அப்படி அவர் சொன்னார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னடக்கம். அது பொதுவான விதி அன்று. வேறு பல இடங்களில் , தகுதியானவர்கள் வந்தால் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என அவர் சொல்லி இருப்பது இஸ்லாமிய நூல்களில் பதிவாகி இருக்கிறது.
உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அவ்வளவு ஏன் ? மனிதன் இறந்த பின்னும் கூட மரியாதைக்கு உரியவனே என்கிறார் நபி. பிரேத ஊர்வலத்தை கண்டால் , அந்த ஊர்வலம் கடந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.
ஆக, நபி தன்னடக்கத்துக்காக சொன்ன ஒன்றை , பொது விதியாக கருதுவது தவறு.
சரி. இறை நேசர்களுக்கு சக்தி உண்டா என்பது அடுத்த கேள்வி.
அடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்கள் நிலை என்ன என்பதை நச் என இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன.
அதே நேரம் இதை சிலர் கேலியும் செய்தார்கள். நாத்திக நண்பர்களோ , மாற்று மதத்தினரோ கேலி செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.
இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் . இறை நேசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என குழப்பினர்.
தான் வந்தால் எழுந்து நிற்க கூடாது என முகமது நபியே சொல்லி இருக்கிறார் என ஆதாரத்தையும் முன் வைத்தனர் . இது என்ன மேட்டர் என ஆராய்ந்து பார்த்த போதுதான் , அவர்கள் சொல்வதில் இருக்கும் தவறு புரிந்தது.
நபி அவர்கள் அப்படி சொன்னது உண்மைதான். அப்படி அவர் சொன்னார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னடக்கம். அது பொதுவான விதி அன்று. வேறு பல இடங்களில் , தகுதியானவர்கள் வந்தால் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என அவர் சொல்லி இருப்பது இஸ்லாமிய நூல்களில் பதிவாகி இருக்கிறது.
உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அவ்வளவு ஏன் ? மனிதன் இறந்த பின்னும் கூட மரியாதைக்கு உரியவனே என்கிறார் நபி. பிரேத ஊர்வலத்தை கண்டால் , அந்த ஊர்வலம் கடந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.
ஆக, நபி தன்னடக்கத்துக்காக சொன்ன ஒன்றை , பொது விதியாக கருதுவது தவறு.
சரி. இறை நேசர்களுக்கு சக்தி உண்டா என்பது அடுத்த கேள்வி.
அடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்கள் நிலை என்ன என்பதை நச் என இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன.
மய்யத் அடக்கம் செய்யப்பட்ட உடன் நீல நிற கண்களுடைய இரண்டு கறுப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள்.
அவ்விருவரும், ''இந்த மனிதர் பற்றி என்ன கூறிக் கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். ''அவர் அல்லாஹ்வின் அடியார் அவனது தூதர் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயாமக முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்'' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாக கூறுவர்.
அதற்கவ்விருவரும், ''நீர் அவ்வாறு தான் கூறிக்கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவர். பிறகு அவரது அடக்கஸ்தலம் 70வதுக்கு 70 முழமாக விரிவுப்படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பிறகு அவரிடம், ''நீர் உறங்குவீராக'' என்று கூறிப்படும். அப்போது அவர், ''நான் என் குடும்பத்தினரிடம் சென்று சொல்ல வேண்டும்'' என்பார். அப்போது அவ்விருவரும், ''நெருக்கமான உறவினர் தவிர மற்றவர்கள் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவர்.
தேவை ஏற்பட்டால், வேண்டியவர்கள் எழுப்பினால் எழுப்பக்க்கூடிய தற்காலிக தூக்கம் போன்றதே இறை நேசர்கள் அடக்கம் ஆதல் என்பது எவ்வளவு அழகாக மணமகன் உறக்கம் என் சொல்லி இருக்கிறார்கள் என கவனியுங்கள்.
இறை நேசர்களை அடக்கம் செய்து விட்டு வருகிறீர்கள் அல்லவா? அப்போது எழும் உங்கள் காலோடி ஓசையை , அடக்கஸ்தலத்தில் இருந்து அந்த இறை நேசர்கள் கேட்பார்கள் என்கின்றன இஸ்லாம் நூல்கள்.
ஆனால் ஏக இறைவனே மட்டுமே வணங்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இறை நேசர்கள் அடக்க ஸ்தலங்களுக்கு சென்று மரியாதை செலுத்தலாம் . அப்படி செய்வது நல்லது .
இந்த உண்மைய புரிந்து கொண்டதால்தான் ஏ ஆர் ரகுமான் , கவிஞர் அப்துல் ரகுமான் போன்றோர் தர்க்காக்களை ஏற்கின்றனர்.
இஸ்லாம் பெரியோர்களின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக , இணையத்தில் மட்டும் சில இஸ்லாமிய நண்பர்கள் , தர்க்கா வழிபாட்டை கேலி செய்கின்றனர்..
என்ன செய்வது ?
ஸலாம் சகோ.பார்வையாளன்,
ReplyDelete"இன்னார் இறைநேசர்தான்" என்று நாம் ஒருவரை எப்படி முடிவு செய்வது..? அதனை உள்ளங்களை அறியும் இறைவன் அல்லவா சொல்லி இருக்க வேண்டும்..?!
அப்படி இறைவன் உயர்ந்த இறைநேசர்களாக திருமறையில் சொன்ன நபிமார்களின் கல்லறைகளையே தரைமட்டமாக்கும்படியும்...
அதன் மீது ஏதும் கல் வைத்து சமாதி கட்ட வேண்டாம் என்றும்...
அந்த சமாதியின் மீது ஏதும் ஆலயம் எழுப்பவும் வேண்டாம் என்றும்...
அபப்டி இருந்தால் அதனை இடித்து தரைமட்டமாக்கும்படியும்...
தான் உட்பட மற்ற எந்த நபிமார்களுக்கும் உருவமோ சிலைகளோ வைக்க வேண்டாம் என்றும்...
அப்படி வைத்தோர் அதனால்தான் இறைநேசராக இறைவனிடம் ஆகமுடியாமல் அழிந்து நாசமாக போயினர் என்றும் / நாசமாக போக இருக்கின்றனர் என்றும்...
நம்முடைய இறுதி இறைத்தூதர் மற்றும் இறைவன் தெளிவாக தடுத்து விட்டபிறகு...
அப்புறம் உங்களுக்கும் எனக்கும் மற்றவருக்கும் இறைநேசரை வணங்க என்ன உரிமை உள்ளது..?
நாம் இறைநேசரின் நேசராக இருப்பதை விடுத்து.... அதை விட சிறப்பாக... இறைநேசராகவே இருப்போமே சகோ..!
நண்பரே . சமாதி மீது பள்ளிவாசல் கட்டக்கூடாது என்ற விதியை யாரும் மீறவில்லையே ? தர்க்கா தானே கட்டுகிறார்கள் ? மரியாதை செலுத்த தர்க்கா , தொழுவதற்கு பள்ளிவாசல் என்பதில் குழப்பம் இல்லையே
ReplyDeleteஏக இறைவனை தவிர யாரையும் வணங்க கூடாது என்பது மறுக்க முடியாதது . ஆனால் இறைநேசர்களை மதிக்க வேண்டும் என்பதும் இறைவனின் கட்டளை ஆயிற்றே.
ReplyDeleteஸலாம்
ReplyDeleteஇறைநேசர்களை மதிக்க வேண்டும் இதில் மாற்று கருத்து கிடையாது சகோ ஆனால் இன்னார்தான் இறைநேசர் என்று நாமாக ஒரு முடிவுக்கு வருவது தான் பிரச்சனை. ஒருவர் இறைநேசர் என்றால் அது அல்லாஹ் வைதவிர வேறு யாருக்கும் தெரியாது சகோ
சகோ.பார்வையாளன்...!
ReplyDelete///சமாதி மீது பள்ளிவாசல் கட்டக்கூடாது என்ற விதியை யாரும் மீறவில்லையே ? தர்க்கா தானே கட்டுகிறார்கள் ?///---நான் எழுதி இருப்பதை தாங்கள் முழுதும் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்..! நான் சமாதியையே கட்டக்கூடாது என்றேனே..? கவனிக்கவில்லையா சகோ..?
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தோண்டப்பட்ட மண்ணை கொண்டு மட்டுமே ரொப்பி மூட வேண்டும்... ஒரு கைப்பிடி கூட வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து கப்ரின் மண் முட்டை 'உயர்த்த'க்கூடாது..! அப்புறம்... அதன் மேல் மொழுக கூடாது...! அப்புறம்... அதன்மேல் கல் வைத்து கட்டிடம் ஏதும் கூடாது...!
ஆதாரம் இல்லாமல் சொல்லலாமா நான்..?
ஒன்று:-
நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312
இரண்டு:-
கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும்,அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: திர்மிதி.
மூன்று:-
உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.
நான்கு:-
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)
ஐந்து:-
எனது கப்ரை விழாக்கள் (கந்தூரி, கொடி ஏத்தம், சந்தனக்கூடு, உரூஸ்) நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அபூதாவூத்.
---->தொடரும்......
--->தொடர்கிறது.........................
ReplyDeleteஆறு:-
நீ எனது கப்ரு(சமாதி)க்கு அருகில் நடந்து சென்றால் நீ அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “அவ்வாறு நான் செய்ய மாட்டேன்” என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள்.
அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத்(ரழி)
ஆதாரம் : அபூதாவூத் பக்கம் : 298 பாகம் 1
ஏழு:-
கப்ருகளை ஜியாரத் (விசிட்டிங்) செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
எட்டு:-
நபிகள் (ஸல்) கூறினார்கள்
அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும்கெட்டவர்கள்’
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
ஒன்பது :-
இறைவன் கூறுவதாவது:-
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் 2: 186)
பத்து:-
இறைவன் கூறுவதாவது:-
இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமைஅடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்த வர்களாய் நரகம் புகுவார்கள். (அல்-குர்ஆன் 40: 60)
இதற்கு அப்புறமும்... உங்களுக்கு.....
///குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்று வணங்கி.../// ...என்று எழுத எண்ணம் வருமா சகோ.பார்வையாளன்..?
மேற்படி "குணங்குடி மஸ்தான்" என்ற நபர் 'இறைநேசர்' என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது...? அவரைபப்ற்றிய குர்ஆன் வசனம்...? அல்லது அவரைப்பற்றிய இறைத்தூதர் ஹதீஸ் அறிவிப்பு...? மேற்படி தர்ஹா... கப்ர்-சமாதி... மேலே உள்ள கட்டளைகளுக்கு எதிராக உள்ளது அல்லவா..?
அப்புறம் உங்களை... ///இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.///...கிண்டல் செய்வதை விடுத்து சத்தியத்தை எடுத்து சொல்லி இருந்திருக்க வேண்டும்...! இந்த இடுகைக்கு வாய்ப்பு இல்லாமல்..! அவர்கள் தவறிவிட்டனர்..! எனவே, நான் கிண்டல் செய்யவில்லை..! 'சரியான இஸ்லாம் எது' என்று தங்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..!
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..! ஆமீன்..!
We Must pray to Allah Only.
ReplyDeleteWe should pray at Dharka.
Praying in Dharka is a HARAM.
We Must pray to Allah Only.
ReplyDeleteWe should NOT pray at Dharka.
Praying in Dharka is a HARAM.