Friday, July 6, 2012

நோட்ஸ் ஃபிரம் த அண்டர்கிரவுண்ட் - மனிதனின் இருப்பும் சவாலும்

   நண்பர் நிர்மலும் நானும் zorba the greek  நாவல் குறித்து , அப்போது படித்த்வற்றைப்பற்றி விவாதித்து கொண்டு இருந்தோம்.   ஒரு பாயிண்டை வலியுறுத்துவதற்காக தாஸ்தயேவ்ஸ்கியின்  notes from underground  நாவலின் முதல் அத்தியாயத்தில் இருந்து ஒரு பாயிண்டை எடுத்து அவர் பார்வைக்கு வைத்தேன்.

அதில் அவர் கன்வின்ஸ் ஆனோரோ இல்லையா , நான் கன்வின்ஸ் ஆகி விட்டேன் :) தொடர்ந்து அந்த அத்தியாயத்தை படித்தேன். அதன் பின் அடுத்த அத்தியாயம். நிறுத்த முடியவில்லை. நிறுத்த ஐடியா கேட்டேன். அதற்குள் அவர் zorba வில் ஆழ்ந்து விட்டார்.

இரவு முழுதும் கண் விழித்து படித்து முடித்தேன். சிறிய நாவல்தான் . ஆனால் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது.

தாஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் படித்து இருந்தாலும், இந்த நாவல் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

 இந்த நாவலில் வரும் சம்பவங்க்ளை அப்படியே நேரடியாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. உள்ளர்த்தத்தை தேடியாக வேண்டும். எனவே மீண்டும் மீண்டும் படிக்க வேண்டி இருந்தது.


   இந்த நாவல் எதைப்பற்றி பேசுகிறது ?


          ஒரு பேனா தயாரிக்க விரும்புகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள். அந்த பேனாவின் பயன்பாடு என்ன ,,அது எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம்  முடிவு செய்து விட்டுதான் தயாரிக்க ஆரம்பிப்பீர்கள். அதாவது அதாவது அந்த பேனா உலகிற்கு வருவதற்கு முன்பே அதன் வாழ்வின் அர்த்தம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

        கிட்டத்தட்ட நாம் பார்க்கும் எல்லாமே அப்படித்தான். ஒரு கார் , கம்யூட்டர் , மரம் என எல்லாமே அதன் வாழ்வின் அர்த்தம் தெரிந்த பின்பே உருவாகின்றன.

இதை எல்லாம் பார்க்கும் நாம் , மனித வாழ்வுக்கும் ஏதோ அர்த்தம் இருப்பதாக நினைக்கிறோம். ஒரு செருப்பை தயாரிப்பவனே , தன் தயாரிப்புக்கு அர்த்தம் கொடுத்த பின் தான் தயாரிக்கிறான். அப்படி இருக்க , பகுத்தறிவு கொண்ட மனிதனை படைத்த இறைவனோ , இயற்கையோ கண்டிப்பாக மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கொடுத்துதான் படைத்து இருக்கும் என நம்புகிறோம். அல்லது முன் பிறவி பாவம் தீர்க்க பிறப்பதாக வாழ்விற்கு அர்த்தம் கொடுக்க முயல்கிறோம்.

ஆனால் நடைமுறையில் , வாழ்க்கை அபத்தமாகவும் , லாஜிக் இல்லாமலும் இருக்கிறது. அதாவது 150 சி சி பைக் , 100 சி சி பைக்கை விட சக்தி மிக்கதாக இருப்பது லாஜிக், ஆனால் மனித வாழ்க்கை அப்படி லாஜிக்காக இருக்காது,  புத்தி உள்ள மனிதன் தோல்வி அடையலாம். வெற்றி பெற்ற மனிதன் புத்தி சாலி இல்லாமல் போகலாம்.

இப்படி யோசித்தால் , மனிதன் எந்த நோக்கத்துக்காகவும் படைக்கப்படவில்லை.. தன் நோக்கத்தை , வாழ்வின் பொருளை அவனவன் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கோட்பாடு தோன்றியது. அப்படி வாழ்வுக்கான பொருளை உருவாக்குதல்தான் உலகில் ஒருவனின் இருத்தலுக்கான அடையாளம். உன் வாழ்க்கைக்கு நீயே முழு பொறுப்பாளி. அதாவது படைப்புக்கு பிறகுதான் , படைப்புக்கான அர்த்தம் .


 முன்பு பார்த்த உதாரணங்களுக்கு நேர் எதிர்.

ஆனால் நம் வாழ்வின் அர்த்தத்தை நாமே உருவாக்கி கொள்ளுதல் எளிதல்ல. நாம் அர்த்தத்தை மற்றவர்களே முடிவு செய்யவே முயல்வார்கள். யோசித்து பார்த்தால் , சமூகம் , பெற்றோர்கள் , குடும்பம் என பலரும் சில விதிகளை உருவாக்கி , ஒருவனை கட்டுப்படுத்தவே பார்ப்பார்கள். இதை எல்லாவற்றையும் மீறி , ஒருவன் தன் வாழ்வுக்கான அர்த்தத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இப்படி அதிகாரத்தை மீறுகிறேன் என சொல்லிக்கொண்டு வேறு வகை விதிகளை உருவாக்கி கொண்டு அதில் சிக்கி கொள்ள கூடாது.

  பெரிய பணக்காரன் ஆவது , புகழ் பெறுவது போன்றவைதான் வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பவை என நினைக்க கூடாது. Life is beautiful படத்தின் நாயகன் , நாஜிக்களின் சிறையில் இருந்தபோதும் , ஓர் அர்த்தம் உள்ள வாழ்வானே ..அது போல எந்த நிலையிலும் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கலாம். அல்லது பொருளற்ற வாழ்வை வாழ்ந்து முடிப்பதானாலும் ஓகே.. அவரவர் விருப்பம். 

இப்படி தன்னையும் , தான் சார்ந்த உலகத்தையும் வரையறை செய்து ஆதற்கு அர்த்தம் கொடுக்க முயன்ற ஒருவரின் கதைதான் நோட்ஸ் ஃபிரம் அண்டர்கிரவுண்ட்.
கதா நாயகன் தன் கதையை தானே சொல்வது போன்ற பாணியில் கதை அமைந்துள்ளது. ஆனால் இந்த கதா நாயகன் , தான் கிடையாது என தாஸ்தயேவ்ஸ்கி ஆரம்பத்திலேயே உணர்த்தி விடுகிறார். கதா நாயகனின் சில கருத்துகளில் அவர்க்கு உடன்பாடு இருக்கலாம். ஆனால் இது அவரைப்பற்றிய கதை இல்லை.

தான் பெரிய வீரன், அழகன் என கதை சொல்ல ஆரம்பிக்காமல் ,


I am a sick man. ... I am a spiteful man. I am an unattractive man. I believe my liver is diseased. However, I know nothing at all about my disease, and do not know for certain what ails me.

என்று ஆரம்பிக்கும்போதே அட என தோன்றுகிறது. உலக இலக்கிய / சிந்தனை போக்கையே மாற்றி அமைத்த நாவலின் முதல் வரிகளை படித்து கொண்டு இருக்கிறோம் என்பதை நன்றாக உணர முடிகிறது.


 நோயுற்ற , வயதான , தனிமையில் வாழும் ஒருவர் தன்னைப்பற்றி வெறுப்புடன் சொல்லிக்கொள்ளும் இந்த பாணி நாவல் முழுதும் தொடர்கிறது. முதல் பகுதியில் இவரது சிந்தனைகள் , டைரி குறிப்புகள் போல தரப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் இவரைப்பற்றிய மன சித்திரம் தெளிவாக கிடைக்கிறது. இரண்டாம் பகுதியில்தான் , நாம் வழக்கமாக படிக்கும் கதை நடக்கிறது.


When petitioners used to come for information to the table at which I sat, I used to grind my teeth at them, and felt intense enjoyment when I succeeded in making anybody unhappy


It was not only that I could not become spiteful, I did not know how to become anything; neither spiteful nor kind, neither a rascal nor an honest man, neither a hero nor an insect



இப்படி தன்னைப்பற்றிதாழ்வாகவே சொல்லிக்கொள்ளும் இவரிடம் இருக்கும் ஒரே ஒரு பிளஸ் பாயிண்ட் , இவரது அறிவாற்றல்தான் , ஆனால் இந்த அறிவாற்றல்தான் இவரது பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்.


   தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடும் இவர் ஒரு கட்டத்தில், தன் வாழ்க்கைக்கு எந்த பொருளும் இல்லையோ என்ற பீதிக்கு ஆளாகிறார். கஷ்டத்திலேயே உழலும் நிலை வரும்போது , அதையே ஒரு கட்டத்தில் எஞ்சாய் நிலைக்கு வருவது போல, தன்னையே ஆறுதல் படுத்தி கொள்கிறார்.

” முட்டாள்கள் மட்டுமே எதைப்பற்றியும் தீர்மானமாக கருத்து சொல்லி , உறுதியாக செயலாற்ற முடியும். அறிவாளிகளுக்கு எது குறித்தும் சந்தேகமே இருக்கும் :” என சொல்லி தன் செயலின்மைக்கு நியாயம் கற்பிக்கிறார்.


oh, if I had done nothing simply from laziness! Heavens, how I should have respected myself, then. I should have respected myself because I should at least have been capable of being lazy; there would at least have been one quality, as it were, positive in me, in which I could have believed myself.

தனக்கான வாழ்க்கையை தானே வரையறை செய்யும் ஆசை ஒரு புறம் ,  வாழ்க்கையின் சவாலை எதிர்கொள்ள ஏற்படும் பயம் ஒரு புறம் , சித்தாத்தங்களுக்கும் ய்தார்த்தத்துக்கும் ஏற்படும் முரண்பாடுகள் , செயலின்மையில் நம்மை தள்ளுவதை அருமையாக சித்திரித்து இருப்பார் தாஸ்த்தயேவ்ஸ்கி. நடப்பது நடக்கட்டும் என்ற சரணாகதி மனப்பான்மை

இந்த கட்டத்தில் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. சிந்தனை பகுதி முடிந்து செயல்பகுதி ஆரம்பிக்கிறது. உலகத்துடன் தொடர்பு கொள்ள முயன்றபோது என்ன ஆயிற்று என்பதை சொல்கிறது இரண்டாம் பகுதி.

கதை சொல்லியின் இருப்பையே புறக்கணிக்கும் ஓர் அதிகாரி. அவனை ஓர் ஆளாகவே அவர் மதிப்பதில்லை.. இந்த கொடுமையின் உச்சம் என்னவென்றால் , இவன் ப்ழிவாங்க முனையும்போது, அதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

சில நண்பர்களுடன் விருந்துக்கு செல்கிறான். அவர்களுடன் நல்ல உறவு இல்லாதிருந்தபோதும் கூட , தானும் வருவதாக சொல்லி  விருந்துக்கு செல்கிறான் . குறித்த நேரத்தில் சென்று விடுகிறான். ஆனால் விருந்தின் நேரம் மாற்றப்பட்டதை இவனுக்கு சொல்ல மறந்து விடுகிறார்கள். இதனால் ஏற்பட்ட கசப்பு அடுத்தடுத்த சம்பவங்களால் பெரிதாகிறது. அவர்களுடன் இவனால் ஒட்ட முடியவே இல்லை.

தனித்துவத்தை பேண வேண்டிய ஆசை, அதே சமயம் ஒரு குழு அல்லது இனத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ள ஏற்படும் துடிப்பு என்ற இருமை நிலை அபாரமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.

அங்கே லிசா என்ற பாலியல் தொழிலாயை சந்திக்கிறான். அவளுடன் அன்பாக பேசுகிறான். முதல் முறையாக காதல் பற்றியெல்லாம் பேசுகிறான். அவன் பேச்சில் அவளும் ஈடுபாடு காட்டுகிறாள். அவனை பார்க்க மீண்டும் வருகிறாள்.
இவன் மீண்டும் பழைய பாணிக்கு மாறி கசப்பான , வெறுப்பான மனிதனாகிறான். அவளை அவமானப்படுத்துகிறான்.

அவள் சோகத்துடன் அவன் வாழ்க்கையை விட்டு பிரிகிறாள்.

 நம் பார்வைக்கு அவன் வாழ்க்கையில் , அனைத்து விதங்களிலும் தோற்று விட்டான் என தோன்றுகிறது. ஒரு நல்ல பெண்ணை இழந்தது வீழ்ச்சியின் உச்சம் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் அவனுக்கு அது வெற்றியே.. அவன் தன்னைப்ப்பற்றியும் , உலகத்தை பற்றியும் புரிந்து கொண்டு விட்டான். தான் யார் என அவனால் வரையறை செய்து கொள்ள முடிகிறது.  அதே போல அவனை பொருத்தவரை உலகம் என்றால் என்ன என்பதற்கான அர்த்தமும் அவனுக்கு பிடிபடுகிறது.

   இதை விட வேறு என்ன வேண்டும் அவனுக்கு.

   தன் தனி உலகில் ( அண்டர்கிரவுண்ட் ) இருந்து  கொண்டே  ,  அதை கைவிட மனம் இல்லாமலேயே , வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பிகிறான். அதில் இருந்தே வெளி உலகத்தை பார்க்கிறான் என்பது முக்கியமான குறியீடு.

இதன் முடிவு இன்னும் ஆழமானது. எழுதுயது போதும் என டைரி குறிப்பை முடிக்க விரும்புகிறான். ஆனால் இந்த எளிய விஷய்த்தை கூட அவனால் செய்ய முடியவில்லை. முடிக்க முடிவு செய்த பின்பும் எழுதிகொண்டே செல்கிறான். ஆனால் நாம் இத்துடன் முடித்து கொள்வோம் என  நாவலாசியர்  நாவலை முடிக்கிறார்.

 ஒரு மனிதனின் இருப்பை , போராட்டத்தை , உலகின் புரிதலை இவ்வளவு ஆழமாக அதே சமயம் சுருக்கமாக சொன்ன நாவல் வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை


 நாவல் பெயர்    - Notes from the underground
 எழுதுயவர்         - தாஸ்தயேவ்ஸ்கி
  வெர்டிக்ட்          - ultimate




7 comments:

  1. இந்த புத்தகத்தோட முதல் பக்கத்த மட்டும் நான் படிச்சுட்டு வச்சுட்டன்..ஆனா தொடக்கம் செம வித்யாசமா இருந்தது.....நீங்களும் வேற சொல்லிட்டீங்க...அதனால அடுத்த வாரம் இந்த புக்க நெட்ல போட்டுரன்...அப்புறம்...LIFE IS BEAUTIFUL படத்த நான் ஆறு வயசுல பாத்தன்....அத பத்தி நீங்க எழுதனதும் ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  2. இந்த புத்தகத்தோட முதல் பக்கத்த மட்டும் நான் படிச்சுட்டு வச்சுட்டன்..ஆனா தொடக்கம் செம வித்யாசமா இருந்தது.....நீங்களும் வேற சொல்லிட்டீங்க...அதனால அடுத்த வாரம் இந்த புக்க நெட்ல போட்டுரன்...அப்புறம்...LIFE IS BEAUTIFUL படத்த நான் ஆறு வயசுல பாத்தன்....அத பத்தி நீங்க எழுதனதும் ரொம்ப சந்தோசம்.

    ReplyDelete
  3. எனக்கும் பிடித்த நாவல் இது.
    நான் தற்செயலாக கீழே குறிப்பிட்ட BLOG-ல் படித்த இந்த என்னால் ஏற்றுக்கோள்ள முடியவில்லை. சில கருத்துகள் முட்டாள்தனமாகவும் தெரிகிறது, பிச்சைகாரனுக்கு எப்படியோ?

    http://meditateguru.wordpress.com/

    ReplyDelete
  4. Excellent review.....One of the best novels

    ReplyDelete
  5. நான்இந்த நாவலை அணுகிய விதம் கொஞ்சம் வேறுமாதிரி தோன்றுகிறது இப்போது யோசிக்கையில்.. நீங்கள் ஜின்ஸ்பர்க்'கின் மொழிப்பெயர்ப்பை வாசித்திரக்கிரீர்கள் என்று நினைக்கிறேன்.. அல்லது கார்னெட்?

    ReplyDelete
    Replies
    1. வாவ்... நீங்க படிச்சு இருக்கீங்களா...சூப்பர்...உங்க வாசிப்பு அனுபவத்தை தெரிந்து கொள்ள ஆவல்

      Delete
    2. இதையும் the gamblerயும் பற்றி தனி பதிவாகவே எழுதணும்.. கூடிய விரைவில்..

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா