கடவுள் அணு என அழைக்கப்படும் நுண்மையான அணுவைப்பற்றி செய்தி சென்ற வாரம் ஹாட் நியூசாக இருந்தது. ஸ்விஸ்- ஃப்ரான்ஸ் எல்லையில் இருக்கும் செர்ன் ஆய்வகத்தில் இந்த கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இது குறித்து குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் இருந்து சில பகுதிகள் ..
*****************************************
இது குறித்து குருமூர்த்தி கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் இருந்து சில பகுதிகள் ..
*****************************************
- இந்த கண்டுபிடிப்புக்கு பிள்ளியார் சுழி போட்டவர் நம் நாட்டு விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் என்ற இளைஞர். 1924ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ஆராய்ச்சி கட்டுரை அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 309. அவரும் ஐன்ஸ்டீனும் செய்த ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட் என்ற கண்டு பிடிப்புதான் , இந்த கடவுள் அணு ஆராய்ச்சியின் ஆரம்ப புள்ளி
- அதனால்தான் இந்த அணுவை ஹிக்ஸ்-போசான் என அழைக்கிறார்கள்
- இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம் , பரிமாணம் சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும் , கேள்விகளுக்கும் விடை அளிக்கும். எனவேதான் செல்லமாக கடவுள் அணு என்கிறார்கள்.
- “ இந்தியாதான் கடவுள் அணு கண்டு பிடிக்கும் முயற்சிக்கு தாய் என செர்ன் விஞ்ஞானிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பாளர் பாவ்லோ குபிலோனோ 2011ல் வெளிப்படையாக அறிவித்தார்.
- செர்ன் விஞ்ஞான கூடத்தில் 6 அடி உய்ரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை ( நடனமாடும் சிவன் சிலை ) அமைக்கப்பட்டுள்ளது. சிவனின் நடனத்துக்கும் , உப அணுக்களின் நடனத்துக்கும் இடையேயான தொடர்பை ப்ரிட்ஜாப் காப்ரா எனும் பௌதீக விஞ்ஞானிமுதன் முதலாக கண்டு பிடித்து எழுதினார். இதை விரிவாக The Tao of Physics என்ற தலைப்பில் புத்தகமாக எழுதினார். இது விற்பனையில் சாதனை படைத்தது. இந்த நூலின் சில வரிகள் அந்த விஞ்ஞா கூடத்தில் இருக்கும் சிலைக்கு அருகே பொறிக்கப்பட்டுள்ளன
- காப்ராவுக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தின் மூலமே நடராஜர் நடனத்துக்கும் , அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார்.
- இந்த அபார கண்டுபிடிப்புக்காக போஸுக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டும் . ஆனால் அந்த பரிசை இத்தாலியர் ஒருவருக்கு வழங்கினார்கள். இந்தியாவும் அவரை பெரிய அளவில் கவுரவிக்கவில்லை. போனால் போகிறது என ஒரு பத்மபூஷன் விருதை வழங்கினார்கள்.
******************************************************
//செர்ன் விஞ்ஞான கூடத்தில் 6 அடி உய்ரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை ( நடனமாடும் சிவன் சிலை ) அமைக்கப்பட்டுள்ளது. //
ReplyDeleteஇதற்கெல்லாம் ஏதேனும் ஆதாரம் இருக்கா ? வெறும் செவி வழி செய்தி தானா ?
@கோவி.கண்ணன்... ஆதாரம் இல்லாமல் சொல்வேனா? உங்களுக்காக தனி இடுகை போட்டுள்ளேன் ..பாருங்கள்
ReplyDeleteசெர்னில் சிவன் சிலை- நண்பர் கோவி.கண்ணன் சந்தேகமும் , விளக்கமும்
ReplyDelete