Pages

Sunday, July 22, 2012

கமல் படத்தை பார்த்து இன்ஸ்பைர் ஆனாரா ? -குவாண்டின் டொரண்டினோ என்ன சொல்கிறார் ? உண்மை விளக்கம்.


கமலுக்கு ஏன் உலக அளவில் பரிசுகள் கிடைக்கவில்லை என் சாரு நிவேதிதாவிடம் கேட்கப்பட்டது. மொழி மாற்றம் செய்வதற்கு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டால் , கண்டிப்பாக அவருக்கு பரிசு உண்டு என சாரு கிண்டலாக பதில் அளித்தார்.

ஆங்கில படங்களை பார்த்து அரை குறையாக புரிந்து கொண்டு , அதை கேவலமாக மொழி மாற்றம் செய்து , தோல்வி படங்கள் அளிப்பவர் கமல். நான் நன்றாகத்தான் படம் எடுத்தேன் .மக்களுக்கு புரியவில்லை என சொல்லி விடுவார்.

சரி.. காப்பி அடிப்பது அவர் உரிமை.. நாம் என்ன செய்வது , செய்து தொலைக்கட்டும் என ரசிகர்கள் விட்டு விட்டார்கள். ஆனால் சமீபத்தில் படு பயங்கர காமெடி ஒன்றை அரங்கேற்றி அனைவரும் திகைக்க வைத்து விட்டார் அவர். அவரைப்பற்றியும் , அவரது டிராமாக்களையும் அந்த காலத்தில் இருந்து பார்த்து வருபவர்கள்கூட இந்த காமெடியால் அதிர்ந்து போனார்கள்.

என்ன காமெடியை அரங்கேற்றினார்? சொல்கிறேன்.

ஒரு பத்திரிக்கையில் கமல் பேட்டி அளித்தார். “பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவாண்டின் டொரண்டினோ என் படமான ஆள வந்தானை பார்த்துதான் , தன் படத்தில் அனிமேஷன் யுக்தியை பயன்படுத்தியாதாக கூறியுள்ளார். நம் ஆட்களுக்குதான் என் அருமை புரியவில்லை. ஆனால் உலக அளவில் பிரபலமான அவருக்கு என் அருமை புரிந்து இருக்கிறது. அவருக்கு நன்றி “


இதை படித்த நமக்கு அதிர்ச்சி. ஆள வந்தான் படத்தின் தயாரிப்பாளர் “ ஆள வந்தான் , என்னை அழிக்க வந்தான்” என கண்ணீர் பேட்டி அளித்தார் . அந்த அளவுக்கு அந்த படம் கேவலமான படு தோல்வி அடைந்தது . தமிழில் மட்டும் அல்லாமல் , தெலுங்கு , ஹிந்தி , சமஸ்கிருதம் , துளுவம் என பல மொழிகளில் வெளியாகி அனைத்திலும் தோல்வி அடைந்தது.


நம் ஆட்களே பார்க்க முடியாத அந்த குப்பையை குவாண்டின் டொரண்டினோ எப்படி பார்த்து இருப்பார் ? அபப்டியே தப்பி தவறி பார்த்து இருந்தாலும், இனி படம் எடுக்கும் ஆசையே போய் இருக்குமே தவிர , இன்ஸ்பைர் ஆகி , இதே போன்ற காட்சியை எப்படி தன் படத்தில் வைத்து இருக்க முடியும்?

அவர் என்னதான் சொன்னார் ? அது எப்படி திரிக்கப்பட்டது என , அவர் பாராட்டியதாக வெளியிடப்பட்ட செய்தியை பார்த்தேன்.


  • அவர் அந்த படத்தை பற்றி பாராட்டி கமலிடம் பேசவில்லை
  • அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடமும் பேசவில்லை.
  • பட தயாரிப்பாளரிடமும் பேசவில்லை 


உண்மையிலேயே பாராட்ட வேண்டும் என நினைத்தால் , இவர்களிடம் அல்லவா தொடர்பு கொண்டு இருக்க வேண்டும் . அல்லது சம்ப்ந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி இருக்கலாம்.

  ஆனால் இவர்கள் யாரையுமே அவருக்கு தெரியாது .

சரி.. அந்த செய்தி வெளியான பத்திரிக்கையின் நிருபரிடம் இவ்வாறு பாராட்டி பேசினாரா?

அதுவும் இல்லை ..

என்ன எழவு இது... சரி... யாரிடம்தான் பாராட்டினாராம்..?

 அவர் பாராட்டி பேசியதாக னுராக் காஷியப் அந்த பத்திரிக்கையிடம் சொன்னாராம்..


  ஓஹோ... அனுராக் காஷியப்பிடமாவது பாராட்டினாரா?


   அதுவும் இல்லையாம்...     


      நமன் ராமச்சந்திரனிடம் பாராட்டி பேசினாராம். அதை அவர் இவரிடம் சொன்னாராம். இவர் அதை இவரிடம் சொல்ல , அவர் பத்திரிக்கை நிருபரிடம் சொல்ல , அது பிரசுரமாக , அதை கமல் நம்மிடம் சொல்லி , இந்த “ பாராட்டுக்கு “ மகிழ்ந்து கொள்கிறார்.


     இப்படி ஒரு அதிகாரபூர்வமற்ற பாராட்டுக்கு ஒரு சீனியர் கலைஞரான  கமல் மகிழ்வது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது... கமல் நடிப்பில் கொஞ்சம் முன் பின் இருந்தாலும் , சீனியர் கலைஞர் என்ற முறையில் அவரை மதித்தே ஆக வேண்டும். அப்படிப்பட்ட சீனியர் , இந்த “ செய்தியை “ கேள்விப்பட்டு என்ன சொல்லி இருக்க வேண்டும்?


   “ இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. அனிமேஷன் சீக்வன்ஸ் பல படங்களில் ஏற்கனவே வந்து , பிரபலமாக இருக்கும் யுக்திதான். என் படத்தில் அது பயன்படுத்தப்பட்டதற்கும் , அவர் படத்தில் பயன்படுத்தப்பட்டதற்கும் , அடிப்படையிலேயே பல வித்தியாசஙக்ள் உள்ளன. அந்த படத்தில் கொலைகான காரணம் வேறு,. என் படத்தில் வேறு காரணம். அனிமேஷனின் பின்புலத்தை அந்த படத்திலேயே காட்டி இருப்பார்கள் “ என்று சொல்லி இருந்தால் , கில் பில் படத்தை பார்த்த ரசிகர்கள் மனதில் கமல் மரியாதை கூடி இருக்கும். 


             இப்போதோ , கமலுக்கு நடிக்கத்தான் தெரியவில்லை. படங்களை புரிந்து கொள்ளவும் தெரியவில்லை போலிருக்கிறதே என நினைக்க வேண்டி இருக்கிறது..     
     
         வெகு வெகு சாதாரண அறிவு இருப்பவர்கள்கூட கில் பில் படத்தை பார்த்தால் , இயக்குனர் எந்த கலாச்சாரத்தால் கவரப்பட்டு, அதை படத்தில் பயன் படுத்தி இருக்கிறார் , அந்த கார்ட்டுன் கேரகடர் எந்த நாட்டை சேர்ந்தவள் என்பதை புரிந்து கொள்ள முடிய்ம் , அந்த அளவுக்கு தெளிவாக சின்ன பிள்ளைக்கு பாடம் சொல்லி தருவது போல சொல்லி இருப்பார்கள்.


              ஒரு சீனியர் நடிகர் இதைக்கூட புரிந்து கொள்ளாமல் , அந்த பத்திரிக்கையின் கேலியை புரிந்து கொள்ளாமல் வருத்தம் அளிக்கிறது..


 சரி..யாரைப்பார்த்து அவர் இன்ஸ்பைர் ஆனாராம்? டொரண்டினோ சொல்கிறார்..பாருங்கள்..

*******************************************************************


Was it your intention to let the audience know that this was a very black comedy?




Quentin Tarantino (QT): Definitely, that's definitely the case. I've done violence before but I've never done it in such an outrageous way. Not that I have any problem with it when it's not outrageous but this is definitely not taking place on planet Earth and is actually just using a lot of Japanese filmmaker influences.

It's a standard staple in Japanese cinema to cut somebody's arm off and have them have water hoses for veins and I'm keeping that tradition alive

   
****************************************************************

5 comments:

  1. ஏம்பா பிச்சைக்காரா... கமலுக்கு ஒண்ணும் தெரியல சரி... ஒமக்கு எத்தனை விசயம் தெரியும் நீ எத்தன படத்த எடுத்து இயக்க்க்க்க்க்கிகிகிகிகி கிளிச்சுருக்கீருன்னு சொல்ல முடியுமா... உம்ம கட்டுரைக்கு பின்னூட்டமே காணமே... எப்பா.. எதோ பிளர்க்குல எளுதறோம்னு பெரிய உலக மகா அறிவாளின்னு நெனப்பா..கமலுக்கு ஒண்ணும் தெரியல சொல்ல வன்ட்ட....

    ReplyDelete
  2. UNMAYAI KURINAL EVVALAVU AATHIRAM

    ReplyDelete
  3. unmai koorinal evvalavu athiram ayya Anonymous

    ReplyDelete
  4. தன் பெயர் கூடச் சொல்லத் தைரிமில்லாதவர்களே , கமலின் பலம்.
    இப்பதிவில் கூறப்பட்டவற்றைக் கமல் ஒப்புக்கொண்டாலும், இந்த விசிலடிச்சான் குஞ்சுகள்.
    கொக்கரிப்பார்கள்.

    ஒரு யானைக்கால் வியாதிக்காரரின் காலைப் பார்த்து, இவருக்கு யானைக்கால் வியாதி உள்ளது எனக்கூற, டாக்டருக்குப் படித்திருக்க வேண்டும்? அத்துடன் அந்த டாக்டருக்கு யானைக்கால் வியாதியும்
    வந்திருக்கவேண்டும் என எண்ணும் அறிவுக் கொழுந்துகள் இந்தப் பெயர் சொல்ல அஞ்சுவோர்.

    கமலின் சிறப்பைக் கெடுக்க வேறு யாருமே தேவையில்லை.

    ReplyDelete
  5. என் பெயரை சொல்ல அஞ்சத் தேவை என்ன.. நான் கமலின் விசிலடிச்சான் என்றால் VinParthi mathuran போன்ற நீங்கள் (என்ன பெயரோ.. அல்லது பெயரின் பின் யார் ஒளிந்துள்ளீரோ) பிச்சைக் காரனின் விசிலடிச்சான் என்பதை ஒப்புக் கொள்வீரா...? யானைக்கால் வந்திருப்பதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் ஒரு மருத்துவர்தான் குணப்படுத்த முடியும்... உலகில் எத்தனையோ திரைப்படங்கள் திரைப்படக் கலைஞர்கள் இருக்க எத்தனை முட்டாள்தனமாக படம் எடுத்துக் கொண்டிருக்க அடுத்த சிஎம் ஆகலாமா என்று அரைகூட வேகதாவர்கள் ஆர்ப்பரிக்க... கமலை மட்டும் தாக்கும் அரசியல் ஒரு அசிங்க அரசியலே என்பதைத்தான் கூற வருகிறேன்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]