Pages

Monday, July 23, 2012

வான்கோழியை பார்த்து மயில் காப்பி அடித்ததா? - கமல் காமெடியும், டொரொண்டினோ பேட்டியும்.



தன்னுடைய வித்தியாசமான படங்களால் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குனர்   க்வாண்டின் டொரண்டினோ .  தான் பல படங்களைப்பார்ப்பதாகவும் , அவற்றின் மூலம் கற்றுகொள்வதாகவும் அடக்க்கத்துடன் சொல்லிக்கொள்கிறார்,  மற்ற படங்களில் இருந்து கற்பதை பெருமையாகவே சொல்கிறார்.  ஒரு வேளை இந்திய படங்கள் பார்த்து இன்ஸ்பைர் ஆகி இருந்தால் அதை சொல்லி இருப்பார். ஆனால் அப்படி எங்கும் சொன்னது இல்லை.

கமல் ஆதரவாளர்கள் , கமல் படம்தான் அவருக்கு இன்ஸ்பிரேஷன் என்று ஒரு கற்பனை செய்தியை கிளப்பி விட்டனர். அனுபவசாலியான கமல், உண்மைத்தன்மையை அறியாமல், இந்த கற்பனை செய்தியால் மகிழ்ந்து டொரோண்டினோவுக்கு நன்றி தெரிவித்தார். டொரண்டினோவுக்கு யார் இந்த கமல் , ஏன் நன்றி சொல்கிறார் என புரியாமல் விழித்தார்.

    சிலரின் விளையாட்டில் , தான் ஏமாந்து போய் கேலிப்பொருள் ஆனதை , கமல் தாமதமாகத்தான் உணர்ந்தார்.

 கில் பில் படம் ரிலீஸ் ஆன கால கட்டத்தில் டொரண்டினோ அளித்த பேட்டி , உங்கள் பார்வைக்கு...


****************************************************************


உங்களுக்கு சினிமா எடுப்பதற்கான ஊக்கம் , சினிமாவில் இருந்து கிடைக்கிறதா அல்லது வாழ்க்கையில் இருந்து கிடைக்கிறதா ?

   ( சிரிக்கிறார் ) இரண்டுமே பாதி பாதி என நினைக்கிறேன் . 50 -50 . சினிமா பார்ப்பதன் மூலம் தற்போதைய சினிமாவின் போக்கை அறிந்து கொள்ள முடிகிறது.  சில படங்கள் ஊக்கம் அளிக்கின்றன., சினிமா வட்டாரத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது புரிகிறது. அதே நேரத்தில் வாழ்க்கையில் இருந்து நிறைய கற்று கொள்கிறேன்.

  கில் பில் படத்தை பற்றி பேசலாமா?

    தாராளமாக..


உங்கள் படைப்பின் உச்சம் என கில் பில்  படத்தை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். பல்ப் ஃபிக்‌ஷனில் இருந்து இந்த படம் எந்த வகையில் மாறுபட்டது ?

  இது வரையிலான எனது படைப்புகளில் முழு நீள குங் ஃபூ  ஆக்‌ஷன் படம் இதுதான்.  பழி வாங்க முனையும் கொலைகாரியின் கதை இது. பார்ப்பவர்களை பைத்தியமாக அடிக்கும் வகையில் சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுக்க உள்ளன. சீன பாணியிலான குங்ஃபூ பாதிப்பில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய வகையிலான சினிமா எடுக்கும் என் முயற்சி இது.  நான் கற்பனை செய்த அளவுக்கு படத்தை எடுக்க முடியுமா என்பதே என் முன் இருக்கும் பெரிய சவால்.

வெளியே நிறைய புறாக்களை பார்த்தேன். புறாக்களும் படத்தில் உண்டா?

( சிரிக்கிறார் ) அய்யய்யோ.. அதெல்லாம் இல்லை. அந்த அழகிய புறாக்கள் எப்படி இங்கு வந்தன என எனக்கு தெரியாது.  சில நாய்களும் முயல்களும் கூட இங்கே வளர்கின்றன.

குற்றப்பின்னணி கொண்ட படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, உண்மையான குற்றவாளிகளிடம் பேசி தகவல் சேகரிக்கிறீர்களாமே?

 எனக்கு அவ்வளவாக யாரையும் தெரியாது. என் அனுபவங்களை வைத்தே கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். நான் சேர்க்கும் சுவையான விஷ்யங்களால் அது உண்மை போல தோற்ற்ம் அளிக்கிறது.



 தனக்கு பிடித்த பொம்மையுடன் ஆசையாக விளையாடும் குழந்தையின் உற்சாகத்தை போல , சினிமா மீது தணியாத ஆர்வத்துடன் இருக்கிறீர்கள்

உண்மைதான், முதலில் நான் ஒரு நல்ல ரசிகன். சினிமா பார்க்காத ஒரு சினிமா படைப்பாளியை கற்பனை செய்யவே முடியவில்லை

உலக சினிமாவின் மாணவன் என உங்களை சொல்லிகொள்வது உங்கள் வழக்கம்.

உண்மைதான்.

மற்றவர்களிடம் இருந்து என்ன கற்று கொண்டீர்கள்.

என்னுடைய அனைத்தும் - திரை மொழி, தனி பாணி போன்றவை - சினிமாவில் இருந்து கிடைத்தவைதான். மற்றவர்களிடம் இருந்து ஏராளமாக கற்றுக்கொண்டேன்.  சினிமாவின் தற்போதைய போக்கை அவர்களிடம் இருந்தே கற்றேன். என் அனுபம் மூலம் அவற்றை கிரகித்து எனக்கேற்ற பாணியை உருவாக்கி கொண்டேன். படைப்பாளி என்ற முறையில் திறந்த மனத்துடனும் , எல்லாவற்றில் இருந்தும் கற்கும் திறனுடனும் , நுண் உணர்வுடனும் நான் இருந்தாக வேண்டும்.

பல படங்களில் நடித்தும் இருக்கிறீர்கள். நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் , உங்களுக்கு நெருக்கமான கதாபாத்திரம் எது ?

 எதுவும் இல்லை. நான் வேறு, நான் ஏற்கும் கதாபாத்திரங்கள் வேறு. பல்ப் ஃபிக்‌ஷனில் வரும் ஆசாமி நான் அல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. பைபிளை அடிப்படையாக வைத்து நீங்கள் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?

( ஆச்சர்யம் அடைகிறார் ) அட. சுவையான கேள்வி. சுவாரஸ்யமான விஷ்யம். கண்டிப்பாக முழு பைபிளை எடுக்க முடியாது . தடுக்கப்பட்ட கனி என்ற விஷ்யத்தை மட்டும் எடுக்கலாம். உண்மையில் அது பாவகரமான கனி அல்ல. ஆதாம் , ஏவாள் அதை புசித்தது தவறும் அல்ல. அவர்கள் அந்த கனியை புசித்திராவிட்டால் , இதோ, இந்த முயல்களை போலத்தான் வாழ்ந்து கொண்டு இருப்போம் ( சிரிக்கிறார் ).  விடுதலைக்கான அந்த கனியை கொடுத்த பாம்பை விடுதலைகான தூதன் என்பேன். அதை புசித்த ஆதாம் ஒரு ஹீரோ

ஏவாள் கதாபாத்திரத்துக்கு யாரை தேர்வு செய்வீர்கள்?

( சிரிக்கிறார் ) இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை

பாம்பு கேரக்டரில் யார் நடிப்பது ?

 நான் முயலலாம் என நினைக்கிறேன். ஹா ஹா ( சிரிக்கிறார் )

************************************************





5 comments:

  1. உங்கள் பதிவு என்றாலே அதிரடி தான் போங்க,

    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே.
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
  2. ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொல‌ம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. http://charuonline.com/blog/?p=2883//மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. http://charuonline.com/blog/?p=2974//காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை ப‌டிச்சிட்டு அவ‌ரோடு குஞ்சுங்க‌ எத்த‌னை பேர் கால‌ங்காத்தால‌ சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க‌ போறாங்க‌ளோ, அவ‌ங்க‌ளை அந்த‌ நித்தி தான் காப்பாத்த‌னும்.

    இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க‌, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:
    பிச்சைகாரன்: எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் சாருவின் பதில்: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.

    ReplyDelete
  3. ஏவாளாக உமா துர்மனை நடிக்கவைப்பேன் என்றும் பாம்பாக தானே நடித்து விடுவேனென்றும் கூறியதாக எங்கோ படித்த ஞாபகம்! :-)

    ReplyDelete
  4. பிச்சைக்காரன் அவர்களே, அடுத்தவர்களை அசிங்கபடுத்துபவர்கள் நல்ல மனிதர்களாக மட்டுமல்ல, மிருகங்களாக கூட வாழ முடியாது. நம்முடைய எழுத்துக்கள் அடுத்தவர்கள் உயர, திருத்திக்கொள்ள வழி செய்ய வேண்டும்.

    ஆனால் உங்கள் எழுத்துக்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையை புகுத்துகிறது. bapoojee2k3@gmail.com

    ReplyDelete
  5. I think this blog is purely made to respect Charu nivedhita....Even anurag kashyap had told that quentenin made the scene from aalavandhan...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]