Monday, August 6, 2012

மதுபான கடையா அல்லது மதுபானக் கடையா? ” நிதானமாக” ஓர் அலசல்

மதுபான கடை திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது போன்ற உண்மையான வித்தியாசமான படங்கள் வருவது வரவேற்கத்தக்கது.  ஒரு காலத்தில் , ஃபேஷன் ஷோ போல , பலவேடங்களில் மேக் அப் போட்டு நடிப்பதே வித்தியாசமான படம் என நினைத்தார்கள்.

சரி.. நான் பேசப்போவது படத்தை பற்றி அல்ல. மதுபான கடை என்று சொல்ல வேண்டுமா அல்லது மதுபானக்கடை என்று சொல்லவேண்டுமா? அதுதான் இப்போதைய பஞ்சாயத்து..

பொதுவான விதி ஒன்று இருக்கிறது. பெயர்ச்சொல்லிற்கு பிறகு ஒற்று வரக்கூடாது.

சென்னை தொலைக்காட்சி நிலையம் என்பது சரி.. சென்னைத் தொலைக்காட்சி நிலையம் என்பது தவறு. அதே போல மதுரை பேருந்து நிலையம் , மொழி பெயர்ப்பு ( மொழிப் பெயர்ப்பு அல்ல ) , தேசிய பூங்கா என்றே எழுத வேண்டும்.

 இந்த விதி ஓக்கேயா?

ஆனால் இந்த விதியை கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்த கூடாது. வேற்றுமை உருபு என்ற தலைவலியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது என்ன வேற்றுமை உருபு ?

அஞ்சலி என்பது பெயர். அஞ்சலி , அஞ்சலிக்கு , அஞ்சலியை , அஞ்சலியுடன் , அஞ்சலியிடம் என்றெல்லாம் சொல்கிறோமே.  இதில் இருக்கும் க்கு , யை , யுடன் , யிடம் போன்றவைதான் வேற்றுமை உருபு.

சரியா?

இதில் இரண்டாம் , நான்காம் , ஏழாம் வேற்றுமை உருபுகளுக்கு பின் ஒற்று மிகும். அதாவது இந்த வேற்றுமை உருபுகளுக்கு பின் புள்ளி வைத்த எழுத்து வரும்.

உதாரணமாக மதுவந்தி என்ற பெண் இருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள். செல்லமாக மது.. வேற்றுமை உருபுகள் என்ன செய்கின்றன என பாருங்கள்.

இரண்டாம் வேற்றுமை உருபு - ( ஐ )

மதுவைப் பார்த்தேன் , மதுவைத் தொட்டேன் , மதுவைக் கிள்ளினேன் ( கிள்ளியதை கவனிக்காதீர்கள். புள்ளி வைத்த எழுத்துகள் வருவதை கவனியுங்கள் )

 நான்காம் வேற்றுமை உருபு ( கு )

மதுவுக்குப் பிறந்த நாள்


இப்போதுதான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.

மது சொந்தமாக ஒரு கடை வைத்து நடத்துகிறாள் என வைத்து கொள்ளுங்கள்.அல்லது அவள் பெயரில் நீங்கள் ஒரு கடை வைத்து இருக்கிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.

அந்த கடையின் பெயர் மது கடை என எழுத வேண்டும்..புள்ளி வைத்த எழுத்து வராது. காரணம் மது என்பது பெயர் சொல்.

ஆனால் மதுவை விற்கும் கடை நடத்துகிறீர்கள் என வைத்து கொள்ளுங்கள்.
அப்படி என்றால் மதுக் கடை என்றே எழுத வேண்டும்

அதாவது மது கடை , மதுக் கடை இரண்டும் சரியான தமிழ் சொற்களே. ஆனால் அர்த்தம் வேறு.

எனவே மதுபானக் கடை என்பதே சரியானது..








7 comments:

  1. ஏன் இந்த(க்) கவலை எல்லாம்? பேசாம ஒயின் ஷாப் என்று வைத்து விடலாமே? ஓ வரி விலக்கு கிடையாதோ?

    தமிழ்(ப்) பட சென்டிமென்ட் படி படத்துக்கு ஏழு எழுத்துக்கள் கூடாது. படம் ஊத்தி விடுமாம்.

    ReplyDelete
  2. அட்டகாசம்...இவ்ளோ எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள். ஆக, மதுபானகடை என்றால் 'மதுபான' என்ற பெயர் உள்ளவர் வைத்திருக்கிற கடை என்றாகிவிடுகிறது.

    மதுபானக்கடை என்றால்தான் அது மது விற்கிற கடை...பிரமாதம்...இந்த மாதிரி இலக்கணம் பற்றி தொடர் பதிவே எழுதலாமே!

    ReplyDelete
  3. Nice post. Sir, charu vasagar vattathil thangalai kaana villaiye... Melum Charuvai patri postum illai. Any specifi reasons

    ReplyDelete
  4. மாநகரப் பேருந்து என்பது தவறா? மாநகரம் என்பது பெயர்ச்சொல் அல்லவா?

    ReplyDelete
  5. மாநகரப் பேருந்து என்பது தவறா? மாநகரம் என்பது பெயர்ச்சொல் அல்லவா?

    ReplyDelete
  6. மாநகரப் பேருந்து என்பது தவறா? மாநகரம் என்பது பெயர்ச்சொல் அல்லவா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா