பதவியை ராஜினாமா செய்ய தயாரா என தே மு தி க ( ஜெ) எம் எல் ஏக்களும் , விஜயகாந்தும் பரஸ்பரம் சவால் விட்டு கொண்டது தி முக வட்டாரத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரை தே மு தி க எம் எல் ஏக்கள் சந்த்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாதாரண சந்திப்புதான் என அவர்கள் கூறினார்கள். ஆனால் சட்டசபையில் தனி இருக்கை ஒதுக்கீடு , தேவர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டது போன்றவை , இது சாதாரண சந்திப்பு இல்லை என்பதை உணர்த்தியது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தே மு திக கொறடா , ஒரு வீட்டில் குடி இருந்து விட்டு காலி செய்வதாக இருந்தால், அந்த வீடு குடியேறும்போது எப்படி இருந்ததோ அப்படியே விட்டு விட்டு செல்ல வேண்டும். குடியேறும்போது இருந்த பொருட்களை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். வீட்டு உரிமையாளருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்ல கூடாது. இந்த எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்திப்பதாக இருந்தால் , தே மு தி கவால் பெற்ற பதவியை ராஜினாம செய்து விட்டு சென்று இருக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியுள்ள தேமுதிக ( ஜெ ) எம் எல் ஏக்கள் சுந்தரராஜன் மற்றும் மைக்கேல் ராயப்பன் , இந்த லாஜிக்கை ஒப்புக்கொள்வதாக சொன்னார்கள்.இதே லாஜிக்கை பயன்படுத்தி , அதிமுக கூட்டணியால் கிடைத்த எதிர் கட்சி தலைவர் பதவியை விஜயகாந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தே மு திக உடைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இப்போது அந்த நால்வர் கட்சி தாவ இயலாது. கட்சி தாவல் தடை சட்டம் பாயும் . எனவே இன்னும் சிலரை இழுத்து செல்ல முயல்வார்கள்.
இப்படி ஒரு கோஷ்டி வெளியேறுவதை தடுக்க வேண்டுமானால் , இந்த நால்வரை விஜயகாந்தே வெளியேற்றிவிடலாம். இதனால் பெரிய பிளவு தடுக்கப்படும்.
எப்படி இருந்தாலும் , விஜயகாந்தின் எதிர் கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்துதான். எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு மு க ஸ்டாலினுக்கு கனிந்து வருகிறது. அவர் எதிர்க்கட்சி தலைவர் ஆனால் , விஜய காந்தை விட சிறப்பாக- அவ்வளவு ஏன் , கலைஞரை விட சிறப்பாக கூட - அவர் செயல்படுவார் என பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்கு பெரிய தலைவலியாக இருப்பது மட்டுமல்லாது, ஒரு பெரிய தலைவராகவும் அவர் உருவெடுக்கும் வாய்ப்பு இதனால் உருவாகும். எனவே தே மு தி கவை இப்படி விட்டு வைப்பதே அதிமுகவுக்கு நல்லது.
ஆனால் இதை எல்லாம் யோசிக்கும் நிலையில் ஜெ யோ, இதை தடுக்கும் நிலையில் விஜயகாந்தோ இல்லை. இருவருமே தற்காலிக கோப தாப அடிப்படையிலேயே செயல்படுகின்ற்னர்.
இதை திமுக கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ளுமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.