Tuesday, October 2, 2012

நச் என நாலு படங்கள் - சினிமா பார்வை

வழக்கு எண் படம் பார்த்ததில் இருந்து , படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது. எந்த படமும் பார்க்காமல் நிம்மதியாக இருந்தேன். அதன் பின் பார்த்த கில் பில் படம் மீண்டும் படம் பார்க்கும் ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. பல்ப் ஃபிக்‌ஷன் , சோர்ஸ் கோட் போன்ற படங்களைப் பற்றி ஏற்கன்வே என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த படங்களைத் தவிர , என்னை கவர்ந்த வேறு சில படங்களைப் பற்றி என் கருத்துகளை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.


*******************************************

ஆரண்ய காண்டம் 

சில ஆங்கில படங்களைப் பார்க்கும்போது , தமிழில் இப்படியெல்லாம் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற ஏக்கம் மனதை பிசையும். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் இந்த படம் இருந்தது. இந்த படம் வெளி வந்தபோது போதுமான வரவேற்பு பெறாமல் போய் இருக்கலாம். ஆனால் காலம் கடந்து நிற்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கும் என கருதுகிறேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் , கண்டிப்பாக ஹிட் ஆகும் . இந்த படத்திற்கான மார்க்கெட்டிங் சரியில்லாததே தோல்விக்கு காரணம் என தோன்றுகிறது.

ஆனால் இந்த படத்தின் இயக்குனர் , நடிகர்கள் , இசை அமைப்பாளர் மற்றும் இந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் என்றென்றும் பெருமைப்பட்டு கொள்ளலாம்.
ஆரண்ய காண்டம் - அருமை

************************************************
VANTAGE POINT

அமெரிக்க அதிபரை கொலை செய்யும் முயற்சி. அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி. காப்பாற்றும் முயற்சிகளை புத்திசாலித்தனமாக முறியடிக்கும் குற்றவாளிகள் , அவர்களை துரத்தி பிடித்தல் - இதுதான் கதை.

இதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்பதில்தான் விஷ்யம் இருக்கிறது. பார்க்க ஆரம்பித்தால் , இருக்கையில் இருந்து எழ முடியாத அளவுக்கு செம விறுவிறுப்பு.

ஒரே சம்பவத்தை எட்டு பேர் பார்வையில் சொல்லி இருப்பது செம இண்டரஸ்டிங். ஒரே கால கட்டத்தைத்தான் அனைவரும் சொல்கிறார்கள். அதிபர் சுடப்படுவதைத்தான் சொல்கிறார்கள் . ஆனால் போரடிப்பதில்லை. காரணம் ஒவ்வொரு பார்வையிலும் , புதிய புதிய விஷ்யங்கள் தெரிகின்றன. ஒருவர் பார்வயில் சாதாரணமாக வந்து செல்லும் சம்பவத்தின் முக்கியத்துவம் , இன்னொருவர் பார்வையில்தான் புலப்படுகிறது.

தேவையற்ற குழப்பங்களோ , சோர்ஸ் கோட் போல லாஜிக் முரண்பாடுகளோ இல்லாமல் அருமையாக இருக்கிறது.

VANTAGE POINT - வாவ்

*******************************************-******************


Inglourious Basterds



 நான் லீனியர் வகையில் கதை சொல்வதில் கில்லாடி க்வெண்டின் டெரண்டினோ. சற்று வித்தியாசமாக, தன் வித்தியாச திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இதை எடுத்து இருக்கிறார்.படம் நேர் கோட்டில் சும்மா பரபர என போகிறது.

உலகப் போர் கால கட்டத்தை , குறிப்பாக ஹிட்லரின் அட்டகாசத்தை சித்திரிக்கும் கதை இது.  யூதர்களை வேட்டையாடும் நாஜி படை வீரர்கள் ,  ஒரு யூத குடும்பம் படு கொலை செய்யப்படும்போது தப்பி செல்லும் ஒரு யூத பெண்,  நாஜிக்களுக்கு எதிராக எதிராக உருவாக்கப்படும் Inglourious Basterds என்ற படை , அந்த யூத பெண் , தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு 
பழி வாங்க செய்யும் முயற்சிகள் , Inglourious Basterds படையினர் ஹிட்லரை கொல்ல செய்யும் 
முயற்சிகள் , அதை மோப்பம் முடிக்கும் ஜெர்மன் அதிகாரிகள் என பரபரப்பாக செல்கிறது.


கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம். இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்ற வசனத்துடன் 

நச் என படம் முடிகிறது. 

நம் ஊரில் , அப் நார்மல் கேரக்டர்கள் , அழுகை கேரக்டர்களில் நடிப்பவர்கள் , 

மாறு வேடம் போடுபவர்களைத்தான் சிறந்த நடிகர்கள் என கருதுவோம். அவர்களுக்குத்தான்

விருதுகள் கொடுப்போம். ஆனால் இந்த படத்தில் விசாரணை அதிகாரியாக நடித்த
      Christoph Waltz   ஆஸ்கார் விருது பெற்றார் என்பது நம் ஆட்களுக்கு குழப்பமாக இருக்கும்.
இவர் நடிப்பு எனக்கு பிடித்து இருந்தாலும் , நான் மிக ரசித்தது    Brad  Pitt   நடிப்பைத்தான்.

                                                                               

Inglourious Basterds - Glorious 

*********************************************************************


Reservoir dogs 

க்வெண்டின் டெரண்டினோவின் முதல் படம் இது.

தம் பெயர்கள், ஊர் விபரங்களை ரகசியமாக வைத்து கொண்டு ஆறு பேர் சேர்ந்து வைர கொள்ளைக்கு திட்டமிடுகின்றனர். mr. white , mr. blue, Mr . brown என வண்ணங்களின் பெயர்களே அவர்களுக்கு புனை பெயர். ஜோ என்பவர் கொள்ளையர்களின் தலைவன். எட்டி அவர் பையன்.

அனைவரும் உணவு விடுவதில் சாப்பிட்டவாறே பேசிக் கொண்டு இருப்பதுடன் படம் ஆரம்பிகிறது, அதன் பின் அங்லிருந்து வெளியேறி செல்கின்றனர்.

அடுத்த காட்சியில் ஆரஞ்ச் என்பவன் , காரில் சுடப்பட்டு கிடக்கிறான். white காரை ஓட்டி வருகிறான். உணவு விடுதியில் இருந்து வெளியேறிய காட்சிக்கும், இப்போதையை கார் காட்சிக்கும் நடுவில் என்ன நடந்தது என்பது பிறகுதான் தெரிகிறது.

நான் லீனியர் பாணியில் விறுவிறுப்பாக படம் எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களில் ஒருவர் போலிசீன் ஆள் என , சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தேகிக்கின்றனர். யார் என தெரிய வரும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. நமக்கு தெரிந்து விடுகிறதே தவிர , அவர்களுக்கு கடைசிவரை தெரியவில்லை என்பது சுவாரஸ்யம்.

கடைசியிலாவது உண்மையை தெரிந்து கொள்பவர் mr. white தான் . ஆனால் அதற்குள் காலம் கடந்து விடுகிறது.

 துப்பாக்கி சத்தத்துடன் நச் என படம் முடிந்து , இயக்குனர் முத்திரையை பதிக்கிறார். இசை , வசனங்கள் அவரது மற்ற படங்களைப் போலவே அருமை.


Reservoir dogs - Really great 

2 comments:

  1. ஆகச்சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்று- 'ஈரவிழிக் காவியங்கள்'. தியேட்டரில் ஓடியது ஒரு வாரம் மட்டும். தொலைக்காட்சியில் எனக்குத் தெரிந்து ஒரே முறைதான். யூடியூபில் இருப்பது பாடல்கள் மட்டும். சிடி வெளியிட்ட விஜிபி அந்த பிஸினசையே விட்டுவிட்டார்கள். வேறு எந்தப் புண்ணியவானும் டிவிடி வெளியிடவில்லை. இது ஒரு பண்பாட்டுப் படுகொலை! சாருவின் புத்தகங்களுக்கு வெளியீட்டு உரிமையை வைத்திருப்பவர்கள் மார்க்கெட்டில் புத்தகம் கிடைப்பதைப் பற்றிக் கவலையேபடாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டுவாரே, அதற்கு ஒப்பான குற்றம்! இதற்காகக் குரல் கொடுங்களேன்! மேலும் 'அவள் அப்படித்தான்' கூட இதே கணக்குதான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. மாற்றான் பிடிச்சிருக்கா மிஸ்டர். பிச்சை?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா