Monday, October 22, 2012

கருத்து கணிப்பு- ஒபாமா- ரோம்னி போட்டி “டை “- யார் வென்றால் நல்லது ?


அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில், சமீபத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. NBC News/Wall Street Journal poll    நடத்திய  கருத்து கணிப்பின்படி, இருவரும் 47 சதவிகித வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கிறார்கள். எனவே இது வரை முடிவு செய்யாத வாக்காளர்களின் வாக்குகள்தான் புதிய அதிபரை முடிவு செய்யப் போகின்றன.

இந்த பரபரப்பான நிலையில் , அதிபர் வேட்பாளர்களுக்கிடயேயான மூன்றாவது கட்ட விவாதம் உலகம் முழுதும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் எடுக்கப்படும் கருத்து கணிப்பில் , அடுத்த அதிபர் யார் என்பது ஓரளவு தெரிந்து விடும்.

அமெரிக்காவில் செய்யும் இந்தியர்கள், வேலை தேடும் இந்தியர்கள் , சீனர்கள் போன்றோருக்கு ஒபாமாவின் கொள்கைகள் எதிராக உள்ளன என்பதால் நம் மக்கள் பெரும்பாலும் ரோம்னிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஆனால் உலக அமைதியை கணக்கில் கொள்பவர்கள் ஒபாமா வென்றால்தான் நல்லது என்கிறார்கள்.  மற்ற நாடுகளில் மக்கள் “ அவர்களாகவே புரட்சி “ செய்து “ அமைதியான “ வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஃபார்முலாவை ஒபாமா பயன்படுத்துகிறாரே தவிர , முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாணியில் போர்களை பயன்படுத்துவதில்லை என்பதை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

ரோம்னி இதை ஒபாமாவின் பலவீனமாக சித்திரித்து பிரச்சாரம் செய்கிறார். இரானுக்கு எதிராக “ உரிய “ நடவடிக்கை எடுக்காமை , லிபியாவில் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டதற்கு “ உரிய “ பதிலடி கொடுக்காதது போன்றவற்றைத்தான் துருப்புச்சீட்டாக நம்பி வருகிறார். மூன்றாம் கட்ட விவாதத்திலும் இதைத்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அமெரிக்கர்கள் ஏற்பார்களா அல்லது தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு , பொருளாதாரத்தை மேலும் நலிவடைய வைத்து விடக்கூடாது என நினைப்பார்களா என்பதில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது.


ஈராக் போரை முடிவுக்கு வந்தது , ஒசாமா பின் லேடனை கொன்றது போன்றவற்றை ஒபாமா முன் நிறுத்த இருக்கிறார்.

எனவே இந்த விவாதத்தில் சூடு பறக்கும்.

சரி, இருவரில் யார் பெற்றால் நல்லது ?


ஒபாமா வென்றால் உலகுக்கு நல்லது...
ரோம்னி வென்றால் , இந்தியாவுக்கு ( இந்தியர்களுக்கு ) நல்லது 

2 comments:

  1. புரியவில்லையே! அமெரிக்க குடிமகன்களுக்கு மட்டும் தான் ஓட்டுரிமை; இந்தியர்களாக இருந்து, Legal permanent resident (green card பச்சை அட்டை) உள்ளவர்களுக்கும் கூட ஓட்டுரிமை கிடையாதே!

    [[அமெரிக்காவில் செய்யும் இந்தியர்கள், வேலை தேடும் இந்தியர்கள் , சீனர்கள் போன்றோருக்கு ஒபாமாவின் கொள்கைகள் எதிராக உள்ளன என்பதால் நம் மக்கள் பெரும்பாலும் ரோம்னிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.]]

    ReplyDelete
  2. ஹ்ம்ம்,,,, :) கூர்ந்து கவனித்ததற்கு நன்றி... தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் ரோம்னிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால் , நம் ஆட்கள் அவர் வெற்றியை விரும்புகிறார்கள் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.. பதிவர்கள் சிலரும் , இந்திய பத்திரிக்கைகள் சிலவும் ரோம்னிக்கு ஆதர்வாக எழுதுகின்றான்ர் என்ற அர்த்தத்தில் எழுதினேன்.. நம் ஆட்கள் ஓட்டு போடுவார்கள் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை... ஆனாலும் தவறான அர்த்தம் தொனிப்பதை ஒப்புக்கொள்கிறேன்.. இப்படித்தான் ரோம்னியும் எதையோ சொல்லப்போக , வேறொரு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு திணறு
    கிறார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா