படிமை விழா ரிப்போர்ட் - பார்ட்1: ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்
பார்ட் 2
ஆங்கில அறிவின் அவசியம் குறித்தும் , வெளி நாட்டு படங்கள் பார்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சொன்னேன். ஆனால் அது மட்டுமே போதாது. வாழ்கையை இண்டென்சாக வாழ வேண்டும். நீங்களே கிட்டத்தட்ட ஒரு ஃபிலாசபராக இருந்தால்தான் , உங்களிடம் இருந்து நல்ல படங்க்ள் வரும்.
சினிமா தொழில் நுட்பங்களை கற்று கொள்வதில்தான் நம் ஊரில் ஆர்வம் காட்டுகிறார்கள் . டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தால்மட்டும் போதாது. ஓர் இயக்குனருக்கு இசை , ஓவியம் , சிற்பம் என பல துறைகளில் பரிச்சயம் இருக்க வேண்டும். பாணா காத்தாடி படத்துக்கு இசை அமைத்த யுவன் சங்கர்தான் , ஆரண்ய காண்டத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார். ஆனால் இரண்டிலும் இசை வெவ்வேறு தரத்தில் இருக்கிறது. காரணம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் இசை அறிவும் , இசை அமைப்பாளர்களிடம் வேலை வாங்கும் தன்மையும்.
தொழில் அறிவு இல்லாமல் இயக்குனர்கள் இருப்பதால்தான் , அவரை பலரும் ஏமாற்ற முடிகிறது. புடவைகளில் கலர் கலராக புடவைகள் தொங்குவதுபோல கலர் கலராக காட்சிகள் அமைத்து விட்டு , ஒளி ஓவியம் என்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது?
தமிழ் நாடு என்பது mediocre சமூகம் என சொல்லி வந்து இருக்கிறேன். சராசரிகளிலேயே வாழ்ந்து , சராசரிகளில்யே மகிழக்கூடிய சமூகம் . எனவேதான் சராசரிகளையே போற்றுகிறது.
வீடு மாற்றும்போது, சீனர்களாக இருந்தால், ஒரு ஆள் இரண்டு சுமைகளை ஒரு மூங்கிலில் கட்டி அதன் நடு பகுதியை தங்கள் தோளில் வைத்து கொள்வான். அதாவது சுமை இரண்டு- ஆள் ஒன்று
இந்தியராக இருந்தால் , மூங்கிலின் நடுவில் ஒரு சுமையை கட்டி அதை இருவர் எடுத்து செல்வார்கள் . உழைக்க சோம்பேறித்தனம். அதை பெருமையாக நினைக்கும் குணம். சுமை ஒன்று - ஆள் இரண்டு
சிலர் என்னிடம் வந்து கேட்பார்கள். நான் இலக்கியம் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகங்களில் எதில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம்.
உங்களுக்கு தேவையானது எது என்பதைக்கூட தேர்ந்தெடுக்க தெரியாத நீங்கள் என் வாசகராக இருக்க முடியாது. என் எழுத்து எதையும் படிக்க வேண்டாம் என சொல்லி அனுப்பி விடுவேன் .
நம்மை இந்த அள்வுக்கு கெடுத்து வைத்து இருப்பது நம் அம்மாக்கள் . சின்ன வயதில் இருந்தே ஊட்டி ஊட்டி வளர்த்து , எதற்கும் யாரையும் சார்ந்து இருக்கும் குணத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.உழைக்க பயப்படுவர்கள் சினிமா துறைக்கு வர வேண்டாம்.
கலைகளில் பல பிரிவுகளில் உண்டு. அதில் ஒன்றான எழுத்து துறையில் முட்டாள்கள் இருக்க முடியாது. அயோக்கியர்கள் , தந்திரசாலிகள் இருக்கலாம், ஆனால் இந்த தந்திரத்துக்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுமே. எனவே முட்டாள்கள் என யாரும் எழுத்து துறையில் இல்லை.
ஆனால் சினிமா துறையில் முட்டாள்தனம் அதிகம் காணப்படுகிறது. ஓவியம் , இசை , எழுத்து என பல கலைகள் சேர்ந்தது சினிமா. அதீதமான புத்திசாலித்தனமும் , சென்சிபிலிட்டியும் தேவைப்படும் துறை. ஆனால் முட்டாள்தனம்தான் அதிகம் இருக்கிறது.
தமிழைப் பொருத்தவரை கமர்சியல் படங்கள் மட்டுமே தம் துறையில் சிறப்பாக செயல்படுகின்றன. உலகப்படங்கள் பார்த்து விட்டு , இலக்கியம் படித்து விட்டு , எடுக்கப்படும் படங்கள் குப்பையாக உள்ளன.
எனக்கு லிங்கு சாமியின் படங்கள் பிடிக்கும். அவரோ பாலாஜி சக்திவேலை பெரிதாக நினைப்பார். காரணம் பாலாஜி சக்திவேலுக்கு இலக்கிய பரிச்சயம் உண்டு. உண்மையில் இலக்கியவாதிகளுடன் தொடர்பு இல்லாத இயக்குனர்கள்தான் நல்ல படங்கள் எடுக்கிறார்கள்.
ஆனால் கமர்சியல் படங்கள் சில , போரடிக்கின்றன. பெண்கள்தான் கதா நாயகனுக்காக ஏங்குவதாக எடுக்கிறார்கள் . நடை முறையில் இப்படி இருப்பதில்லை. எனவேதான் , தன்னை காதலிக்காத பெண் மீது ஆசிட் வீசும் செய்திகளை தினமும் படிக்க வேண்டி இருக்கிறது.
நான் ஒரு பொறுக்கி , என்னை ஏன் காதலித்தாய் என நாயகன் கேட்கிறான். நீதான் என்னை “ டீ “ போட்டு அழைத்தாய், அதில் மயங்கி விட்டேன் என்கிறாள் நாயகி . இப்படி ஒரு படம்.
ஓர் அரசியல்வாதி நடித்த படம். ஸ்கூட்டியில் செல்லும் பெண்ணை நாயகன் சைட் அடிக்கிறான். அவள் முகத்தை பார்த்ததும் காறி துப்பி விட்டு செல்கிறான். அழகாக இல்லை என்றால் காறி துப்புவீர்களா ? இது சமூக விரோதம் இல்லையா ?
அஜீத் நல்ல மனிதர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல நடிகரும்கூட. வரலாறு படத்தில் செமையாக நடித்து இருப்பார். ஆனால் அவர் தொடர்ந்து ஏன் , தவறான படங்களையே தேர்ந்து எடுக்கிறார் என தெரியவில்லை.
கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா அட்டகாசமாக இருந்தது , அடுத்த படமான நடு நிசி நாய்களில் நம்மை நன்றாக பழி வாங்கி விட்டார்.
கமல் ஹாசன் காட் ஃபாதர் படத்தை நூறு முறையாவது பார்த்து இருப்பார் என நினைக்கிறேன். முகபாவனை , கைகால்களை அசைப்பது என அப்பட்டமாக காப்பி அடித்து நாயகனில் நடித்து இருப்பார். காப்பி அடிப்பது தவறு என சொல்லவில்லை. தாராளமாக காப்பி அடியுங்கள். ஆனால் உலக நாயகன் என சொல்லி கொள்ளாதீர்கள்.
எந்த வேலையிலும் சராசரித்தன்மையே தமிழ் நாட்டில் இருக்கிறது. யாருக்கும் எந்த வேலையும் முழுமையாக தெரியவில்லை. என் வீட்டில் சமையலுக்கு ஒருவரை நியமித்தேன் . அவருக்கோ கேஸ் ஸ்டவை ஆன் செய்வது என்பதே தெரியவில்லை. கேஸ் ஸ்டவுக்கு பதில் வீட்டை கொளுத்திவிடப்போகிறார் என பயந்து விட்டேன்.
உன்னதத்தை நாம் தேடுவதே இல்லை. இளையராஜா என்ன பாட்டு கொடுத்தாலும் , இயக்குனர்கள் தமக்கு அவர் ஏதோ பிச்சை போட்டு விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். இசை அமைப்பாளர் நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர். அவரை மற்றவர்களைப்போல வேலை வாங்க தெரிய வேண்டும்.
இசை முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். ஆங்கிலமும் முக்கியம். நான் இயக்குனராக இருந்தால் , ஆங்கிலம் தெரியாத துணைஇயக்குனர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்.
உலகளவில் சினிமாவை எடுத்து கொண்டால் , ஹாலிவுட் பாணி படங்கள் , அய்ரோப்பிய பாணி படங்கள் என சில பாணிகள் உள்ளன. உன்னத படங்கள் இந்த பாணிகளில் வந்துள்ளன.
நீங்கள் முயன்றால் , நம் மண்ணுக்கேற்ற புதிய திரை மொழியை , புதிய பாணியை உருவாக்க முடியும் . வாழ்த்துகள்.
- தொடரும்

( பிரத்தியேக படங்கள், வீடியோ , கலந்துரையாடல் பற்றிய ரிப்போர்ட் , ச்மஸ்கிருதம் யாருடைய மொழி , டொரண்டினோவை ஏன் பிடிக்கவில்லை , சினிமாவில் கருத்து சொல்வது தவறா, கட்டுக்கோப்பான ஜெர்மனியில் இருந்து கலைஞர்கள் எப்படி உருவாகிறார்கள் , ஸ்பீடாக படிப்பது எப்படி , சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் , அது நல்ல படைப்பு ஆகாதா , சினிமாவாக எடுக்க வேண்டிய நாவல்கள், அடுத்த இடுகையில் )
- தொடரும்
அஹா.. ரசித்தேன் என்பதை விட உள்வாங்கிக்கொண்டேன். அதுவும் இலக்கியத்துறையைப் பற்றி சொல்லியுள்ளாரே.. உண்மை
ReplyDeleteநம் மண்ணுக்கேற்ற புதிய திரை மொழியை , புதிய பாணியை உருவாக்க முடியும் /// - இதுதான் Vision, இதுதான் உச்சக்கட்டம், இது பெயர்தான் மொழி / இன உணர்வு. இங்குதான் சாரு பல விமர்சனர்கள் , எழுத்தாளர்கள், புத்தி ஜிவிகளிடமிருந்து வேறு படுகிறார்.
ReplyDelete