Friday, November 2, 2012

புயல், பேரிடர்கள், போர்களும் தேர்தல் முடிவுகளும்


 சாண்டி புயல், தானே, நீலம் , யுத்தங்கள், நில நடுக்கம் போன்றவை இயல்பான வாழ்க்கையை பாதிக்க கூடியவை. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டால் , ஒட்டு மொத்த தேர்தல் போக்கையே மாற்றிவிட கூடும்.

தேர்தல் ஆர்வம் குறைந்து போய் , பலர் வாக்களிக்காமல் போகலாம். திடீர் பாதிப்பால் ஏற்படும் வருத்தம் , கோபமாக மாறி யார் மீதேனும் திரும்பலாம்.

பேரிடர் ஏற்பட்டால் , கண்டிப்பாக அது தேர்தல் முடிவை மாற்றும். ஆனால் யாருக்க்கு சாதகமாக மாறும் ? ஆளும் கட்சிக்கா எதிர் கட்சிக்கா?

அமெரிக்க தேர்தலில், சாண்டி புயல் யாருக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும்?

வரலாற்றை புரட்டி பார்த்தால் , சில சுவையான விஷ்யங்கள் தென்படுகின்றன.

பிஜேபி ஆட்சியில் இருந்து , அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த சாதனையும் இல்லை. அப்போதுதான் கார்கில் யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தத்தின் விளைவுகள் , பீஜேபிக்கு சாதமாக அமைந்து , வாஜ்பாயீ மீண்டும் பிரதமர் ஆனார்.


சென்ற அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள் போராட்டம் , விலைவாசி உய்ரவு என அதிமுக பிரச்சினையில் தத்தளித்தது. எதிர்தரப்பில் மிக மிக வலுவான கூட்டணி. அப்படி இருந்தும் , திமுக கோட்டையான சென்னையில் அதிமுக கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்றது., காரணம் சுனாமி !!

சுனாமியில் அதிமுக மேற்கொண்ட நிவாரண பணிகள் அதற்கு சாதகமான நிலையை உண்டாக்கியது.

உலக போர் முடிந்தவுடன் சர்ச்சில் தோற்றதையும் மறக்க முடியாது.

இயற்கை இடர்கள் , போர்கள் போன்றவை ஆளும் கட்சிக்குத்தான் சாதகம் என தோன்றுகிறது.  தேர்தல் நேரத்தில் காவிரி பிரச்சினை வந்தால் , அதை வைத்தே ஆளும் கட்சி வென்று விடும் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆனால் நீண்ட கால பஞ்சம் , போர்கள் எதிர் விளைவை ஏற்படுத்தி ஆளும் கட்சிக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.

உதாரணமாக கர்னாடகத்தில் எஸ் எம் கிருஷ்ணா ஆட்சியில் பெரிய அளவு கெட்ட பெயர் இல்லை. ஆனால் அவர் ஆட்சி காலத்தில் மழை பொய்த்தது,. அவர் ஆட்சியின் பெரும்பாலான கால கட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோற்க இது மட்டுமே காரணமாக நிகழ்ந்தது.

இந்த நிலையில் சாண்டி புயல் யாருக்கு சாதகமாக விளைவை ஏற்படுத்தும் ?

ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த ஒபாமாவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து , ரோம்னி செல்வாக்கு உயர்ந்து வந்தது. முதல் கட்ட தொலைக்காட்சி விவாதம் , ரோம்னியின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

ஆனால், அதன் பின் ஒபாமா சுதாரித்து கொண்டார். இருவரும் சம பலத்துடன் இருந்தனர். கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் சாண்டி புயலில் , ஒபாமாவின் துரித நடவடிக்கை அவருக்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய கருத்து கணிப்புகள் ஒபாமாவே வெல்வார் என்கின்றன.

அதிபரை முடிவு செய்ய இருக்கும் போர்க்கள மகாணங்களில் ஒபாமாவே முந்துகிறார்,

ஆனால் ரோம்னி தரப்பும் நம்பிக்கையுடன் இருக்கிறது.


ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை , ஒபாமாவையே விரும்புகின்றன, ரோம்னி வென்றால் , புஷ் பாணியில் போர் வெறி ஆட்சி நடத்துவார் என நினைக்கின்றன,

ஆனால் , வேலை வாய்ப்புக்கு சாதகமாக இருப்பார் என்ற அடிப்படையில் இந்தியர்கள் பலர் ரோம்னியை விரும்புகின்றனர்.

அமெரிக்க வாக்காளர்கள் யாரை விரும்புகின்றனர் என்பது சில தினங்களில் தெரிந்து விடும்.

இன்றைய நிலையில் ஒபாமாவையே விரும்புகின்றனர் என்பதே நிலைமை.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா