Tuesday, November 13, 2012

ஹீரோ ஹோண்டா விளம்பர எதிர்ப்பு என்ன சாதித்தது? கேபிள் சங்கர் , தமிழ் ஸ்டுடியோ அருண் கருத்து


சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட விஷ்யம் , ஹீரோ ஹோண்டா விளம்பரம். 

ஜாதி பெயரை பயன்படுத்தியது தவறு என்பது சிலர் கருத்து. ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்வானதாக இந்த் விளம்பரம் சித்திரிக்கிறது என்கின்றார்கள் அவர்கள்.

ஜாதி பெயர் பல வணிக நிறுவனங்களில் , உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதை எல்லாம் தடுக்காமல் , ஹீரோ ஹோண்டா விளம்பரத்தை மட்டும் எதிர்ப்பது விளம்பட ஸ்டண்ட் அல்லது அறியாமை.  இதன் மூலம் , ஹீரோ ஹோண்டாவுக்கு இலவச விளம்பரம் கொடுத்ததை தவிர வேறு எதையும் இந்த எதிர்ப்பு சாதிக்கவில்லை என்பது இன்னொரு தரப்பு.


இது குறித்து , திரு கேபிள் சங்கர்  மற்றும் தமிழ் ஸ்டுடியோ திரு . அருண் ஆகியோர் கருத்துகள் உங்கள் பார்வைக்கு....




                     
                    நான்கு மடங்கு ரீச் - கேபிள் சங்கர் 


ஹீரோ கம்பெனிக்காரர்கள் சென்ற வாரம் தினசரிகளில் கொடுத்த விளம்பரத்தினால் அவர்களுக்கு கிடைத்த ரீச்சை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அந்த விளம்பரத்தில் ஒரு ஆணும், குழந்தையும், ஹீரோ பைக்கும் இருக்க, ஆணுக்கு சேகர் ஐயர் என்றும், பெண்ணுக்கு ஸ்வேதா ஐயர் என்றும், வண்டிக்கு ஹீரோ ஐயர் என்று பெயர் போட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். வடநாடுகளில் தங்கள் பெயர்களுடன் ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. அது போல ஹீரோ வண்டியும் அவர்களுடன் சேர்ந்ததால் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டது என்பதை சொல்லத்தான் விழைந்திருந்தார்கள். ஆனால் நம்மூர் வழக்கப்படி ஜாதிப் பெயரைப் போட்டதினால் அந்த விளம்பரம் பல பேரால் அனைத்து சமூக தளஙக்ளிலும் ஷேர் செய்யப்பட்டு, சாதாரணமாய் கிடைத்திருக்க வேண்டிய விளம்பரத்தை விட, நான்கு மடங்கு கிடைத்துவிட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்த நாள் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஜாதிப் பெயரை எடுத்து மீண்டும் அதே விளம்பரத்தை கொடுக்க, இன்னும் பெரிய ஹிட். எது எப்படியோ ஐயர் என்று போட்டதால் கிடைக்க வேண்டியதுக்கு  மேலேயே கிடைத்துவிட்டது  விளம்பரம்.





                               
Hero Motors இன் வெற்றி -  தமிழ் ஸ்டுடியோ அருண் 

எதையும் எழுத வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியதை வேறு யாரு சொல்வார்கள். எனவே எழுதுகிறேன். கடந்த வாரம் முழுவதும், முகநூலின் விவாதத்தில் இடம்பெற்ற Hero Motors இன் விளம்பரம்.. ஐயர் என்று போட்டு இருந்ததால் அதுப் பற்றி மிக பரவலான தெறிக்கும் விவாதம் நடைபெற்று, இறுதியில் Hero Motors அந்த விளம்பரத்தை மாற்றியதை தங்கள் புரட்சியின் மூலம் கிடைத்த வெற்றியாக முகநூல் நண்பர்கள் 
அறிவித்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்கள். ஆனால் அது வெற்றியல்ல, உணர்ச்சிவசப்படும் தமிழர்களின் தோல்வியாகவே அதை நான் பார்க்கிறேன். எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்பட்டு அதன் எதிர்கால எதிர்வினைகள் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாத இது மாதிரியான வெற்றிகள் கொடுக்கும் எதிர்வினையை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த விளம்பரத்தை மிக சிறப்பாக ஒரு Sensational விசயமாக கொண்டுவந்து பைசா செலவில்லாமல் Hero Motors இன் தமிழகப் பிரிவு வெற்றி பெற்றிருக்கிறது.

உணர்ச்சி இல்லாதவன் மனிதன் அல்ல.. ஆனால் எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்படுபவன் அதற்கான எதிர்வினைகளையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். மாறாக இது மாதிரியான போராட்டங்களை வழி நடத்தி செல்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை தன் சுயக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வைகோவின் கட்சியும், வைகோவின் தோல்வியும் பறைசாற்றும் உண்மை இதுதான்.

ஐயர் என்று விளம்பரப் படுத்தியதால் உங்களில் எத்தனை பேர் அந்த வண்டியை இனியும் வாங்காமல் இருப்பீர்கள்? அதான் பெயர் மாற்றியாகிவிட்டதே.. இனி வாங்கினால் என்ன என்றுதான் எதிர்வாதம் செய்வீர்கள்? அதுதான் Hero Motors இன் வெற்றி.. போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே

1 comment:

  1. அவாள் நிறுவனத்தில் அவாள் சாதியை போட்டுக்கறா, உமக்கேன் வம்பு.

    ஏற்கனவே, ஐடி நிறுவனத்தில் ஐயர்களின் தமிழ்நாடுன்னு பெயர் வைத்து விளையாட்டு விளையாடினா

    அதுசரி அவாளா கேள்வி கேட்க நீர் யார் ஓய்?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா