யார் செய்தாலும் தவறு தவறுதான். ஆனால் ஒரு தவறை ஓர் இனத்துடனோ , மதத்துடனோ , மொழியுடனோ சம்பந்தப்படுத்துவது தவறு.
ஆனால் சில படங்களில் இஸ்லாமிய சகோதரர்களை புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பது கவனத்துக்குரியது.
இந்த நிலையில் விஜயின் துப்பாக்கி படம் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு திருஷ்டி பரிகாரம் போல இஸ்லாமியரை படம் புண்படுத்துயுள்ளது வருந்தத்தக்கது.
உண்மையில் அந்த பட குழுவினருக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் கூட இருந்து இருக்கலாம். ஆனால் படம் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.
இதற்கு எதிர்ப்பு வரும் என எப்படி தெரியாமல் போயிற்று என தெரியவில்லை.
அல்லது தெரிந்தே இப்படி செய்கிறார்களா என்றும் புரியவில்லை...
இது போல படம் எடுப்பவர்கள் சொல்லும் சமாதானங்களும் , அவற்றின் போதாமையும்..
சினிமா என்பது வெறும் பொழுது போக்குதானே ? இதில் புண்பட என்ன இருக்கிறது?
ஒருவனை ஜாலியாக அடித்தாலும் , விளையாட்டாக அடித்தாலும் வலிக்கத்தான் செய்யும். சில தெலுங்கு படங்களில் தெலுங்கான மக்கள் பேசும் ஸ்டைலை கிண்டல் செய்தது அந்த காலத்திலேயே பிரச்சினை ஏற்படுத்தியது. யாராக இருந்தாலும் , ஒரு குறிப்பிட்ட தரப்ப்பினரை தொடர்ந்து எதிர்மறையாக காட்டுவது , கண்டிப்பாக புண்படுத்ததான் செய்யும்.
ஆப்கானிஸ்தானில் இருந்தோ , பாகிஸ்தானில் வரும் தீவிரவாதிகளை இஸ்லாமியர்கள் என்றுதானே காட்ட முடியும் ?
ஒரு குறிப்பிட்ட நாட்டை நேரடியாகவோ , மறைமுகவோ இப்படி காட்டுவதே தவறு. இப்படி தொடர்ந்து , ஒரு குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து கருத்தியல் தாக்குதல் நடத்துவதும் விரும்ப்பத்தக்கதல்ல.
இஸ்லாமியரை வில்லனாக காட்டவே கூடாதா ?
பாகிஸ்தானில் நடப்பது போல ஒரு படம் எடுத்தால் , அதில் எல்லா பாத்திரங்களுமே இஸ்லாமியராக இருப்பார்கள் . அதில் ஓர் இஸ்லாமியன் வில்லனாக இருப்பது வித்தியாசமாக தெரியாது.
அதில் ஒரு தமிழனை வில்லனாக காட்டினால் , வித்தியாசமாக தெரியும் அல்லவா ? அதே போல , இயல்பான ஒரு கதையில் ( உதாரணமாக தோப்பில் முகமது மீரான் நாவல்களில் வருவதை போல ) வில்லன் ஒருவன் இஸ்லாமியனாக இருந்தால் வித்தியாசமாக தெரியாது. ஆனால் , பயங்கரவாதி என்றாலே இஸ்லாமியன் என காட்டுவதுதான் இடிக்கிறது.
ஆக, என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் இது போன்ற படங்கள் இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதை மறுக்க முடியாது.
என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்
ReplyDeleteYOU POINT OF VIEW IS REASONABLE. I FAIL TO UNDERSTAND WHY MANY OF THE BLOGGERS DO NOT RESPOND, WHEN BRAHMINS ARE REDICULED/ MADE FUN OF IN THE MOVIES.
ReplyDelete