Saturday, November 3, 2012

சின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்

சின்மயி விவகாரத்தில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசி வருகிறார்கள்.. சிலர்  நியாயமாகவும் பேசி வருகிறார்கள்.

நடு நிலையுடனும் , நிதானத்துடனும் யோசிக்கும் ஞானி என்ன சொல்லப் போகிறார் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் , அவர் கட்டுரை அதிர்ச்சியளித்தது.

சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இதை இழுத்து இருக்கிறார் அவர்.

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியார் நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் ஒருபோதும் பாலியல் வக்கிரங்களில் ஈடுபடமாட்டார்கள் . சாமி கும்பிடாவிட்டால் , அவர் பெரியாரிஸ்ட் என தமிழர்கள் பொது புத்தியில் பதிந்துள்ளது. அவர் கடவுள் மறுப்பு என்ற விஷ்யத்தை தவிர பல தளங்களிலும் இய்ங்கியவர். குறிப்பாக பெண் விடுதலைக்காக அவரைபோல குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

    பெண்ணை அடக்கி வைக்க ஆண்கள் செய்யும் தந்திரங்களையும் , அதில் இருந்து பெண்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக சொல்லி இருப்பார், பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஒன்றே போதும்.

இதை எல்லாம் படித்தவர்கள் , கண்டிப்பாக ஒரு போதும் பெண்மையை இழிவு செய்ய மாட்டார்கள்.

ஒரு சிலர் பெரியார் பெயரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் , அவர்கள் பெரியாரை படித்து இருந்தால் , பெரியாரின் குரல் அவர்களது தலைக்குள் இருந்து எதிர் தட்டு தட்ட வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.. காரணம் உண்மையான பெரியாரிஸ்ட்டிடம் இருந்து வக்கிர சிந்தனைகள் ஒருபோதும் வெளிப்படாது.


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம்.
   

பெரியார் சிந்தனைகளை விடவா , சினிமா பாடல் சக்தி வாய்ந்தது ? பெரியார் சிந்தனைகளில் புடம் போட்ட ஒருவரை சினிமா பாடலோ , மீடியாவோ எந்த விதத்திலும் கெடுத்து விடாது.

தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன்


பெரியார் கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிந்து நல் வாழ்வு காட்டி வருகிறார்.  இந்த உண்மையை மறந்து இருக்கிறார்  ஞானி அவர்கள்.

என்னை பொருத்தவரை இரு தரப்புமே தவறு செய்து இருக்கிறார்கள் . ஆனால் இதற்காக பெரியாரை இந்த விவகாரத்தில் இழுப்பது வருந்தத்தக்கது. தனி மனித பலவீனம் அனைவரிடமும் உள்ளதுதான் ,  தனிப்பட்ட முறையில் தவறு செய்து விட்டு , பிரச்சினை வந்தால் கட்சி , ம்தம் , இனம் , மொழி சார்ந்து தப்பிக்க நினைப்பது , தான் சார்ந்த கட்சி , மதம் , இனம் , மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.









3 comments:

  1. எல்லோரும் பேசி முடிச்சாச்சுன்னா, இத உட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாமே?

    பேசி என்ன கிழிச்சாங்க அப்படீங்கறது வேற விஷயம்!

    ReplyDelete
  2. ஞானியின் கருத்தைப் பற்றிய ஒருபகுதியாவது இப்பதிவுடன் சேர்த்திருந்தால் அதைப்பற்றி அறியாத என்னைப் போன்றார் மேலும் தெளிவாக புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கும்! எனினும் உங்கள் கருத்து ஏற்புடையதே

    ReplyDelete
  3. அன்புள்ள பிச்சைக்காரன், என்னைப் பக்குவப்படுத்தியவர்களில் பெரியாரும் முக்கியமானவர்.இது தொடர்பாக உங்கள் கருத்துதான என்னுடையதும். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றோரைப் படித்தவர்கள், அவர்கள் பெயர்களை தங்கள் வாதங்களில் முன்வைப்பவர்கள்,அவர்கள் வலியுறுத்திய சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் என அறியப்பட்டவர்கல் பாலியல் வக்கிர கமெண்ட்டுகளை எழுதும் முரண்பாட்டை சுட்டிக் காட்டுவதே என் நோக்கம். அப்படிப்பட்டவர்கள் மூளையில் பதிந்த அளவு மனதில் இவை பதியவில்லை என்று நான் சுட்டிக் காட்டும் இடம் அதுதான். டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் போல சிலர் இருப்பது நம் கவலைக்குரியது என்பதையே என் கட்டுரை சொல்கிறதே தவிர, பெரியாரையோ இதர முன்னோடி சிந்தனையாளர்களையோ குறை சொல்லவே இல்லை. என் முழுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோருக்கு: http://gnani.net/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

    அன்புடன் ஞாநி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா