Sunday, November 4, 2012

சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் , பாலியல் கமெண்ட் எழுதலாமா- ஞானி ஆதங்கம்


சின்மயி விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் தலையிட்டு , அவரை பெரிய ஆளாக்கி வருகின்றனர். கண்டிக்கத்தக்க கருத்துகளை சொல்லி , மற்றவர்களை புண்படுத்தியவர் சின்மயி. ஆனால் அவர் புண்பட்டுவிட்டது போல ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஷ்யம் தெரிந்தவரும் , நடு நிலையாளரும் , விமர்சகருமான ஞானி இருதரப்பில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஞானியின் அந்த கட்டுரை இதில்..



அதில் சில வரிகள் , பெரியாரை பெரிதும் மதிப்பவன் , ஆராதிப்பவன் என்ற முறையில் என்னை வருத்தம் அடைய செய்தது.

உதாரணமாக

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியாரை படித்த யாரும் பெண்மையை இழிவு செய்யும் வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. பெரியார் அளவுக்கு பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. ஒரு சினிமா பாடல் கேட்டு மனம் மாறும் அளவுக்கு ஒரு பெரியார் கொள்கைகள் வலுவற்றவை அல்லவே என  நினைத்தேன்.

ஆனால் ஞாநி அவர்கள் சொல்ல வந்ததது , பெரியாரை படித்து இருந்தாலும் , அவர் கருத்துகளை முழுமையாக உள்வாங்காத சிலர் பாலியல் வக்கிர கமெண்டுகள் எழுதுகிறார்கள் . இது பெரியாரின் கருத்துகளில் இருக்கும் போதாமை அல்ல.. நம் கிரகிப்பு தன்மையில் இருக்கும் போதாமை. இதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே பெரியாரை ஆழ்ந்து படித்தால் , கண்டிப்பாக நம்மை பக்குவப்படுத்துவார் என்பதற்கு உதாரணமாக ஞானி அவர்களே இருக்கிறார்.

இதோ ஞானியின் விளக்கம்

அன்புள்ள பிச்சைக்காரன்,
என்னை பக்குவப்படுத்தியவர்களில் பெரியாரும் முக்கியமானவர்.  இது தொடர்பாக உங்கள் கருத்துதான் என் கருத்தும். பெரியார் , மார்க்ஸ் , அம்பேத்கார் போன்றோரை படித்தவர்கள் , அவர்கள் பெயர்களை தம் வாதங்களில் முன் வைப்பார்கள். அவர்கள் வலியுறுத்திய சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் என அறியப்பட்டவர்கள் பாலியல் வக்கிர கமெண்டுகளை எழுதும் முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம் . அப்படிப்பட்டவர்கள் மூளையில் பதிந்த அளவு , மனதில் பதியவில்லை என நான் சுட்டிக்காட்டும் இடம் அதுதான். டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் போல சிலர் இருப்பது நம் கவலைக்குரியது என்பதையே நம் கட்டுரை சொல்கிறதே தவிர பெரியாரையோ , இதர முன்னோடிகளையோ குறை சொல்லவே இல்லை.
அன்புடன் ,
ஞாநி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா