அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
“ தமிழ் நாட்டில் பிரமாணர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த நிலையில் அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது சரியா? இதனால் என்ன பயன் ? “
அண்ணா பதில் அளித்தார்.
“ நாங்கள் பிரமாணர்களை எதிர்க்கவில்லை. பிராமணீயம் என்பதைத்தான் எதிர்க்கிறோம். பிராமணீயம் என்பது பிராமணர்களால் உருவாக்கப்பட்டாலும் , அதை போற்றி வளர்ப்பது மற்றவர்கள்தான். எனவேதான் பிராமணீயம் என்பது அச்சுறுத்தும் ஒன்றாகவும் . எதிர்க்கப்பட ஒன்றாகவும் இருக்கிறது “ என்றார்.
பிராமணியத்தை வெறுக்க கூடிய பிராமணர்களும் இருக்கலாம். பிராமணீயத்தை ஆதரிக்கும் அபிராமணர்களும் இருக்கலாம். இது ஜாதி சார்ந்தது அல்ல. இது ஒரு மன நிலை.
சமீபத்தில் நடிகர் கமல் , தன் படத்தை பார்த்துதான் ஹாலிவுட் இயக்குனர் டொரண்டொனோ காப்பி அடித்ததாக பிருடா விட்டு கிண்டலுக்கு உள்ளானார். கமல் சொன்னதை வழி மொழிந்து பேச பாலசந்தரோ மற்ற பார்ப்பனர்களோ தயாராக இல்லாத நிலையில், பகுத்தறிவு பாசறையை சேர்ந்த சத்யராஜ் ஒரு கூட்டத்தில் , கமல் சொன்னதை வழி மொழிந்து பேசினார். கமலை பார்த்து தான் இன்ஸ்பைர் ஆனதாக அந்த ஹாலிவுட் இயக்குனர் சொன்னதாக பேசினார்.
இதுதான் பார்ப்பணீயம் .
இன்று அந்த பார்ப்பணீயம் எனக்கு பெரிய தலை வலி ஏற்படுத்தியது. மெயில் இன் பாக்ஸ் முழுதும், ஒரு இரு சக்கர வாகனத்தின் விளம்பரம்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு தீவிரமாக அவர்கள் விளம்பரம் செய்ய மாட்டார்களே என்று குழம்பி போய் அனுப்பியது யார் என பார்த்தேன். அனுப்பியது அவர்கள் இல்லை.
நண்பர்களும் , நலம் விரும்பிகளும்தான் அனுப்பி இருந்தார்கள். இவர்கள் ஏன் அந்த நிறுவனத்துக்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள் என பார்த்தபோதுதான் , விஷ்யம் தெரிந்தது.
அந்த வாகன விளம்பரத்தில் , ஒரு ஜாதி பெயரை பயன்படுத்தி இருந்தார்கள். பாராட்டியோ, திட்டியோ இல்லை. ஒரு ஃபீல் கொண்டுவருவதற்காக.
ராஜ்குமார் , ராம்குமார் மற்றும் ஸ்ப்லெண்டர் குமார் என்று சொல்லி, பைக்கும் குடும்பத்தில் ஒருவன் என்ற ஃபீல் கொண்டு வரும் முயற்சி.
தம் அனுமதி இல்லாமல் எப்படி தம் ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என கேட்டு , ஐயர்கள் சண்டைக்கு போய் இருந்தால் லாஜிக்காக இருந்து இருக்கும். ஆனால் அய்யர் அல்லாத நண்பர்கள் , இதற்காக உணர்ச்சி வசப்பட்டு , கவனத்துக்கு வராமல் போய் இருக்க கூடிய அந்த விளம்பரத்தை, எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
எனக்கு மட்டும் அல்ல.. ஒவ்வொருவரும் தலா ஆயிரம் பேருக்காவது அனுப்பி இருப்பார்கள் என யூகிக்கிறேன். இது போல தமிழ் நாட்டில் எத்தனை பேர் செய்தார்கள் என தெரியவில்லை. ஐய்யர் என்ற பேருக்கு இவ்வளவு மவுசா என அந்த இரு சக்கர வாகன நிறுவனம் மகிழ்ந்து போய் இருக்கும். சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் ஏஜன்சி ஊக்கத்தொகை பெற்று இருக்கும்.
பெரியார் , அண்ணா போன்றோர் வழி காட்டிய மண்ணில் , இப்படி ஒரு அபத்தமான நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.
பெரியார் பேரு இருக்கும் வரை ஜாதிகள் பேரும் இருக்குமய்யா...பெரியாரின் தோல்வியை நாடு தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா ?
ReplyDeleteபெரியாருக்கு என்றும் தோல்வி கிடையாது... சிலர் புரியாமல் நடந்து கொள்வது அவர்களின் தோல்வி
ReplyDeleteசாதியை இந்த அளவு வெறுத்த அண்ணா அவர்கள் 1962 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் தம்முடைய பெயருக்கு பின்னால் முதலியார் என்ற சாதி பட்டத்தை சேர்த்து கொண்டு ஏன் போட்டியிட்டார்.அந்த மனிதர் ஒரு hippocrat .
ReplyDeleteஅண்ணா என்றுதான் அவர் மக்களால் அழைக்கப்பட்டார். அண்ணா என்றுதான் வரலாற்றில் வாழ்வார்..
ReplyDelete