தமிழக சட்டப்பேரவை வைர விழாவை திமுகவும் , அதிமுகவும் வெவ்வேறு ஆண்டுகளில் கொண்டாடி மகிழ்ந்தன. இந்த சட்டப்பேரவை வரலாற்றில் , முக்கியமான நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .
அவற்றை எல்லாம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத்தவிர , அரசியலில் திருப்புமுனை நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளம் . அந்த வகையில் டாப் ஃபைவ் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
5 தி மு கவை விட்டு விலகிய எம் ஜி ஆர் , அப்போதைய தி முக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதைய சபா நாயகர் மதியழகன் , திடீரென எம் ஜி ஆர் ஆதரவாளராக மாறினார். சட்டசபை கூடியபோது , திமுக அரசு மக்கள் ஆதரவை இழந்து விட்டதாகவும் , சட்டசபையை கலைக்க வேண்டும் என்றும் கூறி , சட்டசபையை ஒத்தி வைத்தார்.
இதனால் கடுப்பான கருணா நிதி , ஒத்தி வைக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே சட்டசபையை கூட்டி , சபா நாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கூட்டத்தில் , சபானாயகர் நாற்காலியில் , மதியழகன் இருந்தார். அவருக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலியை போட்டு , சீனிவாசனை சபானாயகராக அமர வைத்தார்கள். ஒரே நேரத்தில் இரு சபானாயகர்கள் !!! இது போல அதற்கு முன்னுன்ம் நிகழ்ந்ததில்லை.. அதன் பின்னும் நடக்கவில்லை.
4 அந்த கூட்டத்தில் பயங்கர கூச்சல் , குழப்பம் நிலவியது. எம் ஜி ஆர் பேசும்போது அவர் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது , அவர் மீது செருப்பு வீசப்பட்டது. சட்டசபை செத்து விட்டது என்று சொன்ன எம் ஜி ஆர் , இனி சட்டசபைக்கு வரவே மாட்டேன் என்று சூளுரைத்தார். அதன் படி , முதல்வர் ஆன பின்புதான் சட்டசபைக்குள் நுழைந்தார் .
3 வழக்கமாக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திப்பதாக இருந்தால் , முதல்வர்தான் அந்த முடிவை எடுப்பார். அல்லது மெஜாரிட்டி இல்லாத நிலையில் , சட்டசபை கலைக்கப்படும். அல்லது ஏதாவது குற்றச்சாட்டின் படி மத்திய அரசால் கலைக்கப்படும், இது எதுவும் இல்லாமல் ,. ஒரு முறை கலைக்கப்பட்ட முன்னுதாரணம் நமக்கு உண்டு,
எம் ஜி ஆர் உடல் நலமின்றி , அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார். பிரதமராக பதவியேற்று இருந்த ராஜீவ் காந்தி , பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருந்தார். அப்போதைய இந்திரா காந்தி அனுதாப அலையில் , பலன் காண அதிமுக விரும்பியது. அதிகபட்ச எம் பி சீட்டுகளை தமிழ் நாட்டில் இருந்த பெற காங்கிரஸ் விரும்பியது. எனவே இவர்களாகவே முடிவு செய்து ( முதல்வருக்கு தெரியாமல் ) சட்டசபையை கலைத்து , தேர்தலை சந்தித்தார்கள் .
இதை கருணா நிதி கண்டித்தார் ...
"எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று வரும் வரையில் ஜனநாயக ரீதியில் ஒருவரை தற்காலிக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து இருக்கலாம். சட்டசபையை கலைக்க வேண்டியதில்லை. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தபிறகு ஜுன் மாதம் தேர்தலை நடத்தி இருக்கலாம்.
சட்ட சபையை கலைக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கிற உரிமை முதல் அமைச்சருக்கே உண்டு. ஆனால் முதல் அமைச்சரின் அறிவுரை இல்லாமல் கவர்னர் இப்படி முடிவு எடுத்து அறிவித்தது, மிகத்தவறான முன்மாதிரியை உருவாக்கிவிட்டது என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்."
2 எம் ஜி ஆர் மறைவுக்கு பிறகு , அதிமுக உடைந்து பலவீனமாக இருந்தது. தி மு க ஆட்சியை பிடித்து இருந்தது. ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தார். ஆனால், ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையெல்லாம் , அவருக்கு இல்லை. அவர் கட்சியை டம்மியாக்கி , ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், சட்டசபை கூட்ட்டம் ஒன்றில் , அவர் சேலையை பிடித்து இழுத்து , திமுகவினர் அசிங்கப்படுத்தினர் என்ற செய்தி பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. தேசிய அளவில் ஜெ. ரீச் ஆனது அப்போதுதான் , அதேபோல கிராமங்களிலும் இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் முதல்வராகத்தான் ஜெ. சட்டசபையில் நுழைந்தார் .
1. காங்கிரஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்ட அண்ணா பயன்படுத்திய முக்கிய ஆயுதம் சட்ட எரிப்பு போராட்டம். இதற்காக அண்ணா சிறை செல்ல வேண்டி இருந்தது. எம் ஜி ஆர் காலத்தில் இந்த சட்ட எரிப்பு போராட்டம் , கருணாநிதி தலைமையில் காமெடியாக முடிந்தது.
சட்ட எரிப்பு போராட்டம் என கருணாநிதி அறிவித்தார். எம் ஜி ஆர் அரசு கண்டு கொள்ளவே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அரசு ஒன்றுமே செய்யவில்லை. திட்டமிட்டப்படி, சட்ட எரிப்புக்கு ஆயத்தமானார்கள். போலீசார் கூடி நின்றனரே தவிர , தடுக்கவில்லை. எரித்தும் விட்டார்கள், அப்போதும் ஒன்றும் நிகழவில்லை.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
பிறகுதான் புரிந்தது. அப்போதைய சபானாயாகர் பி எச் பாண்டியன் , சட்ட எரிப்பில் ஈடுபட்ட அனைத்து தி மு க எம் எல் ஏக்களும் , பதவி இழக்கிறார்கள் என அதிரடியாக அறிவித்தார். சட்டத்தை மதிப்பதாக பதவி ஏற்கும் எம் எல் ஏக்கள் , சட்டத்தை எரித்ததன் மூலம் , பதவி இழப்பதாகவும், தனது இந்த முடிவை யாரும் மாற்ற முடியாது என்றும் , தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார் . தேசிய அளவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பதவி பறிப்பை , தி மு க கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அத்தோடு விட்டு இருக்கலாம். ஆனால் நீதி மன்றம் சென்று , தாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை என்றும் , வெறும் காகித்தைத்தான் எரித்தோம் என்றும் கூறி, சட்ட எரிப்பையே கேலி கூத்தாக்கினார்கள். ஆனாலும் பதவி போனது போனதுதான்.
முக்கிய நிகழ்வுகள். சுவையான தகவல்கள்.
ReplyDeleteநன்றி சரவண குமரன்
ReplyDeletepadhivittamaikku mikka nandri
ReplyDeletesurendran
surendranath1973@gmail.com