Pages

Saturday, December 15, 2012

கமல் ஹாசனுக்கு நன்றிக் கடன்பட்டுள்ள தமிழகம்


எழுத எவ்வளவோ இருக்கிறது...  கமலின் சினிமா அழிப்பு முயற்சி குறித்தே எழுதுகிறீர்களே,, அவரைப்ப்பற்றிதான் எல்லோருக்கும் தெரியுமே.. ஒரு சிலர் அறியாமை காரணமாகவோ,  உள் நோக்கத்துடனோ அவரை ஆதரிக்க்கிறார்கள்... யார் என்ன எழுதினாலும் அவர்கள் மாறப்போவதில்லை. எனவே எப்படி பார்த்தாலும் , நீங்கள் எழுதுவது வீண் வேலை என சிலர் உரிமையோடும் , அன்போடும் சொன்னார்கள்.

பக்காவாக திட்டம் இட்டு, ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பது போல காட்டிக்கொண்டு  கமல் இதில் இறங்குகிறார். இதை தடுக்க இயலாது என்பது தெரிந்ததுதான்..  இதனால் ஒட்டு மொத்த சினிமா துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும் , கமலுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் அவர் யார் பேச்சையும் கேட்கப்போவதில்லை. ஆனால்  தொலை நோக்கு கண்ணோட்டத்தில் பார்த்தால் , கமலுக்கும் நஷ்டம்தான் என்பது அவருக்கு புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

      நமக்கு பயன்படுகிறதோ இல்லையோ.. புதிதாக ஒரு பொருளைப்பார்த்தால் , வாங்கி வைத்து கொள்ளும் தமிழ் நாட்டு மனப்பான்மையிம் அடிப்படையில் சிலர் அவர் பேச்சில் மயங்குகிறார்கள்.  ஆனால் ஒரு சிலராவது அவரை கண்டித்து வருகிறார்கள்.

 ஒரு தீய செயல் நடக்கும்போது , ஆட்டு மந்தைகள் போல எல்லோரும் அவரை ஆதரிக்காமல், ஒரு சில நேர்மையான குரல்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதாலேயே நான் எழுத வேண்டி இருக்கிறது..

           விஷ்யம் என்ன , என்ன பாதிப்பு என்பது புரியாமலேயே பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.

         கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்புவதை அன்று பலரும் எதிர்த்தார்களாம்.. அப்போது கமல் மட்டுமே கேபிள் டிவியில் திரைப்படங்கள் ஒளிபரப்பாவதை ஆதரித்தாராம். இப்போது அனைவருமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படங்களை தருகிறார்களாம். இது கமலின் தீர்க்க தரிசனத்தை காட்டுகிறது என அவர் தொண்டர்கள் புளகாங்கிதம்  அடைகிறார்கள்..

       ஆனால் தனியார் தொலைகாட்சிகளில் கன்னாபின்னாவென அலுப்பூட்டும் அளவுக்கு சினிமா ஒளிபரப்பாவதால் , சினிமா மீதான ஈர்ப்பு வெகுவாக குறைந்து விட்டது இவர்களுக்கு புரியவில்லை.

    திரையுலக ஜாம்பவான்களான பாலசந்தர் போன்றோர் இதை எதிர்த்தது அதனால்தான். ஆனால் அவர்களும் இன்று  தனியார் தொலைகாட்ச்சிக்கு வந்து விட்டார்களே என லொள்ளு பேசுகிறார்கள் சிலர்..

ஒரு பொதுவான போக்கை கவனியுங்கள்..

 ஒரு துறையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் அனைவருக்கும் நல்லது.. இந்த நிலையில் ஒருவர் மட்டும் அந்த துறைக்கு துரோகம் செய்தால் , அந்த துரோகத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும்.

 இந்த நிலையில், நஷ்டத்தை தவிர்க்க வேண்டி , அனைவருமே தவறான வழியில் இறங்க வேண்டி வரும். இதில் அனைவருக்குமே நஷ்டம்தான்...  இந்த அனைவருக்குமே நஷ்டம் என்ற நடைமுறையே தற்போது நிலவுகிறது.. இது கமல் பெருமைப் பட வேண்டிய விஷ்யமா?

                      இதில் சராசரி ரசிகனுக்கு என்ன பாதிப்பு ?

   தமிழில் படம் எடுப்பது நஷ்டம்தான் என்ற நிலை உருவாகி இருப்பதால் , நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்றால், வேறு மொழிப்படங்களையே நாட வேண்டி இருக்கிறது.  life of pie போன்ற படங்கள் எல்லாம் தமிழில் வர வாய்ப்பே இல்லை.

  தியேட்டர்களில் டிக்கட் விலை அதிகம் என்பதால்தான் கூட்டம் வருவதில்லை என மக்கள் பல்ஸ் புரியாமல் இன்னொரு கதையை பரப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள் .

   இன்றைய நிலையில், இலவசமாகவே திரையிட்டாலும் , பார்ப்பதற்கு ஆள் இல்லை என்பதே யதார்த்தம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிகளில் சினிமா ஓவர் டோசாகி விட்டது.

    முன்பெல்லாம் , வீடியோ கேசட்டை வைத்து , சில இடங்களில் ( கிராமப்புற பகுதிகளில் )தொலைக்காட்சிப்பெட்டிகளில்  சினிமா காட்டி காசு வசூலிப்பார்கள்.. அதிகமான காசு , சிறிய திரை , வசதி குறைவு என்றெல்லாம் யாரும் யோசித்ததில்லை.  கூட்டம் செமையாக வரும்.

 இன்று அப்படி செய்தால் சிரிக்க மாட்டார்களா...   கோயில் விழாக்களில் , திரையைக்கட்டி பழைய படங்களை திரையிடுவார்கள்..அதற்கும் பயங்கர கூட்டம் வரும். இன்று அது போன்ற பழைய படங்களை பார்க்க காசு கொடுத்தாலும் வர மாட்டார்கள் . அதுதான் 24 மணி நேரமும் டிவியில் பார்க்கிறார்களே...

எனவே டிக்கட் விலைக்கும், கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை...

 நம் ஊர் டிராபிக்கில் திரையரங்கு சென்று வந்தால் , ஒரு நாள் முழுக்க அதற்கே செலவாகி விடும். அப்படியும் சினிமா செல்ல வேண்டும் என்றால் , அந்த அளவுக்கு ஈர்ப்பு வேண்டும். அந்த ஈர்ப்பை சினிமா இழந்து வருகிறது. காரணம் தனியார் தொலைக்காட்சிகளில் வரைமுறை இல்லாமல் சினிமா காண்பிக்க்படுவது..

ஒரு காலத்தில் ஞாயிற்று கிழமை தூர்தர்ஷனில் சினிமா ஒளிபரப்பினால் , தெருவில் ஆளே இருக்காது... அந்த ஈர்ப்பு இன்று இருக்கிறதா ?

   அமெரிக்காவை பார், ரஷ்யாவைப்பார் , இங்கிலாந்தைப் பார் என்கிறார்கள் அவர்கள். அந்த நாடுகளின் பொருளாதாரம் , சமூக அமைப்பு வேறு..அவர்கள் செய்வதை நாமும் செய்வோம் என முட்டாள்தனமாக பின்பற்ற கூடாது..


  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவை சிலர் அழித்து வந்தாலும் , சினிமா தன் ஜீவனை ஒரு விஷ்யத்தில் தக்க வைத்து வந்தது.. அதை தொலைக்காட்சிகள் அழிக்க முடியாமல் இருந்தது..

அதுதான் முதல் நாள் , முதல் காட்சி பார்க்கும் பெருமிதம். முதல் சில நாட்களில் , கூட்டத்தினருடம் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவமே அலாதி. இந்த முதல் சில நாட்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆஃப் செய்யும் முயற்சிதான் , ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது..

      ரஜினி படம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க , ஓர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய்   ஆகிறது என வைத்து கொள்ளுங்கள். ஐந்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் , முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை ஐந்து பேரும் ( தலைக்கு 200 ரூபாய் என்ற கணக்கில் ) பெற முடியும் என்றால் , தியேட்டர்களுக்க்கு யார் போக போகிறார்கள் ?

 கண்டிப்பாக இந்த முறையால் தயாரிப்பாளருக்கு லாபம்தான். இந்த முறை புழக்கத்துக்கு வந்தால் , ரஜினி உட்பட பலரும் இந்த முறையில் , சம்பாதிக்கவே நினைப்பார்கள்.

ஆனால் திரையரங்குகள் தமது கடைசி தடுப்பு சுவரையும் இழந்து , தம் ஈர்ப்பை முழுக்க இழக்கும்.

பெரிய பெரிய ஆடம்பர திரையரங்குகள் மட்டுமே இருக்க முடியும். எளிய மனிதன் இது போன்ற திரையரங்குகளுக்கு செல்லப்போவது இல்லை.

ஒரு வகையில் பார்த்தால் , கமல் செய்வது ஒரு தேசிய சேவைதான்.

   சினிமா என்ற மாயையில் சிக்கி , தமிழன் அழிகிறான் என சிலர் சொல்வதுண்டு. சினிமாவால் சமூகம் சீரழிவதாகவும் சிலர் தவறாகவோ சரியாகவோ பேசி எழுதி வருகிறார்கள்..

சினிமா என்ற துறையை அழிக்க எத்தனையோ பிரச்சாரங்கள் செய்தும் பார்த்து விட்டார்கள்.

அவர்களால் முடியாத , சினிமா ஒழிப்பு என்ற விஷயத்தை கமல் வெகு வெகு இலகுவாக செய்ய இருக்கிறார். இவருக்கு தமிழகம் கடமைப்பட்டு இருக்கிறது.  நன்றிக்கடன் பட்டு இருக்கிறது...



 

     
   

12 comments:

  1. Sema comedy boss Neenga...

    ReplyDelete
  2. ஒரு புதிய கோணம்தான். என்ன நடக்கிறது பார்க்கலாம்.

    ReplyDelete
  3. pichakaaran enra kosuvin thollai overa irukku pa.

    ReplyDelete
  4. சரியா சொன்னீங்க நண்பரே. கமல் அழைத்து செல்வது அடுத்த கட்டத்திற்கல்ல. திரையரங்ககளின் இறுதிகட்டத்திற்கு.

    ReplyDelete
  5. ஒரு விசயம் தெரியலைன்னா, ஒன்னு அதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்… அல்லது மூடிக்கிட்டு இருக்கலாம். மூனாவதா ஒரு கேட்டகரி இருக்கு. பதிவர்ன்னா… எல்லாம் தெரிஞ்ச மாதிரி எதையாவது அடிச்சி விடணுமில்லையா? தோ…. எழுதிகினே இருக்கேன்.

    கொஞ்ச நாளா வாழ்க்கை ஓவர் பிஸியா போய்கினு இருக்குங்க. அதான் ஏரியா பக்கம் தலை வைக்கலை. ஃபேஸ்புக்ல கூட நேரா ‘விமர்சகர் வட்டம்’ மட்டும்தான். சரி ரொம்ப நாளாச்சே…. ந்யூஸ் ஃபீடை க்ளிக் பண்ணலாம்னு பண்ணினா…. அங்க யாரோ யுவகிருஷ்ணாவோட போஸ்டை ஷேர் பண்ணியிருக்க, நமக்குத்தான் சனி எப்பவும் உச்சமாச்சே! க்ளிக் பண்ணிட்டேன்.

    இப்பவே சிண்டு முடிய ரெடியா இருப்பீங்கன்னு தெரியும். இருந்தாலும் பிரச்சனை அவர் போஸ்டில் இல்லை. கெரகம் கீழ வெய்ட் பண்ணிட்டு இருந்துச்சி. பேர் பிச்சைக்காரன். யுவகிருஷ்ணா எழுதின பதிவுக்கு.. எதிரா எழுதறேன்னு (அல்லது கமலுக்கு எதிரா… அல்லது என்ன கருமமோ) ‘இவரு அடிச்சிவிட்ட’ ஒரு போஸ்டை அங்க லிங்க் கொடுத்து தொலைக்க… நமக்கு சனி வெகு உட்சம் போல. அதை படிச்சி தொலைஞ்சிட்டேன். ஏன்டா எழவு இருக்கற பிரச்சனையில, இந்த கருமத்தையும் சேர்க்கனும்னு நினைச்சாலும்… நாந்தான் முன்னாடியே சொன்னேனே…

    உட்சத்தில் சனி! ஹியர் யு கோ…!

    http://hollywoodbala.com/kamal-on-demand/

    ReplyDelete

  6. அனைவரும் மேற்கண்ட இணைப்பை படிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.. சாப்பாடு சரி இல்லை என நாம் சொல்கிறோம்... சரி இல்லைதான். ஆனால் நாங்கள் அட்வான்ஸ்டு பாத்திரம் , அட்வான்ஸ்டு அடுப்பு பயன்படுத்துகிறோம் என்பது போல சம்பந்தம் இல்லாமல் கமல் தரப்பு அறிவு ஜீவிகள் பதில் அளிக்கிறார்கள் .. அதற்கு ஓர் உதாரணம்தான் மேற்கண்ட இணைப்பு...

    ReplyDelete
  7. @ஒசை.. ஆமாம்.. சக மரங்களையே அழிக்கும் கோடாலிக்கு உதவுவது இன்னொரு மரம்தான்... அதை போல கமல் ந்டந்து கொள்கிறார்

    ReplyDelete
  8. @பழனி கந்தசாமி... புகழ் பெற்ற தங்கம் தியேட்டர் போன்றவை இடிக்கப்படுவதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.. இன்னும் மோசமானவற்றையும் பார்க்க இருக்கிறோம் :) என்ன செய்வது...

    ReplyDelete
  9. Cycle rickshaw ellaam azhinju poguthe... Bike/car vandhathinnaala... Athukkum oru poraattam panda vaendiyathuthane...

    ReplyDelete
  10. @ நாடகத்தை சினிமா அழித்தது... அம்மிக்கல்லை மிக்சி அழித்தது... ரிக்‌ஷாவை ஆட்டோக்கள் அழித்தன.. இது பழைய வரலாறு..

    ஆனால் ஒரு சினிமாக்காரரே சினிமாவை அழிக்க போகிறாரே... அதுதான் சமகால வரலாறு

    ReplyDelete
  11. To Produce a Decent & good movie 100 Crore does not need
    This year recent hit movies are Low budget not a Star value movies
    Kamal puts his salary as 50 Crores and jacks up the price for his own productionhence no distributor is interested to buy

    ReplyDelete
  12. எந்த துறையும் போட்டிகள் நிறைந்தது தான்... வித்தியசமாக செயல்படுபவன் ஜெயிப்பான்... அப்படி செயல்பட முடியாதவன் புலம்ப தான் செய்யவேண்டும்.

    இதுவரை தமிழ் சினிமாவில் ரெண்டு மூனு கதைகளை வைத்து அரைத்து கொண்டிருந்தார்கள்....

    இனிமேலாவது மக்களை திரையரங்குக்கு இழுக்க புதிதாக சிந்திப்பார்களே.... அது தான் கமலின் வெற்றி....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]